Home » இதழ் 10 (Page 2)

 
 

இதழ் 10

 
 
*அசரீரி-கவிதைகள்

*அசரீரி-கவிதைகள்

கடவுளை ஹலாலாக்குதல் (ஆகுமாக்குதல்)   உருவமற்ற அறிவிலிருந்து ஓவியம் ஒழுகத்தொடங்கியிருக்கிறது அல்லது இலச்சினைகளுக்குள் கடவுளின் புனிதம் உயிரோடு கட்டப்பட்டிருக்கிறது என்பதாக செய்திகளைக் கனவுகளுக்குள் போட்டுவிட்டுப் போகின்றன காகங்கள்.     எழுதிவிடுகிற செயலின் சித்திரவதையால் இறக்கத்தொடங்கிய அறிவு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே இலச்சினைகளாக ராஜ மோதிரங்களுக்குள் கடவுளாகிக் கொண்டது என்பதே செய்தி.   இது கடவுளை உண்ணுவதற்கு ஆகுமாக்குவது பற்றிய அல்லது கடவுள் அடைக்கப்பட்டிருக்கிற மோதிரங்களை அணிந்தவர் பற்றிய விவரணமேயாகும்.     […]

 
*பயணியின் பார்வையில் — 03  -முருகபூபதி

*பயணியின் பார்வையில் — 03 -முருகபூபதி

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்! இலங்கையில் நீண்டகாலம் மல்லிகை இதழை வெளியிடும் எழுத்தாளர் டொமினிக்ஜீவாவிடம் ஒரு நல்ல பழக்கம் இருந்ததை அவதானித்திருக்கின்றேன். இலக்கிய நண்பர்களைப்பற்றிய ஏதும் நற்செய்தி அறிந்தால் உடனே “ வாழ்க” எனச்சொல்வார். அவரிடமிருந்து எனக்கும் அந்தப்பழக்கம் தொற்றிக்கொண்டுவிட்டது. அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தபின்பும் தொடருகிறது. இதனை அருகிருந்து அவதானித்த  எனது மகனும் சின்ன வயதில், அவனுக்கு ஏதும் விசேடமாக வாங்கிக்கொடுத்தால் உடனே “வாழ்க” என்பான். அந்தவகையில் ‘வாழ்க’ என்ற […]

 
*ஒற்றைச் சுவடு – எம்.ரிஷான் ஷெரீப்

*ஒற்றைச் சுவடு – எம்.ரிஷான் ஷெரீப்

  ஒளி பட்டுத் தெறிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடி சுமந்துவரும் விம்பங்கள் பற்றி மெல்லிய காற்றிற்கசையும் திரைச்சீலைகளிடமும் சொல்லப் படாக் கதைகள் இருக்கின்றன   தரை,சுவர்,தூண்,கூரையெனப் பார்த்திருக்கும் அனைத்தும் வீட்டிற்குள்ளான ஜீவராசிகளின் உணர்வுகளையும் அத்தனை ரகசியங்களையும் அறிந்தே இருப்பினும் வாய் திறப்பதில்லை   ” ஆதித்யா, உன் தனிமை பேசுகிறேன். கேட்கிறாயா? ”   ” நான் தனித்தவனாக இல்லை. இந்தச் சாலையோர மஞ்சள் பூக்கள், காலையில் வரும் தேன்சிட்டு, […]

 
*நபீல்-கவிதைகள்

*நபீல்-கவிதைகள்

ஆயிரம் கொண்டைகள்                                                            ————————————— நனைந்தவண்ணமிருக்கிறது                                                                               என் பூந்தோட்டம்                                                            பகலில்                                                              இளஞ்சிறகுகள் விரிந்து                                                                                                        என்னுலகைப் பூக்களால் சுருட்டிப் பந்தாக உதைக்கிறது                         சூரியனின் ஒளிக்கற்றைகள்                                                                                                        நொறுங்கிப்போய் விழுகின்றன                                                                                                                                       ஏதோ ஓர்அதிர்ச்சி திசைகள் மறைகின்றன                                                        இவ்வெளியெங்கும் அப்படியொருதருணத்தை                                              நானும் என் பூந்தோட்டமும்                                                                       இதுவரை கண்டதில்லை                                                             சுவாசம் நிரம்பிய பூக்கள்                                                                         விழங்கத் தவறவிட்ட முத்தங்கள்                                                                         உதிர்கின்றன                                                                  […]

 
*கொலம்பஸின் வரைபடம் – சில குறிப்புகள்.- அன்னலட்சுமி பஞ்சநாதன் –

*கொலம்பஸின் வரைபடம் – சில குறிப்புகள்.- அன்னலட்சுமி பஞ்சநாதன் –

 (விரைவில் வெளிவரவுள்ள  யோ.கர்ணனின் “கொலம்பஸின் வரைபடம் “எனும் நூல் குறித்த பதிவு இது ) கொலம்பஸின் வரைபடம் தந்த கர்ணன் 30 வருட கால  யுத்த சுழிக்குள்ளிருந்து முகிழ்த்தெழுந்த ஒரு எழுத்தாளன். கர்ணனுடைய எழுத்து யுத்தத்தின் சாட்சியாக மட்டுமல்லாது யுத்தம் குறித்த எமது  கற்பனைகளை  உடைத்து   நிஜத்தை  வெளிப்படுத்திய  எழுத்துக்கள் என்பதில் முக்கியம் பெறுகிறது. இன விடுதலைக்கான  யுத்தம் பதின்ம வயது இளைஞரை எப்படி தன்பால் ஈர்த்துக்கொண்டது , அதன் பின்னர் அவர்கள் எவ்வாறான மன உளைச்சல்களுக்கு […]

 
*தமிழக மக்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு கடிதம்!   மீராபாரதி

*தமிழக மக்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு கடிதம்! மீராபாரதி

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களும் அழிப்புகளும் சிறிலங்கா அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட நாளிலிருந்தே இன்று நடைபெறுகின்ற தமிழக மாணவர்களின் எழுச்சி  போன்று பல போராட்டங்கள்  தமிழகத்தில் நடைபெற்றிருக்கின்றன. இவ்வாறு ஈழத் தமிழர்களின் விடுதலையிலும் அதன் சோகங்களிலும் தூக்கங்களிலும் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தமிழக மனிதர்கள் பங்கு கொண்டும் பல்வேறு  தளங்களிலும் வழிகளிலும் பங்களித்தும் வந்திருக்கின்றார்கள். சிலர் ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தீக்குளித்து தம் உயிர்களையும் நீத்திருக்கின்றார்கள். இது தவறான […]

 
*பிறழ்வு  (சிறுகதை) சுதாராஜ்

*பிறழ்வு (சிறுகதை) சுதாராஜ்

    அவள் அங்கு எப்போது வந்தாள் என்பது யாருக்கும் தெரியாது. எப்படி வந்தாள் என்றும் தெரியாது. தானாகவே வந்தாளா அல்லது யாராவது கொண்டுவந்து சேர்த்துவிட்டார்களா என்பதும் தெரியவில்லை. அவள் எந்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவள், எதற்காக அங்கு வந்து சேர்ந்தாள் என்றுகூட யாரும் அறிய முற்பட்டதில்லை.   அங்கு நிர்மாணிக்கப்படும் அந்தப் பெரிய கட்டடத்தொகுதியை ஒட்டியே அவளது குடிமனை இருந்தது. கட்டுமானத்திற் பணிபுரியும் பல தொழிலாளர்கள் மதியச் சாப்பாட்டிற்காக அங்குதான் […]

 
* வடக்கு கிழக்கில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும் – என். சண்முகரத்தினம்

* வடக்கு கிழக்கில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும் – என். சண்முகரத்தினம்

    சமீபகாலங்களில் வடக்கு- கிழக்கில் நில அபகரிப்பு ஒரு முக்கிய பிரச்சனையாக எழுந்துள்ளது. அதற்கு எதிராக மக்களுடன் சில அரசியல் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதையும் காண்கிறோம். போருக்குப்பின் வேறு வழிகளுக்கூடாகப் போர் தொடர்கிறது என வடக்கு கிழக்கு நிலமைகளைப் பற்றி அவதானிகள் குறிப்பிடுகிறார்கள். அங்கு நிலஅபகரிப்புக்கு எதிராக எழும் குரல்கள் நிலம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அவசியமான உற்பத்திச்சாதனம் மட்டுமல்ல அதற்கும் அப்பால் […]

 
*சாட்சியின் மீதி? த. அகிலன்

*சாட்சியின் மீதி? த. அகிலன்

                  ‘சிலுவை யேசுவைச் சிலந்தி சூழ்ந்தது பிள்ளையார் பலிபீடத்தில் களிம்பு படர்ந்தது மாமர ஊஞ்சல்கள் இற்று வீழ்ந்தன சருகடர்ந்த முற்றத்தில் பாம்புகள் ஊர்ந்தன’   சுமார் பத்து வருடங்களிற்கு முன்பு, நான் கருணாகரனைச் சந்தித்த முதலாவது நாள். கருணாகரன் இடம்பெயர்ந்திருந்த அகதி வாழ்வின் கூடாரத்தில் வைத்து “ஹம்சத்வனி”யின்  இந்த வரிகளை என்னிடம் சொன்னார். ஏதோ சின்னப்பெடியன் முதல் கவிதையை […]

 
*ஒரு காரின் கதை-எஸ். கிருஷ்ணமூர்த்தி

*ஒரு காரின் கதை-எஸ். கிருஷ்ணமூர்த்தி

                அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயதிருக்கும், சியவச என்றொரு அதிஸ்ட லாபச்சீட்டு இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளிலும் விற்பனை செய்யப்பட்டது. அந்தச் சீட்டின் விலை என்னவென்று ஞாபகமில்லை. என்ன நிதிசேகரிப்புக்காக அது விற்கப்பட்டது என்பதும் நினைவில்லை. ஆனால் மறக்காதது, அதன் முதல் பரிசு கார்.  அந்தச் ச்Pட்டில் கார் படம் ஒன்று வரையப்பட்டிருந்தது. அந்த சீட்டை வாங்கியதிலிருந்து, […]