Home » இதழ் 07 (Page 2)

 
 

இதழ் 07

 
 
பெண்போராளிகள்/பாலியல் தொழில்/ சமுகத்தின் பொறுப்பு

பெண்போராளிகள்/பாலியல் தொழில்/ சமுகத்தின் பொறுப்பு

அண்மையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்தவாறு பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார் என்று தெரிவித்து, சம்மந்தப்பட்ட பெண்ணுடைய நேர்காணல் ஒன்றை -ஆனந்த விகடன் இதழ் -வெளியிட்டிருந்தது. இந்த நேர்காணல் வெளியானதைத் தொடர்ந்து தமிழ்ப் பரப்பெங்கும் சூடு பறக்கும் விவாதங்களும் உணர்ச்சிகரமான விளக்கங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. நடப்பதாகச் சொல்லப்படும் விடயம் உண்மையா அல்லது பொய்யா என்று இன்னும் யாராலும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. உண்மையாக அப்படியொரு சங்கதி நடந்தாலும் […]

 
விலகல்- சிறுகதை, கணேஷ் வெங்கட்ராமன்

விலகல்- சிறுகதை, கணேஷ் வெங்கட்ராமன்

      தூக்கமில்லாத இரவுகள் நெடுநாளாய் தொடர்கின்றன. ஒரிரு மணி நேரங்கள் மட்டுமே தூக்கம் என்று ஆகி விட்டது. வழுக்கையான தலையில் படிந்திருந்த வியர்வை ஈரத்தை பக்கத்தில் கிடந்த போர்வையால் துடைத்துக் கொண்டான் ரவி. தரையில் பாய் விரித்து தனியாகப் படுக்க ஆரம்பித்து ஒரு வருடமாகிவிட்டது. அனகா அவனை பக்கத்தில் நெருங்கவிடுவதில்லை. வியாபார விஷயமாக அவனுக்கு அடிக்கடி நாசிக் செல்ல நேரிடுகிறது. அங்கு செல்லும் போதெல்லாம் அவனுடைய நெருங்கிய […]

 
இயந்திரத்தோடு வாழ்தல்-எஸ்.கிருஷ்ணமூர்த்தி

இயந்திரத்தோடு வாழ்தல்-எஸ்.கிருஷ்ணமூர்த்தி

    தொண்நூறுகளில் வெளிநாட்டுக்குப் புலம் பெயர்ந்த காலகட்டத்தில் பெற்றோர், ஊர், உறவினர் நண்பர்கள் பிரிவு என்பன வாட்டியதால் எப்போது தபால் வரும் என்ற ஏக்கத்துடன் இருப்பேன். கடிதங்கள் வெறும் ஒன்று, இரண்டு தாள்களில அல்ல. ஒரு புதினப் பத்திரிகை போல் கனதியும் இருக்கும், செய்திகளும் இருக்கும். காலம் செல்லச் செல்ல சுவையான கடிதங்கள் சுமையான கடிதங்களாக மாறத்தொடங்கியது. வேலையிடத்தில் மதிய போசன வேளைகனில் கடிதம் எழுதுவதிலும் வாசிப்பதிலும் நேரம் […]

 
சாமிலாவின் சேவல்-எஸ்.  நஸீறுதீன்

சாமிலாவின் சேவல்-எஸ். நஸீறுதீன்

சாமிலா, அவளின் கோழிகளின் மீது உம்மாவுக்கு, ஒரு காலமும் இந்த மாதிரிக் கோபம் வரக் கண்டதில்லை.. உம்மா  காகங்களுடன் உரையாடுவார். ‘என்ன இண்டைக்கு ஆக்கள் வாறாங்களா.’அட,  இஞ்சப் பார்ரா அவர்ர ஒரத்த’. சோத்துப் பானையைக் கையில் வைத்துக் கொண்டு, கா,,,கா,,என குரலிலும் நோவு வந்துவிடாதபடி கூப்பிடுவார். கோழி, புறா, குருவி எதுவென்றில்லாது அனைத்துக்கும்  தானியமிடுவார். ரொம்பவும்  சந்தோசமாயிருந்தால், குருவிகளின் ஒலிகளுக்கு அதே தாளங்களுடன் பதிலும் சொல்வதுண்டு.  அப்படிப்பட்ட, சாமிலாவின்   உம்மாவுக்குத் […]

 
மரணித்தவர்களுக்கான மரியாதையும் இழந்தவர்களின் வாழ்வை மேம்படுத்தலும்-மீராபாரதி

மரணித்தவர்களுக்கான மரியாதையும் இழந்தவர்களின் வாழ்வை மேம்படுத்தலும்-மீராபாரதி

நவம்பர் மாதத்தின் கடைசி வாரம் இலங்கைத் தமிழர்கள் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழ்ந்தவர்கள் போராட்டத்தில் அதாவது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராடி மரணித்தவர்களை நினைவு கூறுகின்ற வாரமாகும். இது கடந்த முப்பது வருட காலமாக புலத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் மாவீரர் வாரமாக நினைவு கொள்ளப்பட்டு வந்திருக்கின்றது. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக புலம் பெயர்ந்த சமூகத்தில் வழமையைப் போல பெரியளவில் வியாபாரமாகவும் புலத்தில் சிறியளவிலுகளிலும் நடைபெற்று வந்தன. […]

 
சாலமன் சபைக்கு வந்த விசித்திர வழக்கு-சிறுகதை,கறுப்பி

சாலமன் சபைக்கு வந்த விசித்திர வழக்கு-சிறுகதை,கறுப்பி

    அன்றொரு நாள் மன்னன் சாலமனுடைய சபையில் ஒரு விசித்திரமான வழக்கு வந்தது ஒரு பிள்ளை … இரண்டு தாய்மார்கள் இரண்டு பேருமே இது தன் பிள்ளை என்பதால் யாரிடம் ஒப்படைப்பதென்று தெரியவில்லை ஆகவே … காவலா இந்தப் பிள்ளையை ஆளுக்குப் பாதியாகக் கொடு என்றான்.. 1 “மிஸ்ரிமோஃபோர்பியாதான் சந்தேகமில்லை”. பெரியக்கா என்னை ஆச்சரியமாகப் பார்த்து “என்ன பெயர் சொன்னனீ?” என்றாள். நான் முகத்தை வலு சீரியஸாக வைத்துக்கொண்டு, […]

 
கண்ணன் பதில்கள்- பகுதி 06

கண்ணன் பதில்கள்- பகுதி 06

    *  உலக ஆளுமைகளில் உங்களை பாதித்தவர்கள் யார்? ஏன்? கே.என். செந்தில் இருவரைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். ஒருவர் ஆர்தர் கோஸ்ட்லர் (Arthur Koestler 1905 – 1983). சுராதான் அறிமுகப்படுத்தினார். ‘The God that Failed’ கட்டுரைத் தொகுப்புதான் முதலில் படித்த நூல். லுயி பிஷர், ஸ்டீபென் ஸ்பெண்டர் போன்றோருடன் கோஸ்ட்லரும் தமது கம்யூனிஸ அனுபவங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருந்தார். பின்னர் அவருடைய ‘Darkness at Noon’ நாவலைப் […]

 
அது..!சிறுகதை-சுதாராஜ்

அது..!சிறுகதை-சுதாராஜ்

  இருள் கசியத் தொடங்கும் மாலை ஆறுமணிப் பொழுதில் அந்த வீதியில் வந்துகொண்டிருந்தேன். முக்கிய நகரங்களைத் தொடுக்கும் பிரதான வீதிதான் அது. எனினும் சன நடமாட்டம் குறைவாயிருந்தது. நகரத்திலிருந்து எட்டுக் கட்டை தொலைவிலிருந்த அந்தப் பகுதியில் குடிமனைகளும் குறைவு. அடுத்த நகரம் சுமார் நாற்பது கிலோமீட்டருக்கு அப்பாலிருந்தது. நாட்டில் சுமுக நிலையற்ற காலம் அது. இருள்வதற்கு முன்னரே மக்கள் வீடுகளுள் அடங்கிப்போய்விடுவதற்கு அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம். இன்னும் வெட்டப்படாத காட்டு […]

 
உலகின் மிகப்பெரிய ‘சென்சஸ்’ -மொழிபெயர்ப்பு சிறுகதை/சு.மகேந்திரன்(தமிழில்)

உலகின் மிகப்பெரிய ‘சென்சஸ்’ -மொழிபெயர்ப்பு சிறுகதை/சு.மகேந்திரன்(தமிழில்)

  த.இராமநாதன் (1913 – 1985) யாழ்ப்பாணத்தை தனது பிறப்பிடமாகக்கொண்டவர். கொழும்பு வெஸ்லிக் கல்லூரியிலும், இலங்கை பல்கலைக்கழக கல்லூரியிலும் கல்வி கற்றவர். பட்டப்படிப்பை முடிக்காமல் இந்தியாவுக்கு 1943 இல் சென்றார். அங்கே கன்னியாகுமாரியிலிருந்து பம்பாய் வரை நீண்ட ஒரு நடை பயணத்தை மேற் கொண்டார். வழி நெடுகிலுமுள்ள கிராமங்களில் தங்கினார். ஒரு கட்டத்தில் பெங்களுருக்கு அருகாமையில் மரக்கறி செய்கையில் ஈடுபட்டவரது பயிர்களை குரங்குகள் நாசம் செய்தன. சென்னைக்கு 1947 ல் […]

 
கவிதைகள் – அனார்

கவிதைகள் – அனார்

        பித்தா ————    குளிர் மெதுவாக நுழைந்து காற்றைக் கொல்லும் நேரத்தில் குகைப்பெண் மென்மேலும் ஒளி ஆடைகள் பின்னுகிறாள்   பொன்னை இழை இழையாக நெய்து குகையின் வாயிலை மூடுகிறாள் நெய்யப்படும் உயிரிழைகளால் பட்டுப் பூச்சிகள் உருவாகின்றன   தன் இருளுக்குள் தானே தடுமாறும் ஆதிவாசி ஒற்றைச் சொல்லைப் பதிக்கிறான் அவள் கறுப்புமொழிக்கும் வெள்ளை மொழிக்கும் இடையே   கனவுத் தறியில் சிக்கிய சொல் […]