Home » சிறுகதை

 
 

சிறுகதை

 
 
* தக்காளி  – Zachary Karabashliev, தமிழில் – லக்ஷ்மி

* தக்காளி – Zachary Karabashliev, தமிழில் – லக்ஷ்மி

(இந்த சிறுகதை மனைவியை இழந்த ஒருவனின் காலக்கிரம தொகுப்பு, இன்னொரு நாட்டில் புதிதாக வாழ்க்கையைத் தொடங்குவதற்கான போராட்டம்)           யூன் 11, 2010 எனது பெயர் கிறிஸ்டோ கிறிஸ்டோவ் கிறிஸ்டோவ். நான் இங்கு என் மகளைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறேன். அதாவது என் மகளையும் மருமகனையும். ராடோஸ்லாவா – அது அவளுடைய பெயர், அவனுடையதல்ல. அவர்கள் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் வசிக்கிறார்கள். இந்த வசந்த காலத்தில் […]

 
* முரண்- கோமகன்  ( சிறுகதை)

* முரண்- கோமகன் ( சிறுகதை)

                                                                           2010 “ஹொப்பித்தால் ட்ருசோ”வின் பிரதான வாயிலில் இருந்து உள்ளே செல்லும் நீண்ட சாலையில் காலைப்பனி மூடியிருந்தது. அதன் இருமருங்கிலும் நின்றிருந்த பைன் மரங்கள் இலைகளைத்துறந்து துக்கம் கொண்டாடிக்கொண்டு இருந்தன. அதன் கிளைகளில் இருந்த  மொக்குகளில் பனி  உறைந்து காலை வெளிச்சத்தில் பளபளத்தது.  இருபக்கமும் பனிச்சொரியல் மூடியிருக்க நடுவே வீதி சுத்தமாக்கப்பட்டு கருஞ்சாரையாய் நீண்டு சென்றது. ஆங்காங்கே பனியில் சறுக்காமல் இருக்க உப்புத்தூவப்பட்டிருந்தது. “இந்த மரங்களே இப்படித்தான் வசந்தகாலத்தில் இலைகளால் […]

 
*போர்க்குணம் கொண்ட ஆடுகள் –  ஜிஃப்ரி ஹாஸன் (சிறுகதை)

*போர்க்குணம் கொண்ட ஆடுகள் – ஜிஃப்ரி ஹாஸன் (சிறுகதை)

    மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெறுவதை அவன் தவிர்த்துக் கொள்வதையே விரும்பி வந்தான். அதனால்  தன்னை மருத்துவமனைப்படுத்திவிடுவார்களோ என்ற அச்சத்தில் நோய் வந்தாலும் மருத்துவமனைப் பக்கம் செல்வதை அவன் விரும்புவதில்லை. சிறிய வயதாக இருக்கும் போது இரண்டு தடவைகள் வைத்தியசாலையில் இருந்திருக்கிறான். அப்போது அவனது தந்தை அவன் கூட இருந்தார்.    அந்நாட்களில் வைத்தியசாலையில் அவ்வளவு கெடுபிடிகள் குறைவுதான். அவன் சிறிய வயதில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை […]

 
* பேதம் –     க.சட்டநாதன்

* பேதம் – க.சட்டநாதன்

  மனசு கனத்துக் கிடந்தது. போர்வையை ஒதுக்கித் தள்ளியபடி எழுந்தவள், ஜன்னல் வரை சென்று வானத்தைப் பார்த்தாள். ஒற்றையாய் ஒரு சிறு பறவை அவள் பார்வையில் பட்டது. கரும்புள்ளியாகி மறையும் வரை அதைப் பார்த்தபடி இருந்தாள். ‘ நானும் இந்தப் பட்சி மாதிரித் தனித்து விடப்பட்டவளா…? எனக்கு முன்னாலும் பின்னாலும் திரிந்து, பவ்வியமாய் நடந்து, என்னிடம் பயன் பெற்றவர்களும் பயன் பெறாதவர்களும் – எத்தனை பேர் என்னிடம் இருந்து பிரிந்து […]

 
*காணாமற்போனவர்கள் போல நீயும்….. -சாந்தி நேசக்கரம்

*காணாமற்போனவர்கள் போல நீயும்….. -சாந்தி நேசக்கரம்

  ‘அக்கா அக்கா’ என நீ ஸ்கைப்பில் கூப்பிடும் குரலும் மறைந்து…ஸ்கைப்பில் உன் பெயர் இப்போது அடையாளமின்றிக் கிடக்கிறது….!   ஏதோ எனது வீட்டில் என்கூடப்பிறந்த உறவு போல என்னுடன் வாழ்ந்து கொண்டிருந்தவன். உனக்குள்ளான துயரங்களை வெற்றிகளையென எல்லாவற்றையும் கடிதமெழுதி இளைப்பாறிக்கொள்ள ‘அன்பின் அக்கா’ என்று ஆரம்பித்து அனைத்தையும் எழுதியனுப்புவாய்.   எத்தனையோ தோழதோழியரின் எழுத்துக்கள் ஞாபகங்கள் போல நீயும் எனக்கு எழுதிய கடிதங்கள் பேசிய வார்த்தைகளென உன் ஞாபகமாய் […]

 
*மகாவலி – சாரங்கன் – (சிறுகதை)

*மகாவலி – சாரங்கன் – (சிறுகதை)

    நித்திரையில் மனைவி கேவி கேவி அழும் சத்தம் கேட்டு   “இஞ்சேரும் இஞ்சேரும்”  என்று மனைவி திலகவதியின்  தோளை தட்டி  எழுப்பினார் ராஜதுரை   “இவன் தம்பி சுபன் கூப்பிட்டமாதிரி கிடந்தது ”   “அது கனவு சும்மா படும் ”   மனைவியை படுக்கவைத்தாலும் ராசதுரையருக்கு நித்திரை வரவில்லை. இருபது வருடங்களுக்கு முன்னர் கனடாவிற்கு  வந்தவர்களுக்கு  புது இடமும் அதன் சூழலும் மகள் மருமகன்  பேரப்பிள்ளைகள் […]

 
* ஓடுகாலித்தாத்தா- கருணாகரமூர்த்தி –(சிறுகதை)

* ஓடுகாலித்தாத்தா- கருணாகரமூர்த்தி –(சிறுகதை)

நாங்கள் பள்ளிக்கூடம்விட்டு புத்தூர்சந்தியால் திரும்பி வரும்போதும், சந்தியைக்கடந்து நெல்லோ குரக்கனோ எடுத்துக்கொண்டு மில்லுக்குப் போகும்போதும் சிலவேளைகளில் அந்தக்கிழவர் சந்தியில் சாவகச்சேரிக்கான பேருந்துத்தரிப்பில் நிற்பதைப்பார்த்திருப்போம். அவர் எங்கள் அம்மாவின் சொந்தச்சித்தப்பா என்பது எமக்கு வெகுகாலமாகத் தெரியாது.   அம்மாவுக்கு அப்படி ஒரு ஓடுகாலிசித்தப்பா இருந்தாரென்பது ஆச்சரியந்தான். அம்மாவின் அப்பாவை அதாவது தாத்தாவை எங்களுக்குத் தெரியாது, ஞாபகமில்லை. நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போதே அவர் திண்ணையைக் காலிபண்ணிவிட்டார். அவரது ஒரு வண்ணப் படத்தைத்தானும் அவர் […]

 
*மாயத் திரைகளின் வரைபடம் -சித்தாந்தன்

*மாயத் திரைகளின் வரைபடம் -சித்தாந்தன்

இந்த சிதிலமான கனவை நான் மீட்டுக்கொண்டிருக்கும் இக்கணம். வெளியே நாய் குரைத்தபடியிருக்கின்றது. ஏதோவொரு பறவையின் சிறகுகளின் மெல்லசைவினால் காற்றில் சலனம் மீந்தபடியிருக்கின்றது. இரவின் புதிர்கள் நிறைந்த பாதையில் நிசப்தம் மட்டும் தன் விலக்கவியலா இருப்பைத் திரும்பத் திரும்ப உணா்த்தியபடியிருக்கின்றது. 00   காற்றின் திரையில் அசையும் நிழலுருக்கள் இரவு உறைந்து பூச்சியமாக காலடியில் கிடக்கின்றது. ஒரு முதியவன் பாதாளங்களைத் தாண்டும் தன் மந்திரக்கோலால் சாய்த்தபடியிருக்கிறான் நாட்சத்திரங்களை. ………………………………………………………………………………………………………………………………………………………… இது எத்தனையாவது […]

 
*அக்பர் விடுதிக்கு வந்த அழகி – (குறும் கதை ) -சுருதி –

*அக்பர் விடுதிக்கு வந்த அழகி – (குறும் கதை ) -சுருதி –

          அவுஸ்திரேலியாவில் ஒரு காலை நேரம். ரெலிபோன் அடித்தது. எடுத்தேன். மறுமுனையில் அந்தப்பெண் விக்கி விக்கி அழுதாள். பேச்சு வரவில்லை. எதையும் சரிவரச் சொன்னால்தானே அவர் யார் என்ன சொல்கின்றார் என்பதை நான் புரிந்து கொள்ளலாம். இருப்பினும் அவரது குரலில் இருந்து அவர் தமிழினி என்பதை அடையாளம் கண்டுகொண்டேன். தமிழினி நண்பன் ஜெயரதனின் மனைவி. “உங்கடை வைஃப் இருக்கிறாவா? அவரிடம் கொடுங்கள்” ஒருவாறு தானே […]

 
*பச்சை மிளகாய் – ஸ்ரீரஞ்சனி (சிறுகதை)

*பச்சை மிளகாய் – ஸ்ரீரஞ்சனி (சிறுகதை)

    எவரும் என்னை இலகுவில் கவர்வதில்லை, ஆனால், உங்களுடைய அமைதியான சுபாவமும், அன்பான வார்த்தைகளும் என்னை மிகவும் வசப்படுத்தியிருந்தன. அதனால், எனது எழுத்தைப் பாராட்டி, அதை மெருகுபடுத்துவதற்குச் சில புத்தகங்களைக் கொடுத்து உதவ விரும்புவதாக நீங்கள் சொன்னபோது, நான் மெய்சிலிர்த்துப் போனேன். கோடை காலத்தின் ஒரு மாலை நேரம் அது. அன்றுதான் உங்களுடைய வீட்டுக்கு நான் வருகின்றேன். ரெலிபோனிலும் ஈ-மெயிலிலும், இரண்டு வாரங்கள் மட்டுமே நாங்கள் பேசிப் பழகியிருந்தாலும்கூட, […]