Home » இதழ்-05

 
 

இதழ்-05

 
 
ஆசிரியர் குறிப்பு!

ஆசிரியர் குறிப்பு!

        மிகக் குறிப்பிட்ட சிறிது கால எல்லைக்குள் “எதுவரை” இணையத்தளம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் வாசிப்பாளர்களின் அதிக கவனத்தை பெற்றுள்ளமை குறித்த வெளிப்பாடுகள் எமக்கு மகிழ்ச்சியையும்,  தடைகளை எதிர்கொண்டு தொடர்ந்தும்  இந்த தளத்தில் இயங்குவதற்கான நம்பிக்கையையும் தந்துள்ளன. சார்பு நிலை எடுக்காத, பல்வேறு கருத்துக்கள், போக்குகளுக்கு தளம் அமைத்து திறந்த உரையாடலுக்கும் மீள்மதிப்பீடுகளுக்குமான ஒரு சிறு வாசலைத் திறப்பதுதான் எமது நோக்கமாகும். அதன் அடிப்படையில் […]

 
நேர்காணல்- நோயல் நடேசன்.

நேர்காணல்- நோயல் நடேசன்.

நோயல் நடேசன் அல்லது என். நடேசன் இன்றைய ஈழத்தமிழ்ப்பரப்பிலும் புலம்பெயர் பரப்பிலும் அதிக சர்ச்சைக்குள்ளானவர்.  பல நெருக்கடிகளையும் கடினமான விமர்சனங்களையும் மிக மோசமான அவதூறுகளையும் சந்தித்தவர். இன்னும் நடேசனைப் பற்றிய எதிர்ப்பலைகள் முற்றாக ஓய்ந்து விடவில்லை. இந்த ஓயாத அலைகளுக்கு மத்தியிலும் தன்னுடைய படகினை வலிமையோடும் ஓர்மத்தோடும் ஓட்டிச் சென்று கொண்டிருப்பவர். நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டையும் விமர்சனத்தையும் கொண்டிருந்த நடேசன் தமிழ்ப் பெரும்பான்மை மனநிலைக்கு அப்பாலான […]

 
கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது?- கருணாகரன்

கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது?- கருணாகரன்

                நேரில் காணும்போதும் தொலைபேசியில் உரையாடும் போதும் அநேகமான வெளியூர் நண்பர்கள் முதலில் கேட்பது கிளிநொச்சி எப்படி இருக்கு? அங்கே என்ன நடக்குது? என்ற மாதிரியான கேள்விகளையே. இந்த மாதிரியான கேள்விகளை அவர்கள் இன்று நேற்று மட்டும் கேட்கவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த எழுபதுகளில் கிளிநொச்சி ஒரு நகரமாக வளரத்தொடங்கியபோது இந்தக் கேள்விகளைக் கேட்டார்கள். […]

 
கவிதை (சிங்கள மொழியிலிருந்து..)

கவிதை (சிங்கள மொழியிலிருந்து..)

தக்ஷிலா ஸ்வர்ணமாலி கவிதைகள் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்   பத்மினி சாகுமளவிற்கு உன்னை நேசித்தாள் சந்திரசோம   சந்திரசோம நீ காலமானதும் பத்மினி அழவில்லை வேறு பெண்களென்றால் நிலத்து மண் தின்று உளறி உளறி ஓலமிட்டு ஒப்பாரி வைத்தழுது துயருறும் விதம் நினைவிலெழ பத்மினி உன்னை நேசிக்கவில்லையென கவலை கொண்டாயோ சந்திரசோம   எனினும் நீயறியாய் சந்திரசோம மூன்று நான்கு மாத காலத்துக்குள் பேச்சு வார்த்தை குறைந்து நடக்கவும் […]

 
ஆறுமுகம் முருகேசன் ,ந.பெரியசாமி கவிதைகள்

ஆறுமுகம் முருகேசன் ,ந.பெரியசாமி கவிதைகள்

    திரும்புதலின் பாரம்  எனது மனதில் எறியப்பட்ட உந்தன் கல்                        கண்ணாடிச்சில்லுகளைப் பொழிந்துள்ளது, ஸ்தம்பிக்காமல் கேசம் சரி செய்துகொள் நீ கொல்லும் நினைவுகள் மீது ஒரு கூடை வண்ணத்துப்பூச்சிகளின் நிறம் நீ நிறைந்த என் தனிமை துயரம் சிலாகித்தல் பழகுதல் அழகு சூழும் மேகத்தின் உள் பறக்கும் விமானம் அண்ணாந்து தேடும் பால்யனாய் திரும்புகிறேன் நான் சில்லுகளில் வழியும் குருதி தோய்த்த விரல்களுடன் வருகிறாய் நமது பெருங்காதல் நோக்கி […]

 
தடைசெய்யப்பட்ட பகிரங்கம்-நேர்காணல்

தடைசெய்யப்பட்ட பகிரங்கம்-நேர்காணல்

-சந்திப்பும் தொகுப்பும்- கரன் வெளிப்படையாகச் செயற்படுவது, வெளிப்படையாக இருப்பது, பகிரங்கமாகப் பேசுவது, பகிரங்கமாகத் தொடர்பு கொள்வது போன்ற எல்லாமே இலங்கைச் சூழலுக்கு, தமிழ்ச் சூழலுக்கு ஒவ்வாமையாகி விட்டன. கடந்த முப்பதுக்கும் அதிகமான ஆண்டுகால இனவாத அரசியல் எல்லாவற்றையும் தலைகீழாக்கி விட்டது. வாழ்க்கையின் அடிப்படைகள் தகர்க்கப்பட்டு விட்டன. பாராட்டுகள், புகழாரங்கள் என்பவற்றுக்கு அப்பால் இழிவு கூறல், குற்றம் சாட்டுதல், வசை பாடுதல், அவமதித்தல், குறிசுடுதல், புறக்கணித்தல் போன்ற எதிர்மறை அம்சங்களே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன. […]

 
“ஷோபா சக்தியின் கேள்விகள் இத்துடன் முடிந்துவிட்டன!”.கண்ணன் பதில்கள் (பகுதி 04)

“ஷோபா சக்தியின் கேள்விகள் இத்துடன் முடிந்துவிட்டன!”.கண்ணன் பதில்கள் (பகுதி 04)

  *.  காலச்சுவடு இதழும் பதிப்பகமும் அதன் சார்பு நிறுவனங்களும் இயங்குவதற்கான நிதி ஆதாரம் என்ன என்பதை அறிவிப்பீர்களா? வா. மணிகண்டன் காலச்சுவடு இதழும் பதிப்பகமும் 2010வரை என்னுடைய நிறுவனங்களாக இருந்தன. என்னுடைய முதலீட்டில்தான் செயல்பட்டன. வங்கிக்கடன் இருந்தது. அறிந்தவர்களிடம் பணம் பெற்று வட்டி செலுத்துவதும் தேவைக்கு ஏற்ப நடந்ததுண்டு. வேறு எந்த இந்திய, உலகளாவிய நிறுவனமும் காலச்சுவடில் முதலீடு செய்ததில்லை. என்.ஜி.ஓக்கள், தனியார் அறக்கட்டளைகள், மத்திய அரசு யாரிடமிருந்தும் […]

 
வட மாகாணத்தில் முஸ்லீம்களின் மீள்குடியேற்றமும்  ஆதரவு/வரவேற்பு சமூகம்(Host Community) எதிர்கொள்ளும் நெருக்கடியும்…

வட மாகாணத்தில் முஸ்லீம்களின் மீள்குடியேற்றமும் ஆதரவு/வரவேற்பு சமூகம்(Host Community) எதிர்கொள்ளும் நெருக்கடியும்…

-முஹம்மத் எஸ்.ஆர். நிஸ்த்தார். இன்றையஇலங்கையின் அரசியல் நிலைவரங்கள் பற்றிக் கதைப்பவர்கள், அதில் குறிப்பாக கடந்த 30 வருட ஆயுத மோதலால் பாழ்பட்டுப்போன இன ஐக்கியம் பற்றி பேசுபவர்கள்; அது இலங்கைப் பிராஜைகளாகட்டும், இலங்கை அரசாங்கமாகட்டும், வெளி நாட்டு அரசாங்கங்களாகட்டும், வெளி நாட்டு நிறுவனங்களாகட்டும் அனைவரும் கதைக்கத் தவறாத ஒரு விடயம் தான் இந்த ” மீள் குடியேற்றம்” என்ற அம்சம்.இதைவிட ஒரு படி மேலே சென்று இலங்கையின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர […]

 
போகுமிடமெலாம்….! திருமாவளவன்

போகுமிடமெலாம்….! திருமாவளவன்

————————————————————————–02———————————————————————— நெருப்புத்தழல் மழைச் சாரல் போல் தூற்றிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?. அது போலச் சொரிந்தது வெயில். இன்று வெள்ளிக்கிழமை. நான் வேலையில் விடுப்பு கேட்டிருந்தேன். வருடத்தில் ஒருமுறை பெரு நகரிலிருந்து விலகி எங்காவது தூர வாவிக்கரையோரம் போய் நண்பர்களுடன் கூடாரம் போட்டிருந்து வார இறுதியை களி(ழி)த்து வருவது வழக்கம். பயணத்துக்கான ஆயத்தங்ளோடு இருந்தபோது தொலைபேசி ஒலித்தது. “அண்ணை! நீங்க இண்டைக்கு வர மாட்டியள் எண்டு சொன்னனான். எங்கடை(தமிழ்) ஆக்கள் […]

 
90 சுவிஸ் பிராங்குகள்-சயந்தன் (சிறுகதை)

90 சுவிஸ் பிராங்குகள்-சயந்தன் (சிறுகதை)

அபிதேமி ஆபிரிக்காவிலிருந்து எனக்குப் பின்னதாகவே வந்திருக்க வேண்டும். அப்படியில்லையாயினும் இரண்டொரு மாதங்களே முன்னராயிருக்கும். கரித்தாஸ் நிறுவனம் அகதிகளுக்கென ஒழுங்குபடுத்தியிருந்த ஜெர்மன் மொழி வகுப்பின் முதல் நாள் மழையில் நனைந்து சுவரோரம் ஒதுங்கிய ஒரு கோழிக்குஞ்சினைப் போல சுவரின் அருகே அவள் ஒடுங்கியிருந்ததைக் கண்டேன். நான் நுழைந்தபோது பதினைந்து பதினாறு பேரளவில் அங்கிருந்தார்கள். ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தலையைக் குனிந்து கொண்டார்கள். சூடானியர்கள், எரித்திரியர்கள், ஈராக்கியர்கள், சேர்பியர்கள் என அவர்களிருந்தாலும் […]