Home » பத்தி

 
 

பத்தி

 
 
*ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தோல்வி !  யார் பொறுப்பு ?- மீராபாரதி

*ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தோல்வி ! யார் பொறுப்பு ?- மீராபாரதி

ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்ததற்கு யார் காரணம்? புலி எதிர்ப்பாளர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் காரணம் என்பார்கள். புலி ஆதரவாளர்கள் அரச ஆதரவு முன்னால் இயக்கங்களும் அதன் தலைவர்களும் காரணம் என்பார்கள். சிலர் இந்தியா என்பார்கள். இன்னும் சிலர் உலக நாடுகள் என்பார்கள். வேறு சிலர் சிறிலங்கா அரசும் அதன் தந்திரோபாயமும் என்பார்கள். இவை எல்லாம் ஈழ விடுதலைப் போராட்டம் தோற்பதற்கு ஏதோ ஒரு […]

 
*கற்பகம் யசோதரவின் ‘நீத்தார் பாடல்’ -கோகுலரூபன்

*கற்பகம் யசோதரவின் ‘நீத்தார் பாடல்’ -கோகுலரூபன்

2000ற்கு பின்னரான ஈழத்து கவிதை இலக்கியத்தின் முனைப்பான அம்சங்களை இனங்காட்டி நிற்பவை யசோதரவின் கவிதைகள். ‘நீத்தார் பாடல் ‘ அவரது முதல் கவிதைத்தொகுப்பு. அவருடைய கவிதைகளில் பல ஏற்கனவே அற்றம் பெண்கள் சஞ்சிகை, மூன்றாவது மனிதன், சத்தியக் கடதாசி, ஊடறு, போன்ற சஞ்சிகைகள் மற்றும் இணைய இதழ்களில் வெளி வந்துள்ளது.   காலம் மட்டுமே கடந்து போகிறது ஆனால் நடப்பவை வரலாற்றை ஞாபகம் ஊட்டிக் கொண்டே இருக்கிறது. வரலாற்றின் மீது […]

 
* வடக்கு கிழக்கில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும் – என். சண்முகரத்தினம்

* வடக்கு கிழக்கில் நிலமும் தேசிய இனப்பிரச்சனையும் – என். சண்முகரத்தினம்

    சமீபகாலங்களில் வடக்கு- கிழக்கில் நில அபகரிப்பு ஒரு முக்கிய பிரச்சனையாக எழுந்துள்ளது. அதற்கு எதிராக மக்களுடன் சில அரசியல் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதையும் காண்கிறோம். போருக்குப்பின் வேறு வழிகளுக்கூடாகப் போர் தொடர்கிறது என வடக்கு கிழக்கு நிலமைகளைப் பற்றி அவதானிகள் குறிப்பிடுகிறார்கள். அங்கு நிலஅபகரிப்புக்கு எதிராக எழும் குரல்கள் நிலம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு அவசியமான உற்பத்திச்சாதனம் மட்டுமல்ல அதற்கும் அப்பால் […]

 
*கொண்டாட்டங்கள் -எஸ். கிருஷ்ணமூர்த்தி

*கொண்டாட்டங்கள் -எஸ். கிருஷ்ணமூர்த்தி

    அண்மையில் முகப்பு புத்தகத்தில், அது தான் பேஸ் புக்கில்  எனது பேஸ் புக் நண்பர் ஒருவர், தைப் பொங்கலும் எங்கடை கொண்டாட்டம் இல்லையாம், அது ஆபிரிக்கர்களின் விழாவாம் என்று  என்று அழுது கொண்டிருந்தார். சித்திரை வருசப் பிறப்பு இப்ப ஆரியர் வருசம் என்று எங்கடை தமிழ் அபிமானிகள் ஓலமிட,  அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும் என்னை விட வேறு தமிழ் அபிமானிகள் உண்டா எனப் பொங்கியெழுந்து  தைப் […]

 
*காணி நிலம் வேண்டும்!-எஸ். கிருஷ்ணமூர்த்தி

*காணி நிலம் வேண்டும்!-எஸ். கிருஷ்ணமூர்த்தி

நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் ஊரைச் சேர்ந்த ஒருவர் காலையில் துவிச் சக்கர வண்டியின் பின்னால் பொருட்கள் வைக்கப் பயன்படுத்தப்படும் கரியரில் ஒரு நெடுக்காக மடிக்கப்பட்ட பேப்பர் கட்டுடன் வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை அணிந்து போவார். மதியம் வீடு திரும்புவார. மாலை நேரத்திலும் இதே செற்றப்புடன் செல்வார்.ஆனால் வேட்டி, சட்டை மங்கிய கலராக இருக்கும். சில வேளைகளில் சைக்கிளின் பின்னுக்கிருந்த பேப்பர் கட்டு முன்னுக்குப் போகும். பின்னுக்கு […]

 
போகுமிடமெலாம்….! திருமாவளவன்

போகுமிடமெலாம்….! திருமாவளவன்

————————————————————————–02———————————————————————— நெருப்புத்தழல் மழைச் சாரல் போல் தூற்றிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?. அது போலச் சொரிந்தது வெயில். இன்று வெள்ளிக்கிழமை. நான் வேலையில் விடுப்பு கேட்டிருந்தேன். வருடத்தில் ஒருமுறை பெரு நகரிலிருந்து விலகி எங்காவது தூர வாவிக்கரையோரம் போய் நண்பர்களுடன் கூடாரம் போட்டிருந்து வார இறுதியை களி(ழி)த்து வருவது வழக்கம். பயணத்துக்கான ஆயத்தங்ளோடு இருந்தபோது தொலைபேசி ஒலித்தது. “அண்ணை! நீங்க இண்டைக்கு வர மாட்டியள் எண்டு சொன்னனான். எங்கடை(தமிழ்) ஆக்கள் […]

 
கவர்ச்சிக்கன்னிகளும் பாயும் தூசணங்களும்………….

கவர்ச்சிக்கன்னிகளும் பாயும் தூசணங்களும்………….

  – இளமொட்டைச் சிறுபுழுதி   எப்போதும் என்னுள் விழிப்பாய் இருக்கும் ஒரு சோம்பேறியை எதுவரைதான் பொறுத்துக்கொள்ள முடியும்? ஏதாவது எழுதித்தான் ஆகவேண்டும் என்று கவுண்டமணியைக் கிணற்றுக்குள் தள்ளிவிட்டது போன்ற ஒரு கட்டத்தில் ஆத்மாநாம் கவிதை ஞாபகம் வந்தது. பொருள் சேர்த்து வார்த்தைகளாய்ச் செய்து ஒவ்வொரு வாக்கியத்திற்கும் கமா மற்றும் முற்றுப்புள்ளி வைத்து ஏதாவது சொல்லியாக வேண்டும் நமக்கேன் வம்பு.   அப்படியெல்லாம் இருக்க விட்டுவிடுகிறதா இந்த உலகம்? நட்பும் […]

 
பெயரில் என்ன இருக்கிறது?

பெயரில் என்ன இருக்கிறது?

யூன் மாதச் சூரியன் கடுக்கண்ட இளந்தாரி. அடிக்கடி வீறுகொண்டெழுவதும் பிறகு வடிந்து தனிவதுமாக இருந்தான்.  நான் கிழட்டு மரங்களின் கீழே நடந்தேன். கிளைகளினூடே தூறிக்கொண்டிருந்தது வெயில். மார்ச் ஏப்பிரல் மாசங்களில் ‘டுலிப்ஸ்’ செடிகள் முகிழ்த்த மொட்டுக்களினால் நிறைந்திருந்தது நிலம். காலையில்  சின்னக் குழந்தைகள் நினைவிலோடியது.  மே மாசம் முழுவதும் ‘லைலாக்’ பூக்களின் மெல்லிய சுகந்தமும் ஊதாநிறமும் மனதை மயக்கும்.  அவ்வேளை உலகமே ஒருவித காமக்கிறக்கத்தில் இருப்பதாகவே உணர்வு எழும். இப்போ […]

 
மீண்டும் இலங்கையில்….ஒரு நாள் … ஒரு பயணம் …

மீண்டும் இலங்கையில்….ஒரு நாள் … ஒரு பயணம் …

                                                                                                                                                                                                                                                                         -மீராபாரதி   22 வருடங்களுக்குப் பின் மீண்டும் யாழ் நோக்கி ஒரு பயணம்… வவுனியாவைத் கடந்து செல்கின்ற ஒரு பயணம் … இவ்வாறான ஒரு பயணத்தை மேற்கொள்வேன் என கனவு கண்டிருக்கின்றேன்… ஆனால் நடைமுறையில் இடம்பெறும் என்பதை ஒருபோதும் நம்பவில்லை… அந்த நம்பிக்கையீனம் இன்று பொய்த்துப் போனது….ஆனால் கனவு பலித்தது… அதுவும் பாதிக்கனவுதான்… ஆம் அந்தக் கனவில் இந்த நிலையில்லை… அது ஒரு வேரொரு உலகம்… சூழல்…   […]

 
‘சிதழுறும் காயங்களின் மொழியில் என்னைப் பேசவிடுங்கள்’

‘சிதழுறும் காயங்களின் மொழியில் என்னைப் பேசவிடுங்கள்’

  யோ. கர்ணனின் கதைகள் – சேகுவேரா இருந்த வீடு ———————————————————————— ‘சிதழுறும் காயங்களின் மொழியில் என்னைப் பேசவிடுங்கள்’ என்று அஸ்வகோஸ் தன்னுடைய கவிதைகளில் குமுறுகிறார். அஸ்வகோஸ் மட்டுமல்ல, றஷ்மி, பா.அகிலன், வரதர், மு.தளையசிங்கம், தா.இராமலிங்கம், சு.வி, சிவரமணி, அனார், ஓட்டமாவடி அரபாத், இளைய அப்துல்லா, திருமாவளவன், கி.பி. அரவிந்தன், த.அகிலன், சித்தாந்தன், எஸ்போஸ், தாமரைச்செல்வி, கோவிந்தன், டொமினிக் ஜீவா, நந்தினி சேவியர், டானியல், சக்கரவர்த்தி, ஷோபாசக்தி, சண்முகம் சிவலிங்கம், […]