Home » இதழ் 16 (Page 2)

 
 

இதழ் 16

 
 
* சுட்ட காசு – நெற்கொழுதாசன் (சிறுகதை)

* சுட்ட காசு – நெற்கொழுதாசன் (சிறுகதை)

மாலைச் சூரியஒளி பட்டு, வளைந்து நெளியும் பொன் தகடு போல் இரணைமடுக்குளத்தின் நீர் மினுங்கிக்கொண்டிருந்து. குளக்கட்டில் காகங்களும் சில கொக்குகளும் பெயர் தெரியாத பறவைகளும் இரை தேடி நடந்து கொண்டிருந்தன. நீர்ப்பரப்பின் இடையிடையே தெரிந்த பட்ட மரங்களில் உருவத்தால் பெரியதான சாம்பல்நிறப் பறவைகள் அமைதியாக அமர்ந்து இருந்தன. மாலை வெய்யிலுடன் குளிர் காற்று இணைந்து மோதியபோது சிறுசெடிகள் சிலிர்த்து அடங்கியது. அந்த சூழலின் அமைதியை ஆங்காங்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களிடம் […]

 
*  நபீல் கவிதைகள்

* நபீல் கவிதைகள்

வண்ணாத்திக்காரி ————————– சற்று முன்தான் ஒரு அழகான வண்ணத்துப்பூச்சி இளங் காலையில் தன் சொற்களைப் புதைக்கிறது வெப்பம் துளிர்க்கும் என்னுடலை உதவியென்ற கைமாறாக ஏந்தி அழைக்கிறது நான் தொலைகிறேன். பாதாளத்திலும் ஆழ மூச்சிழுக்கும் வெள்ளைநிற வரிக் குதிரைகளோடு பேசாமலே வண்ணாத்திக்காரி சூரியனோடு நிற்கிறாய். ஒரு பனிக்கால இலைச் சிறகுகளில் சுகமான இரண்டு சிறகுகளை தேர்ந்தெடுக்கிறாய் அதிலொன்று என்னுடையதாயிருக்கலாம். நிற உடைகள் தெரியாத இன்னுமின்னும் இழையரும்பாத ஒரு கொடியில் நிறுத்துகிறாய் என்னருகே […]

 
* மன்சூர் ஏ. காதிர் -கவிதை

* மன்சூர் ஏ. காதிர் -கவிதை

நிச்சயமாய் அது எனது அழைப்பாய் இருக்க முடியாதே தோழீ மூன்றரை தசாப்தங்கள் வரை கிடப்பிலே போடப்பட்டு பிரிதலை முக்குளித்த பின்னர் புன்னகைத்தலைக் கூட விலாசம் மாற்றியவர்களல்லவா நாம். புரிந்து கொள்ளலின் ஒவ்வொரு செதில்களும் வரட்டுக் கௌரவ கருநாக பாம்பின் விஷ நாக்கினால் தீண்டப்படுகையில் களிப்படைந்து விழித்திருந்த கபோதிகள் அல்லவா நாம் அப்படியாய் இருக்க ஒரு “நியூசென்ஸ் கோள்” போல நான் உன்னையோ அல்லது நீ என்னையோ அழைத்தல் எவ்வாறு சாத்தியம்? […]

 
* தேவ அபிரா கவிதைகள்

* தேவ அபிரா கவிதைகள்

படுதல்-1 ——————————– நான் முதன்முதலிலதனைக் கண்ட போதது வெறுமையாகவிருந்தது. உதிர்ந்தவற்றை அள்ளிச் செல்லும் உலர் காற்று வீசியது. மனமாற மனிதர் நடக்கும் சவக்காலைத்தெருவில் முறுகியிருந்த நினைவுகளைக் கிளைகளாக விரித்து வெப்பத்தால் நிரம்பிய பூமியில்லது துவண்டிருந்தது. பின்னொரு நாட் பெரு மழை பொழிந்து கல்லறைகளிற் படிந்த புழுதி கரைந்து பெயரும் துலங்கி வெடிப்பிற் படர்ந்த புல்லும் பொலியவாரம்பித்த போதுமது தளிரின்றித் தனித்தேயிருந்தது. அஞ்சத்தொடங்கினேன். 000000 ஆடி 1997 ————————————————————————————————————————————- படுதல் II […]

 
*நேர்காணல்  –  சாத்திரி

*நேர்காணல் – சாத்திரி

சாத்திரி என்றால் சோதிடர் என்று சொல்வார்கள். இந்தச் சாத்திரி சோதிடர் அல்ல. படைப்பாளி. கலகக்காரன். 1983 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட அந்த அமைப்பின் உறுப்பினர் அல்லது ஈழப்போராளி. இன்னொரு வகையில் சொன்னால், புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் – பிரான்ஸில் வாழ்கின்ற அகதி. ஒரு காலம் தான் பிரதிநிதித்துவம் செய்த அமைப்புக்காகவே எதையும் செய்த, எல்லாவற்றையும் செய்ய முனைந்த சாத்திரி இப்பொழுது அவற்றையெல்லாம் மீளாய்வு செய்து கொண்டிருக்கிறார். போராட்டம் […]

 
* பாஸ்”போர்ட்”- கோமகன் (சிறுகதை)

* பாஸ்”போர்ட்”- கோமகன் (சிறுகதை)

 
*கவுரவக் கவசம் – றொமிலா ஜெயன் (சிறுகதை)

*கவுரவக் கவசம் – றொமிலா ஜெயன் (சிறுகதை)

கட்டிலில் சோம்பல் முறித்தபடி புரண்டு கொண்டிருந்த, தேவகியின் காதுக்குள் “அம்மா…. அவளைக் காணயில்லை” என பதட்டத்துடன் ஓடி வந்து கிசு கிசுக்கிறாள் மகள் தனுஷா. திடுக்கிட்டுப்போகிறது தேவகியின் மனம் திகைப்புடன் மகளின் முகத்தைப்பார்க்கிறாள். “வடிவா வளவு முழுக்க தேடிப்பாத்தனீயே பிள்ளை” “கிணத்தடி, கக்கூசடி எல்லா இடத்தையும் தேடிப்பாத்திட்டன். கனதரம் கூப்பிட்டும் பாத்திட்டன், அவவின்ர ரூமுக்குள்ள போயும் பாத்தனான், போட்டுக் கொண்டு வந்த சல்வாரும், அவா கொண்டு வந்த சின்ன பாக்கையும் […]