Home » இதழ் 09

 
 

இதழ் 09

 
 
* ரிஷானா,சஊதி மன்னராட்சி,அமெரிக்கா !எம்-பௌசர்

* ரிஷானா,சஊதி மன்னராட்சி,அமெரிக்கா !எம்-பௌசர்

ரிஷானா, எமது அன்புச் சகோதரியே! உனது சிரசை குருட்டு சஊதி அரசு கொய்த போது உலகின் நாலா திசைகளிலிருந்தும் மனித உயிரை நேசித்து மதிக்கும், அராஜகத்திற்கு எதிரான நெஞ்சங்கள் உனது முடிவையிட்டு கண்ணீர் சிந்தின, கடுங்கோபங்கொண்டன. இனம், மதம், தேசம், மொழி, இன்னொரன்ன வேறுபாடுகளைக் கடந்து உனக்கு விதிக்கப்பட்ட அந்த கொடூரமிகு மகாபாதகத்தினை நினைத்து வருந்தின. ஒருசிலர், ஒரு சில அமைப்புகள் தமது நலன்களுக்காகவும் தாம் புரிந்து வைத்துள்ள தவறான […]

 
* எகிப்து-  என். நடேசன்

* எகிப்து- என். நடேசன்

  -01- உலகத்தில் முதன்முதலாக ஆணுறையைப் பாவித்தவர்கள் யார் தெரியுமா? எகிப்தியர்கள். எகிப்திலிருந்து முதலாவது ஆணுறை எப்படி உருவாகியது? அறிய ஆவலாக இருக்கிறீர்களா? செம்மறி ஆட்டின் குடலின் வெளிப்பக்கத்தில் உள்ள மெல்லிய லைனிங்கில் இருந்து செய்தது. இந்த குடல் லைனிங்தான் இப்பொழுது சொசேச் செய்வதற்கு பயன்படுகிறது. சத்திர சிகிச்சை  வைத்தியத்துறையில் ஆரம்ப உபகரணங்கள் எகிப்தில் பாவிக்கப்பட்டதாக மருத்துவ சரித்திரம் கூறுகிறது. எழுத்து வடிவம் பப்பரசி இலையில் எழுதப்பட்டது. பப்பரசி பேப்பர்தான் […]

 
*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…04

*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…04

  ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளும் விமர்சனங்களும் மறுபார்வைகளும் முன்வைக்கப்பட்டுவரும் காலம் இது. கனவுகளும் இலட்சிய வேட்கையும் கருகிப் போன நிலையில் ஒவ்வொருவரும் தாம் செயற்பட்ட தளங்களில் இருந்து தங்கள் அனுபவங்களையும் தாங்களறிந்த விசயங்களையும் தாம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் பதிவு செய்து வருகின்றனர். கூடவே விமர்சனங்களுக்குட்படுத்தியும் வருகின்றனர். இது ஒரு வகை. இந்த வகை எழுத்துகள் மேலும் பலவாகத் தொடரவுள்ளன.   இதேவேளை ஈழப்போரின் நான்காம் கட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் […]

 
*வெள்ளிவீதி (அல்ஜீரியா நாட்டுச் சிறுகதை)-தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

*வெள்ளிவீதி (அல்ஜீரியா நாட்டுச் சிறுகதை)-தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

–    அவள் கட்டிலில் அங்குமிங்கும் புரண்டபடி படுத்துக் கிடந்தாள். வீடு அடர்ந்த இருளில் மூழ்கிப் போயிருந்தது. அவளது கணவன் கடைத் திண்ணையிலிருந்து இன்னும் திரும்பி வரவில்லை. அவன் வரும்வரைக்கும் கதவைத் திறந்து வைக்க மறந்து போனது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவள் மனதுக்குள் ஒரு முறை திட்டித் தீர்த்தாள். அவளது அன்றாட வேலைகளுக்கு முடிவேதுமற்றதாயிருந்தது. விறகு சேகரித்து வருவது, தண்ணீர் கொண்டு வருவது, மில்லுக்கு தானியங்களைக் கொண்டு சென்று, […]

 
பா. தேவேந்திரபூபதி , எ.எ.பைசால்- கவிதைகள்

பா. தேவேந்திரபூபதி , எ.எ.பைசால்- கவிதைகள்

என் நிழற் குடையில் யாரும் அமரலாம் ————————————————————-     சங்கீதம் வரும் வழியில் நிழற் குடையில் கண்ணயர்ந்திருக்கிறேன் அதனுடன் மேற்றிசை இடியும் சேர்ந்திருக்க வேண்டும் யாவும் நனைவது மழையிலா நாதத்திலா போதமா அது காலமும் இடமும் என்னைக் கடந்து போயிருந்தது பசுவின் கன்றுகள் கிழக்குத் திசையை அழைக்கின்றன அவர்தான் புல்வெளியை பார்த்திருக்கச் சொன்னார் காத்திருப்புத்தான் ஒளியின் எண்ணெய் நடனமிடுகிறது ஒரு ஆறு வரையும் ஓவியத்தில் நீலத் திரையில் உயிர் […]

 
*ஜே வி பி இன் குட்டி பூர்சுவா அரசியல்-தமிழில் வி.சிவலிங்கம்

*ஜே வி பி இன் குட்டி பூர்சுவா அரசியல்-தமிழில் வி.சிவலிங்கம்

  ஜே வி பி இனர் கடந்த காலத்தில் திட்டமிட்டும், எதிர்பாராமலும் மேற்கொண்ட அரசியல் தவறுகளை ஆராய்வதற்கான தருணம் இதுவாகும். இலங்கையில் சோசலிசத்தை நிர்மாணிப்பதற்கான வாய்ப்பான சூழல் அன்று காணப்பட்டிருந்தது. அறுபதுகளில் உள் நாட்டிலும், சர்வதேச அளவிலும் காணப்பட்ட அரசியல் சூழல்களையும், அப் பின்னணியில் ஜே வி பி இன் தோற்றத்தினையும் மேலெழுந்தவாரியாக பார்க்க முடியாது.   பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளான லங்கா சமசமாஜக் கட்சி, கம்னியூஸ்ட் கட்சி என்பன […]

 
*தமிழ் தேசம்: இழப்பிலிருந்து மறுவாழ்வையும் வளர்ச்சியை நோக்கி…மீராபாரதி

*தமிழ் தேசம்: இழப்பிலிருந்து மறுவாழ்வையும் வளர்ச்சியை நோக்கி…மீராபாரதி

  ஈழத் தமிழ் தேசம் மாபெரும் இன அழிப்பையும் அதனால் ஏற்பட்ட மனித இழப்பையும் சந்தித்து நான்கு வருடங்கள் முடிவடையப்போகின்றன. ஆனால் இதுவரை அரசியல் ரீதியாகவோ மனித வாழ்வியல் ரீதியாகவோ எந்தவிதமான அடிப்படை மாற்றங்களும் முன்னேறங்களும் குறிப்பிடும் படியாக நடைபெறவில்லை. அரசியல் ரீதியான முன்னெடுப்புக்களுக்காவது நாம் இலங்கை, இந்திய, அமெரிக்கா மட்டுமல்ல சீன அரசுகளிலும் சர்வதேச சமூகத்திடமும் தங்கியிருக்க வேண்டி நிலையில் இருக்கின்றோம் எனக் கூறலாம். ஆனால் தமிழ் தேசம் தான் சந்தித்த […]

 
*மலர்ச்செல்வன்-சிறுகதை

*மலர்ச்செல்வன்-சிறுகதை

00 மா செ யை அழிப்பதற்கான திட்டங்களை அவர்கள் மிகக் கச்சிததமாகச் செய்திருந்தார்கள். இத்திட்டத்திற்கு அவனது மடத்தனங்களும் அவர்களுக்குக் கைகூடியிருந்தது. எப்படியிருந்தாலும் அவன் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டியதாயிற்று. இது அவனது முதல் அனுபவமாகியதால் பதட்டம் அவனை ஒவ்வொரு தீர்வுக்கும் தள்ளிக்கொண்டே இருந்தது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இருந்தும் நம்பிக்கையும் துணிவும் அவனைக் காற்றில் பறக்க வைத்தது. விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது மதியம் ஒரு மணியைத்தாண்டி விட்டது. வயிறு பத்தியெழுந்தாலும் […]

 
சமிக்ஞை- கணேஷ் வெங்கட்ராமன்- சிறுகதை

சமிக்ஞை- கணேஷ் வெங்கட்ராமன்- சிறுகதை

ரொம்ப நேரமாக காரை ஓட்டி சென்று கொண்டிருக்கிறோம். கோவையில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியை கேட்டுக் கொண்டு கிளம்பினோம். சொல்லப்பட்ட வழியில் தவறாமல் சென்று கொண்டிருந்தாலும், மனதில் லேசாக சந்தேகம். வெகு நேரமாகிவிட்டது. சென்றடைய வேண்டிய இலக்கு இன்னும் வரவில்லையே! வழி மாறி வந்துவிட்டோமா? என்ற கேள்வி நெஞ்சில் எழுகின்றது. பாதசாரிகள் யாரையாவது கேட்கலாமென்று பார்த்தால் ஒருவர் கூட தென்படவில்லை. சுத்தமாக துடைத்துவிட்டது போன்றிருந்தது சாலை. அப்போது தான் கண்ணில் […]

 
* நடுவழியில் இன்ப அதிர்ச்சி -முருகபூபதி

* நடுவழியில் இன்ப அதிர்ச்சி -முருகபூபதி

  பயணியின் பார்வையில் —-02 நடுவழியில் இன்ப அதிர்ச்சி ———————————————- 1983 ஆம் ஆண்டு இலங்கைத்தமிழர்களுக்கு வேதனையும் சோதனையும் இழப்பும் விரக்தியும் நிரம்பிய காலம். இன்றும் அந்த ஆண்டின் அமளியும் அவலமும் நினைவுகூறப்படுகிறது.ஆண்டுதோறும் வெலிக்கடை தாக்குதல் சம்பவமும் படுகொலைகளும் தமிழ் ஊடகங்களில் படங்களுடன் ஜூலை மாதங்களில் நிச்சயம் வெளியாகிவிடும்.   அக்காலப்பகுதியில் பதவியிலிருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலிருந்த யூ.என்.பி. அரசின் ஆசீர்வாதத்துடன் அனைத்து பேரவலங்களும் தொடர்ந்தபோதிலும், சிங்களமக்களினதும் சர்வதேச சமூகத்தினதும் கவனத்தை […]