Home » இதழ் 15 (Page 2)

 
 

இதழ் 15

 
 
*- தமிழர்கள் தமது கதைகளை தூர நோக்கோடு கூறவேண்டும்- Johan Galtung

*- தமிழர்கள் தமது கதைகளை தூர நோக்கோடு கூறவேண்டும்- Johan Galtung

தமிழில்… வி . சிவலிங்கம் ———————————- இலங்கைப் பிரச்சனை தொடர்பாக அமெரிக்கா மூன்று தடவைகள் ஜெனிவாவில் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறது. மேற்குலக நாடுகள் இத் தீர்மானத்தைப் பலமாக ஆதரிக்கின்றன. இறுதி தீர்மானத்தின்போது இந்தியா வாக்களிக்காமல் தவிர்த்திருக்கிறது. ரஷ்யா, சீனா போன்றன எதிராக வாக்களித்துள்ளன. இப் பிரச்சனையில் பாரிய நாடுகளின் கவனம் திரும்பவதற்குக் காரணம் என்ன? உலகில் 2000 இற்கு மேற்பட்ட தேசியங்கள் உள்ள நிலையில் சுமார் 200 அரசுகள் மட்டுமே உள்ளன. […]

 
* கதீர் கவிதைகள்

* கதீர் கவிதைகள்

உலகின் இரக்கமற்ற காதல் —————————- வெண்ணிற தண்டு ஒற்றைப்புல் நீட்டி உலகின் இரக்கமற்ற காதலை வேண்டுகிறேன். கைப்பையினுள் கேட்கின்ற மெல்லிய ஒலி இதயம் இன்னும் செத்து விடவில்லை ஒரு புன்சிரிப்போடு கடந்து நகராதபடி செய்து வீசுகிற புல்வளையங்கள் காலில் பிணைத்த சங்கிலியாய் நகர முடியாது நிற்கிறாய் குருதிச் சுற்றோட்டத்தில் சிக்கிய பாடகி நரம்பின் அகன்ற வெளியில் பாடுகிறாள் அதிர்வெண்களை வாசிக்க முடியாத வேளை. கூந்தல் கதவுகள் முற்றிலுமாய் மூடாத ஒருநிலையில் […]

 
* இரவு வனம்-தேவ அபிரா

* இரவு வனம்-தேவ அபிரா

இரவு வனம் ——————————- இலையுதிர்காலத்தின் ஈரித்த நகரம் கைவிடப்பட்ட புகையிரதநிலையம். நாசிகள் யூதர்களை ஏற்றிச்சென்ற, இரயிற் தண்டவாளங்கள் இறுக அடித்துப் பூட்டிட்ட பெட்டிகளின் அதிர்வில் இன்னமும் நடுங்கிக்கொண்டிருக்கின்றன. வெறுமனே திரும்பி, கிடந்து துருப்பிடித்த புகையிரதப்பெட்டிகளுள் மூச்சுக்காற்றுகள் இன்னமும் விலக விரும்பாது மிக மிக நெருங்கி உழன்றுகொண்டிருக்கின்றன. இப்பெட்டிகள் இன்று, மனதில் உறைந்தநிலமிசை வாழா நியமங்கள் ஒழுகா மனிதர்களின் கிராமமாயின. கஞ்சாப்புகை வளையங்களில் தொங்கி மிதக்கும் குர்திஸ்காரனின் சொற்களை ஆர்மெனியக்காரன் தன் […]

 
*  பால், பாலியல் – காமம், காதல் – பெண், பெண்ணியம் – என் அனுபவங்கள் -மீராபாரதி

* பால், பாலியல் – காமம், காதல் – பெண், பெண்ணியம் – என் அனுபவங்கள் -மீராபாரதி

நான் ஏன் இப்படி இருக்கின்றேன்? சில பழக்கவழக்கங்களை ஏன் விடமுடியாமல் இருக்கின்றது? சில செயல்களை அல்லது பழக்கவழங்கங்களை ஏன் முன்னெடுக்க முடியாமல் இருக்கின்றது? சிலவற்றை செய்த பின் ஏன் குற்றவுணர்வில் கஸ்டப்படுகின்றேன்? எனது சிந்தனைகள் ஏன் ஒன்றுக்கு ஒன்று எதிராக மாறி மாறி வருகின்றன? இப்படி பல பழக்கவழக்கங்கள் பிரக்ஞையின்மையாக தொடர்கின்றன…. பல எண்ணங்கள் சிந்தனைகள் அடிக்கடி மனதில் ஒடுகின்றன…… இவை தொடர்பாக சிந்திப்பதும் உண்டு. இதிலிருந்து விடுபட முயற்சிப்பதும் […]

 
* ஸ்ரீதரனின் படைப்புலகம்  –	மு. நித்தியானந்தன்

* ஸ்ரீதரனின் படைப்புலகம் – மு. நித்தியானந்தன்

1973இல் மூலஸ்தானம் என்ற சிறுகதையோடு எழுத்துத்துறைக்குள் கால்பதிக்கும் ஸ்ரீதரனின் எழுத்துலகப் பயணம் நின்றும் தொடர்ந்தும் ஒரு 40 ஆண்டுகாலப் பயணத்தைக் குறித்துநிற்கிறது.பேராதனைப் பல்கலைக்கழக வெளியீடாக வந்த தரிசனங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்ற ஸ்ரீதரனின் முதல் கதையான மூலஸ்தானம், பிறந்த மென்சூட்டுடன் பேராசிரியர் க. கைலாசபதியின் சிலாக்கியம் பெற்ற கதையாகும். இவரின் சொர்க்கம் என்ற நீண்டகதை திசையில் வெளிவந்தபோதே க. சட்டநாதன், அநு. வை. நாகராஜன் ஆகிய எழுத்தாளர்களின் சிறந்த […]