Home » இதழ் 09 (Page 2)

 
 

இதழ் 09

 
 
*கொண்டாட்டங்கள் -எஸ். கிருஷ்ணமூர்த்தி

*கொண்டாட்டங்கள் -எஸ். கிருஷ்ணமூர்த்தி

    அண்மையில் முகப்பு புத்தகத்தில், அது தான் பேஸ் புக்கில்  எனது பேஸ் புக் நண்பர் ஒருவர், தைப் பொங்கலும் எங்கடை கொண்டாட்டம் இல்லையாம், அது ஆபிரிக்கர்களின் விழாவாம் என்று  என்று அழுது கொண்டிருந்தார். சித்திரை வருசப் பிறப்பு இப்ப ஆரியர் வருசம் என்று எங்கடை தமிழ் அபிமானிகள் ஓலமிட,  அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும் என்னை விட வேறு தமிழ் அபிமானிகள் உண்டா எனப் பொங்கியெழுந்து  தைப் […]

 
*சம உரிமை இயக்கம் (Movement for Equal Rights) திறந்த அரசியல் உரையாடலை நோக்கி……

*சம உரிமை இயக்கம் (Movement for Equal Rights) திறந்த அரசியல் உரையாடலை நோக்கி……

    நீண்டகாலமாய்  தொடரும் ,இலங்கையின் தேசிய சிக்கல்களுக்கும் முரண்பாடுகளுக்கும்  காரணமான அடிப்படை விடயங்கள் தொடர்பாக பல்வேறு நோக்கு நிலைப்பாடுகள்/ பார்வைகள் உள்ளன.அவற்றினை  தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ,  அதற்கான அரசியல் நிறுவனங்கள் ,வேலைத்திட்டங்கள் காலத்திற்கு காலம் முன்வைக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. கொள்கைவழி செயற்பாடுகளாகவும் ,அரசியல் இயக்கங்களாகவும்  செயல் அரங்கில் முன்னெடுக்கப்பட்டும் வந்துள்ளன. இலங்கை வரலாற்றில்  இன்னுமொரு முக்கியமானதும்,இக்கட்டானதுமான காலகட்டத்தில்,  ஜே வி பி அரசியல் இயக்கத்தில்  ஏற்பட்ட முரண்பாடுகள் […]

 
–ஆறுமுகம் முருகேசன் ,ரோஷான் ஏ.ஜிப்ரி.கவிதைகள்

–ஆறுமுகம் முருகேசன் ,ரோஷான் ஏ.ஜிப்ரி.கவிதைகள்

  ஒரு பெருங்கணம் எடுத்துக்கொள் என நீட்டுகிறாய் மௌனத்திலிருந்து விடுபட்ட சிறு புன்னகையைரோஜாவின் முட்களிலிருந்து ஒரு துளி இரத்தம் செய்து பைத்தியக்காரப் புன்னகையாக்கினேன் அப்புன்னகையைபழைய மௌனத்தின் குதிகாலிலிருந்து நடுங்கி புதிய மௌனத்தின் குறுநெஞ்சின் மேல் சாய்ந்து விழுகிறது ஒரு பெருங்கணம்..!***      நிறம் காமத்தைக் கொண்டாடப் பணிக்கிறாய் எல்லாவுமாய்ச் சிந்திப் போகிறேன் கண்ணாடிச் சில்லுகளில் முகம் முகங்களாவதாய் வளர்கிறது இரவு*** இருண்மையின் முதல் துளியிலிருந்து  அதன் சமயம் கூடு அடையும் பறவை யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை நீ தொடர்வதைத் தொடர்*** […]

 
*சேபாலிக்கா- மொழிபெயர்ப்பு சிறுகதை,தமிழில்:தேவா

*சேபாலிக்கா- மொழிபெயர்ப்பு சிறுகதை,தமிழில்:தேவா

  மெதுவான அமைதியில் அப்பகுதியே உறைந்துபோய் கிடந்தது. பறவைகள் தங்கள் பாடலை நிறுத்திவிட்டிருந்தன. காட்டுக்குள் போயிருக்க கூடும். போகாமல் அங்கே இருந்தவைகூட  அமைதியாக இருந்தன. தங்கள் காதுகளை கூர்மையாக்கிக்கொண்டு ஏதோ ஒன்று நடைபெறும்வரை காத்துக்கிடந்தன. யாரோ ஒரு சமிஞ்ஞையை கொடுக்கும்வரை. கிடைத்தவுடன் அவ்விடத்தைவிட்டுப்போய்விடக் கூடும். அப்பா எங்கள் குடில் முன்னால்  பரந்துவிரிந்த வானத்தைக்கண்களால் துலாவியபடி நின்றார். காலைக்குளிர் சூழவிரிந்திருந்தது. கண்களில் மீதமிருந்த தூக்கத்தை கைகளால் தேய்த்துக்கொண்டே, வீட்டின் பின்புறம் காலை […]

 
“எம்மை வாழ வைத்தவர்கள் “-பொன்னம்பலம் இரகுபதி

“எம்மை வாழ வைத்தவர்கள் “-பொன்னம்பலம் இரகுபதி

  தனக்குத் தெரிந்த, கேள்வியுற்ற, ஆனால் தான் அதிபராவதற்கு முன்பிருந்த, தனக்கு இலட்சியமாகக் கருத்தில் இருத்திக்கொண்ட, 23 பாடசாலை அதிபர்களைப்பற்றி மிக நுட்பமான அவதானிப்புகளுடன் இந்த நூலை எழுதியிருக்கிறார் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அதிபராக இருந்து இளைப்பாறிய, 75 வயது நிறைந்துவிட்ட, திரு பொன்னையா கனகசபாபதி அவர்கள். ஆனால், இந்த நூல் வெறுமனே பாடசாலை அதிபர்களின் சாதனை வரலாறு அல்ல. இது ஒரு மக்களின் கல்வி வரலாறு. ஒரு குறித்த […]

 
*புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்-கே.எஸ்.சுதாகர்

*புலம்பெயர்ந்த தமிழ்ப்படைப்பாளிகளின் நாவல்கள்-கே.எஸ்.சுதாகர்

[புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் நாவல்கள் எனும்போது அவர்கள் தாயகத்தில் இருக்கும்போது எழுதி வெளியிட்ட நாவல்களை இங்கு நான் கருத்தில் கொள்ளவில்லை. மேலும் இங்கே குறிப்பிடும் எல்லா நாவல்களையும் வாசிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. இருப்பினும் தரவிற்காக அவற்றையும் சேர்த்துள்ளேன்.] உலகில் எத்தனையோ நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களின் படைப்புகள், சமகால தமிழ் இலக்கியத்தில் ஒரு முக்கிய கூறாக இருக்கின்றன. காலத்துக்குக் காலம் மக்கள் பல்வேறு காரணங்களுக்காகப் புலம்பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறு புலம்பெயர்ந்தவர்களில் […]

 
*பிரேமவதி மனம்பேரி-தமிழில் :பஹீமாஜஹான்

*பிரேமவதி மனம்பேரி-தமிழில் :பஹீமாஜஹான்

    ஹென்திரிக் அப்புஹாமி கதிர்காம  வனப்பாதுகாப்புத் திணைக்களத்தில் காவல் உத்தியோகத்தராகப் பணிபுரிந்து தனது சீவனோபாயத்தை நாடாத்திச் சென்றார். பத்து பிள்ளைகளைக் கொண்ட ஹென்திரிக் அப்புஹாமி லீலாவதி தம்பதியினர் 1951ம்ஆண்டில் பிறந்த தமது முதலாவது குழந்தைக்கு ‘பிரேமவதி மனம்பேரி’ எனப் பெயர் சூட்டினர். அவர்களது ஏழைக்குடிசையினுள் காண்போரைக் கொள்ளை கொள்ளும் மலரொன்றாக ‘பிரேமவதி மனம்பேரி’  நாளுக்கு நாள் வண்ணம் பெற்று வளர்ந்தாள்.இளமைப் பருவம் அவளது அழகை மென்மேலும் கூட்டியது. 1970 […]

 
*ஸர்மிளா ஸெய்யித்  கவிதைகள்

*ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

அவர்களுக்குத் தெரியாது   வெகுநாளாயிற்று சாலைகளில் நாங்கள் கைகோர்த்து நடந்து என்னைப் போல் அவன் கவிதை எழுதவில்லை கவிதையாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்னைப் போல் அவன் மௌனமாக இல்லை கதைகள் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்னைப் போல அவன் சோம்பலாக இல்லை மொத்த உலகமும் தனதென்ற கனவில் மிதக்கிறான் என்னைப் போல கதவைத் தாழிடுவதில் இல்லை அவன் கவனம் எந்த வழியில் வெளியேறலாம் என்றே ஆராய்ந்து கொண்டிருக்கிறான் அறைமுழுக்கச் சித்திரங்கள் யாராலும் […]

 
*படியளக்கும் இந்தியா! -யதீந்திரா

*படியளக்கும் இந்தியா! -யதீந்திரா

  1 சமீபத்தில் எனது புலம்பெயர் நண்பர் ஒருவர், நீண்ட நாட்களுக்கு பின்னர் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிருந்தார். நீண்ட காலத்திற்கு பின்னர், அவரது மின்னஞ்சலை கண்டபோது மகிழ்ச்சி ஏற்பட்டது. நண்பர், நல்ல தகவல்கள் ஏதேனும் அனுப்பிருப்பாரோ! – ஆவலுடன் மின்னஞ்சலை திறந்த எனக்கோ, ஏமாற்றமே எஞ்சியது. தமிழ் அரசியல் ஆய்வுச் சூழலுக்கு நன்கு பரிட்சமான அந்த நனண்பர் ஒரு காலத்தில், உம்மையும் நிலாந்தனையும்தான் எனக்கு அதிகம் பிடிக்கும் என்றுரைத்தவர். உங்களிடம் […]

 
“விஸ்வரூபம்”  விவாதங்களும் சர்ச்சைகளும்–அ,ராமசாமி,ஜமாலன்,கலையரசன்,ராஜன் குறை

“விஸ்வரூபம்” விவாதங்களும் சர்ச்சைகளும்–அ,ராமசாமி,ஜமாலன்,கலையரசன்,ராஜன் குறை

  “விஸ்வரூபம்” திரைப்படம் தொடர்பாக எழுந்துள்ள கருத்து விவாதங்களும் சர்ச்சைகளும் தொடர்பில், தமிழ்ச் சூழலில் எழுதிவரும் ஆளுமைகளிடம் சில வினாக்களை முன்வைத்து கருத்துக்களை,பார்வைகளை தொகுத்து பதி வேற்றியுள்ளோம்.அ,ராமசாமி,ஜமாலன்,,கலையரசன்,ராஜன் குறை ஆகியோர் தமது கருத்துக்களை இங்கு பதிவு செய்துள்ளார்கள்.     -அ,ராமசாமி *”விஸ்வரூபம்” திரைப்படத்தினையொட்டி நடைபெற்று வருகின்ற, படைப்பின் சுயாதீனம், கலைஞனின் உரிமை, படைப்பு சுதந்திரம், கலைஞனுக்குள்ள சமூகப் பொறுப்பு போன்ற விடயங்களை எப்படி பார்க்கிறீர்கள்? ஏற்கெனவே பலரும் பலவிதமாக […]