Home » கவிதை (Page 2)

 
 

கவிதை

 
 
*தேவ அபிரா கவிதைகள்

*தேவ அபிரா கவிதைகள்

போருக்குத் தூரமான கிராமம் —————————————- கோவிலில் இருந்துவரும் நாதஸ்வர மேளதாள ஒலி திருவிழா நாட்களை நிறைக்கின்றது. இதிகாசங்களை ஆலாபனை செய்யும் பிரசங்கியின் குரல் கோவில் வீதிகளையும், தொன்மங்களைக் கிளறி அணிகலம் தேடும் படைப்பாளிகளின்குரல் பண்பாட்டு வீதிகளையும், போர்முனைகளில் இறந்தவர்களின் பெயர்களை அறிப்பவரின் குரல் செம்பாட்டு வீதிகளையும் நிறைக்கின்றது. காற்று எல்லா ஒலிகளையும் வீதிகள் நடைப்பிணங்களையும் காவிச்செல்லுகின்றன. சமாதானப்படுத்த முடியாத துயரங்களுக்கு ஒலியும் இல்லை அவை வீதிகளில் திரிவதுமில்லை. உணரமுடியாதவற்றாற் பிரஞ்சத்தை […]

 
* சந்துஷ்  கவிதைகள்

* சந்துஷ் கவிதைகள்

வழித்துணை உன் வீட்டை நெருங்கும் போதே துமிக்கத் தொடங்கும் மழை… வரும்போதே மழையையும் நான் கூட்டி வருவதாகக் கூறிக் கதவு திறக்கிறாய் … வரும் வழியெலாம் என்னுடன் பயணித்த மேகம் இசைத் துளிகளாகி விழுவதை விழிகள் விரிய ஜன்னல் வழியாகக் கண்டு அந்தக்காலையில் மீண்டும் மலர்கிறாய் … உன்னிடம் விடை பெற்றுத் தனியாகத் திரும்பும் என்னுடன் உன்னுடன் கேட்ட இசையின் நிறத்தை அதன் மீது நான் தீட்ட வழித்துணையாக வருமா […]

 
*உங்களுக்குமொரு வீடுண்டா? -(கவிதை)  சமீலா யூசுப் அலி

*உங்களுக்குமொரு வீடுண்டா? -(கவிதை) சமீலா யூசுப் அலி

  வீடுகளுக்கு உயிருண்டா அறியேன் சுவர்களில் காதைப் பொருத்துங்கள் உயிர் ததும்பும் இளஞ்சூட்டினை உணர்கிறேன். நேசம் மிகுந்ததோர் மனிதனைப் பிரியும் போதான வேதனை போன்றோ அல்லது அதை விட கொஞ்சம் குறைவாகவோ வீடுகளை விட்டுச் செல்லும் போதெற்படும் வெறுமை உறுத்துகிறது. பயணங்களில்… அத்துவான வெளிகளில் தனித்திருக்கும் வீடுகளைப் பார்க்கும் போது இலேசான பதட்டம் தொற்றிக் கொள்கிறது. ஒரு காலத்தில் சிண்டும் நண்டுமாய் மிதிபட இண்டு இடுக்கெல்லாம் கலகலப்பு சிந்திக் கிடந்த […]

 
*எடுத்துச் செல்லட்டும் உனது கவிதைகளை…… சி. மணிவண்ணன்

*எடுத்துச் செல்லட்டும் உனது கவிதைகளை…… சி. மணிவண்ணன்

எடுத்துச் செல்லட்டும் உனது கவிதைகளை ——————————————— பகலவனின் அஸ்தமனமும் உனது மரணமும் இருளாய்ப் படர்கின்றன எமது முகங்களில் எங்கள் நடைபாதையில் நாம் உன்னை இழந்தோம். பூமிக்கும் வைகறைப் பொழுதிற்குமிடையில் நீ மூன்று கவிதைத் தொகுதிகள் படைத்தாய் பயணிப்போர் தனித்துப் போவதிலும் பயணங்களைக் கடந்து செல்ல எடுத்துச் செல்லட்டும் உனது கவிதைகளையும் இச் சுழலும் கோளம் அழித்துவிடப் போவதில்லை. ஓர் படைப்பாளியின் படைப்புகளின் ஆயுட்காலத்தை என் வீட்டிற்கும் நான் எடுத்துச் செல்கின்றேன் […]

 
*படுவான்கரைக் குறிப்புகள்  – (நீள்கவிதை)-கருணாகரன் (Remarks  Of Paduvankarai)

*படுவான்கரைக் குறிப்புகள் – (நீள்கவிதை)-கருணாகரன் (Remarks Of Paduvankarai)

 கைவிடப்பட்ட போராளியின் குறிப்பு     (01) முள் குத்திய கால் சிந்திய ரத்தத்தில் படுவான்கரைப் புழுதி சிந்திய ரத்தம் மட்டுமல்ல, எழுந்த அழுகையொலியும் படுவான்கரையின் காய்ந்த குரல்தான். அங்கிருந்து நானூற்றுக்கு மேல் சின்னப்பெடியனுவள் வடக்கு நோக்கி நடந்தம். அது விடுதலைப்பயணம் என்றார்கள் எந்த நட்சத்திரமும் வழிகாட்டவில்லை கூடிப் பழகியவரும் கூட்டிச் சென்றவரும் பிறத்தியாராகினர் அறிந்திராத திசையில் விரும்பிச் செல்லாத பயணத்திற்கு வழிகாட்டிகள் உண்டென்றார். நிகழ்ந்த பயணத்தில் வழிநடத்தும் கட்டளைக்குக் […]

 
* ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

* ஜே.பிரோஸ்கான் கவிதைகள்

                        கவிதைகளை மறந்த ஊர் ……………………………………………………………………………… நானும் இன்னும் சிலரும் போவதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் அந்த கிராம மக்கள் கவிதையை மறந்து போயிருந்தார்கள். நாங்கள் எழுதும் போதெல்லாம் அவர்கள் கோபமுற்றார்கள் பயிர்களின் நடுவே முளைத்திருக்கும் களையைப் போல எங்கள் கவிதைகளை பிடுங்கி தூக்கி வீச முயன்றார்கள். அது முடியாததும், உங்கள் கவிதைகள்தான் உங்களை […]

 
*சி.ஜெயசங்கர் -கவிதை

*சி.ஜெயசங்கர் -கவிதை

    0000000000000000 இறுதியாக அவர் அல்லது சகிக்க முடியாது அவர் அல்லது தாங்கொணாது அவர் துடித்தெழுந்தார் சொற்களை உருவி சுழற்றி எறிந்தார் வெளவாலின் இறக்கைகள் கட்டி அறிக்கையில் பறந்தன செய்திகள் குருதி கசிய செவிப்பறைகளில் அதிர்ந்தன அவை (மாறு) அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே நிலத்து நீரில் கழிவு எண்ணெய் வந்துவிட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே (வேறு) நிலத்து நீரில் கழிவு எண்ணெய் பரவி எங்கும் வருகினும் ஆபத்தென்று […]

 
*பிரோஸ்கான் கவிதைகள்

*பிரோஸ்கான் கவிதைகள்

    பிசாசுகளாகி பயமுறுத்தும் சொற்கள் ………………………………………………………………………………………………………… ………………………………………………………………………………………………………… அவர்கள் மென்று துப்பிய சொற்களிலிருந்து கீழே விழுந்து வழிந்தோடிய நாற்றம் பூமியினை அசுத்தப்படுத்திய போது ஊர்வனைகள் செத்தே போனது. இதுவரை கணக்கிட முடியாதபடி செத்த ஊர்வனைகளின் பட்டியல் ஒரு பெரும் நதியைப் போல இருந்திருக்கக் கூடும். இப்படியாகத்தான் வன்முறையின் துர்நாற்றங்கள் கடல்,ஆகாயம்,காற்று என வீசிக்கொண்டிருக்கும் போல. உதிர்க்கத் தெரியாத நற்சொற்களின் உதடுகளுடன் நடமாடும் அவர்களினது புன்னகைகளும் குருடாகவோ, ஊமையாகவோ அமைந்திருக்கலாம். […]

 
*கோ.நாதன்-கவிதை

*கோ.நாதன்-கவிதை

கீபிர் யுத்த விமானத்திலிருந்து தவறி விழுந்த குண்டொன்று சிவனொளி பாதமலை உச்சி சிவனின் பாதச்சுவட்டில் விழுந்து வெடித்துச் சிதறிற்று . மலை பாளம் பாளமாய் பிளந்து கற்களாய் கொட்டிக் கிடந்த அதீத கணத்தில் பாதுகாப்பு வாகனங்களில் களவில் ஏற்றப்பட்ட கற்கள் ஒவ்வொரு நகரங்களின் சிற்பிகளிடம் பதுக்கப்பட்டன. கடவுளின் சிலையாய் திரும்பிருக்கின்ற கற்கள் எனது நிலத்தின் ஆக்கிரமிப்பில் சனங்களின் சாபத்தை அனுதினம் உள்வாங்கி முப்பொழுதுகளையும் ஒளியில் மிளிர வைக்கிறது. தமிழ் முற்றமெங்கும் […]

 
*ஈழத்துப் பெண் கவிஞர்களது நான்கு கவிதைத் தொகுப்புகள் -சந்திரா இரவீந்திரன்

*ஈழத்துப் பெண் கவிஞர்களது நான்கு கவிதைத் தொகுப்புகள் -சந்திரா இரவீந்திரன்

ஈழத்துப் பெண் கவிஞர்களது நான்கு கவிதைத் தொகுப்புகள் ———————————————————————————————- “எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை! – ஒளவை “இன்னும் வராத சேதி” – ஊர்வசி “பெருங்கடல் போடுகிறேன்” – அனார் “ஒவ்வா” – ஸர்மிளா ஸெய்யித் கவிதை உலகில், பெண் கவிஞர்கள் பலரும் எழுதிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், எங்கள் தாய்மண்ணான ஈழத்திலிருந்து அல்லது ஈழப்பெண் கவிஞர்களிடமிருந்து முகிழ்த்த 6 கவிதைத் தொகுப்புகள் எனக்குக் கிடைத்தன.இந்தத் தொகுப்புகளில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் இன்றைக்கு அல்லது […]