Home » இதழ் 13

 
 

இதழ் 13

 
 
* ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை மனித உரிமை உண்டு-  தோழர் வில்பிரட்

* ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை மனித உரிமை உண்டு- தோழர் வில்பிரட்

 கடந்த ஜுலை மாதம் பிரான்சில் நடைபெற்ற நிகழ்வில் தோழர் வில்பரட் ஆற்றிய உரையின் சுருக்கப்பட்ட வடிவம். தமிழில் வி.சிவலிங்கம் அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, இலங்கைச் சமூகம் தொடர்பான செயற்பாட்டாளன் எனக் கௌரவித்து என்னை அழைத்தமைக்கு இலங்கையர் ஒற்றுமை ஒன்றியத்தினருக்கு முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1971ம் ஆண்டில் ஜே வி பி இனரால் மேற்கொள்ளப்பட்ட எழுச்சி காரணமாக நாட்டில் அவசரகால விதிகள் கொண்டு வரப்பட்டன. இவற்றிற்கு எதிராகவும், மனித […]

 
* தமிழ் முஸ்லிம் மக்களை இனவிரோத அரசியலிலிருந்து வெளியே எடுக்க வேண்டியுள்ளது-எம்.பௌசர்

* தமிழ் முஸ்லிம் மக்களை இனவிரோத அரசியலிலிருந்து வெளியே எடுக்க வேண்டியுள்ளது-எம்.பௌசர்

நூலுக்கான முன் குறிப்பு ——————————————–   ஈழத்து நவீன தமிழ் கவிதையில், வ.ஐ.ச. ஜெயபாலன் முக்கியத்துவம் பெறும் அம்சங்கள் பல வகைகளில் தனித்துவமானது. கவிஞர் என்கிற அடையாளம் அறியப்பட்ட அளவு, அவர் ஒரு சமூக ஆய்வாளரும் என்கிற அறிதல் நமது சூழலில் மிகக் குறைவாகவே உணரப்பட்டுள்ளது. சமூக ஆய்வுத்துறையில் அவர் தொடர்ச்சியாக தேடல்களை மேற்கொண்டு வந்தாலும் அத்துறை சார்ந்து முழுநேரப்பணியாளராக அவர் இல்லாததும், அவரது ஆய்வுகள் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெறாததும் […]

 
* பஹீமாஜஹான், -கவிதை

* பஹீமாஜஹான், -கவிதை

  துயில் கலைந்து எழுவது எப்போது   சகோதரனே! நானறியாப் புலன்களையெல்லாம் உணர்வுகளில் பதித்துச் செல்பவனே எந்த மனிதன் உனது கீதங்களைத் திருடிச் சென்றான்? கை கட்டி வாய் பொத்திக் கண்மூடி நின்று சுழலென எந்த மனிதன் உனை நிறுத்திப் போனான்?   கட்டாயமானதொரு தருணத்தில் காலம் உனைப் பாலைநிலத்திலிருந்து பெயர்த்துவந்து போர் ஓய்வுகொண்ட தாய்நிலந்தன்னில் விட்டுப் போயிற்று அவர்கள் குழி தோண்டிப் புதைக்கும் உண்மைகளையெல்லாம் எடுத்தோதும் பணியொன்றைத் தெய்வம் […]

 
*யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !தமிழில் – எம். ரிஷான் ஷெரீப்

*யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !தமிழில் – எம். ரிஷான் ஷெரீப்

  குறிப்பு – ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand […]

 
* நபீல்  – கவிதை

* நபீல் – கவிதை

மானா மண் ——————— கூடையோடு மலர்களும் மனிதர்களும் இருந்தார்கள்   எல்லா மழைக்காலங்களிலும் குடைகளோடு ஊசலாடியவர்கள் பழக்கத்துக்கு மாறாகக் குடைகளை வீசி எறிந்து விட்டு மழை நீரில் மிதந்து விளையாடினார்கள் உருண்ட வளையல்களும் ஒரு கொத்துத் தாவணிகளும் நீரின் மேலே அலைந்து திரிந்தன நுாரு மைல்களுக்கும் அப்பாலிருந்து வாழ்த்து மடல்கள் நொண்டி நொண்டி வந்து விரிந்து கொண்டிருந்தன துள்ளு என்றால் துள்ளின மீன்கள் பழுத்துக் காய்த்திருந்தது வானம் வெள்ளமும் நுரையுமாய் […]

 
*பலஸ்தீனியர்கள் அன்றுவிட்ட தவறை தமிழ் மக்கள் இன்று விடக்கூடாது.   –    பி. ஏ. காதர்

*பலஸ்தீனியர்கள் அன்றுவிட்ட தவறை தமிழ் மக்கள் இன்று விடக்கூடாது. – பி. ஏ. காதர்

பலஸ்தீனியர்கள் அன்று  1948 ல்- தாம் விட்ட தவறுக்காக – தமது மண்ணை விட்டு ஓடியதற்காக  65 வருடங்களாக இன்றுவரை போராடுகிறார்கள். இன்னும் அந்த மண்ணுக்கான போராட்டம் முடிவுக்கு வருவதற்கான அறிகுறி தென்படவில்லை. இன்று அவர்களது போராட்டம் சாராம்சத்தில் தாம் வாழ்ந்த 94 சதவீதமான பலஸ்தீன மண்ணை பறிகொடுத்து விட்டு அதில் 22 சத வீதத்தை மீளப் பெற்று நிம்மதியாக வாழ நினைப்பதற்கான போராட்டமாகவும் – அந்த 22 சத […]

 
கோ.நாதன்// கவிதைகள்

கோ.நாதன்// கவிதைகள்

குரோதம் பருகும் குருதி.  —————————————– முதுகெலும்புகளை  விறகாக எரித்து உனது முன்னோக்கி நகரும் வாழ்வின் திரை நச்சு ஆணிகளை மார்பில் அறைந்து குருதி கசியும் காலத்தில் குரூரம் எழுதுகின்றனர். சிறகாய்  உலர்த்திய   விரிப்பில்  தொங்கும் பிணங்கள் தின்று  பழக்கப்பட்ட சிலந்தி அவாந்திர வெளியில் அறுத்துக் கொல்லப்பட்ட மனிதர்களின் ரத்தம் குடித்து கக்குகிறது உனது தலை கொய்த நிலத்தோடு குவிந்து நிறைகின்ற துயர் துழாவி அலைகிறது. அடுப்பெரிந்த கல்லெல்லாம் கடவுளாக […]

 
*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…06

*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…06

 என்னுடைய கட்டுரைத் தொடரை இடையில் சில இதழ்களில் எழுத முடியவில்லை. இதற்காக வாசகர்களிடமும் எதுவரையின் ஆசிரியரிடமும் மன்னிப்பைக் கேட்கிறேன். உரிய முறையில் திட்டமிடப்பட்டிருந்தும் அந்தத் தொடரை எழுதுவதில் நெருக்கடிகள் ஏற்பட்டுவிட்டன. வரலாற்றை திரிவுபடுத்தி எழுதுவது அல்லது சரியான தகவல்கள் இல்லாமல் எழுதுவது போதிய ஆதாரங்கள் இல்லாமல் எழுதுவது போன்றன தவறு. வரலாற்றுச் சம்பவங்களாக நடந்த நிகழ்ச்சிகளை எழுதுவது ஒரு முக்கியமான கடப்பாடுடைய பணி என்பதால்- சரியாக அதை எழுதவேண்டும் என்ற […]

 
*விசாரணையில் தேசியம் : -யதீந்திரா

*விசாரணையில் தேசியம் : -யதீந்திரா

    தமிழ்த் தேசிய அரசியல் போக்கானது இன்று இந்தளவிற்கு வீரியம் கொள்வதற்கான பிரதான காரணம்,இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த வெற்றிகரமான அரசாங்கங்களின் எதேச்சாதிகார போக்குகளும்,அவற்றின் உதாசீனப்போக்குகளுமே ஆகும். இதில் என்னிடம் இரு வேறு கருத்துக்கள் கிடையாது. உதாரணமாக பண்டா-செல்வா ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமானால்,பின்னர் 83இன் துயர் நிகழ்ந்திருக்காது. அது 2009 வரை நீண்டிருக்காது. இத்தனை அழிவுகள் ஏற்பட்டிருக்காது. எனவே இன்றும்,தமிழ் தேசியம்,ஒரு விடயமாக விவாதிக்கப்படுவதற்கான பின்னனியாக,அரசாங்கத்தின் எதேச்சாதகாரப் போக்கே […]

 
*சாதிய சமத்துவம் – ஆதிக்க சாதிகளின் அறியாமையா? தந்திரமா?-மீராபாரதி

*சாதிய சமத்துவம் – ஆதிக்க சாதிகளின் அறியாமையா? தந்திரமா?-மீராபாரதி

சில கேள்விகளும் சந்தேகங்களும்…. எழுநா வெளியீட்டாளர்கள் புதிய பதிப்பக முயற்சி ஒன்றை மிகவும் திட்டமிட்ட முறையில் ஆரம்பித்திருக்கின்றார்கள். இதனுடாக குறிப்பாக இலங்கை தமிழ் பேசும் மனிதர்கள் எதிர்நோக்குகின்ற சமூகப் பிரச்சனைகளையும் அது தொடர்பாக அத் தேசத்தின் சிந்தனையாளர்களினதும் துறைசார் புலமைத்துவ எழுத்தாளர்களினதும் பன்முக சிந்தனைகளைத் தொகுத்து வெளியீடுகின்றார்கள். அந்தவகையில் சாதியம் தொடர்பாக பரம்சோதி தங்கவேல் எழுதிய “யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும் “ நூல் முக்கியமானது. இந்த நூல் […]