Home » எஸ்.கிருஷ்ணமூர்த்தி

 
 

எஸ்.கிருஷ்ணமூர்த்தி

 
 
*பூலோகம் திரைப்படமும் அது சொல்லும் சேதிகளும்  – எஸ்.கிருஸ்ணமூர்த்தி

*பூலோகம் திரைப்படமும் அது சொல்லும் சேதிகளும் – எஸ்.கிருஸ்ணமூர்த்தி

ராஜா, ராணி, வின்சர், லிடோ, வெலிங்டன், ஸ்ரீதர், மனோகரா, சாந்தி, ஹரன், றீகல், றியோ (றியோ தற்காலிகக் கொட்டகை) இப்படிப் பதினொரு சினிமாக் கொட்டகைகள் ஒரு காலத்தில் யாழ் நகரில் மாத்திரம் இருந்தன. கோயில் திருவிழாக்கள், கிராமத்து மேடைகளில் நடத்தப்படும் அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி போன்ற கூத்துகள், கண்ணன் கோஷ்டி, ரங்கன் கோஷ்டி, அருணா கோஷ்டி ஆகியவற்றின் இசைக்கச்சேரிகள், தட்சணாமூர்த்தி, சின்னராசா, பஞ்சாபிகேசன், பழனி போன்ற புகழ் […]

 
* ஒரு வீடு, இருவேறு உலகம் -எஸ்.கிருஷ்ணமூர்த்தி (சிறுகதை)

* ஒரு வீடு, இருவேறு உலகம் -எஸ்.கிருஷ்ணமூர்த்தி (சிறுகதை)

    நாதனது கன நாள் ஆசை இப்போதுதான் நிறைவேறியுள்ளது. அவுஸ்திரேலியாவில் காணி வாங்கி பெரிய மாடி வீடு கட்டு வேண்டும் என்பது. அவனும் மனைவியும் மாறி மாறி  உறக்கமின்றி கடுமையாக உழைத்து  காசு சேமித்து  நிலம் வாங்கி அதில் ஒரு அழகிய பெரிய மாடி வீடொன்று கட்டிவித்தான். வீட்டைக் கட்டிப் போட்டு சும்மா இருந்தால் அதில் என்ன சுகம் இருக்கிறது? நாலு சனம் வந்து வீட்டைப் பார்த்தால் தானே […]

 
*ஒரு காரின் கதை-எஸ். கிருஷ்ணமூர்த்தி

*ஒரு காரின் கதை-எஸ். கிருஷ்ணமூர்த்தி

                அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும், சியவச என்றொரு அதிஸ்ட லாபச்சீட்டு இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளிலும் விற்பனை செய்யப்பட்டது. அந்தச் சீட்டின் விலை என்னவென்று ஞாபகமில்லை. என்ன நிதிசேகரிப்புக்காக அது விற்கப்பட்டது என்பதும் நினைவில்லை. ஆனால் மறக்காதது, அதன் முதல் பரிசு கார்.  அந்தச் ச்Pட்டில் கார் படம் ஒன்று வரையப்பட்டிருந்தது. அந்த சீட்டை வாங்கியதிலிருந்து, […]

 
*கொண்டாட்டங்கள் -எஸ். கிருஷ்ணமூர்த்தி

*கொண்டாட்டங்கள் -எஸ். கிருஷ்ணமூர்த்தி

    அண்மையில் முகப்பு புத்தகத்தில், அது தான் பேஸ் புக்கில்  எனது பேஸ் புக் நண்பர் ஒருவர், தைப் பொங்கலும் எங்கடை கொண்டாட்டம் இல்லையாம், அது ஆபிரிக்கர்களின் விழாவாம் என்று  என்று அழுது கொண்டிருந்தார். சித்திரை வருசப் பிறப்பு இப்ப ஆரியர் வருசம் என்று எங்கடை தமிழ் அபிமானிகள் ஓலமிட,  அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும் என்னை விட வேறு தமிழ் அபிமானிகள் உண்டா எனப் பொங்கியெழுந்து  தைப் […]

 
*காணி நிலம் வேண்டும்!-எஸ். கிருஷ்ணமூர்த்தி

*காணி நிலம் வேண்டும்!-எஸ். கிருஷ்ணமூர்த்தி

நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் காலையில் துவிச் சக்கர வண்டியின் பின்னால் பொருட்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் கரியரில் ஒரு நெடுக்காக மடிக்கப்பட்ட பேப்பர் கட்டுடன் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை அணிந்து போவார். மதியம் வீடு திரும்புவார. மாலை நேரத்திலும் இதே செற்றப்புடன் செல்வார்.ஆனால் வேட்டி, சட்டை மங்கிய கலராக இருக்கும். சில வேளைகளில் சைக்கிளின் பின்னுக்கிருந்த பேப்பர் கட்டு முன்னுக்குப் போகும். பின்னுக்கு […]

 
இயந்திரத்தோடு வாழ்தல்-எஸ்.கிருஷ்ணமூர்த்தி

இயந்திரத்தோடு வாழ்தல்-எஸ்.கிருஷ்ணமூர்த்தி

    தொண்நூறுகளில் வெளிநாட்டுக்குப் புலம் பெயர்ந்த காலகட்டத்தில் பெற்றோர், ஊர், உறவினர் நண்பர்கள் பிரிவு என்பன வாட்டியதால் எப்போது தபால் வரும் என்ற ஏக்கத்துடன் இருப்பேன். கடிதங்கள் வெறும் ஒன்று, இரண்டு தாள்களில அல்ல. ஒரு புதினப் பத்திரிகை போல் கனதியும் இருக்கும், செய்திகளும் இருக்கும். காலம் செல்லச் செல்ல சுவையான கடிதங்கள் சுமையான கடிதங்களாக மாறத்தொடங்கியது. வேலையிடத்தில் மதிய போசன வேளைகனில் கடிதம் எழுதுவதிலும் வாசிப்பதிலும் நேரம் […]