Home » இதழ் 06

 
 

இதழ் 06

 
 
Vimbam Award 2012-Tamil Short Film Festival

Vimbam Award 2012-Tamil Short Film Festival

Vimbam Award 2012 7th International Tamil Short Film Festival                      —————————————————————————————————————- Best Child Artist Jekan Harish (Adivaanam) Sri Lanka Best Actor Sathapranavan (Poralikku Itta Peyar) France Best Actress Pon Thaya (Nagal) France Best Editor Desuban (Thinap Payanam) France Best Script Pon […]

 
“காலச்சுவடு”  பலரின் பங்களிப்பை உள்ளடக்கிய ஒரு கூட்டு இயக்கம்!  -கண்ணன்- பகுதி-05

“காலச்சுவடு” பலரின் பங்களிப்பை உள்ளடக்கிய ஒரு கூட்டு இயக்கம்! -கண்ணன்- பகுதி-05

  -கண்ணன் பதில்கள் (பகுதி 05) * கூடன்குளம் அணுஉலை விவகாரம் தொடர்பாக, இருவேறுபட்ட கருத்துக்கள் உள்ளன. இந்த விவகாரம் அடுத்தக் கட்டத்தில் எந்த நிலையினை தமிழ்நாட்டில் எடுக்கும் என நினைக்கிறீர்கள்? சிறி, லண்டன்  கூடன்குளம் போராட்டம் சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழகத்தில் நடைபெற்றுள்ள மாபெரும் மக்கள் போராட்டம். கூடன்குளம் அணுமின் நிலையத்தை அடுத்திருக்கும் கிராமங்களே போராட்ட மையங்களாக உள்ளன. அதைத் தாண்டி இப்போராட்டம் போதிய அளவு விரிவு அடையவில்லை. வளர்ச்சி […]

 
வேட்டையன்– சித்தாந்தன்,சிறுகதை

வேட்டையன்– சித்தாந்தன்,சிறுகதை

    ஆத்மார்த்தனுக்கு அன்றைய பொழுது எரிச்சலுடனேயே விடிந்தது. அறையின் மூலைக்குள் இருந்து தவளை ஒன்று கத்துவதைப்போல அவன் மனைவியின் குரல் ஒலித்தது. ‘எழும்புங்கோ உங்களை யாரோ தேடி வந்திருக்கிறார்’ இந்தக் காலை வேளையில் தன்னை யார் தேடி வந்திருப்பார்கள்? அதுவும் இன்று விடுமுறை நாள். மிக்க அலுப்பும் சோர்வும் படர கட்டிலிலிருந்து எழுந்து கொண்டான். நீண்டதோர் பெருமூச்சு. காலை எழுந்தவுடனேயே வாயலம்பாமல் தேநீர் பருகும் பழக்கத்தைக் கொண்டவன் ஆத்மார்த்தன். […]

 
கவிதைகள்-சம்பு,- எம்.ரிஷான் ஷெரீப்,

கவிதைகள்-சம்பு,- எம்.ரிஷான் ஷெரீப்,

காத்திருப்பு  என் சமாதானம் அவ் வீதியில் கிழிந்து கீழே விழுந்தது அழுதழுது ஓய்ந்து விசும்பியபடி தூங்கும் குழந்தையை தோள் சாய்த்து திரும்பினேன் இந்த வீதி இந்த நகரம் இந்த உலகமோ சுழற்றியடித்து திரும்பவே விடாமல் அங்கேயே என்னை சமன்குலையச் செய்கிறது எளிய அலங்காரமுடன் ஓர் சிறிய களவு தன் பிஞ்சு விரல்களை எனக்குள் நீட்டுகிறது கொதிக்கும் வயிறோ கொதிக்கிறதுதான் இருந்தும் அக் களவிடம் சொல்லுகிறேன் இது போதாது பொறுத்திரு பெரும் […]

 
அசோகா ஹந்தகம-சிங்கள திரைப்பட இயக்குநர்-சு.மகேந்திரன்

அசோகா ஹந்தகம-சிங்கள திரைப்பட இயக்குநர்-சு.மகேந்திரன்

  அவரின் படைப்புக்கள் விமர்சனங்களுக்கு உட்படுத்துவதிலேயே திரையுலகில் அவரை பிரதிபத்தப்படுத்துவது   ஆரம்பிக்கிறது. ஆனால் தனது அணுகுமுறையில் சமீபகாலமாக சிறிது வேறுபட்டிருக்கிறார். அவரது ஆறாவது படமாகிய ‘இனி-அவன்’  இல் தனது வெளிப்படுத்தும் தன்மையில் மாற்றங்களை செய்துள்ளார். எனினும் சில இடங்களில் விவாதத்திற்கு உட்படும் கோபம் காணப்படுகிறது.     ‘எனது வழமையான பாணி நடையிலிருந்து நான் மாறுபடவில்லை. காலை சிறிது பின் நோக்கி வைத்துள்ளேன். ஆனால் இதனை, சரணாகதி அடைந்து விட்டேன் […]

 
(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…01

(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…01

– கருணாகரன் -01- ‘எறியப்பட்ட எல்லாக் கற்களும் பூமியை நோக்கியே வருகின்றன. அவ்வாறே, விடப்படும் எல்லா அரசியற் தவறுகளும் மக்களின் மேலேயே வீழ்கின்றன…’ என்று ஒரு கவியுரைப்புண்டு. ஈழத்தமிழர்களுடைய அரசியற் போராட்டத்தின் அத்தனை தவறுகளும் சிந்தனைக் குறைபாடுகளும் இன்று மக்களின் மீதே சுமையாக இறங்கியிருக்கின்றன. இந்தத் தவறுகள் மக்களை மிகக் கொடுமையான வரலாற்றுத் துயரத்திற் தள்ளியிருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்தின் ஒவ்வொரு தவறுகளுக்கும் தொடரும் சிந்தனைக் குறைபாடுகளுக்கும் மக்களே விலை கொடுத்திருக்கிறார்கள், […]

 
ஏனஸ்ட் ஹெமிங்வே ,Ernest Miller Hemingway (July 21, 1899 – July 2, 1961)

ஏனஸ்ட் ஹெமிங்வே ,Ernest Miller Hemingway (July 21, 1899 – July 2, 1961)

  -தமிழில் – சு.மகேந்திரன்   ஏனஸ்ட் ஹெமிங்வே (Ernest Miller Hemingway (July 21, 1899 – July 2, 1961) 1899இல் பிறந்தார்; தகப்பனார் ஒரு டொக்ரர். ஆறு பிள்ளைகளில் ஹெமிங்வே இரண்டாவது மகன். சிக்காக்கோவின் புறநகர்ப்பகுதியான ஓக்பாக்கில் அவர்களது இல்லம் இருந்தது. ‘கென்னாஸ் சிற்றி ஸ்ரார்’  ;’ The Kansas City Star      என்ற புதின இதழில் 1917இல் நிருபராகச் சேர்ந்தார் ஏனஸ்ட் ஹெமிங்வே. அடுத்த வருடம் அவராகவே போர்ப்பகுதியொன்றிற்கு அம்புலன்ஸ் சாரதியாகப் […]

 
நடேசன் நேர்காணல்-பகுதி-02

நடேசன் நேர்காணல்-பகுதி-02

  நோயல் நடேசன் அல்லது என். நடேசன் இன்றைய ஈழத்தமிழ்ப்பரப்பிலும் புலம்பெயர் பரப்பிலும் அதிக சர்ச்சைக்குள்ளானவர்.  பல நெருக்கடிகளையும் கடினமான விமர்சனங்களையும் மிக மோசமான அவதூறுகளையும் சந்தித்தவர். இலக்கிய, ஊடக இயக்கத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறார். இந்த நேர்காணலி்ல்கூட நடேசன் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். இவை தொடர்பான விவாதங்களை உருவாக்குவதன் மூலம் தேவையான சிந்தனையை நாம் உருவாக்கிக்கொள்ளலாம் என்பதே இதன் நோக்கம். […]

 
உளவியல் பாதிப்புகளை பொருட்படுத்தத் தவறினால் அது சமூகத்திலும் குடும்பங்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்!

உளவியல் பாதிப்புகளை பொருட்படுத்தத் தவறினால் அது சமூகத்திலும் குடும்பங்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்!

நேர்காணல் – ஆன் (உளவியலாளர்) உளவளத்துறையில் கற்றுள்ள ஆன், அதன்மூலம் சேவைகளைச் செய்ய விரும்புகிறார்.  ஒரு பெண் உளவியலாளரான இவர் யுத்தத்தினால்  பாதிப்படைந்த மக்களுக்கும் அந்தப் பிரதேசங்களுக்கும் சேவையாற்றுவதே தன்னுடைய இன்றைய விருப்பம் என்கிறார் . உளவியலார் “ஆனு”டன்உளவளத்துணை, போரின் பின்னரான அதன் தேவைகள், இந்தச் சேவைகளைச் செய்வதில் உள்ள பிரச்சினைகள், உளவளத்தினால் கிடைக்கும் பெறுபேறுகள் போன்றவற்றைப் பற்றிப் பேசினேன்.  இந்த நேர்காணல் கடந்த ஓகஸ்ற் மாதம் கொழும்பு ஜானகி […]

 
சில புரிதல்களுடன் ஜோர்ஜ் கீற்றை அணுகுதல்- ஏ.எச்.எம்.நவாஷ்

சில புரிதல்களுடன் ஜோர்ஜ் கீற்றை அணுகுதல்- ஏ.எச்.எம்.நவாஷ்

ஓரிரு வருடங்களுக்கு முன் பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் ஜோர்ஜ் கீற் (George Keyt) அவர்களின்  ஓவியக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது.  இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான ஓவியங்கள்பெண்களை மையப்படுத்தி கீறப்பட்ட தத்துவார்த்த ஓவியங்களாகும். இந்த பெண் சித்திரிப்பு ஓவியங்களைப் பற்றிச் சிலர் “பெண்ணின் நிர்வாண ஓவியங்கள். ஆபாசத்தைத்  தவிர இதில் என்ன கலைத்துவம் இருக்கின்றது” என்ற பொருள் பட விமர்சித்திருந்தனர். இந்த விமர்சனம் ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுவதாகும். மனிதன் ஆடை […]