Home » திரை மொழி

 
 

திரை மொழி

 
 
*பூலோகம் திரைப்படமும் அது சொல்லும் சேதிகளும்  – எஸ்.கிருஸ்ணமூர்த்தி

*பூலோகம் திரைப்படமும் அது சொல்லும் சேதிகளும் – எஸ்.கிருஸ்ணமூர்த்தி

ராஜா, ராணி, வின்சர், லிடோ, வெலிங்டன், ஸ்ரீதர், மனோகரா, சாந்தி, ஹரன், றீகல், றியோ (றியோ தற்காலிகக் கொட்டகை) இப்படிப் பதினொரு சினிமாக் கொட்டகைகள் ஒரு காலத்தில் யாழ் நகரில் மாத்திரம் இருந்தன. கோயில் திருவிழாக்கள், கிராமத்து மேடைகளில் நடத்தப்படும் அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி போன்ற கூத்துகள், கண்ணன் கோஷ்டி, ரங்கன் கோஷ்டி, அருணா கோஷ்டி ஆகியவற்றின் இசைக்கச்சேரிகள், தட்சணாமூர்த்தி, சின்னராசா, பஞ்சாபிகேசன், பழனி போன்ற புகழ் […]

 
* கொரியா  திரைப்படம் (The Way Home – வீட்டிற்கான வழியில்)- – எம்.ரிஷான் ஷெரீப்

* கொரியா திரைப்படம் (The Way Home – வீட்டிற்கான வழியில்)- – எம்.ரிஷான் ஷெரீப்

    எழுபத்தைந்து வயது மூதாட்டிக்கும் ஏழு வயதுச் சிறுவனுக்குமான பாசப் பிணைப்பின் உள்நோக்கங்கள் எந்தவித போலிப் பூச்சுக்களும் அற்றவை. அவை எந்த எதிர்பார்ப்புக்களையும் கொண்டிருப்பதில்லை. வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களையும் கண்ட மனிதனொருவனும், காணத் துடிக்கும் மனிதனொருவனும் எக் கட்டத்தில் ஒன்றாக இணைகிறார்கள்? எது அவர்களிடையே ஒரு ஒற்றுமையாகக் காணப்படுகிறது? எது அவர்களை ஒருவரிடமிருந்து ஒருவர் பிரியும்போது வலியை ஏற்படுத்துகிறது? போன்ற கேள்விகளை நம்மிடம் விட்டுவிட்டு முடிகிறது ‘ஜிபோரோ (The […]

 
* ‘A Gun and a ring’ திரைப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள் –  தவ சஜிதரன்

* ‘A Gun and a ring’ திரைப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள் – தவ சஜிதரன்

சுவாரசியம் அற்ற பகுதிகளைக் களைந்து விட்டு வாழ்க்கையைச் சொல்வது தான் சினிமா என்பார் ஹொலிவூடின் புகழ்மிகு இயக்குனரான அல்ஃப்ரெட் ஹிட்ச்கொக் (What is drama but life with the dull bits cut out – Alfred Hitchcock). நாம் அறிந்த தமிழ் சினிமாவில் இது அபூர்வமாகவே நிகழ்வதுண்டு. பார்த்துச் சலித்த, ஒரேவிதமான கதைகளை மீள்சுழற்றித் தருவதையே தலையாய கடனாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது தமிழகத்தின் கனவுத் தொழிற்சாலை. […]

 
*பாலாவின் பரதேசி: காலனியாதிக்கத்தின் மீதான விமரிசனம்-அ.ராமசாமி

*பாலாவின் பரதேசி: காலனியாதிக்கத்தின் மீதான விமரிசனம்-அ.ராமசாமி

  பாலாவின் பரதேசி படத்தைத் திரையரங்கின் பெருந்திரையில் அசையும் பிம்பக் கோர்வையாகப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இல்லை. கணிணியின் குறுந்திரையில் பார்க்கத்தக்க இணைப்புக்காகக் குறைந்தது 10 நாட்கள் காத்திருக்க வேண்டும்.  காத்திருந்து பார்த்தவுடன் பரதேசியை பற்றிக் கட்டுரையொன்றை எழுதி அச்சில் வரும் தமிழ்நாட்டுப் பத்திரிகை ஒன்றிற்கு அனுப்ப வேண்டும் என்று தோன்றியது, அதேநேரத்தில் பரதேசி போன்ற திரைப்படத்தைக் கணிணியில் பார்த்து விட்டு விமரிசனம் செய்வது, அதில் செலுத்தப்பட்டுள்ள உழைப்பு, அக்கறை, […]

 
*ஈரானிய சினிமா: கலை சமூகம் மற்றும் அரசு- தமிழில்: ஜிஃப்ரி ஹாஸன்

*ஈரானிய சினிமா: கலை சமூகம் மற்றும் அரசு- தமிழில்: ஜிஃப்ரி ஹாஸன்

1979 ஈரானியப் புரட்சியையடுத்து ஓர் இஸ்லாமியக் குடியரசு நிறுவப்பட்டது. அநேகமானவர்கள் ஈரானிய சினிமா புதிய தடைகளால் நிறுத்தப்பட்டுவிடும் என்று எதிர்வு கூறினார்கள். ஆனால் ஈரானிய சினிமா, ஈரானிய சமூகத்திலும், பண்பாட்டிலும் பாரியளவான மாற்றங்களை நிகழ்த்தி தானும் பல குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு முகங்கொடுத்து அழியாமல் பிழைத்துக் கொண்டது. இன்று ஈரானிய சினிமா உலகில் ஊட்டமூட்டக்கூடிய புத்தாக்கம் நிறைந்த ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஈரானிய தயாரிப்பாளர்களால் சர்வதேச திரைப்பட விழாக்களில் மிகுந்த வரவேற்புடன் திரைப்படங்கள் […]

 
இனி அவன் – நடுநடுவே நிறையக் காட்சிகளைக் காணோம்!- யோ.கர்ணன்

இனி அவன் – நடுநடுவே நிறையக் காட்சிகளைக் காணோம்!- யோ.கர்ணன்

அசோக ஹந்தகமவின் ‘இனி அவன்’ திரைப்படமளவிற்கு ஆரவாரமாக வெளியிடப்பட்ட இலங்கைத் தமிழ் திரைப்படமெதுவும் இருந்திருக்காதென்றுதான் நினைக்கிறேன். இப்படி சொல்வது கூட அவர்களது உழைப்பை குறைத்து கூறுவதாகவே இருக்கும். அண்மைய வருடங்களில் இலங்கையில் திரையிடப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு திரைப்படங்களெதற்குமே இந்தளவு விளம்பரம் செய்யப்பட்டிருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு கட்டத்தில் எனக்கு பிரமிப்பாகவே போய்விட்டது, இந்தப்படத்திற்கான விளம்பரச் சுவரொட்டிகளை விட வேறொன்றையும் சூழலில் காணவே முடியாமல் போய்விடுமோ என்று. யாழ்ப்பாணத்திலும் அப்படியொரு விளம்பரம். […]

 
ஒஸ்கார் விருதினை வென்ற ஈரானின் முதல் திரைப்படம்– எம்.ரிஷான் ஷெரீப்

ஒஸ்கார் விருதினை வென்ற ஈரானின் முதல் திரைப்படம்– எம்.ரிஷான் ஷெரீப்

‘நாதிரும் ஸிமினும் இவர்களுக்கிடையிலான பிரிவும்‘ –           விவாகரத்துக் கோரி நிற்கும் ஒரு இஸ்லாமியத் தம்பதியிடமிருந்து காட்சி ஆரம்பிக்கிறது. விவாகரத்துக்கான காரணம் தமது பதினொரு வயது மகளின் எதிர்காலம். ஈரானின் நெருக்கடியான சூழ்நிலையில் தனது மகள் வாழ்வதை விரும்பாத மனைவி ஸிமின், தனது கணவன் நாதிருடனும் மகள் தேமேயுடனும் வெளிநாடு சென்று வாழத் தீர்மானிக்கிறாள். கணவனால் அவர்களுடன் வர முடியாத சூழ்நிலை. ஞாபகமறதி (அல்ஸீமர்) நோயினால் பாதிக்கப்பட்ட முதியவரான தனது […]

 
Vimbam Award 2012-Tamil Short Film Festival

Vimbam Award 2012-Tamil Short Film Festival

Vimbam Award 2012 7th International Tamil Short Film Festival                      —————————————————————————————————————- Best Child Artist Jekan Harish (Adivaanam) Sri Lanka Best Actor Sathapranavan (Poralikku Itta Peyar) France Best Actress Pon Thaya (Nagal) France Best Editor Desuban (Thinap Payanam) France Best Script Pon […]

 
அசோகா ஹந்தகம-சிங்கள திரைப்பட இயக்குநர்-சு.மகேந்திரன்

அசோகா ஹந்தகம-சிங்கள திரைப்பட இயக்குநர்-சு.மகேந்திரன்

  அவரின் படைப்புக்கள் விமர்சனங்களுக்கு உட்படுத்துவதிலேயே திரையுலகில் அவரை பிரதிபத்தப்படுத்துவது   ஆரம்பிக்கிறது. ஆனால் தனது அணுகுமுறையில் சமீபகாலமாக சிறிது வேறுபட்டிருக்கிறார். அவரது ஆறாவது படமாகிய ‘இனி-அவன்’  இல் தனது வெளிப்படுத்தும் தன்மையில் மாற்றங்களை செய்துள்ளார். எனினும் சில இடங்களில் விவாதத்திற்கு உட்படும் கோபம் காணப்படுகிறது.     ‘எனது வழமையான பாணி நடையிலிருந்து நான் மாறுபடவில்லை. காலை சிறிது பின் நோக்கி வைத்துள்ளேன். ஆனால் இதனை, சரணாகதி அடைந்து விட்டேன் […]

 
நல்ல திரைப்படங்களைத் தெரிவு செய்யும் பாதைகள்:அ.ராமசாமி

நல்ல திரைப்படங்களைத் தெரிவு செய்யும் பாதைகள்:அ.ராமசாமி

பகுப்பாய்வை நோக்கிய ஒரு ரசிகனின் பயணம் ====================================== என் நினைவில் இருக்கும் ஆகப் பழைய படத்துக்கு வயது அரை நூற்றாண்டு ஆகப் போகிறது. கலையரசி (இயக்கம்: A.காசிலிங்கம்) திரைக்கு வந்த 1963 ஆம் ஆண்டிலேயே படத்தைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மதுரையில் இருந்து 35 மைல் தொலைவில் இருக்கும் எழுமலை டூரிங் டாக்கீஸுக்கு ஒரு படம் வந்து சேர குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகும். எனது ஊரிலிருந்து இரண்டு […]