Home » சிறுகதை (Page 2)

 
 

சிறுகதை

 
 
* கடைசி அத்தியாயம் – பிரேம பிரபா

* கடைசி அத்தியாயம் – பிரேம பிரபா

நீண்ட நேரம் பொழிந்த மழை அப்போதுதான் சற்றே ஓய்ந்திருந்தது. ஜன்னல் கம்பிகளில் பளிங்கென உருளும் மழைத் திவலைகள் காற்றிற்குத் தடுமாறி சிதறி கீழே விழுந்தது. மழைக்குப்பின் ஏற்பட்ட திடீர் புழுக்கத்தால் ஜன்னலைத் திறந்த இளங்கோ தன் ஆள் காட்டி விரலால் ஜன்னல் கம்பிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் மழைத் துளிகளை ஓரத்திற்கு வழித்தான். சாலை வெறிச்சோடிக்கிடந்தது. மாலை அடங்கும் நேரம் என்பதால் பறவைகள் குறுக்கும் நெடுக்குமாக தத்தம் கூடுகளை நோக்கி விரைந்து […]

 
*அசங்கா (சிறுகதை )  அனோஜன்

*அசங்கா (சிறுகதை ) அனோஜன்

மிக உக்கிரமாக மழை பெய்யத்தொடங்கியிருந்தது. கார் கண்ணாடியூடாக வெளியே பார்த்தேன். மழைத்துளிகள் ஈயக்குமிழ்கள்போல் காரின்மேல் பட்டுச்சிதறின. காருக்குள் ஓரளவு சூட்டுடன் இருந்தாலும், குளிர் உடம்பின் தசைகளுக்குள் முட்டிமோதி நுழைவதினை உணரத்தொடங்கியிருந்தேன். தலைமுடிகளை கோதிக்கொண்டு காரின் வேகத்தினை குறைத்துக்கொண்டு முன்செல்லும் வாகனத்தின் நகர்தலுக்காகக் காத்திருந்தேன். மெல்லமெல்ல முன்னால் இருக்கும் நீண்ட தொடர்வாகனங்கள் புகையிரதப்பெட்டிகள்போல் பிரமாண்டமாக ஒத்திசைவாக இயங்கிக்கொண்டு மெல்ல அசைந்துகொண்டிருந்தன. மெதுவாக நகரும் நீண்ட ராட்சத அட்டையைப்போல் கற்பனைசெய்துபார்த்தேன். கார் இருக்கையில் […]

 
*மறிக்கிடா (சிறுகதை) தீரன். ஆர்.எம். நௌஸாத்

*மறிக்கிடா (சிறுகதை) தீரன். ஆர்.எம். நௌஸாத்

  X என்கிற அகிலமக்கா பத்து ஆடுகள் வைத்திருந்தாள். எல்லாம் பெட்டைகள்தாம்.. பெட்டைகளுக்கு மறிக்காக என்று வைத்திருந்த பெரிய கிடாவை சென்ற பெருநாளைக்கு முஸ்லிம் சந்தையில் இருபத்தெட்டாயிரம் கொள்ளை விலைக்கு விற்றுவிட்டிருந்தாள். ரொக்கப்பணத்துக்கும் கல்முனை சொர்ணம் நகைமாளிகையில் கைச்செயின் வாங்கி அணிந்திருந்தாள். X அக்காவுக்கு வயது 45தான். இன்னும் நரைக்கவுமில்லை. சதா வேலைவாடை செய்ததில் கட்டுமஸ்தான உடம்பும்..நல்ல முகவெட்டும்… சதா வெற்றிலை போட்டுச் செக்கச்சிவந்திருந்த உதடுகளும்… முந்தானையை மீறத் துடிக்கும் […]

 
*அண்ணா – (சிறுகதை)- -அனோஜன் பாலகிருஷ்ணன்

*அண்ணா – (சிறுகதை)- -அனோஜன் பாலகிருஷ்ணன்

  வெள்ளிக்கிழமை பின்னேரம். இன்னும் இரண்டுநாள் தொடர்விடுமுறை. வேலைக்கு வரத்தேவையில்லை என்ற சுவாரசியம் கலந்த உற்சாகம் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் இயல்பாக ஜனித்துக்கொண்டிருந்தது. அதைவிட யவனிகா ஒருவித உற்சாகத்தில் இருந்தாள். அவள் இரண்டு வாரம் விடுப்பு எடுத்திருந்தாள். மடிக்கணினியை மடித்து முதுகுப்பையில் நுழைத்துவிட்டு சிவப்பு பட்டியில் கழுத்தில் சுற்றப்பட்டு, லெமனேட் செய்யப்பட்டு மார்பில் தொங்கிய அலுவக அடையாள அட்டையை தனது தலைக்குமேலால் தூக்கி கருமையான நேர்படுத்தப்பட்ட கேசத்தின் ஊடாக பின்னால் […]

 
* வேலி- (சிறுகதை) -கோமகன்

* வேலி- (சிறுகதை) -கோமகன்

    அதிகாலை மூன்று மணிக்கு வேலையால்  வந்து படுத்து, செத்த சவம் போலக் கிடந்த என்னை ஐந்து மணிக்கு அடித்த  தொலைபேசி அழைப்பு,  வெறி கொள்ள வைத்தது. மறுமுனையில் நரேன் என்ன மச்சான் நித்திரையாய் போனியே என்று லூசுத்தனமாக தனது கதையை தொடங்கினான் . “உனக்கு தெரியும் தானே மச்சான் என்னம் ரெண்டு கிழமையிலை எங்கடை சூராவத்தை பிள்ளையார் கோயில் கொடி ஏறுது . நீ நாளையிண்டைக்கு ஊருக்கு […]

 
*பெண்ணுக்குள் என்ன உண்டு (சிறுகதை) -தமிழ்க்கவி

*பெண்ணுக்குள் என்ன உண்டு (சிறுகதை) -தமிழ்க்கவி

எல்லையற்றுப் பரந்திருக்கும் இந்தப் பிரபஞ்சம் முழுதும் பெண்ணே உயர்ந்தவள் எனப் பறை சாற்றிய போதும், அதை நான் ஒரு போதும் நம்ப மாட்டேன். “ பெண் எனப்பட்டதே பெருமாயம்” இன்றுவரை எந்தப் பெண்ணும் தன் மனதைத்திறந்ததில்லை. அதை ஒரு ஆண்தான் திறந்துபார்க்கிறான். காதலனாகவோ கணவனாகவோ உள்ள ஒருவரிடம் தன் அந்தரங்கத்தை வெளிவிட்டுவிடும் பெண்ணை, அவர்களது வாக்குமூலங்களை வைத்தே தானே அதுவாக எழுதியோ பேசியோ விடுகிறார்கள். யாரா?…ஆண்கள்தான்“ நான்தான் சொல்கிறேனே ஒரு […]

 
*பிரத்தியேகம்  (சிறுகதை) -கரவைதாசன்

*பிரத்தியேகம் (சிறுகதை) -கரவைதாசன்

  எனக்குத் தெரியும் தூரத்தில் அவர்கள் அந்த தொடு கடலை அண்டி நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கிடையில் அண்ணளவாக ஒரு இரண்டு மீட்டர் இடைத்தூரம் இருக்கலாம். அவர்கள் எதையோ சம்பாசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் அநாதரவற்றுக் கிடக்கும் கல்லொன்றினையோ அல்லது பனிக் கட்டியொன்றையோ உதைக்கின்றார். இருப்பிலிருந்து பிரிய விரும்பா ரீங்காரத்துடன் அது நகர்ந்து செல்கின்றது. நேற்றிரவு பூத்த பனிகள் இறுகித் திண்மையாகி வெள்ளைச் சல்லிக் கற்களைப்போல் கடற் கரையோடு பரந்து கிடக்கின்றன. வானம் […]

 
*வைகறைக்கனவு (சிறுகதை)  – தமிழினி ஜெயக்குமாரன்

*வைகறைக்கனவு (சிறுகதை) – தமிழினி ஜெயக்குமாரன்

‘மலரினி ஓடிக் கொண்டிருந்தாள். வேகமாக மிக மிக வேகமாக. பூமி அவளது கால்களுக்கு கீழே ஒரு மின்சார ரயிலின் வேகத்தில் பின்னோக்கி நகர்வதைப் போலிருந்தது. நிலத்தைத் தொட்டும் தொடாமலும் உதைத்தெழும்பும் ஒரு மானின் லாவகத்துடன் அவளது கால்கள் அசைந்து கொண்டிருந்தன. பிடரி மயிரை சிலுப்பிக் கொண்டு காட்டுப் பாதைகளையும் கட்டாந்தரைகளையும் கடந்து காற்றிலே பறக்கும் வேகக் குதிரையாகயாகவே மாறிவிட்டிருந்தாள் அவள்.   ஆஹா… எத்தனை இனிமையானதொரு அனுபவம் என எண்ணுவதற்குள்ளாகவே […]

 
* சுட்ட காசு – நெற்கொழுதாசன் (சிறுகதை)

* சுட்ட காசு – நெற்கொழுதாசன் (சிறுகதை)

மாலைச் சூரியஒளி பட்டு, வளைந்து நெளியும் பொன் தகடு போல் இரணைமடுக்குளத்தின் நீர் மினுங்கிக்கொண்டிருந்து. குளக்கட்டில் காகங்களும் சில கொக்குகளும் பெயர் தெரியாத பறவைகளும் இரை தேடி நடந்து கொண்டிருந்தன. நீர்ப்பரப்பின் இடையிடையே தெரிந்த பட்ட மரங்களில் உருவத்தால் பெரியதான சாம்பல்நிறப் பறவைகள் அமைதியாக அமர்ந்து இருந்தன. மாலை வெய்யிலுடன் குளிர் காற்று இணைந்து மோதியபோது சிறுசெடிகள் சிலிர்த்து அடங்கியது. அந்த சூழலின் அமைதியை ஆங்காங்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் […]

 
* பாஸ்”போர்ட்”- கோமகன் (சிறுகதை)

* பாஸ்”போர்ட்”- கோமகன் (சிறுகதை)