Home » கவிதை

 
 

கவிதை

 
 
*இரவு கொப்பளித்த கனவு  –	கோ.நாதன்

*இரவு கொப்பளித்த கனவு – கோ.நாதன்

திரையை இழுத்து சாத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் எனது உடல்  வெறுமையாக அலையத் தொடங்குகின்றன நீரில் நடந்து காற்றில் பறந்து நெருப்பில் அமிழ்ந்து கேட்கப்படாத குரலில் மொழி சப்தமின்றி அடங்கிற்று… . சிங்கத்தின் கடைவாயின்  பற்களிடையே  குதறுகின்ற  கனவு பாம்பின் விசர் கொளிக்குகளிடையே கடிக்கின்ற கனவு இரவுகள் மிகவும் அடர்த்தியான பகுதிகளை இருளாக எங்கும் கொட்டிக் கிடத்துகிறது.   ஒரு பயங்கரத்தை, ஒரு அச்சத்தை, ஒரு பயத்தை இரவின் இருண்மை வீழ்த்துகின்றன பெரும் […]

 
* நபீல் -மூன்று கவிதைகள்

* நபீல் -மூன்று கவிதைகள்

              தன் கைகளை நீட்டி விரிக்கிறாள் பனிக் காலத்தைச் சமைப்பவள் ஒரு கொத்து மழை ஒரு கிண்ணம் சிரிப்பு ஒரு பாடல் பொதி ஒரு பிடி மின்னல் வழி நெடுக விழுகின்றன சூரியனை வெளியே தள்ளிச் சாற்றியிருக்கிறாள் கதவை. வானம் கிழியக் கிழியத் தைத்து விடுகிறது பனி. 00000       ———————————————————————————————————————————————-     மிதக்கும் பேரிரச்சலற்ற காதலின் […]

 
*தேவ அபிரா -கவிதை

*தேவ அபிரா -கவிதை

          சீவியம் உடல் வியர்வையில் நனைகிறது எதில் நனைகிறது இதயம்? அன்பை உணர வலுவற்ற உயிர்களில் மலரின்வாசம் வீசுவதில்லை. வார்த்தைகளும் பார்வைகளும் உலர்ந்த மணற்திடலிற் பாயும் நதியாகின. பூமியின் இதயத்தை நோக்கி ஊடுருவும் என் நதியும் கவிதைகளும் மனிதருக்கில்லாத ஆவல் கொண்டவை. ஆணாகவும் பெண்ணாகவும் அல்லாமலும் நீளுகிற சீவியத்தை நீங்கள் ஏன் கை விடுகிறீர்கள்? கவிதைகளை வாசியுங்கள். 00 2016 —————————————————————————     […]

 
* ரோஷான் ஏ.ஜிப்ரி-கவிதைகள்

* ரோஷான் ஏ.ஜிப்ரி-கவிதைகள்

வாழ்வை தொலைப்பது…. —————————- மிக முக்கிய கணங்களை தூரவிட்டு வாழ்வை தொலைத்தவன். முதுமையின் காட்டில் தனித்து விரட்டப்பட்ட சாதுவான விலங்கொன்றின் சாயலில் இலை விழும் கணம் திரும்புகிறேன் அமைதியில் திரண்டு மிக அவதானத்தோடுதான் அது என்னை அணுகியது நான்தான் வழிநடத்த தவறிவிட்டேன் நம்பிக்கையின்மையால் இப்போது உணர முடிகிறது எதையும் இழந்ததன் பின் வருந்த தெரியும் என்று. 000000000 வெற்றுப் பாத்திரங்கள்! ————————— இருப்பதை பிடுங்கிக்கொள்ளும் கைகளிடம் திருப்பிக் கொடுக்க மனசில்லை […]

 
* பயணம் -சந்துஷ்

* பயணம் -சந்துஷ்

  ஆயிரமாயிரம் யுகங்களின் நினைவால் உருவான நீ பதினேழு வசந்தங்களை எனக்கு வரமீந்து முப்பது இலையுதிர் காலங்களில் அதை நான் தொலைத்த கதை யாருக்குமினி உதவாது …   போன இலைகள் மீண்டும் வருமெனப் பனிப்புகாரில் காத்திருக்கும் முதிய மரங்களின் நம்பிக்கையைக் குலைக்காது விலகிப் போகிறேன் …   தேவதைகளை முறைத்துப் பார்க்கும் ஒருத்தியின் பார்வையின் நிழல் தேடி நெடுந்தூரம் அலைகிறதென் பயணம்…   ஒரு பூ திறந்து மூடுவதற்குள் […]

 
* கருணாகரனின் ஐந்து கவிதைகள்

* கருணாகரனின் ஐந்து கவிதைகள்

  அவளற்றப்போனாள் ———————————– 000 இது ஒரு விவகாரமாக இருப்பதால் அதிலிருந்து விடுபடுவதற்கான மார்க்கம் அந்த வழியில் இருக்கிறது என்றுதான் அந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய முனைந்தாள். அதிலிருந்த கேள்விகள் காடாகி அவளை உள்ளிழுத்து வழிகளைத் திசைமாற்றின. எந்த வார்த்தைகளையும் அவளால் எழுத முடியவில்லை. காட்டின் இலைகளெல்லாம் உதிராக் கேள்விகளாகியே விரிந்தன. அந்த இலைக்கடலின் அலைகளில் அவள் அடித்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தாள். அதிலிருந்து மீண்டுவிடுவதற்கான பிரயத்தனங்கள் அத்தனையும் வீணாகிக் கொண்டேயிருந்தன. அவள் […]

 
*காற்றின் பாடல் — எம்.எல்.எம்.அன்ஸார்

*காற்றின் பாடல் — எம்.எல்.எம்.அன்ஸார்

            மாலை நேரம் எழுதி வைத்திருந்த பாடலை காற்று இசைக்கிறது. நானும் பாடலும் நடந்து செல்கிறோம்! காற்றோடு சேர்ந்து தேநீர் பருகுவது மகிழ்ச்சியான அனுபவம். நான் சில சமயம் மாவைப்போல தூளாகின்ற போதெல்லாம் என்னை ஒன்று சேர்த்து இரக்கம் காட்டுவது காற்று! நேற்றைய நாள் இப்படி இருந்தது. எங்கிருந்தோ வந்த அறிமுகமற்ற துயரம் என்னோடு மோதிய போது வாழை மரத்திற்கு தண்ணீர் ஊற்றிக் […]

 
*தேவ அபிரா கவிதைகள்

*தேவ அபிரா கவிதைகள்

போருக்குத் தூரமான கிராமம் —————————————- கோவிலில் இருந்துவரும் நாதஸ்வர மேளதாள ஒலி திருவிழா நாட்களை நிறைக்கின்றது. இதிகாசங்களை ஆலாபனை செய்யும் பிரசங்கியின் குரல் கோவில் வீதிகளையும், தொன்மங்களைக் கிளறி அணிகலம் தேடும் படைப்பாளிகளின்குரல் பண்பாட்டு வீதிகளையும், போர்முனைகளில் இறந்தவர்களின் பெயர்களை அறிப்பவரின் குரல் செம்பாட்டு வீதிகளையும் நிறைக்கின்றது. காற்று எல்லா ஒலிகளையும் வீதிகள் நடைப்பிணங்களையும் காவிச்செல்லுகின்றன. சமாதானப்படுத்த முடியாத துயரங்களுக்கு ஒலியும் இல்லை அவை வீதிகளில் திரிவதுமில்லை. உணரமுடியாதவற்றாற் பிரஞ்சத்தை […]

 
* சந்துஷ்  கவிதைகள்

* சந்துஷ் கவிதைகள்

வழித்துணை உன் வீட்டை நெருங்கும் போதே துமிக்கத் தொடங்கும் மழை… வரும்போதே மழையையும் நான் கூட்டி வருவதாகக் கூறிக் கதவு திறக்கிறாய் … வரும் வழியெலாம் என்னுடன் பயணித்த மேகம் இசைத் துளிகளாகி விழுவதை விழிகள் விரிய ஜன்னல் வழியாகக் கண்டு அந்தக்காலையில் மீண்டும் மலர்கிறாய் … உன்னிடம் விடை பெற்றுத் தனியாகத் திரும்பும் என்னுடன் உன்னுடன் கேட்ட இசையின் நிறத்தை அதன் மீது நான் தீட்ட வழித்துணையாக வருமா […]

 
*உங்களுக்குமொரு வீடுண்டா? -(கவிதை)  சமீலா யூசுப் அலி

*உங்களுக்குமொரு வீடுண்டா? -(கவிதை) சமீலா யூசுப் அலி

  வீடுகளுக்கு உயிருண்டா அறியேன் சுவர்களில் காதைப் பொருத்துங்கள் உயிர் ததும்பும் இளஞ்சூட்டினை உணர்கிறேன். நேசம் மிகுந்ததோர் மனிதனைப் பிரியும் போதான வேதனை போன்றோ அல்லது அதை விட கொஞ்சம் குறைவாகவோ வீடுகளை விட்டுச் செல்லும் போதெற்படும் வெறுமை உறுத்துகிறது. பயணங்களில்… அத்துவான வெளிகளில் தனித்திருக்கும் வீடுகளைப் பார்க்கும் போது இலேசான பதட்டம் தொற்றிக் கொள்கிறது. ஒரு காலத்தில் சிண்டும் நண்டுமாய் மிதிபட இண்டு இடுக்கெல்லாம் கலகலப்பு சிந்திக் கிடந்த […]