Home » இதழ் 12

 
 

இதழ் 12

 
 
* குரூர மனமுடையோர்- – எம்.ரிஷான் ஷெரீப்,

* குரூர மனமுடையோர்- – எம்.ரிஷான் ஷெரீப்,

                ஒரு மனிதனை எப்படியெல்லாம் நாம் துன்புறுத்தலாம்? சொற்களால், வார்த்தைகளால், செய்கைகளால், எமது நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஒரு மனிதனை இலகுவாகத் துன்புறுத்தி விடலாம். ஆனால் அத் துன்புறுத்தல்களை எல்லோராலும் இலகுவில் தாங்கிக் கொள்ளமுடியாது. துன்புறுத்தலுக்குள்ளாகும் மனிதனின் உணர்வுகளும், உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன. அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை. நீச்சலை அறியாதவன் ஒருவனை நடுக் கடலில் தள்ளிவிடுவதைப் போல குரூரமானவை அவை. ஆனால் அதைச் செய்பவனும் […]

 
பன்முக ஆளுமை  எம்.ஏ .நுஃமான்-

பன்முக ஆளுமை எம்.ஏ .நுஃமான்-

                தமிழ் எழுத்துகளுக்கான விருதுகள் எப்போதும் தமிழக எல்லைப் பரப்பை மட்டுமே கவனம் கொள்கிறது. அமெரிக்காவிலிருந்து செயல்படும் நண்பர்களால் அளிக்கப்படும் விளக்கு விருதும் அவ்வாறே தமிழகப் படைப்பாளுமைகளையே விருதுக்குரியவர்களாகத் தேர்வு செய்து பாராட்டிக் கொண்டிருக்கிறது. கடந்து மூன்றாண்டுகளாக விளக்கு விருதுக் குழுவில் ஓர் உறுப்பினராக இருந்த எனக்கு இதில் மாற்றம் வேண்டும் என்று தோன்றியது. இந்த மாற்றுக் கருத்தின் அடிப்படையில் […]

 
* மயூரரூபன் கவிதை

* மயூரரூபன் கவிதை

சாத்தானின் ஒரே பழம்   கை படாத காற்று அது. பார்வை விழாத நிலத்தில் படரும் ஒழுங்கே அதனுச்சியில் அறையப்பட்டது.   மாறுங் காலத்தின் இருக்கையின் துகள்கள் ஒளிந்து கொள்வதற்காய் அந்த ஒற்றைப் பழத்துள் புதைகின்றன.   புதைவழியை வரைந்து கொடுக்கும் பெருமரம் காற்றின் குலக்குறியமது.   நுனி தெரியாக் காலத் தொழுகையால் மயங்கும் காற்றை கனவுகளால் மிதிக்கும் ஒற்றைப்பழ மரமது.   நுளை பாவங்களால் அறுந்து விழும் பழம் […]

 
* சம உரிமை – சிங்கள தமிழ் முஸ்லிம் மலையக தேசங்களுக்கா….? அல்லது சிறிலங்கர்களுக்கா….?

* சம உரிமை – சிங்கள தமிழ் முஸ்லிம் மலையக தேசங்களுக்கா….? அல்லது சிறிலங்கர்களுக்கா….?

  ( சம உரிமை இயக்கத்தின் கொள்கை நிலைப்பாட்டு  தமிழ் மொழி அறிக்கையை  நாம் பிரசுரித்து இருந்தோம், ச உரிமை இயக்கம் தொடர்பாகவும், இலங்கை  நிலையில் அதன் இன்றைய  அரசியல் முக்கியம் குறித்து வி.சிவலிங்கம் அவர்கள் ஒரு விரிவான கட்டுரையை  /எதுவரை /இணையதளத்தில் எழுதி இருந்தார்.அதன் தொடர்ச்சியாக மீராபாரதியின் இக்கட்டுரை பதிவு பெறுகிறது, அரசியல் கருத்து பகிர்வையும், ஆரோக்கியமான விவாதங்களையும் ,கேள்விகளையும் ,அதற்கான பதிலுரைப்புகளையும் முன்னெடுத்து செல்வதே எமது எதிர்பார்ப்பாகும். […]

 
* ஸ்ரீ லங்கா அரச சாசனத்தில் 13ம் சீர் திருத்தமும் அவை பற்றிய விளக்கங்களும்- ரவி சுந்தரலிங்கம்

* ஸ்ரீ லங்கா அரச சாசனத்தில் 13ம் சீர் திருத்தமும் அவை பற்றிய விளக்கங்களும்- ரவி சுந்தரலிங்கம்

  A Discussion about above topics took place in London on 29th of June 2013. Meeting organised by Activity for Tamil Language Communities.   தமிழரது ‘உரிமைகளுக்கான’ போர், போராட்டங்களின் 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை அரசியலில் முன்னிடத்தை வகித்துள்ளது. 2009 நிகழ்வுகளின் பின்னர், வெளிநாடுகளில் வட்டுக்கோட்டைத் தமிழீழ பிரகடனத்தை மீண்டும் முன்நிறுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளையும் நாம் அவதானித்திருப்போம். இவற்றிடையே, புலிகளால் […]

 
* வன்முறை என்பதும்…. ஒடுக்குமுறை என்பதும்…. –  சல்மா

* வன்முறை என்பதும்…. ஒடுக்குமுறை என்பதும்…. – சல்மா

  எப்பொழுதும் பெண்உடல்மீதான சமூகம் செலுத்தும் அதிகாரம் பெண்ணை முடக்குகிற வகையில் இயங்குகிறது.அது பொதுவெளியில் புழங்கும் தன்மையை பெண்ணுக்கு அளிப்பதில்லை. மிகநுட்பமான கண்களால் ஒடுக்கு முறைக்குற்படுத்தப்படுகிறது. சமூகம், மொழி, மதம், கலாச்சாரம், பண்பாடு, குடும்பம் என நிறுவனமயமாக்கப்பட்ட அனைத்தின்பெயரால்  அவை பெண்ணை மோசமான ஒரு இடத்தில் நிறுவியிருக்கின்றன.மதிப்பீடுகளாலும் , கருத்துகளாலும் இயங்கக்கூடியதானது இந்த உலகத்தில் பெண்உடல் குறித்த மதிப்பீடுகள் கருத்துக்கள் மிக அபாயகரமானவை. ஆணின்சவுகரியத்துக்கானவை.    அவளைஒடுக்க ,கட்டுக்குள் வைக்க […]

 
* சினுவா ஆச்பே ( Chinua Achebe )

* சினுவா ஆச்பே ( Chinua Achebe )

“சினுவா ஆச்பே அவர்களின் எழுத்துக்களால் கவரப்பட்ட நெல்சன் மண்டேலா அவர்கள் அவரின் நூல்களின் முன்னால் சிறைச்சாலைச் சுவர்கள் இடிந்து நொருங்கின எனக் குறிப்பிட்டிருந்தார்.” ——————————————————————————————————————————————————————- ஆபிரிக்க நாவல் இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படும் சினூவா ஆச்பே தனது 82வது வயதில் காலமானார். ‘ Things fall apart ’ என்ற இவரது நாவல் 1958 இல் வெளியிடப்பட்ட போது ஆபிரிக்க மக்களின் வாழ்வு குறித்த கதைகளில் அதன் அமைப்பு வடிவம், […]

 
* சட்டநாதன் கவிதைகள்

* சட்டநாதன் கவிதைகள்

ஆராதனை —————- உனது ரசனைகள் எவை என்பது எனக்குத் தெரியாமலே போய்விட்டது. பறவைகளின் வீரக ஒலி, வெளிறிய வானில் சுடரும்  ஒற்றை நட்சத்திரம் காற்றின் சிறு சலசலப்பு: சில சமயம் அதன் சங்கீதம், தூரத்தில்… வெகுதூரத்தில் தெளிவற்றுக் கேட்கும் மழலைச் சொல். பிரியமான உனது விழிமலரின் மருட்சி. கழுத்தோரம் தெரியும் சிறுமச்சம் என்று இவை எல்லாம் எனக்கு…. எனக்கானவை உனக்கு…..? கால தாமதமாய்தான் அந்த செய்தி எனக்குத் தெரியவந்தது. நீ […]

 
* நடக்க முடியாத நிஜம்- தமிழில் – எஸ். ஷங்கரநாராயணன்  (சிறுகதை)

* நடக்க முடியாத நிஜம்- தமிழில் – எஸ். ஷங்கரநாராயணன் (சிறுகதை)

  புதன்கிழமை ராத்திரி பத்துமணிக்கு நான் ரே பானைப் பட்டணத்துக்கு என் எஃப்-250 வண்டியில் கூட்டிப்போனேன். அவனது விநோத அனுபவத்தை அதற்குமுன்னமே அங்கே சிலர் கேள்விப்பட்டிருந்தார்கள். நாங்கள் ஊர்ப்போய்ச் சேருமுன்னிருந்தே அவர்கள் அதைப்பற்றி வார்த்தையாடிக் கொண்டிருந்தாலும், நடந்தது அவர்களுக்குப் புரிந்திருக்கவில்லை. எனக்கே கதையில் பாதிதான் தெரியும். அவனைக் கண்டுபிடித்தது நான்தான்.   இப்ப மட்டுமல்ல எப்பவுமே அவன் நல்ல நண்பனாக யாருக்குமே அமைந்ததில்லை. நிதானமா இருந்தான்னா எரிச்சலூட்டுவான். குடிபோதையிலோ எதுக்கும் […]

 
* வாழ்வை எழுதுதல் — –முருகபூபதி

* வாழ்வை எழுதுதல் — –முருகபூபதி

    அவுஸ்திரேலியாவில் 90களில் நாம்தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கியபோது,இங்கு புலம்பெயர்ந்துவந்த தமிழ்க்குழந்தைகளுக்காக மனனப்போட்டிகளையும் நாவன்மைப்போட்டிகளையும் நடத்தினோம். இந்த நாட்டில் முதல் தடவையாக நடத்தப்பட்ட முத்தமிழ் விழாவிற்காக நடத்தப்பட்ட போட்டியில் ஒளவையாரின் ஆத்திசூடியை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தி அதனை மனப்பாடம் செய்து கருத்தும் சொல்லுமாறு கேட்டிருந்தார்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்கள்.   அப்பொழுது எனது மகனுக்கு நான்கு வயது. அவன் ஆத்திசூடியை மனப்பாடம் செய்யும் பயற்சியில் பலநாட்கள் ஈடுபட்டான். கருத்தும் சொல்லிக்கொடுத்தபோதுஒளவையார் […]