Home » இதழ்-05 (Page 2)

 
 

இதழ்-05

 
 
லயனல் போபஹேயின் கதை,தமிழில் – அ. அன்ரன் அன்பழகன். (பேராசிரியர் என். சண்முகரத்தினம்.)

லயனல் போபஹேயின் கதை,தமிழில் – அ. அன்ரன் அன்பழகன். (பேராசிரியர் என். சண்முகரத்தினம்.)

  அமைதியை இழந்து போன காலங்களினூடே அமைதிக்கான ஒரு பயணம் – லயனல் போபஹேயின் கதை – நூல் விமர்சனம். ஆங்கில மொழிமூலம் – பேராசிரியர் என். சண்முகரத்தினம். தமிழில் – அ. அன்ரன் அன்பழகன். 00 அரசியல் ரீதியாக உயர்வான ஒரு சமூக ஒழுங்கை ஏற்படுத்த கடுமையான அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு அசாதரண மனிதனின் சுயசரிதையை இங்கே உரிய அணுகுமுறை மூலமும் கதையாடல் நுட்பத்தின் மூலமும் பாராட்டும் படியாக […]

 
பெருஞ்சுடரில் கருகிப்போன விட்டிற் பூச்சி

பெருஞ்சுடரில் கருகிப்போன விட்டிற் பூச்சி

-தானா விஷ்ணு முடிவிலாப் பெருஞ்சுடரே! சுடரில் முகம் காட்டும் கடவுளரின் குறியீடுகளில் கரைந்து படிகிறது துயர் மீளா மனிதர்களின் வேண்டுதல்கள். கடவுள் வேண்டுதல்களும், கேவுதல்களுமற்ற உலகத்தில் வாழ்வதுபற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில் வேண்டுதல்களாலும், கேவுதல்களாலும் கூடிய இன்னொரு உலகத்தை இன்னொரு கடவுள் படைத்தான். இணையற்ற மனிதச் சுடரே!                                                     கடவுள் கடவுளராக மாறிப்போயினர் காமத்தாலும், காமக்குறியீடுகளாலும் வடிவமைந்த கல்லாகிப்போயினர். பெருஞ்சுடரில் அகப்பட்டு கருகிப்போன விட்டில் பூச்சிகளின் இறக்கையின் மீதாய் மனிதர்களின் நம்பிக்கையும் […]

 
மொழிபெயர்ப்புக் கவிதைகள்-ந.சத்தியபாலன்

மொழிபெயர்ப்புக் கவிதைகள்-ந.சத்தியபாலன்

——————————————————————————————————–ஆங்கில மூலம்: Don Morquis அதுவும்  நானும் அன்றொரு மாலையில் விட்டிலொன்றுடன் பேசிக்கொண்டிருந்தேன் மின்குமிழொன்றை மோதிஉடைத்து மின்கம்பியில் தன்னை ஆகுதியாக்கத் தவித்துக்கொண்டிருந்தது அது ஏனப்பா இந்த பகட்டு வித்தைகள்                                                                                           உங்களுக்கெல்லாம் ? விட்டில்களின் இயல்பே இதுதான் என்பதனாலா? ஒரு மின்குமிழாக இல்லாமல் அது ஒரு பாதுகாப்பற்ற மெழுகுவர்த்தியாய் இருந்திருந்தால் இந்நேரம் நீ ஒரு சகிக்கஇயலாத கருகிய பண்டமாகியிருப்பாய் அறிவே இல்லையா உனக்கு? நிறைய இருக்கிறது. பதிலளித்தது அது ஆனாலும் அதனைப் பயன்படுத்துவதில் […]

 
காலனித்துவத்தின் தொடர்ச்சியும் தேசியவாதத்தின் இன்றைய பாத்திரமும்-பி.ஏ.காதர்

காலனித்துவத்தின் தொடர்ச்சியும் தேசியவாதத்தின் இன்றைய பாத்திரமும்-பி.ஏ.காதர்

    தொடர்ச்சி – பகுதி – 3 3.2    19ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நிகழ்ந்த மாற்றங்களும் தத்துவார்த்த சர்ச்சைகளும் அவற்றின் இன்றைய முக்கியத்துவமும். 1870 செப்டம்பர் மாதம் பிரான்ஸ்-புரூசிய யுத்தத்தில் பிரான்ஸ் தோல்வியடைந்து மூன்றாவது நெப்போலியன் மன்னனும் அவனது படையும் சரணடைந்ததை அடுத்து1871 பரிஸ் கம்யூன் புரட்சி வெடித்தது. தொழிலாள வர்க்கம் 1971 மார்ச் 28ந் திகதி தனது அரசாங்கத்தை அமைத்து மே 28 […]

 
அய்யப்பமாதவன் கவிதைகள்

அய்யப்பமாதவன் கவிதைகள்

முடி உதிர்க்கும் நகரம் பூனைகளாய்ப் பொழுதுகள் யாவும் குருதி வடிய சுழலும் நகரம் சாம்பல் கறுப்பு வெள்ளைகளில் பதுங்கி பாய்ந்து திரியும் அமைதியில் மலரும் சொற்களிடையே புலன்கள் அறியாவேளை முகிழ்த்தேன் கூர்பற்கள் காட்டி கேலியாய் அவமதிப்பாய் அவமானமாய்ச் சிரிக்கும் உதடுகளிடையில் நுழைந்து காயங்களில் காயமாகவே பூத்தேன் சாம்பல்நிறக் காலையில் சோம்பல் முறிக்க விடியல் பொழுதின் சாந்தம் தவிர துயர்கள் நினைவிற்கு மீளாத காலத்தை  துய்த்துணர்ந்தேன் வெள்ளைப் பகல் பொழுதில் முடி உதிர்வில் நிரம்பிய மடியில் முகம் சுழித்து அம் மிருகத்தின் பிளந்த வாயிடையில் தொங்கினேன் கருத்த பூனை வரவில் வெள்ளைப் பூனை ஆயுதங்கள் பதுக்கியதும்அமைதியில் பூமி மறைய நகரமான பூனைகள் பற்கள் மூடித் தூங்கும் பொழுதில் அவற்றின் மீதே கெக்களிப்பில புலரும் வழமையில் அவை ரத்தம் பருகி சொட்ட சொட்ட தவ்வியும் குதித்தும் பாய்ந்தும் கீறியபடி தொலைந்தேன்.     — துளிப்பறவை   ஒற்றைத் துளி உயிர்பெற்று விரிந்த இறகில் அரும்பிய ஒரு பறவை நான் விசாலமான உலகின் தூய்மை ஒளியில் கண்கள்கூச விழித்தேன் கருப்பாக இருந்தது எல்லையற்ற வெளி கசடுகள் நுழைந்த இமைகளில் புலன் ருசி மரத்துவிட்டது அம்மா ஏன் பாலூட்டினாள் அழுக்கின் மணம் கமழும் மொழி பயின்ற முட்டாள் உலகில் தனிமைக்குள் வீழ்த்திவிட்டாள்                சதை எலும்பு குருதி சேர்ந்து  ஒரு மிருக அடையாளத்தில் வாழ்தலின் பிணியில் விசனமடைகிறேன் நம்பிக்கை தருகிற பச்சிலை தாங்கிய பேசா மரங்கள் மேகங்கள் சூழ்ந்த மிகப்பெரிய ஆகாயம் உலகை உயிர்ப்பிக்கும் விவரிக்க முடியாத பரிதி நிலத்தை ஒளிமழையில் நனைக்கும் நிலவுச்சுடர் துளிதுளிகளாய் என் உயிர் மீட்டும் அதிசய மழை சதா பறந்து பறந்து வாழ்வைக் கொண்டாடும் புள்ளினம் நான் இவற்றுள் இருக்கிறேன் இவற்றுள் மறைவேன் ஒரு துளியாகிய நான் மறைதல் வியப்பன்று.     […]

 
கதையல்லாத கதைகள் 02-யோ.கர்ணன்

கதையல்லாத கதைகள் 02-யோ.கர்ணன்

“ரைகர்ஸ்” யாழ்ப்பாணத்திலிருக்கும் நாற்பதினாயிரம் சிங்களப்படைகளையும் உயிருடன் பிடித்து வைத்துக் கொண்டு பேரம் பேசி தமிழீழத்தையடையப் போகிறார்களா அல்லது நாற்பதினாயிரம் சிங்களச் சிப்பாய்களின் சடலங்களை வைத்துக் கொண்டு பேரம் பேசி தமிழீழத்தையடையப் போகிறார்களா என உலகின் திசையனைத்திலுமிருந்த தமிழ் ஆய்வாளர்கள் அனைவரும்  தலையைப்பிய்த்துக் கொண்டிருந்த பொழுதது. உச்சபட்சமாக, வன்னியிலிருந்த ஆய்வாளரொருவர் ஈழநாதம் பத்திரிகையில் பின்வருமாறு எழுதியிருந்தார்- ‘நமது குறைநிர்வாக இராச்சியத்தை சில வல்லரசுகள் பயங்கரவாத இயக்கமாக தடை செய்துள்ளன. நல்ல கூடைப்பந்து […]

 
கவிதை-கோகுலராகவன்

கவிதை-கோகுலராகவன்

வெறு வான வெளி கட்டாந்தரையில்  அண்ணாந்து படுத்திருக்கின்றேன். மேலே வானம்! கொஞ்ச நேரத்தில் வெள்ளிகள் முளைக்கலாம் சில நேரம் நிலவும் வரும். தேய்பிறையா? வளர்பிறையா? ஓரு கடற்பறைவைக் கூட்டம் முக்கோண முகப்பாக பறந்து போகின்றது. செங்கால் நாரையாகவும் இருக்கலாம்; அவை போய் மறைகின்றன. வடிவம் மாறவில்லை. அவை பறைவைகள்தான்                                                                                        சிறு உயரத்தில் தும்பி ஓன்று மிதக்கின்றது தாவர போசணியா? விலங்கு போசணியா? அதன் சிறகுகள் ஓயாது இயங்குகின்றன வெறும் தும்பிதான்! […]

 
முடிவிலா இலையுதிர்தல்        – ஜெயமோகன்

முடிவிலா இலையுதிர்தல் – ஜெயமோகன்

பெரும் துயரங்கள் இலக்கியம் எப்படி எதிர்கொள்வது என்பதை நெடுங்காலமாக கூர்ந்து கவனித்துவருகிறேன்.  கவிதை மிக அந்தரங்கமான ஒரு நரம்பின் அதிர்வு.  ஒருவர் தனக்குத் தானே சொல்லிக்கொள்ளும் சொற்கள் அளவுக்கு மௌனமானது.  பேரழிவுகளுக்கும் பெருந்துயர்களும் மண்ணைப்பிளந்து நகரங்களை உண்ணும் பூகம்பம் போன்றவை.  வானை நிறைக்கும் இடியோசை போன்றவை.  பேரழிவையும் பெருந்துயரையம் கவிதைகளில் சொல்வதென்பது ஒரு சின்னச்சிட்டு தன் மெல்லிய இறகால் புயலை அறிவதுபோல. ஆகவே கவிதைகள் மிகநுட்பமாக ஒருவழியை கண்டடைகின்றன.  சிட்டுக்குருவி […]

 
தமிழக (சிறப்பு முகாம்)சித்திரவதை முகாம்-பாலன்

தமிழக (சிறப்பு முகாம்)சித்திரவதை முகாம்-பாலன்

  தமிழக (சிறப்பு முகாம்)சித்திரவதை முகாம்-எட்டு வருடங்களுக்கு மேலாகஅடைக்கப்பட்டு சித்தரவதைகளை அனுபவித்தவன் நான்!- பாலன் ———————————————————————- நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் ! தமிழ்நாட்டில் சிறப்பு முகாம் என்னும் பெயரில் சிறையைவிடக் கொடிய சித்திரவதை முகாமாக இயக்கப்படும் சிறப்புஅகதிகள்முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு அங்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் யாவும் விடுதலை செய்யப்பட நீங்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். 1989ம் ஆண்டு புலிகள் இயக்கத்தினரைக் […]

 
கவிதை-ஆறுமுகம் முருகேசன்

கவிதை-ஆறுமுகம் முருகேசன்

திரும்புதலின் பாரம்  எனது மனதில் எறியப்பட்ட உந்தன் கல் கண்ணாடிச்சில்லுகளைப் பொழிந்துள்ளது, ஸ்தம்பிக்காமல் கேசம் சரி செய்துகொள் நீ கொல்லும் நினைவுகள் மீது ஒரு கூடை வண்ணத்துப்பூச்சிகளின் நிறம்                                                    நீ நிறைந்த என் தனிமை துயரம் சிலாகித்தல் பழகுதல் அழகு சூழும் மேகத்தின் உள் பறக்கும் விமானம் அண்ணாந்து தேடும் பால்யனாய் திரும்புகிறேன் நான் சில்லுகளில் வழியும் குருதி தோய்த்த விரல்களுடன் வருகிறாய் நமது பெருங்காதல் நோக்கி காத்திருப்புகளின்றிப் பிரிவுக்குஏது […]