Home » இதழ் 11 (Page 2)

 
 

இதழ் 11

 
 
* “ 13 ” –  ( சிறுகதை) வே.ம.அருச்சுணன்  -மலேசியா

* “ 13 ” – ( சிறுகதை) வே.ம.அருச்சுணன் -மலேசியா

“முனுசாமி….முனுசாமி…! ” “அட….மாரிமுத்துவா….? என்னப்பா…..சவுக்கியமா…?” மனைவிக்கு உதவியாக சனிக்கிழமை சந்தையில் காய்கறிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த முனுசாமி  தன் கையில் வைத்திருந்த கூடையை மனைவியிடம் கொடுத்துவிட்டு அழைத்த நண்பனை நோக்கிச் செல்கிறார் முனுசாமி. “நல்ல சவுக்கியமா இருக்கேன் முனுசாமி…..!” சந்தித்து பல வருடங்களாகியும்,தன்னை நினைவில் வைத்திருக்கும் நண்பனை நோக்கி ஆவலுடன் செல்கிறார் மாரிமுத்து. “சௌக்கியத்துக்கு என்னப்பா குறை மாரிமுத்து….?ஆண்டவன் புண்ணியத்தால நான் நல்லா இருக்கேன்…!” முனுசாமி தன் பால்ய நண்பனைக் கண்ட […]

 
* கருணாகரனின் ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள்  – ராகவன்

* கருணாகரனின் ஒரு பயணியின் போர்க்கால குறிப்புகள் – ராகவன்

அனைவருக்கும் வணக்கம். இரண்டு டீ வீ அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் என்னையும் இணைத்து கருணாகரனின் கவிதை தொகுப்பு பற்றி பேசுமாறு பௌசர் கேட்டிருக்கிறார். அறிவிப்பாளர்களின் பேச்சுவன்மை எனக்கு இல்லை. எனினும் நான் முடிந்தவரை முயற்சிக்கிறேன். நடந்துமுடிந்த கோரமான யுத்தத்தின் அனுபவத்தை, அதன் துயரத்தை ஒரு பயணியாக மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்டவராகவும்  அம்மக்களுக்குள்ளேயே நின்று, பாதிக்கப்பட்ட கைவிடப்பட்ட மக்களின் ஆத்திரம் அவமானம் ஆதங்கம் அனைத்தையும் கவிதையாக வடித்திருக்கிறார் கருணாகரன். இது வெறும் சோகம் ததும்பிய […]

 
*பாலாவின் பரதேசி: காலனியாதிக்கத்தின் மீதான விமரிசனம்-அ.ராமசாமி

*பாலாவின் பரதேசி: காலனியாதிக்கத்தின் மீதான விமரிசனம்-அ.ராமசாமி

  பாலாவின் பரதேசி படத்தைத் திரையரங்கின் பெருந்திரையில் அசையும் பிம்பக் கோர்வையாகப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு இல்லை. கணிணியின் குறுந்திரையில் பார்க்கத்தக்க இணைப்புக்காகக் குறைந்தது 10 நாட்கள் காத்திருக்க வேண்டும்.  காத்திருந்து பார்த்தவுடன் பரதேசியை பற்றிக் கட்டுரையொன்றை எழுதி அச்சில் வரும் தமிழ்நாட்டுப் பத்திரிகை ஒன்றிற்கு அனுப்ப வேண்டும் என்று தோன்றியது, அதேநேரத்தில் பரதேசி போன்ற திரைப்படத்தைக் கணிணியில் பார்த்து விட்டு விமரிசனம் செய்வது, அதில் செலுத்தப்பட்டுள்ள உழைப்பு, அக்கறை, […]

 
*முன்னணி சோசலிஸ்ட் கட்சி , சம உரிமை இயக்கம்-வி.சிவலிங்கம்

*முன்னணி சோசலிஸ்ட் கட்சி , சம உரிமை இயக்கம்-வி.சிவலிங்கம்

இலங்கையின் எதிர்காலம் குறித்து ஆழமான பார்வையைச் செலுத்த வேண்டிய தருணம் இதுவாகும். இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் இற்றை வரையான காலப் பகுதியை ஆராயும்போது நாட்டின் ஜனநாயக விழுமியங்களும், இன நல்லிணக்கமும் படிப்படியாக அருகி மிக மோசமான ராணுவ சர்வாதிகார நோக்கிய பாதையில் செல்வதை அவதானிக்க முடிகிறது. சர்வாதிகாரம் என்பது சற்று மாறுபட்ட வகையில் குறிப்பாக லிபரல் ஜனநாயக வழிகளின் மூலமாக தேர்தல் வழிமுறைகள், ஒருவருக்கு ஒரு வாக்கு, பெரும்பான்மை […]

 
*கோ- நாதன் கவிதைகள்

*கோ- நாதன் கவிதைகள்

பிணம் தின்ற காடு நமது தேசத்து எல்லை நீர்பெருக்கெடுப்பு கடைசி வடிநீர் இன்னும் இன்னலாய் பிண்டத்தின் அடையல்களை அடைப்பைகளாக்கி நீரின் வெட்டு முகத்துள் கிழக்கின் ஆற்றோடுதான் வடிகிறது. செம்மணி குள அரவம் உடும்பன் காட்டின் அடந்த வெளிக்கு மேலாய் மௌனம் தரித்து பறந்து திரிந்த பட்சிகள் ஆபாயக் கூக்குரலாய் கூவிச்செல்லும் . எரிந்து சுக்கு நூறான எச்சங்கள் மரக்கொப்புகளில் ஊன் சதையால் அறையபட்டிக்க…. சிதைந்து உக்கி போன பாதணிகள் வனத்தின் […]

 
* ‘மல்லிகை’ டொமினிக் ஜீவா – அரை நூற்றாண்டு கால எழுத்து, இதழியல் ஊழியம்!

* ‘மல்லிகை’ டொமினிக் ஜீவா – அரை நூற்றாண்டு கால எழுத்து, இதழியல் ஊழியம்!

தோழமைக்கும் பெருமதிப்பிற்குமுரிய டொமினிக் ஜீவா அவர்களை, அவரது அயராத உழைப்பிற்கும் அதன் சமூக முக்கியத்துவத்திற்குமாக கௌரவம் செய்து, எமது ஒருமைப்பாட்டினை வெளிப்படுத்துவது முக்கிய கடமை எனக் கருதுகிறோம்! டொமினிக் ஜீவா நமது சமூக, பண்பாட்டு, எழுத்து செயற்பாட்டில் அரை நூற்றாண்டிற்கும் மேலான பங்களிப்புடைய போராளி! காயங்களையும் வலிகளையும் தாங்கி ஓங்கி ஒலித்த குரல் ஜீவாவுடையது. ‘மல்லிகை ஜீவா” என்கின்ற ஒரு இயக்கத்திற்கு நாம் செய்ய வேண்டிய சமூகக் கடமையில் இந்த […]

 
*40வது இலக்கியச் சந்திப்பு – லண்டன் (புகைப்படங்கள்)

*40வது இலக்கியச் சந்திப்பு – லண்டன் (புகைப்படங்கள்)

 
* பாசி – (சிறுகதை)எஸ் நஸீறுதீன்

* பாசி – (சிறுகதை)எஸ் நஸீறுதீன்

‘உனக்கும்,  எழுத்துக்கும் காததூரம், எவ்வளவு முட்டி மோதினாலும் உனக்கு வராது. அரைச்ச மாவையே, இன்னும் எப்படித்தான், சூடு சொரணையில்லாம  அரைக்கிங்க்கண்டு தெரியாப்பா,’ ‘அதென்ன, பாடம் படிக்கிற மாதிரியா?, நவீனமும் போய், பின், பின்,,,( நாலுதரம் சொன்னாள்) நவீனமும் வந்தாச்சி! இவரொருத்தர் மட்டும், நிலைப்பது என்றால், எந்த இசம்வந்தாலும் வாழ்றதுடிண்டா, இது, உலைக்காகுற காரியமா?, இது ஒண்ட வெச்சே ஊரெல்லாம் சண்டை…’ அவருக்கு அவர் மனைவி இத்தனை சொல்லியும், தூக்கம் வராமல் […]

 
‘கருணை ரவியின்’ கதைகள்-க.சட்டநாதன்

‘கருணை ரவியின்’ கதைகள்-க.சட்டநாதன்

          சிறுகதைகளுக்கு ஆரம்பம், நடு, முடிவு என மரபு ரீதியான ஒரு விளக்கம் இருக்கிறது. இச் சம்பிரதாயங்கள் இல்லாமலே நல்ல சிறுகதைகள் இப்பொழுது வெளிவருகின்றன. இத்தகைய கதைகள் திடீரென ஆரம்பித்து, உச்சம் பெற்று அதிலேயே முடிவடைந்து விடுகின்றன. இன்னும் சில கதைகள் முடிந்தபின்னரும் வாசக மனதை வருடி, விரிவுகொள்ளும் தன்மையுடன் விளங்குகின்றன. சில கதைகள் கதையோட்டத்தின்போது  நிரம்பிய மௌன இடைவெளிகளைக் கொண்டு வாசக மனதின் […]

 
*வாழ்வை எழுதுதல் — 04 -முருகபூபதி

*வாழ்வை எழுதுதல் — 04 -முருகபூபதி

அவுஸ்திரேலியாவில் 90 களில் நாம், தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கியபோது, இங்கு புலம்பெயர்ந்துவந்த தமிழ்க் குழந்தைகளுக்காக மனனப்போட்டிகளையும் நாவன்மைப் போட்டிகளையும் நடத்தினோம். இந்த நாட்டில் முதல் தடவையாக நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவிற்காக நடத்தப்பட்ட போட்டியில் ஒளவையாரின் ஆத்திசூடியை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி அதனை மனப்பாடம் செய்து கருத்தும் சொல்லுமாறு கேட்டிருந்தார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள். அப்பொழுது எனது மகனுக்கு நான்கு வயது. அவன் அத்திசூடியை மனப்பாடம் செய்யும் பயற்சியில் பலநாட்கள் ஈடுபட்டான். […]