Home » இதழ் 11

 
 

இதழ் 11

 
 
* ஐக்கிய முன்னணி: தேசங்களின் ஜனநாயக உரிமை! யாருடன்? யாருக்கு எதிராக?…

* ஐக்கிய முன்னணி: தேசங்களின் ஜனநாயக உரிமை! யாருடன்? யாருக்கு எதிராக?…

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மீண்டும் ஐக்கிய முன்னணி ஒன்றின் அவசியம் குறித்து பரவலாக உரையாடப்படுகின்றது. குறிப்பாக இது மூன்று தளங்களில் நடைபெறுகின்றது. முதலாவது தமிழ் தேசத்தில் செயற்படுகின்ற கட்சிகளுக்கு இடையிலான ஐக்கிய முன்னணி குறித்து முன்னெடுக்கப்படுகின்றன. இரண்டாவது முஸ்லிம் தேசத்துடனான முன்னணி குறித்து உரையாடப்படுகின்றன. மூன்றாவது சிங்கள தேசத்துடனனான ஐக்கிய முன்னணி குறித்தது சிந்திக்கப்படுகின்றன. இதைவிட மலையகத்துடனான ஐக்கிய முன்னணி தொடர்பாகவும் அக்கறை செலுத்தப்படுகின்றது. இன்றைய சுழ்நிலையில் மட்டுமல்ல எந்த […]

 
கவிதை- திருக்கோவில் கவியுவன்

கவிதை- திருக்கோவில் கவியுவன்

ஏகாந்தம் செறிந்திருந்த ஓர் அத்துவானக் காட்டிலே கையிலே தூணியின் கடைசி அம்புடன் என் வேட்டையின் தருணம். உயிர் வதை பற்றி தீவிரமாய் நான் சிந்தித்துக் கொண்டிருந்த கணத்திலே எல்லா அம்புகளுமே தத்தம் போக்கில் தாமாகவே சிறகு பூட்டி பறந்து போயிருந்தன. போர்க்களத்திலே தளபதியை கடைசிவரை விட்டுப்பிரியா விசுவாசம் மிக்க மெய்ப்பாதுகாவலன் போல இந்த ஒற்றை அம்பு மட்டும் என்னுடனே…….. வதை பற்றிய வாதப்பிரதிவாதம் வலுவிழந்து போக பற்றைகளிலிருந்தெழும் அரவங்களில் மனம் […]

 
* பின்னற்தூக்கு (சிறுகதை) – ரிஷான் ஷெரீப்

* பின்னற்தூக்கு (சிறுகதை) – ரிஷான் ஷெரீப்

ஒரு தற்கொலைச் செய்தியோடு அன்றைய காலை விடிய வேண்டியதாகியிருந்ததற்கும் வீட்டுப் பின்கட்டில் காகமொன்று அதன் தொண்டைத் தண்ணீர் வற்ற இரைந்து இரைந்து கத்தியதற்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது. அம்மா அதுவும் அபசகுனத்தின் அறிகுறியென, செய்தி கொண்டு வந்த செல்வியிடம் சொல்லிப் பெருமூச்சு விட்டாள். செல்விக்கு நீண்ட பின்னல். முழங்கால் வரை நீண்ட பின்னல். எப்பொழுதும் பின்னிவிட்டு அதன் நுனியில் கறுப்பு றப்பர்பேண்டால் முடிச்சுப்போட்டு விட்டிருப்பாள். மருத்துவத் தாதிப் பயிற்சிக்கென […]

 
* ஸ்ரீரஞ்சனி (சிறுகதை)

* ஸ்ரீரஞ்சனி (சிறுகதை)

பல்வேறுபட்ட உணர்வுகள் போராடிக்கொண்டிருந்த மனதில் திடீரென ஒரு சிறு வைராக்கியம் துளிர்க்கவே, காரை மூடியிருந்த பனியைத் துப்பரவாக்கிய போது, காற்றின் திசையில் பறந்துவந்து – அவள் ஜக்கெற்றின் மேல் படிந்திருந்த அந்தப் பனித்துகள்களைக் கையால் தட்டிவிட்டு, தன் பொக்கற்றுக்குள் இருந்த போனை எடுத்து அவனுக்கு டயல் பண்ணிணாள், அவள். ஆனால் அவனின் பதில் கிடைக்கவில்லை. மீண்டும் அழைக்க நினைத்தவளுக்கு அப்படி அவள் ஒன்றுக்கு மேற்பட்ட தரம் அழைப்பது அவனுக்குப் பிடிக்காது […]

 
*முகாந்திரம் – ஷாமிலா ஷெரிப்

*முகாந்திரம் – ஷாமிலா ஷெரிப்

  நீ கட்டமைத்திருக்கும் என் வாழ்வு கட்டிப் போட்டிருக்கும் என் செயற்பாடுகள் உறையவைக்கப்பட்ட என் திட்டங்கள் சுருக்கிடப்பட்ட என் ஆசைகள் சொல்லி மாளாத வலிகள் அத்தனையும் என் பெயர் கொண்ட இரகசிய குறியீட்டால் கட்டியாளப்படுகின்றன கல்சிய பாறைகளாய் என் ஆற்றல்கள் படிந்து  போயின. அவ்வப்போது என் ஆளுமைகளை கொப்பி கட் பேஸ்ட் என்றெல்லாம்  முடக்கி விடுகிறாய். என் உணர்வுகளை உடைத்து விட்டு நதியாய் நீ புறப்படுகிறாய் என் கால்கள் உயிர்த்து […]

 
* கதீர் கவிதைகள்

* கதீர் கவிதைகள்

எனது கவிதையை தின்ற ஆடு என் மேலே உருண்டு விளையாடு தலை மயிரை இழுத்துப் பார் கை சூப்பு தலையணையில் மூத்திரம் அடி எனது பெருவைற்றில் காலால் உதை ஆட்டுக்குட்டி – நீ என் கவிதைக் கொத்துக்களை தின்றுவிட்டாய் முளை விட நாளாகும். என் கவிதை பூக்க வருடமாகும் நாளை தொழிலுக்கு போகிறேன் அடியில் கிடந்த களைகளையும் அல்லவா தின்று விட்டாய் களைகள் கவிதை பூக்குமிடம் என்று புரவலரிடம் பொய் […]

 
* சுனிலா அபேசேகரவுடனான நேர்காணல்

* சுனிலா அபேசேகரவுடனான நேர்காணல்

  கே- சுனிலா, இன்றைய இலங்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இலங்கை குறித்து இப்போது அரசியலமைப்புச் சர்வதிகாரம் தொடங்கி குடும்ப ஆட்சி வரைக்கும் பல்வேறுபட்ட வியாக்கியானங்கள் காணப்படுகின்றன. நீங்கள் பல ஆண்டுகளாக மனித உரிமைச் செயற்பாட்டாளராக இருந்து வருகிறீர்கள். அண்மைய ஆண்டுகளில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையிலும் இருந்து கொண்டு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக இலங்கையில் மனித உரிமைகளுக்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தவர் நீங்கள். அதேநேரம், இன்று இலங்கையில் பலரது […]

 
* ஜே.பிரோஸ்கான் கவிதை

* ஜே.பிரோஸ்கான் கவிதை

மாமிஷ தின்னி முளைத்து விட்ட அல்லது முளைக்க வைத்து விட்ட பெருமை கொண்டு சீறும் மிருகத்தைக் கொண்ட வனத்தின் ராஜ்ஜிய அடக்குமுறையில் அவிழ்த்து எறியப்படுகின்ற மான்களின் மேலான வேட்டை அம்புகளின் கூர் முனையின் கீழாக சொட்டும் குருதியின் நிகழ்காலத்தில் தடை செய்யப்பட்ட மாமிஷத்தின் சதைப்பிண்டங்களை அள்ளி அள்ளி பசீ தீர்க்கும் பெருத்த மிருகத்தின் பாய்ச்சல் புனிதம் மனக்கும் கறித்துண்டுகளை சுவைக்கும் அதனுடைய எண்ணம் கலிஷரத் தனமானதுதான். நாய்கள் வெருக்கும் கோடை […]

 
* எகிப்து 3 –  என். நடேசன்

* எகிப்து 3 – என். நடேசன்

  கெய்ரோவில் நாங்கள் தங்கிய ஹோட்டலின் உள்ளே செல்லும்போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தன. அவை விமானமேறுவதற்கு முன்பாக செய்யப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகளான மெற்றல் டிடெக்ரர் மற்றும் செக்கியுரிட்டி ஸ்கானர் என்பனவாகும்.  இதே போன்ற பாதுகாப்புகளை தாண்டித்தான் இலங்கையில் சில மந்திரிமாரை போர்க் காலத்தில் பார்க்கப் போகவேண்டும். டெல்லியில் சில ஷொப்பிங் பிளாசாக்களுக்குள் சென்ற போதும் இந்த அனுபவம் ஏற்பட்டது. ஆனால், உல்லாசப் பயணியாக சென்ற அந்த நாட்டில் ஹோட்டலில் […]

 
* நம்பி கவிதை

* நம்பி கவிதை

சுடு வெயில் வெயில் வெயில் வெளி கொஞ்சம் கொஞ்சமாய் நீள்வதால் பெருங் மஞ்சல் நிற கூந்தலொன்று உலகம் சுற்றுகிறது நடுப்பகலில் கருப்படைகிறது கண்கள் எப்படியும் தப்ப முடியாதபடி யார் யாரோ செய்த குற்றங்களுக்கான தீர்ப்புக்களாய் என் மீதும் என் தோழமைகள் மீதும் முளைத்துவிடுகிறது வெயில் வெயிலின் எல்லா வேர்களும் வெறி கொண்டு என்னைத் துழாவுகின்ற போது இருள் அச்சமடைந்து விடுகிறது எவர் எவரோ மறுமுனையில் நரியின் குணங்கள் கொண்டு வாழ்வை […]