Home » இதழ் 15

 
 

இதழ் 15

 
 
* தொன்மமும் வரலாறும் –	ச.தில்லைநடேசன்

* தொன்மமும் வரலாறும் – ச.தில்லைநடேசன்

யாழ்ப்பாண இராச்சிய உருவாக்கம் பற்றிய தொன்மங்களும் பழங்கதைகளும் எங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது .வரலாற்று நூல்களாக கொள்ளப்படும் வையாபாடல், கைலாயமாலை, யாழ்ப்பாண வைபவமாலை, மட்டக்களப்பு மான்மியம் , கோணேசர் கல்வெட்டு போன்ற நூல்களின் புதிர்கள் இன்னும் அவிழ்க்கபடவேண்டியுள்ளன. செவ்வியல் நாட்டார் இலக்கிய பண்புகள் கலந்த இந்நூல்கள் காலவழுக்களுடன் பல்வேறுகால நிகழ்வுகளை குழப்பியும் ஒரே இடத்தில் குவித்தும் புனையப்பட்டுள்ளன. இவைகளை பற்றிய புலைமைத்துவ ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டு இருந்தாலும் பன்முக அளவிலும் ஆழமாகவும் நிகழ்த்தபடவில்லை என்பதை […]

 
* சி. மணிவண்ணன் கவிதைகள்

* சி. மணிவண்ணன் கவிதைகள்

“முகமத் ஹூஸைன் பஹ்னாஸ்” —————————————– அரசுகளே! சொந்த இருப்பிடங்களை விட்டு தொலைந்து போவதற்கு மந்தைகள்கூட விரும்புவதில்லை. விரட்டப்பட்டும், துரத்தப்பட்டும் அகதிகளாய் மக்கள் யுத்த பூமிகளைவிட்டு கடல்,தரை ,ஆகாயம்… இன்றும் சூடான் நாட்டின் நட்சத்திரம் தெருவில் உறங்கியும்…… பனியில் உறைந்தும்…….. கெய்ரோவில் அணைக்கப்பட்டதோ எப்படி நதி வற்றிப் போக முடியும்? “முகமத் ஹூஸைன் பஹ்னாஸ்” —————————————————————————— சூடான் நாட்டைச் சேர்ந்த கவிஞரும் ,எழுத்தாளரும்,ஓவியக் கலைஞரும், இசைக் கலைஞருமான “முகமத் ஹூஸைன் பஹ்னாஸ் […]

 
* அகதிக்கொடி  (சிறுகதை)  சாத்திரி

* அகதிக்கொடி (சிறுகதை) சாத்திரி

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் பிரான்சில் இருந்து வந்த விமானம் இறங்கி ஓடு பாதையில் ஓடத் தொடங்கியிருந்தது ………………..மற்றைய பயணிகள் கவனத்தை இவர்கள் மீது திருப்பி விடாதபடி கடைசி வரிசையில் இருத்தப்பட்டிருந்த இருவர்களினதும் கைகளிலும் விலங்கிடப்பட்டு போர்வையால் மறைக்கப்பட்டிருந்தது.பத்து மணி நேரப் பயணம் இருவருமே ஒருவரோடொருவர் எதுவும் கதைக்கவில்லை ரமணனுக்கு அருகில் இருந்தவன் மீது வெறுப்பும் கோபமுமாக வந்தது . தனது திட்டம் தோற்றுப் போக அவனும் ஒரு காரணம் […]

 
* ஆன்மாவில் வழிந்தோடும் நதி -எம்.எல்.எம்.அன்ஸார்

* ஆன்மாவில் வழிந்தோடும் நதி -எம்.எல்.எம்.அன்ஸார்

நடந்து செல்லும் மேகமாக இருக்கிறது பச்சைப்புல் தரையை கழுவிவிட்ட பனியின் கைகளாக உயிரைத் தழுவிய போது என்னை புதைத்துக் கொண்டாய் போன சில மணித்தியாலங்களில் உன் அனுபவங்களை சுவாசித்தே வாழ்ந்திருக்கிறேன் பின்னரான என் நடுநிசி மனதில் நீர்வளையங்களை வரைந்தன உன் வாசிப்பு இரத்தம் தன்னைத்தனே கழுவி புதிதாகிக் கொண்டது உணர்வுகளை நதியாக உயிரின் மீது உற்பத்திசெய்து விடுகிறது உன்னோடு பழகக் கிடைத்தது நூல் வளைவாய் செதுங்கி நிற்கும் உருவத்தின் கோடுகள் […]

 
தமிழ்த் தேசியத்தின் புத்துயிர்ப்பும் தமிழ் – முஸ்லிம் உறவும் – பிஸ்மி

தமிழ்த் தேசியத்தின் புத்துயிர்ப்பும் தமிழ் – முஸ்லிம் உறவும் – பிஸ்மி

2009 மே முள்ளிவாய்க்காலுடன் தனது இறுதி மூச்சினை விட்டு விட்டதாகக் கருதப்பட்ட தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் உறங்கு நிலைக்குச் செல்லுமா அல்லது தன்னை மீள்பரிசீலனைக்கு உள்ளாக்கிக் கொண்டு, புதிய திசையில் அது முன்னோக்கி வீறு நடை போடுமா என்பது இலங்கைச் சமூகங்களின் ஒட்டுமொத்த அரசியல், சமூக விடுதலையை நேசிக்கும் சக்திகளின் எதிர்பார்ப்பாகும். தமிழ்த் தேசியமானது அரசியல், சமூக, பொருளாதார ஒடுக்குமுறையின் எதிர்வினையாற்றல் என்ற வகையில் அது முற்போக்கானது. அது […]

 
மாயா ஏஞ்சலோ கவிதைகள் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

மாயா ஏஞ்சலோ கவிதைகள் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

1928 ஆம் ஆண்டு கறுப்பின அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்த மாயா ஏஞ்சலோ (மாகிரட் ஆன் ஜான்சன்), வட கரோலினாவிலுள்ள தனது வீட்டில் இருதய நோயின் காரணமாக, கடந்த மே 26 ஆம் திகதி, தனது 86 வயதில் காலமானார். சிறு வயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட இவர், தனது எட்டு வயதில் தாயாரின் காதலனால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட காரணத்தால் அதிர்ச்சியில் பேசும் திறனிழந்து பல வருடங்களை துயரத்தோடு கழித்தவர். வறுமையினாலும், இனப்பாகுபாட்டின் […]

 
* ஜே.பிரோஸ்கான் –(கவிதை )

* ஜே.பிரோஸ்கான் –(கவிதை )

பனி காலத்து தேநீர் …………………………………………………………. அவர்கள் தூரமாக நின்று அழைத்தார்கள் செவியுற்றேன். சிரிக்கவும், அழவும் சொன்னார்கள் சிரித்துக் கொண்டே அழுதேன் பின் கண்களை திறந்து கொண்டு உறங்கச் சொன்னார்கள் உறங்கிக் கொண்டேன். தங்களது ஆறு கால்களைக் கொண்டு என் கழுத்தில் மிதித்து விளையாட ஆசையென்று மொழிந்து, அழுத்தி அழுத்தி ஒருவொருக்கொருவர் குழந்தையாகி மகிழ்வுற்றதையும் நான் ரசித்துக் கொள்கிறேன். மீதம் வைக்க மனசு இல்லாத பனிக்காலத்து த்ரீ ரோஷஸ் தேநீர் போல. […]

 
* ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – முஸ்லிம் கொங்கிரஸ் அரசியல் கூட்டணி- மொகமட் சலீம்

* ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – முஸ்லிம் கொங்கிரஸ் அரசியல் கூட்டணி- மொகமட் சலீம்

‘நீங்கள் எங்களைச் சார்ந்தவர்கள் அல்லது எங்கள் எதிரிகள்’ எனவும் இன்னும் இது போன்ற பல கர்வமான கூற்றுக்களும் செப்டெம்பர் 11 பாரிய நிகழ்விற்குப் பின்னர் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ர்ஜ் புஸ் இனால் எச்சரிக்கையாக விடப்பட்டன. மற்றய நாடுகளை தனக்கு நண்பர்களாக அல்லது எதிரிகளாக இருக்குமாறு நிர்ப்பந்திப்பதாக இவ் எச்சரிக்கை அமைந்தது. சிறிலங்கா முஸ்லிம் கொங்கிரஸ் கட்சி ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் (UPA) கொண்டுள்ள அணிச்சேர்க்கையானது இன்னொரு வகையில், ‘உங்களுடன் […]

 
* ‘A Gun and a ring’ திரைப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள் –  தவ சஜிதரன்

* ‘A Gun and a ring’ திரைப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள் – தவ சஜிதரன்

சுவாரசியம் அற்ற பகுதிகளைக் களைந்து விட்டு வாழ்க்கையைச் சொல்வது தான் சினிமா என்பார் ஹொலிவூடின் புகழ்மிகு இயக்குனரான அல்ஃப்ரெட் ஹிட்ச்கொக் (What is drama but life with the dull bits cut out – Alfred Hitchcock). நாம் அறிந்த தமிழ் சினிமாவில் இது அபூர்வமாகவே நிகழ்வதுண்டு. பார்த்துச் சலித்த, ஒரேவிதமான கதைகளை மீள்சுழற்றித் தருவதையே தலையாய கடனாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கிறது தமிழகத்தின் கனவுத் தொழிற்சாலை. […]

 
*கிளி அம்மான்(சிறுகதை) -கோமகன்

*கிளி அம்மான்(சிறுகதை) -கோமகன்

இன்று எனக்கு விடுமுறை நாள் என்ற பொழுதும் நித்திரை என்வசப்படவில்லை.இன்று கிளி அண்ணையின் நினைவு நாள் என்பதால் அவரின் நினைவுகளே என்மனமெங்கும் நிரம்பியிருந்தன. நான் அதிகாலையிலேயே எழுந்து விட்டிருந்தேன்.என் மனைவி இன்னும் எழுந்திருக்கவில்லை.வேலைக்கு செல்லும் அவளை நான் குழப்ப விரும்பவில்லை.நான் எழும்பியவுடன் முதல் வேலையாக குளித்துவிட்டு ஓர் சாம்பிராணிக்குச்சியை கிளி அண்ணையின் படத்துக்கு முன்னால் கொழுத்தி வைத்து விட்டு அவரின் முகத்தை தொடர்ந்து பார்க்க திராணியற்றவனாக எனக்கான தேநீரைத் தயாரித்துக்கொண்டு […]