Home » கோ-நாதன்

 
 

கோ-நாதன்

 
 
*இரவு கொப்பளித்த கனவு  –	கோ.நாதன்

*இரவு கொப்பளித்த கனவு – கோ.நாதன்

திரையை இழுத்து சாத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் எனது உடல்  வெறுமையாக அலையத் தொடங்குகின்றன நீரில் நடந்து காற்றில் பறந்து நெருப்பில் அமிழ்ந்து கேட்கப்படாத குரலில் மொழி சப்தமின்றி அடங்கிற்று… . சிங்கத்தின் கடைவாயின்  பற்களிடையே  குதறுகின்ற  கனவு பாம்பின் விசர் கொளிக்குகளிடையே கடிக்கின்ற கனவு இரவுகள் மிகவும் அடர்த்தியான பகுதிகளை இருளாக எங்கும் கொட்டிக் கிடத்துகிறது.   ஒரு பயங்கரத்தை, ஒரு அச்சத்தை, ஒரு பயத்தை இரவின் இருண்மை வீழ்த்துகின்றன பெரும் […]

 
*கோ.நாதன்-கவிதை

*கோ.நாதன்-கவிதை

கீபிர் யுத்த விமானத்திலிருந்து தவறி விழுந்த குண்டொன்று சிவனொளி பாதமலை உச்சி சிவனின் பாதச்சுவட்டில் விழுந்து வெடித்துச் சிதறிற்று . மலை பாளம் பாளமாய் பிளந்து கற்களாய் கொட்டிக் கிடந்த அதீத கணத்தில் பாதுகாப்பு வாகனங்களில் களவில் ஏற்றப்பட்ட கற்கள் ஒவ்வொரு நகரங்களின் சிற்பிகளிடம் பதுக்கப்பட்டன. கடவுளின் சிலையாய் திரும்பிருக்கின்ற கற்கள் எனது நிலத்தின் ஆக்கிரமிப்பில் சனங்களின் சாபத்தை அனுதினம் உள்வாங்கி முப்பொழுதுகளையும் ஒளியில் மிளிர வைக்கிறது. தமிழ் முற்றமெங்கும் […]

 
*கோ.நாதன் -கவிதை

*கோ.நாதன் -கவிதை

ரயர் தின்ற கொலை நகரம் —————————————————————- அம்மாவின் மடிக்குள் பயத்தில் குழந்தைப் போல் ஒடுங்கிக் கொள்கின்றவனை வலுகட்டாயமாய் இழுத்து செல்லும் போது கண்களிலிருந்து வடியும் கண்ணீர்த் துளி அவனது அனுதாபத்தை மௌனமாய் எழுதி செல்லுகின்றன அம்மாவினால் செய்ய முடிந்த காரியம் நீண்ட ஒப்பாரியை விதியெல்லாம் அழுது வைத்தது.   சந்தேக நபராக அழைத்து வரப்பட்டவனின் உயிர் உடலை ரயர் நெருப்பு மடுவுக்குள்ளே இறுக உடல் கயிறு கட்டி தள்ளுகின்ற போது கடைசிக் குரல் அழுத்தமாய் உரத்து எழும் சப்தம் உயர்ந்து வளரும் தீச்சுவாலையில் அடங்குகின்றன. எரிந்து பொசுங்கும் ரயர் புகை வாசம் காற்று வெளியில் எஞ்சிய மூக்கு துவாரம் வழி நுழைகிறது.   துயரின் சொற்களைக் பெருக்கிய வாழ்வு கரும் புகை வான்மண்டலம் பரப்பில் ஒரு பெரும் துயரை அச்சம் கொணர்கையிலே பெரும்பலிபீட தோற்றம் பெற்ற குழிகளுடன் ஒவ்வொரு உயிராய் மரிப்பில் இறக்குகிறது. எல்லா சிதையின் வடிவங்களை மாற்றியிருந்த பிணங்களில் நிறைவேற்றி கொண்டிருக்கின்றது பிணக்கின் அதியுன்னதாய் முளையிடும் துவேசம்.   அரையும்,குறையுமாக எரிந்து இருக்கின்ற எச்சங்களின் மிச்சங்களை கடித்து குதறும் நாய்களும்  சாம்பல் மேட்டிலிருந்து ஒருக்களித்து உறங்குகின்றது. மிகுதிகளை ஊரின் எங்கும் இழுத்து சமாதில்லாத சுடுகாடாய் நிலத்தினை புதைக்கின்றன.   நகரத்தின் தெருமுனை விளக்கின் வெளிச்சத்தை இருள் தின்று அச்சத்தை சாக்குருவியின் அலறலில் நீள் தெருக்களுாடாக எரிக்கன்,கள்ளி பூக்களிலிருந்து சிதறும் வாசங்களை பேய்கள் சாவகாசமாய் காற்றின் வெற்றிடத்தில் அறைகின்றது.     கடவுளும் நிராகரித்த கொலை நகரம் சாவுகளால்  வழிகின்ற துயரின் பிரகடனத்தினூடாக குழந்தை தகப்பனையிழந்திருந்தது மனைவி கணவனையிழந்திருந்தது, தாய்  மகனையிழந்திருந்தது, சகோதரி சகோதரனையிழந்திருந்தது..   கோ.நாதன் 20131216

 
கோ.நாதன்// கவிதைகள்

கோ.நாதன்// கவிதைகள்

குரோதம் பருகும் குருதி.  —————————————– முதுகெலும்புகளை  விறகாக எரித்து உனது முன்னோக்கி நகரும் வாழ்வின் திரை நச்சு ஆணிகளை மார்பில் அறைந்து குருதி கசியும் காலத்தில் குரூரம் எழுதுகின்றனர். சிறகாய்  உலர்த்திய   விரிப்பில்  தொங்கும் பிணங்கள் தின்று  பழக்கப்பட்ட சிலந்தி அவாந்திர வெளியில் அறுத்துக் கொல்லப்பட்ட மனிதர்களின் ரத்தம் குடித்து கக்குகிறது உனது தலை கொய்த நிலத்தோடு குவிந்து நிறைகின்ற துயர் துழாவி அலைகிறது. அடுப்பெரிந்த கல்லெல்லாம் கடவுளாக […]

 
*கோ- நாதன் கவிதைகள்

*கோ- நாதன் கவிதைகள்

பிணம் தின்ற காடு நமது தேசத்து எல்லை நீர்பெருக்கெடுப்பு கடைசி வடிநீர் இன்னும் இன்னலாய் பிண்டத்தின் அடையல்களை அடைப்பைகளாக்கி நீரின் வெட்டு முகத்துள் கிழக்கின் ஆற்றோடுதான் வடிகிறது. செம்மணி குள அரவம் உடும்பன் காட்டின் அடந்த வெளிக்கு மேலாய் மௌனம் தரித்து பறந்து திரிந்த பட்சிகள் ஆபாயக் கூக்குரலாய் கூவிச்செல்லும் . எரிந்து சுக்கு நூறான எச்சங்கள் மரக்கொப்புகளில் ஊன் சதையால் அறையபட்டிக்க…. சிதைந்து உக்கி போன பாதணிகள் வனத்தின் […]