Home » சாத்திரி

 
 

சாத்திரி

 
 
*கோமகனின் தனிக்கதை -சாத்திரி

*கோமகனின் தனிக்கதை -சாத்திரி

கோமகனின் தனிக்கதை என்கிற சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினாறு சிறு கதைகளை உள்ளடக்கி 157 பக்கத்தில் மகிழ் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.இப்போதெல்லாம் ஒரு புத்தகத்தை படிக்காமலேயே அதனை எழுதியவரை மட்டும் மனதில் வைத்து விமர்சனங்கள் எழுதித் தள்ளுகின்ற காலகட்டத்தில் நான் படித்துவிட்டு எனது பார்வையை வைக்கிறேன் . இந்த சிறுகதைத்தொகுப்பானது பெரும்பாலானவை ஒருவன் தனது சொந்த மண்ணிலிருந்து சொந்த பந்தங்களையும் சொத்துக்களையும் விட்டு, ஊரையும் விட்டு, வேரோடு பிடுங்கி வேறொரு […]

 
*நேர்காணல்  –  சாத்திரி

*நேர்காணல் – சாத்திரி

சாத்திரி என்றால் சோதிடர் என்று சொல்வார்கள். இந்தச் சாத்திரி சோதிடர் அல்ல. படைப்பாளி. கலகக்காரன். 1983 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட அந்த அமைப்பின் உறுப்பினர் அல்லது ஈழப்போராளி. இன்னொரு வகையில் சொன்னால், புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் – பிரான்ஸில் வாழ்கின்ற அகதி. ஒரு காலம் தான் பிரதிநிதித்துவம் செய்த அமைப்புக்காகவே எதையும் செய்த, எல்லாவற்றையும் செய்ய முனைந்த சாத்திரி இப்பொழுது அவற்றையெல்லாம் மீளாய்வு செய்து கொண்டிருக்கிறார். போராட்டம் […]

 
* அகதிக்கொடி  (சிறுகதை)  சாத்திரி

* அகதிக்கொடி (சிறுகதை) சாத்திரி

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பிரான்சில் இருந்து வந்த விமானம் இறங்கி ஓடு பாதையில் ஓடத் தொடங்கியிருந்தது ………………..மற்றைய பயணிகள் கவனத்தை இவர்கள் மீது திருப்பி விடாதபடி கடைசி வரிசையில் இருத்தப்பட்டிருந்த இருவர்களினதும் கைகளிலும் விலங்கிடப்பட்டு போர்வையால் மறைக்கப்பட்டிருந்தது.பத்து மணி நேரப் பயணம் இருவருமே ஒருவரோடொருவர் எதுவும் கதைக்கவில்லை ரமணனுக்கு அருகில் இருந்தவன் மீது வெறுப்பும் கோபமுமாக வந்தது . தனது திட்டம் தோற்றுப் போக அவனும் ஒரு காரணம் […]

 
* ஒரு பெண்ணின் கதை-சாத்திரி

* ஒரு பெண்ணின் கதை-சாத்திரி

  கைரி ————   பிரான்சின் மெல்லிய குளிர்..இன்று லீவு நாள் .  போர்வைக்குள் இருந்து எழுந்து வெளியே வர விருப்பமில்லாமல் படுத்திருந்தவனிற்கு எழும்பி வாங்கோ தேத்தண்ணி போட்டு வைச்சிருக்கு என்கிற  மனைவியின் சத்தத்தையடுத்து  பாதித் தூக்கத்தோடு வந்து  அமர்ந்தவன் தேனீர் கிண்ணத்தில் இருந்து எழுந்த ஆவியில் இருந்த வந்த தேயிலை மணத்தை கண்ணை மூடி  இழுத்து அனுபவித்தபடி குடிப்பதற்காய் வாயருகே கொண்டு போகும் போது  தேனீர் ஆவியில் தனது […]

 
* சீமானும் மாயமானும் -சாத்திரி

* சீமானும் மாயமானும் -சாத்திரி

அண்மைக்காலத்தில் சமூகவலைத்தளங்களிலும் இணையப்பக்கங்கள் என எங்கும் சர்ச்சைக்குரிய விவாதங்களிற்கு சொந்தக் காரராக இருப்பவர் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.இவர் சர்ச்சைக்குள்ளாவதற்கு அதிக காரணங்கள் இவர் கட்சி நடாத்துவதே ஈழத் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மையமாக வைத்து என்பதால்தான்.அதே நேரம் தமிழ்நாட்டு அரசியல் கட்சி ஒன்றிற்கு  புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களால் இணையக் கிளைகள் நடாத்தப் படுவதும் சீமானின் நாம் […]

 
*தியாகிகளும் துரோகிகளும்- சாத்திரி

*தியாகிகளும் துரோகிகளும்- சாத்திரி

      ஈழத்திற்கான ஆயுத விடுதலைப் போராட்டம் என்பதன் ஆரம்பமே ஆயுதப் போராட்டங்களை வழிநடத்தியவர்களின் துப்பாக்கிகள் , முதன் முதலில் எதிரியானவர்களை நோக்கி நீளாமல் துரோகிகளாக இனம் காணப்பட்டவர்களை நோக்கியே நீண்டது. ஏனெனில் எதிரியை விட துரோகியே ஆபத்தானவன் என்பது பொதுவாகவே உலகமெங்கும் ஆயுதப்போராட்டங்களை நடத்திய விடுதலை இயக்கங்களின் தாரக மந்திரமாகவே இருந்தது. அது எமது விடுதலைப் போராட்டத்தில் கொஞ்சம் தூக்கலாகவே இருந்துவிட்டது.மேடைகள் தோறும் தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் […]

 
கடைசி அடி -சிறுகதை

கடைசி அடி -சிறுகதை

“சூரிச்” புகையிரத நிலையத்தினுள் நுழைந்த  அமுதன்  அங்கிருந்த சிற்றுண்டி சாலையை நோக்கி நடந்தான்.  அங்கு இருந்த கதிரைகளில் பிஸ்கற்றை சாப்பிட்டபடி  விளையாடிக்கொண்டிருந்த   மாலதியும் தமிழினியும்  பல நாட்களிற்கு  பின்னர் அமுதனைக் கண்டதும், அப்பா என்றபடி ஓடிப்போனவர்களை  முழந்தாளிட்டு   இரண்டு கைகளாலும்  கட்டியணைத்து மாறி மாறி முத்தமிட்டவன் . தான் வாங்கி உடைந்து விடாமல் பத்திரமாக பாதுகாத்தபடி  கொண்டு வந்த  இரண்டு Kinder சொக்கிலேற்றுக்களை இருவரிடமும் கொடுத்து விட்டு  மேனகாவை பார்த்தான். […]