Home » சஞ்சயன் செல்வமாணிக்கம்

 
 

சஞ்சயன் செல்வமாணிக்கம்

 
 
*வளமான விவாகரத்துக்கள் -சஞ்சயன் செல்வமாணிக்கம்

*வளமான விவாகரத்துக்கள் -சஞ்சயன் செல்வமாணிக்கம்

மனிதர்களுக்கு இயங்குவதற்கு ஒரு உந்துசக்தி அவசியம். கேள்விகளும் பதில்களும் அப்படியானவை. கேள்விகள் எழுப்பப்படாவிட்டால் பதில்களும் இல்லை. அப்பதில்களுக்கான செயற்பாடுகளும் இல்லை. என் வாழ்க்கையை மாற்றியமைக்க இரண்டு கேள்விகள் முக்கியமானவையாக இருந்தன. திருமணம் என்னும் முறையினூடாக வாழ்வை உன்னுடன் பகிர முன்வந்த ஒருவருக்கு, உன் குழந்தைகளின் தாய்க்கு நீ பெரும் வலிகளை கொடுப்பது நியாயமா? இந்தக் கேள்வி என்னை சிந்திக்க வைத்தது, ஏறத்தாழ 8 வருடங்களுக்கு முன். அக்கேள்வியை என்னிடம் கேட்டவர் […]

 
*மன, மண முறிவுகள் – சஞ்சயன் செல்வமாணிக்கம்

*மன, மண முறிவுகள் – சஞ்சயன் செல்வமாணிக்கம்

அது மிகவும் ஒரு வலிமிகுந்த காலம். நான் போலியாகவும் என்னை நானே ஏமாற்றிக்கொண்டும்,  வாழ்க்கையை ஏனோ தானோ என்று கடந்துகொண்டிருந்தேன். இற்றைக்கு 8 – 10 ஆண்டுகளுக்கு முன்னான காலவெளி அது.அந் நாட்களுக்கும் எனக்குமான இடைவெளி தினமும் அதிகரித்துப்போவதாலோ என்னவோ இப்போது அக்காலங்களை மெதுவாய் வெளியில் இருந்து உள்நோக்கிப் பார்க்க முடிகிறது அல்லது ஒரு பறவையைப்போல் மேலிருந்து கீழாக பார்க்க முடிகிறது.   எத்தனை போலியாய் வாழ்ந்து தொலைத்திருக்கிறேன், அருமையான […]

 
*வேலுப்பிள்ளை என் மாமாவின் நண்பர்- சஞ்சயன் செல்வமாணிக்கம்

*வேலுப்பிள்ளை என் மாமாவின் நண்பர்- சஞ்சயன் செல்வமாணிக்கம்

கடந்தவருடம் இளவேனிற் காலத்தின்போது லண்டனுக்கு ‌செல்லநேர்ந்தது. அங்கு நின்றிருந்தபோது அம்மா தொலைபேசியில் மாமாவின் பெயரைக் கூறி, அவர் அங்கு வந்திருக்கிறாராம் கட்டாயமாக நீ அவரைச்சந்திக்கவேண்டும் என்றார். சரி என்றேன். மாமாவின் இளையமகனுடன் தொடர்புகொண்டு எனது வருகையைப்பற்றி அறிவித்துக்கொண்டேன். லண்டன் நகரத்துக் தொலைவில் உள்ள ஒரு நகரத்தைநோக்கி நீண்ட நேர புகையிரதப்பயணம் ஆரம்பமானது. மாமா வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். இந்தக்கதையின் முக்கிய கருவே வல்வெட்டித்துறை என்பது தான். மாமா என்று அழைப்போமே தவிர […]

 
*என்னை பிஞ்சிலே பழுக்கவைத்தவர்கள்- சஞ்சயன் செல்வமாணிக்கம்

*என்னை பிஞ்சிலே பழுக்கவைத்தவர்கள்- சஞ்சயன் செல்வமாணிக்கம்

எனது பெற்றோர்கள் இருவரும் இலங்கை அரச ஊழியர்களாக இருந்தார்கள். அரச ஊழியர்களுக்கு அடிக்கடி இடமாற்றம் வரும். அதிலும் அம்மா வைத்தியராக இருந்ததால் மிகவும் பின்தங்கிய இடங்களுக்கு மாற்றப்பட்டார். அப்பா போலீஸ் அதிகாரி. அவரும் அம்மாவை பின்தொடர்ந்து இடமாற்றங்களை வாங்கிக்கொண்டார். இப்படித்தான் நான் இலங்கையின் மத்தியபிரதேசத்துக்கு அருகாமையில்ல் உள்ள பிபிலை என்னும் அழகிய இடத்திற்கு வந்துசேர்ந்தோம். அந் நாட்களில் பிபிலை மிக மிகப் பின்தங்கிய ஒரு காட்டுப்பகுதி. வாகைமரங்கள் நிறைந்ததோர் பகுதியில் நாம் […]

 
*ஒரு கடவுளும் ஒரு கதைசொல்லியும்-சஞ்சயன் செல்வமாணிக்கம்

*ஒரு கடவுளும் ஒரு கதைசொல்லியும்-சஞ்சயன் செல்வமாணிக்கம்

வயதுக்குமீறிய ஆசையின் காரணமாக, கால்ப்பந்து விளையாடி கால் முறிந்து சில வாரங்களாக  எனது குறுநிலத்தினுள் முடங்கிடக்கிறேன். தனியே வாழ்வதால் நண்பர்களின் உதவியுடனேயே நாட்கள் நகருகின்றன. கடந்து போக மறுக்கும் பொழுதுகளை சிரமப்பட்டே கடந்துகொள்ளவேண்டியிருக்கிறது. எனவே அருகில் உள்ள நண்பரின் அலுவலகத்திற்குச் சென்று பொழுதினை அவ்வப்போது கடந்துகொள்கிறேன்.கடந்த வெள்ளிக்கிழ‌மையும் அப்படித்தான், நண்பரின் அலுவலகத்தில்  இருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுபுறத்தில் கடவுள் பேசினார்.”எங்கே நிற்கிறாய்? நான் உன்னைப் பார்க்க வந்திருக்கிறேன் […]