Home » இதழ் 07

 
 

இதழ் 07

 
 
திரும்பி வராத குரல் – யோ.கர்ணன்

திரும்பி வராத குரல் – யோ.கர்ணன்

  ஆயிரத்து தொளாயிரத்து தொன்னூறுகளின் மத்திய பகுதியில் அது நடந்தது. யாழ்ப்பாணத்தின் இருபாலையிலுள்ள முகாமொன்றின் சமையல்கூடத்திற்கு பக்கத்தில், ஒரு பின்மதியப் பொழுதில் சத்தியப்பிரமாணத்தை சரியாக நினைவில் கொண்டுவர முடியாமல், நானும் என் வயதையொத்த இன்னும் இரண்டு நண்பர்களுமாக மல்லுக்கட்டிக் கொண்டிருந்தோம். அது நாங்கள் இயக்கத்திற்கு சேர்ந்த புதிது. சத்தியப்பிரமாணத்தை மனனம் செய்ய வேண்டுமென்ற கட்டுப்பாடெல்லாம் அப்பொழுதில்லை. எங்களைத்தான் ஆர்வக் கோளாறு விடவில்லை. முகாமிலிருந்த சீனியர்கள் காலையில் சத்தியப்பிரமாணமெடுப்பதைப் பார்த்ததும் பெரும்பாலானவர்களிற்கு […]

 
ஒஸ்கார் விருதினை வென்ற ஈரானின் முதல் திரைப்படம்– எம்.ரிஷான் ஷெரீப்

ஒஸ்கார் விருதினை வென்ற ஈரானின் முதல் திரைப்படம்– எம்.ரிஷான் ஷெரீப்

‘நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்‘ –           விவாகரத்துக் கோரி நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தமது பதினொரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான சூழ்நிலையில் தனது மகள் வாழ்வதை விரும்பாத மனைவி ஸிமின், தனது கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும் வெளிநாடு சென்று வாழத் தீர்மானிக்கிறாள். கணவனால் அவர்களுடன் வர முடியாத சூழ்நிலை. ஞாபகமறதி (அல்ஸீமர்) நோயினால் பாதிக்கப்பட்ட முதியவரான தனது […]

 
காலம்,பிரதிகள் மீதான வாசிப்பு – விமல்குழந்தைவேல்

காலம்,பிரதிகள் மீதான வாசிப்பு – விமல்குழந்தைவேல்

  இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இதுவரைகாலமும் வெளிவந்த சிறுகதைகள் நாவல்கள், வரலாற்றுப் பதிவுகளை முன்வைத்து…. வரலாற்றுப் பதிவுகள் என்ற சொல்லாடலில் சற்று உடன்பாடற்றவனாக நின்றே என் உரையைத்  தொடங்குகின்றேன். இங்கே நித்தியானந்தனோ, மற்றவர்களோ குறிப்பிட்ட பிரதிகளெல்லாம் ஏதோ ஒரு தேவை உள்ளடக்கியதான வரலாற்றுப் பதிவுகளாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் என்னென்னவைகள் வரலாறாக பதியப்பட வேண்டுமோ அவைகள் பதிவில் வராததின் ஆதங்கமாகவே எனது கருத்தை முன்வைக்கின்றேன். இதற்கு நலிந்த மக்கள் […]

 
சொல்- சிறுகதை- எஸ். ஷங்கரநாராயணன்

சொல்- சிறுகதை- எஸ். ஷங்கரநாராயணன்

  மெத்தையின் சுகத்தில் நல்லுறக்கம் கொண்டிருந்த சொல்லுக்கு திடீரென முழிப்பு வந்தது. யாரோ உள்ளே வரும் சரசரப்பால் அது முழித்திருக்கலாம். நூலகம் பொதுவாக அமைதியாகவே இருக்கும். சொல்லுக்கும் அநேகமாக விதிக்கப்பட்டதே இந்த அமைதி. ஆதலின் மௌனத்துக்கு சப்தத்தில் ஒரு ஈர்ப்பு உண்டுதான். அதன் கூர்த்த மௌனத்தில் காதுகள் தானறியாமல் ஒரு பாதுகாப்பு பிரக்ஞையுடன் எதிர்பார்ப்புடன், அதாவது எதிர்பாராத ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கவே செய்கின்றன. சப்தங்களின் ஊடே இந்த எதிர்பாராத்தன்மை இல்லை […]

 
நடேசன் நேர்காணல் – பகுதி 03

நடேசன் நேர்காணல் – பகுதி 03

    நோயல் நடேசன் அல்லது என். நடேசன் இன்றைய ஈழத்தமிழ்ப்பரப்பிலும் புலம்பெயர் பரப்பிலும் அதிக சர்ச்சைக்குள்ளானவர்.  பல நெருக்கடிகளையும் கடினமான விமர்சனங்களையும் மிக மோசமான அவதூறுகளையும் சந்தித்தவர். இலக்கிய, ஊடக இயக்கத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறார். இந்த நேர்காணலி்ல்கூட நடேசன் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். இவை தொடர்பான விவாதங்களை உருவாக்குவதன் மூலம் தேவையான சிந்தனையை நாம் உருவாக்கிக்கொள்ளலாம் என்பதே இதன் […]

 
என் படுக்கை அறைக்குள் நுழைந்திருந்தது மரம்- திருமாவளவன்

என் படுக்கை அறைக்குள் நுழைந்திருந்தது மரம்- திருமாவளவன்

—————————————————————————  03   —————————————————————————————- இது நம்பமுடியாததுதான். கவிஞனின் கற்பனை என்று கூட நீங்கள் எண்ணக்கூடும். ஜெயமோகனின் அறம் தொகுப்பின் ஒரு கதையை படித்து முடித்த போது தூக்க விலங்கு தலைமாட்டோரம் இருந்து முகத்தை வாஞ்சையோடு நக்கிக் கொண்டிருந்தது. அது எப்போது என்னை விழுங்கியது.  இப்போ நினைவில் இல்லை. திடிரென ஏதோ ஒருவித அமுக்கம். அந்த சிறிய அறைக்குள் ஒரு பெரிய யானை நுழைந்து விட்டதைப் போல அல்லது நெடுந்தூரம் விமானத்தில் […]

 
(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…02

(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…02

ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளும் விமர்சனங்களும் மறுபார்வைகளும் முன்வைக்கப்பட்டுவரும் காலம் இது. கனவுகளும் இலட்சிய வேட்கையும் கருகிப் போன நிலையில் ஒவ்வொருவரும் தாம் செயற்பட்ட தளங்களில் இருந்து தங்கள் அனுபவங்களையும் தாங்களறிந்த விசயங்களையும் தாம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் பதிவு செய்து வருகின்றனர். கூடவே விமர்சனங்களுக்குட்படுத்தியும் வருகின்றனர். இது ஒரு வகை. இந்த வகை எழுத்துகள் மேலும் பலவாகத் தொடரவுள்ளன. இதேவேளை ஈழப்போரின் நான்காம் கட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் இன்னொரு தளத்தில் […]

 
திருமாவளவன்,றிம்சா – கவிதைகள்

திருமாவளவன்,றிம்சா – கவிதைகள்

பசி அசேதனங்கள் பொசுங்கி நாறும் காற்று தூர்ந்து சிதைந்த பதுங்குகுழி உடல்சிதறி திரிபுற்ற முண்டம் நாய் உருட்ட இலையான் காகங்களுடன் அலையும் தலை குழிக்குள் இறுகிய விழி குருதி உறைந்து காய்ந்த மதகு ஆயுதக் கரங்கள் பன்னிரண்டும் முறித்து மூளியாய் நிற்கும் கடவுள் சிலை இன்னும் நம்பிக்கையெடுக்கும் முடவன் பரட்டைப் பாலை பட்ட மரத்தின் நிழல் ஓரம் முலை பொச்சடிக்கும் குழந்தை நினைவு நீரில் நெகிழ்ந்து அழுகி நொதித்த பழையசோற்றை […]

 
“இத்தனை விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. நன்றி -விம்பம்”!

“இத்தனை விருது கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. நன்றி -விம்பம்”!

-லாவண்யா நிஜமான மனிதர்களை ஹீரோக்களாக வெண் திரையில் காட்டிய பெருமை நிச்சயமாய் குறும்படங்களைத்தான் சாரும். கதை, காமெடி, திகில், பரபரப்பு, பஞ்ச் டயலாக், நடிப்பு, என சினிமாவிற்கு சளைக்காத கலைதான் குறும்படம். நேரம் குறைவாக இருப்பதால் `குறும்`படமானது புகழிலும் அப்படியே இருப்பது கலைத் தாய்க்கு வந்த மாபெரும் சோதனை. ஒருசில டி.வி நிகழ்ச்சிகள் இதில் ஆர்வம் காட்டினாலும் மிகப்பெரிய விருதுகள் குறும்படங்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றிருந்த என் எண்ணம் விம்பம் சர்வதேச […]

 
யாத்திரீகன்,ஈழக்கவி – கவிதைகள்

யாத்திரீகன்,ஈழக்கவி – கவிதைகள்

பிடாரனின் உலகினை நோக்கி … பல்லி இட்ட எச்சத்தின் மீது நெளிகின்றன புழுக்கள் . நினைவறுக்கப்பட்ட காலங்களின் கடைசி யுகத்தின் இறுதி இரவாய் கழிகிறது இந்த நிமிடம் . வனப்பு மிகுந்த ஓவியத்தின் வர்ணங்கள் களவாடப்பட்ட ஓர் இரவில் லியனடாவோ டாவின்சியின் விம்பம் சிரிக்கிறது சலனங்கள் ஏதுமற்று ………… காலங்கடந்தும் நினைவுகள் அறுந்தும் தூசேறிப்போன சித்திரங்களில் பல்லி இட்ட எச்சத்தில் இன்னும் நெளிகின்றன புழுக்கள் . கடைசி இரவின் வினாடிகள் […]