Home » இதழ் 08

 
 

இதழ் 08

 
 
(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…03

(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…03

ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளும் விமர்சனங்களும் மறுபார்வைகளும் முன்வைக்கப்பட்டுவரும் காலம் இது. கனவுகளும் இலட்சிய வேட்கையும் கருகிப் போன நிலையில் ஒவ்வொருவரும் தாம் செயற்பட்ட தளங்களில் இருந்து தங்கள் அனுபவங்களையும் தாங்களறிந்த விசயங்களையும் தாம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் பதிவு செய்து வருகின்றனர். கூடவே விமர்சனங்களுக்குட்படுத்தியும் வருகின்றனர். இது ஒரு வகை. இந்த வகை எழுத்துகள் மேலும் பலவாகத் தொடரவுள்ளன. இதேவேளை ஈழப்போரின் நான்காம் கட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் இன்னொரு தளத்தில் […]

 
*எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்

*எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்

  இரவு விழித்திருக்கும் வீடு   நீ கதிரறுக்கும் வயல்பூமியை மஞ்சளால் போர்த்திய அம் மாலை நேரம் எவ்வளவு அழகாயிருந்தது இறுதியாக செஞ்சாயத் தேனீரும் கறுப்பட்டித் துண்டும் சுமந்து வந்து அருந்த வைத்த உன் மனைவியின் காலடித் தடத்தில் முழுவதுமாக இருள் உறைந்த உனது தற்கொலைக்கு முன்னதான அக் கணம் வரை   பயிர்களை விதைக்கையில் நீயெழுப்பிய இனிய கீதம் அம் மலைச்சரிவுகளில் இன்னும் அலைகிறது மேய்ப்புக்காக நீயழைத்துச் செல்லும் […]

 
*ஈரானிய சினிமா: கலை சமூகம் மற்றும் அரசு- தமிழில்: ஜிஃப்ரி ஹாஸன்

*ஈரானிய சினிமா: கலை சமூகம் மற்றும் அரசு- தமிழில்: ஜிஃப்ரி ஹாஸன்

1979 ஈரானியப் புரட்சியையடுத்து ஓர் இஸ்லாமியக் குடியரசு நிறுவப்பட்டது. அநேகமானவர்கள் ஈரானிய சினிமா புதிய தடைகளால் நிறுத்தப்பட்டுவிடும் என்று எதிர்வு கூறினார்கள். ஆனால் ஈரானிய சினிமா, ஈரானிய சமூகத்திலும், பண்பாட்டிலும் பாரியளவான மாற்றங்களை நிகழ்த்தி தானும் பல குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு முகங்கொடுத்து அழியாமல் பிழைத்துக் கொண்டது. இன்று ஈரானிய சினிமா உலகில் ஊட்டமூட்டக்கூடிய புத்தாக்கம் நிறைந்த ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஈரானிய தயாரிப்பாளர்களால் சர்வதேச திரைப்பட விழாக்களில் மிகுந்த வரவேற்புடன் திரைப்படங்கள் […]

 
2012ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற சீனர்-தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

2012ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற சீனர்-தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

    வெளிப்படையாக நான் சொல்லவில்லையானாலும் அத்தையின் கல்யாண யோசனைகளையிட்டு எனக்கும் உடன்பாடு இல்லை. அப்பா, என் சகோதரர்கள், அவர்களின் மனைவிமார்கள்… அவர்களுக்கும் அப்படித்தான் இருந்தது. எங்கள் பார்வையில், அட அந்தாள் ஒத்து வராது, என்றே நாங்கள் எல்லாருமே அபிப்ராயப்பட்டோம். எங்கள் சிறு பிராயத்தில் இருந்தே, அத்தைக்கான நல்ல மாப்பிள்ளை யார், என்று நாங்கள் யோசித்துக்கொண்டுதான் இருந்திருக்கிறோம். வாங் சியோதியுடன் அவளது திருமணம் குடும்பத்துக்கே நல்ல பேர் தந்துவிட்டு, அதுவே […]

 
இருள்நதி -திருமாவளவன்

இருள்நதி -திருமாவளவன்

      இன்று முழுநிலா. இல்லை   நல்ல பால்போல் வெள்ளிப்பனி ஒளி   காற்று,கடும் குளிர். பற்றி எரிகிறது நிலம் நிலம்.   இருகையிருந்தும் முடம்போல விழித்திருக்கிறேன் நிலத்துக்கு காவலாய்.   சன்னலினுடே பெரும்கடலென விரிந்து கிடக்கிறது அண்டம்   இப்போ நான் சிறு மீன்குஞ்சு ஆழச்சுழியோடி நீந்திக் கடக்கிறேன் காலத்தை   முடிந்தகாலம் ஈரம்,எதிர்காலம் கனவு நடுவில் கண்ணீர்   கனவுகளில் நீந்தித் திளைக்கிகிறது மீன் குஞ்சு   திடுக்கிட்டு விழித்தபோது   பனித்துகில் போர்வைக் கதகதப்புள் ஆழ்ந்து உறங்கிக் கிடக்கிறது நிலம்   காலடியில் பெருக்கெடுக்கும் சொற்களின் பிரவாகத்தில் துடிக்கிறது மீன்குஞ்சு ௦௦௦௦ ஜனவரி 05. 2013

 
இனி அவன் – நடுநடுவே நிறையக் காட்சிகளைக் காணோம்!- யோ.கர்ணன்

இனி அவன் – நடுநடுவே நிறையக் காட்சிகளைக் காணோம்!- யோ.கர்ணன்

அசோக ஹந்தகமவின் ‘இனி அவன்’ திரைப்படமளவிற்கு ஆரவாரமாக வெளியிடப்பட்ட இலங்கைத் தமிழ் திரைப்படமெதுவும் இருந்திருக்காதென்றுதான் நினைக்கிறேன். இப்படி சொல்வது கூட அவர்களது உழைப்பை குறைத்து கூறுவதாகவே இருக்கும். அண்மைய வருடங்களில் இலங்கையில் திரையிடப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு திரைப்படங்களெதற்குமே இந்தளவு விளம்பரம் செய்யப்பட்டிருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு கட்டத்தில் எனக்கு பிரமிப்பாகவே போய்விட்டது, இந்தப்படத்திற்கான விளம்பரச் சுவரொட்டிகளை விட வேறொன்றையும் சூழலில் காணவே முடியாமல் போய்விடுமோ என்று. யாழ்ப்பாணத்திலும் அப்படியொரு விளம்பரம். […]

 
*காணி நிலம் வேண்டும்!-எஸ். கிருஷ்ணமூர்த்தி

*காணி நிலம் வேண்டும்!-எஸ். கிருஷ்ணமூர்த்தி

நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் காலையில் துவிச் சக்கர வண்டியின் பின்னால் பொருட்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் கரியரில் ஒரு நெடுக்காக மடிக்கப்பட்ட பேப்பர் கட்டுடன் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை அணிந்து போவார். மதியம் வீடு திரும்புவார. மாலை நேரத்திலும் இதே செற்றப்புடன் செல்வார்.ஆனால் வேட்டி, சட்டை மங்கிய கலராக இருக்கும். சில வேளைகளில் சைக்கிளின் பின்னுக்கிருந்த பேப்பர் கட்டு முன்னுக்குப் போகும். பின்னுக்கு […]

 
அழுத்தம்-க.சட்டநாதன்

அழுத்தம்-க.சட்டநாதன்

புலன்கள் ஒடுங்கி உறைந்த நிலையில் அவன் இருந்தான். கலக்கமுற்றிருந்தவனை எதுவும் நிதானப்படுத்தவில்லை. பதகளிப்பு அவனுடனேயே அசையாது இருந்தது. அவனைப்பார்த்த ஐயா, “என்ன ரமணா…! குட்டி போட்ட பூனை போல வளைய வளைய வாறை… ஏ.எல் சோதனை வெள்ளிக்கிழமை, ஏழாம் திகதி……! இன்னும் மூன்று நாள்தான் கிடக்கு, எழுந்து படியன்ரா….!” ஐயாவின் பேச்சு அவனுக்கு எரிச்சல் தருவதாய் இருந்தது. உயர்தரப்பரீட்சைக்கு இரண்டு முறை படையெடுத்து, அவனுக்கு தோல்விதான் மிஞ்சியது. ‘இன்னுமொரு முறை […]

 
வன்னி – மரணவெளிக் குறிப்புகள்-கருணாகரன்

வன்னி – மரணவெளிக் குறிப்புகள்-கருணாகரன்

  முதற்காட்சி 1. பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது இரவு பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது பகல் பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது காலை பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது மாலை பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது நிலம் பிணங்களாலும் சாவினாலும் நிறைந்தது வாழ்க்கை 2. நாட்களை மூடி காலங்களை மூடி மனிதர்களை மூடிப் பேரிருளாய் யுத்தம் விரிந்த போது நாங்கள் கூரைகளற்ற வெளியில் அலைந்தோம். போர்ப்பிரபுக்கள் வெற்றியென்ற போதையைத் தவிர வேறொன்றையும் கணக்கிற் கொள்வதில்லை “எங்கேயுன் […]

 
ஒட்டுண்ணிகள்-சொ.பிரபாகரன் -சிறுகதை

ஒட்டுண்ணிகள்-சொ.பிரபாகரன் -சிறுகதை

வணிகவரி அலுவலகத்தில் இருந்து, அமீனா வந்திருந்தான். “உங்க கம்பெனி  ரெண்டு லட்சம் சொச்சம்  வரிபாக்கி  கட்ட  வேண்டியிருக்குது,” என்றுசொன்னான். அலட்சியமாக  சொன்னவன், பவுச்சை  உடைச்சுப் “பாக்குத்தூளை” இடது கைப் பாதத்தில் போட்டு, வலது பெருவிரலை   வைத்து நன்றாக நசியம்பண்ணி, தட்டி வாயில் போட்டுக் கொண்டான். பின்னர் ஒட்டியிருந்த  பாக்குத்துகள்கள்  முற்றிலும்  அகலும் வண்ணம், இரண்டுகைகளையும்  நன்றாகத்  தட்டி விட்டுக்  கொண்டான். “அப்படியா? எந்த வருசத்து வரி?” நான் ஆர்வமின்றி கேட்க , அமீனா ஆபிஸை ஒரு சுற்று சுற்றிப் பார்வை இட்டான்.  நான் கேட்ட கேள்விக்குப்  பதில்சொல்லாமல் , “ஆபிஸிலே நீங்க ஒருத்தர்தான் ஸ்டாபா?” என்று கேட்டான். “ஆமாம்.. ஆனா உதவிக்கு ஒரு அசிஸ்டெண்டை, கான்டிராக்டில்  வச்சிருக்கோம்,” என்று நான் சொன்னதைப் பெரிதாய் அவன் சட்டைச்செய்யவில்லை. அடுத்த கேள்வியைத்  தொடுத்தான்.  “இந்த ஆபிஸிலே உள்ள பிர்ட்ஷ், ஏர்கூலர், ஹீட்டர், இந்த மேஜை, ஸ்டோர்வெல் எல்லாம்கம்பெனியுடையதுதானா ?” “ஆமாம்,” என்று எரிச்சலாய் சொன்ன நான் , “நான் கேட்டதற்குப் பதிலைச் சொல்லுங்க . எந்த வருசத்து வரிப்பாக்கி?” என்று மறுபடியும் கேட்டேன் . “1998-99ம் வருசத்துக்கானது.. இன்னும் ரெண்டு நாளில் கட்டலைன்னா, நாங்க உங்க ஆபிஸிக்கு ‘சீல்‘ வைக்க வேண்டியிருக்கும். பிறகு பத்து நாளைக்குள் இங்கே ஆபிஸிலுள்ள சாமான்களை ஏலத்துலே விட்டுடுவோம்.” காவிப்பல் தெரிய இளித்தான். உன்னை இந்த இக்கட்டில் இருந்த மீட்க, எவ்வளவு பணம் தரத் தயாரா இருக்கே என்பதுதான்,   இந்த இளிப்புக்கு அடையாளம் என்பதை […]