Home » இதழ் 10

 
 

இதழ் 10

 
 
*அரசியல் உரையாடல் -சிவலிங்கத்தின் கேள்விகளுக்கு, நடேசனின் பதில்கள்

*அரசியல் உரையாடல் -சிவலிங்கத்தின் கேள்விகளுக்கு, நடேசனின் பதில்கள்

    எதுவரை (இதழ் – 05, 06, 07) ஒக்ரோபர் 2012 – டிசெம்பர் 2012 வரையான மூன்று இதழ்களில் திரு. நோயல் நடேசனின் விரிவான நேர்காணல் வெளியாகியிருந்தது. இந்த நேர்காணல் தொடர்பாக நடேசனிடம் திரு. சிவலிங்கம் சில கேள்விகளை எழுப்பியிருந்தார். அவற்றை நாம் திரு. நோயல் நடேசனிடம் அனுப்பியிருந்தோம். சிவலிங்கத்தின் கேள்விகள் மற்றும் அபிப்பிராயங்களுக்கான நடேசனின் பதில் இங்கே பதிவாகிறது.    —————————————————————————————————————————————————————————————————————————– சிவலிங்கம்.   நடேசன் […]

 
*ஜன்னல்களிற்கு வெளியிலிருக்கும் தெருக்களில் நடமாடுபவன்-யோ.கர்ணன்

*ஜன்னல்களிற்கு வெளியிலிருக்கும் தெருக்களில் நடமாடுபவன்-யோ.கர்ணன்

கடந்த சில நாட்களின் முன் அன்பழகனது நினைவுநாள் கடந்து சென்றது. ஓரளவு இணைய பரிச்சயமும், ஈழப்பரிச்சயமும் உள்ளவர்களிற்கு அன்பழகன் யார் என்பது தெரிந்திருக்கும். எல்லோருக்கும் தெரிந்துவிடுமளவிற்கு பிரபலமானவனாக அவன் வாழ்ந்திருக்கவில்லை. யுத்தத்திற்கும் கனவுகளிற்குமிடையில் ஊசலாடியபடி பல்லாயிரம் இளையவர்களில் ஒருவனாக வாழ்ந்தான். அவ்வளவுதான். மரணத்தின் பின்னால்தான் அவன் பெயர் பரவலானது. துயர்மிகு காலமொன்றின் குறியீடாகவே அந்த பெயர் பரவலடைந்திருந்தது.   படைப்பாளியாகவும், இணைய பரிச்சயமிக்கவராகவும் அவனது சகோதரன் த.அகிலன் இருந்ததினால் அன்பழகனின் […]

 
*மொழிபெயர்ப்புக் கவிதை-மூலம் – மஞ்சுள வெடிவர்தன ,தமிழில் – ஃபஹீமா ஜஹான்

*மொழிபெயர்ப்புக் கவிதை-மூலம் – மஞ்சுள வெடிவர்தன ,தமிழில் – ஃபஹீமா ஜஹான்

மட்டக்களப்பில் வைத்து   தென்றல் வீச மறந்த கணப் பொழுதில்,   களப்பில் எப்போதேனும் அலையெழும். வேதனைமிகுந்த மீனொன்று மேலெழுந்து நெஞ்சில் அடித்தழுது தடதடவென்று செட்டைகளை அசைத்து வாலால் நடந்தபடி தன் துயரத்தைச் சத்தமிட்டரற்றி நீரில் வீழ்ந்து மறைந்து போகும் – அதுவும் உறுதியான கணமொன்றில் மாத்திரமே.   தூரக் கரைதனில் நெளியும் எல்லா ஒளிப் புள்ளிகளும் களப்பு நீரில் நீண்ட தம்  வெளிச்ச ரேகைகளை வரையும்.   கல்லடிப்பாலம் […]

 
*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…05

*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…05

  ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளும் விமர்சனங்களும் மறுபார்வைகளும் முன்வைக்கப்பட்டுவரும் காலம் இது. கனவுகளும் இலட்சிய வேட்கையும் கருகிப் போன நிலையில் ஒவ்வொருவரும் தாம் செயற்பட்ட தளங்களில் இருந்து தங்கள் அனுபவங்களையும் தாங்களறிந்த விசயங்களையும் தாம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளையும் பதிவு செய்து வருகின்றனர். கூடவே விமர்சனங்களுக்குட்படுத்தியும் வருகின்றனர். இது ஒரு வகை. இந்த வகை எழுத்துகள் மேலும் பலவாகத் தொடரவுள்ளன. இதேவேளை ஈழப்போரின் நான்காம் கட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்கள் இன்னொரு […]

 
*நினைவின் சுவை:  ‘பொலின்டன்’-திருமாவளவன்

*நினைவின் சுவை: ‘பொலின்டன்’-திருமாவளவன்

  அன்று வெள்ளிக்கிழமை நான் திருமண மண்டபத்தில் நுழைந்தேன்.  பாதி மண்டபம் கூட நிறைந்திருந்திருக்கவில்லை. ஒரு வேலைநாளில் பகலில் திருமணத்தை வைத்தால் யார் வருவார்கள் ? ஒருவர் அலுத்துக் கொண்டார். எனக்கு மிக நெருங்கிய உறவினரின் திருமணம். நான் வழமையில் மாலை வேலைக்கு புறப்படுபவன்.  இன்று அதனால் காலைத் திருமணத்திற்கு வர வாய்த்திருந்தது.   இப்படியான சடங்குகளில் மட்டுமே உறவினரை ஒருசேர சந்திக்கவும் உரையாடவும் முடிகிறது. திருமணத்தைவிடவும் அந்த வாய்ப்பே முக்கியமானதாகிவிடுகிறது. […]

 
* ந.மயூரரூபன் கவிதை

* ந.மயூரரூபன் கவிதை

  நீருலகின் நஞ்சு ———————————————————————————————————————— திரவமது தரும் மயக்கம் நீர்த்துப் போனதாய் மூலையில் கொட்டப்படுகிறது. மயக்கப் பொதியாய் வரும் உணர்வுச் சலனங்கள் குருணிக் கற்களாய் வார்த்தைகளின் கரையில் தட்டுப்படுகின்றன. அலைகள் செத்த கடலின் தோணியாய் உன்னிலெனது காமம் தனித்தே மிதக்கிறது. ஆழக்கடலின் அமானுஷ்யத்தில் விழுந்து போகிறதென் சலனச் சுழிகள். இருள் கொத்திய நீருலகில் மிதக்கிறது என்னுடல். காயமீர்த்த கற்கள் ஒன்றொன்றாய் உதிர்கின்றன. 0000000 070720111620  பச்சோந்தி மனசு  ————————————————————————————————————————————– சுற்றிச் […]

 
* நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (சிறுகதை)- எஸ்.கே.விக்னேஸ்வரன்

* நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? (சிறுகதை)- எஸ்.கே.விக்னேஸ்வரன்

  இது ஒரு கதை அல்லது ஒரு கதை பற்றிய கதை என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு ஒரு கதையைவிட மேலான பெறுமதியை கொடுக்கும் எந்த நோக்கத்துடனும் நான் இதை எழுதவில்லை. ஆனாலும் உங்களுக்கு அப்படி ஏதாவது தோன்றினால்,அதை என்னுடைய நட்புறவு காரணமாக ஏற்பட்ட பலவீனம் என்று புரிந்து கொண்டு பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுங்கள்  என்று முதலிலேயே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.   000 கணேஸ் என்று எங்கள் […]

 
* பின் நவீனத்துவ விமர்சன முறை – ஓர் அறிமுகம் -அ.ராமசாமி

* பின் நவீனத்துவ விமர்சன முறை – ஓர் அறிமுகம் -அ.ராமசாமி

முன்னுரை மனித குல வரலாறு பல்வேறு வாழ்தல் முறைகளைக் கடந்து வந்துவிட்டது. பின்- நவீனத்துவம் என்பதுவும் அத்தகையதொரு வாழ்தல் முறைதான் என்பதை நாம் நம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். தமிழ்ச்சூழல், மேற்கத்திய உலகம் தரும் கருத்து மற்றும் சிந்தனைகளைப் பெரும்பாலும் திறனாய்வுக் கோட்பாடுகளாக மாற்றிக் கொள்வதும், கலை இலக்கியத்தளங்களுக்குள் சுருக்கிக் கொள்வதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. பின் நவீனத்துவமும் அத்தகைய நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பின் நவீனத்தின் […]

 
*’ஸ்மாட் போன்’  ( சிறுகதை)– கே.எஸ்.சுதாகர்

*’ஸ்மாட் போன்’ ( சிறுகதை)– கே.எஸ்.சுதாகர்

      வேகமாக வளரும் தொழில் நுட்பத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் நானும் எனது கைத்தொலைபேசியை மாற்றுவதென முடிவு செய்து கொண்டேன்.   I – Phone  ஒன்றை வாங்குவதற்காக வியட்நாமியக் கடையொன்றிற்குப் போயிருந்தேன்.   “அப்பா…. காலத்துடன் நாங்கள் பயணம் செய்யவேண்டும்! கார் இடையிலை நிண்டா… காட் அற்றாக் வந்தா ” என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு ஐந்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த என் மகன் பெரியதொரு பட்டியலிட்டு என்னைப் […]

 
* எகிப்து 2 –  என். நடேசன்

* எகிப்து 2 – என். நடேசன்

    “அந்த ஜக் டானியல் போத்தல் உள்ள பெட்டியை கையில் எடு” என நண்பன் கூறினான்.  நானும் அதேபோன்ற சிங்கிள் மோல்ட் விஸ்கி இரண்டு போத்தல் வைத்திருந்தேன். ஏனைய பெட்டிகளை அகமட் விமான நிலய பெல்டில் இருந்து  தூக்கினார். குதிரையையும் வாளையும் துருக்கியர்கள் மற்றவர்களிடம் கொடுக்கமாட்டார்கள். அது போலத்தான் எங்களது விஸ்கி போத்தல்களை மற்றவர் கைகளில் கொடுக்க நாங்கள் தயாரில்லை.  இரண்டு பேருமே குடிகாரர்கள்  என நினைக்க வேண்டாம். […]