Home » முருகபூபதி

 
 

முருகபூபதி

 
 
*நேர்காணல் – லெ.முருகபூபதி

*நேர்காணல் – லெ.முருகபூபதி

  ஈழத்து ,புகலிட இலக்கியப்பரப்பில் லெ.முருகபூபதி தனக்கெனப் பல முத்திரைகளைப் பதித்துக்கொண்டவர். தாயகத்தில் உள்ள எக்ஸ்பிறஸ் நியூஸ் பேர்ப்பர்ஸ் சிலோன் பிறைவேற் லிமிட்டெட் (Express News Papers (Cey) (Pvt) Limited) நிறுவனத்தின் தமிழ் பத்திரிகைகளில் ஒன்றான வீரகேசரியில் 1972 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது ஊடகப்பணி மற்றும் இலக்கியப்பணி இன்று வரை தொடர்கின்றது. லெ.முருகபூபதி  சமூக, கலை இலக்கிய செயற்பாட்டாளராக இருந்து வருகின்றார். நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், […]

 
* தொ.மு.சி.ரகுநாதன்   சமரசங்களுக்குட்படாத படைப்பாளி – முருகபூபதி

* தொ.மு.சி.ரகுநாதன் சமரசங்களுக்குட்படாத படைப்பாளி – முருகபூபதி

“புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம், உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை” – என்று  எழுதிய  தொ.மு.சிதம்பரரகுநாதன்  தமது 79 ஆவது வயதில் திருநெல்வேலியில் மறைந்தார் என்ற அதிர்ச்சியும் துயரமும் கலந்த செய்தியை   தாங்கிய  கடிதம்    2001 ஆம்  ஆண்டு  இறுதியில் இலங்கையிலிருந்து நண்பர்   கே.கணேஷிடமிருந்து   எனக்கு   வந்தது. வாராந்தம்   கொழும்புப்   பத்திரிகைகள்  இங்கு திங்கள் அல்லது செவ்வாய் கிடைத்துவிடும். ஆனால் அவற்றில் இந்த மறைவுச் செய்தியை […]

 
* வாழ்வை எழுதுதல் — –முருகபூபதி

* வாழ்வை எழுதுதல் — –முருகபூபதி

    அவுஸ்திரேலியாவில் 90களில் நாம்தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கியபோது,இங்கு புலம்பெயர்ந்துவந்த தமிழ்க்குழந்தைகளுக்காக மனனப்போட்டிகளையும் நாவன்மைப்போட்டிகளையும் நடத்தினோம். இந்த நாட்டில் முதல் தடவையாக நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவிற்காக நடத்தப்பட்ட போட்டியில் ஒளவையாரின் ஆத்திசூடியை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி அதனை மனப்பாடம் செய்து கருத்தும் சொல்லுமாறு கேட்டிருந்தார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள்.   அப்பொழுது எனது மகனுக்கு நான்கு வயது. அவன் ஆத்திசூடியை மனப்பாடம் செய்யும் பயற்சியில் பலநாட்கள் ஈடுபட்டான். கருத்தும் சொல்லிக்கொடுத்தபோதுஒளவையார் […]

 
*வாழ்வை எழுதுதல் — 04 -முருகபூபதி

*வாழ்வை எழுதுதல் — 04 -முருகபூபதி

அவுஸ்திரேலியாவில் 90 களில் நாம், தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கியபோது, இங்கு புலம்பெயர்ந்துவந்த தமிழ்க் குழந்தைகளுக்காக மனனப்போட்டிகளையும் நாவன்மைப் போட்டிகளையும் நடத்தினோம். இந்த நாட்டில் முதல் தடவையாக நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவிற்காக நடத்தப்பட்ட போட்டியில் ஒளவையாரின் ஆத்திசூடியை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி அதனை மனப்பாடம் செய்து கருத்தும் சொல்லுமாறு கேட்டிருந்தார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள். அப்பொழுது எனது மகனுக்கு நான்கு வயது. அவன் அத்திசூடியை மனப்பாடம் செய்யும் பயற்சியில் பலநாட்கள் ஈடுபட்டான். […]

 
*பயணியின் பார்வையில் — 03  -முருகபூபதி

*பயணியின் பார்வையில் — 03 -முருகபூபதி

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்! இலங்கையில் நீண்டகாலம் மல்லிகை இதழை வெளியிடும் எழுத்தாளர் டொமினிக்ஜீவாவிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்ததை அவதானித்திருக்கின்றேன். இலக்கிய நண்பர்களைப்பற்றிய ஏதும் நற்செய்தி அறிந்தால் உடனே “ வாழ்க” எனச்சொல்வார். அவரிடமிருந்து எனக்கும் அந்தப்பழக்கம் தொற்றிக்கொண்டுவிட்டது. அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தபின்பும் தொடருகிறது. இதனை அருகிருந்து அவதானித்த  எனது மகனும் சின்ன வயதில், அவனுக்கு ஏதும் விசேடமாக வாங்கிக்கொடுத்தால் உடனே “வாழ்க” என்பான். அந்தவகையில் ‘வாழ்க’ என்ற […]

 
* நடுவழியில் இன்ப அதிர்ச்சி -முருகபூபதி

* நடுவழியில் இன்ப அதிர்ச்சி -முருகபூபதி

  பயணியின் பார்வையில் —-02 நடுவழியில் இன்ப அதிர்ச்சி ———————————————- 1983 ஆம் ஆண்டு இலங்கைத்தமிழர்களுக்கு வேதனையும் சோதனையும் இழப்பும் விரக்தியும் நிரம்பிய காலம். இன்றும் அந்த ஆண்டின் அமளியும் அவலமும் நினைவுகூறப்படுகிறது.ஆண்டுதோறும் வெலிக்கடை தாக்குதல் சம்பவமும் படுகொலைகளும் தமிழ் ஊடகங்களில் படங்களுடன் ஜூலை மாதங்களில் நிச்சயம் வெளியாகிவிடும்.   அக்காலப்பகுதியில் பதவியிலிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலிருந்த யூ.என்.பி. அரசின் ஆசீர்வாதத்துடன் அனைத்து பேரவலங்களும் தொடர்ந்தபோதிலும், சிங்களமக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் கவனத்தை […]

 
*பயணியின் பார்வையில்   — 01—முருகபூபதி

*பயணியின் பார்வையில் — 01—முருகபூபதி

எனது சில சிறுகதைகளையாவது சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிடவேண்டும் என்று நீண்ட நாட்களாக எனது நீண்டகால நண்பர் திக்குவல்லை கமால் சொல்லிக்கொண்டிருந்தார். நாம் கடந்த 2011 அம் ஆண்டு தொடக்கத்தில் கொழும்பில் நடத்திய முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் இடம்பெற்ற மொழிபெயர்ப்பு அரங்கை ஒழுங்குசெய்தவரும் கமால்தான். இந்த ஆண்டு (2012) இறுதியில் நான் தாயகம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன்பே சில கதைகளை தேர்வுசெய்து பிரதிகளை அவருக்கு அனுப்பியிருந்தேன். “ […]