July 8, 2015 4:24 pm / 1 comment
ராஜனின் நூலானது வரலாறு, அரசியல், சட்டம், மற்றும் பலவற்றின் பின்னணியிலான சிறப்பு மிக்க ஆக்கமாகும். எனது கருத்துக்களை இரண்டு அம்சங்களோடு மட்டுப்படுத்திக் கொள்கிறேன். முதலாவது, இந் நூலின் வெளித் தோற்றம் மற்றும் பிரச்சனையின் போது அதிகளவு காலங்கள் யாழ்ப்பாணத்தில் வசித்தவன் என்ற காரணத்தாலும், இரண்டாவதாக போராட்டத்தில் என்ன தவறு நடந்தது? என்பது குறித்த கவலை உடையவன் என்ற வகையிலும் பேச விழைகிறேன். முதலாவது அம்சத்திலிருந்து தொடர்கிறேன். மொத்தத்தில் என்னிடம் […]
July 5, 2015 11:04 pm / 22 comments
எல்லையற்றுப் பரந்திருக்கும் இந்தப் பிரபஞ்சம் முழுதும் பெண்ணே உயர்ந்தவள் எனப் பறை சாற்றிய போதும், அதை நான் ஒரு போதும் நம்ப மாட்டேன். “ பெண் எனப்பட்டதே பெருமாயம்” இன்றுவரை எந்தப் பெண்ணும் தன் மனதைத்திறந்ததில்லை. அதை ஒரு ஆண்தான் திறந்துபார்க்கிறான். காதலனாகவோ கணவனாகவோ உள்ள ஒருவரிடம் தன் அந்தரங்கத்தை வெளிவிட்டுவிடும் பெண்ணை, அவர்களது வாக்குமூலங்களை வைத்தே தானே அதுவாக எழுதியோ பேசியோ விடுகிறார்கள். யாரா?…ஆண்கள்தான்“ நான்தான் சொல்கிறேனே ஒரு […]
July 5, 2015 10:36 pm / 27 comments
கைவிடப்பட்ட போராளியின் குறிப்பு (01) முள் குத்திய கால் சிந்திய ரத்தத்தில் படுவான்கரைப் புழுதி சிந்திய ரத்தம் மட்டுமல்ல, எழுந்த அழுகையொலியும் படுவான்கரையின் காய்ந்த குரல்தான். அங்கிருந்து நானூற்றுக்கு மேல் சின்னப்பெடியனுவள் வடக்கு நோக்கி நடந்தம். அது விடுதலைப்பயணம் என்றார்கள் எந்த நட்சத்திரமும் வழிகாட்டவில்லை கூடிப் பழகியவரும் கூட்டிச் சென்றவரும் பிறத்தியாராகினர் அறிந்திராத திசையில் விரும்பிச் செல்லாத பயணத்திற்கு வழிகாட்டிகள் உண்டென்றார். நிகழ்ந்த பயணத்தில் வழிநடத்தும் கட்டளைக்குக் […]
July 5, 2015 9:33 pm / 31 comments
விடியல் பதிப்பகம் தொகுத்து வெளியிட்ட நந்தினி சேவியரின் படைப்புகள் என்ற நூல் 2015 மே மாதம் ரொரன்டோவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வை தேடகம் ஒழுங்கு செய்ய சிவா அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார். நந்தினி சேவியருடனான சிறுவயது முதலான தனது அறிமுகம் மற்றும் தாம் இலக்கியங்களை வாசிக்க அவர் ஊக்குவித்ததையும் பல நூல்களையும் படைப்பாளர்களையும் தமக்கு அறிமுகம் செய்ததையும் சிவா அவர்கள் குறிப்பிட்டார். மேலும் அவருடனான தனது கடந்த […]
July 5, 2015 8:55 pm / 18 comments
கவிதைகளை மறந்த ஊர் ……………………………………………………………………………… நானும் இன்னும் சிலரும் போவதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் அந்த கிராம மக்கள் கவிதையை மறந்து போயிருந்தார்கள். நாங்கள் எழுதும் போதெல்லாம் அவர்கள் கோபமுற்றார்கள் பயிர்களின் நடுவே முளைத்திருக்கும் களையைப் போல எங்கள் கவிதைகளை பிடுங்கி தூக்கி வீச முயன்றார்கள். அது முடியாததும், உங்கள் கவிதைகள்தான் உங்களை […]
July 5, 2015 1:35 am / 1,097 comments
இலங்கையின் வருமான முதுகெலும்பைக் கட்டி நிமிர்த்திய தோட்டத் தொழிலாளர்களின் இலக்கிய முயற்சியை விமர்சித்து வரலாற்றுப் பதிவு செய்த சிறப்புறு நூலாக இந்தக் `கூலித் தமிழ்` நூல் விளங்குகின்றது. இலக்கிய விமர்சனங்கள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பினைத் துன்பியல் நாவல் ஒன்றை வாசிக்கும் மனோபாவத்துடன் வாசிப்பதற்குரிய தளத்தை இந்நூல் மூலம் மு. நித்தியானந்தன் எமக்குத் தந்திருக்கின்றார். இது மலையக மக்களின் வரலாற்று நூல், அந்த மக்களின் இலக்கியத்தைக் கூறும் நூல், அவர்களின் மொழி […]
July 5, 2015 12:46 am / 2 comments
கேள்விக்கென்ன பதில்? ——————————— இந்த முதலாவது குறிப்பை எழுதத் தொடங்கும் போது என்முன்னே வந்து இதை எழுது எழுது என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கும் விடயம் இப்போது வலிகாமத்திலுள்ள சுன்னாகத்தைச் சுற்றிய பிரதேசங்களில் எழுந்துள்ள கிணறுகளில் ஏற்பட்டிருக்கும் எண்ணெய்க்கசிவு சம்பந்தமான பிரச்சினை. இந்த அவசர உலகத்திலே அவ்வப்போது நமது கண்களில் பட்டும் காதுகளால் கேட்டும் மனதில் வலியை ஏற்படுத்துகின்ற பல விடயங்கள் ஒருசில மணி நேரத்திலோ, ஒருசில நாட்களிலோ அல்லது ஒருசில […]
July 4, 2015 11:56 pm / 25 comments
கோமகனின் தனிக்கதை என்கிற சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் பதினாறு சிறு கதைகளை உள்ளடக்கி 157 பக்கத்தில் மகிழ் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.இப்போதெல்லாம் ஒரு புத்தகத்தை படிக்காமலேயே அதனை எழுதியவரை மட்டும் மனதில் வைத்து விமர்சனங்கள் எழுதித் தள்ளுகின்ற காலகட்டத்தில் நான் படித்துவிட்டு எனது பார்வையை வைக்கிறேன் . இந்த சிறுகதைத்தொகுப்பானது பெரும்பாலானவை ஒருவன் தனது சொந்த மண்ணிலிருந்து சொந்த பந்தங்களையும் சொத்துக்களையும் விட்டு, ஊரையும் விட்டு, வேரோடு பிடுங்கி வேறொரு […]
July 4, 2015 11:19 pm / 60 comments
கீதாஞ்சலி என்ற பெயர் ஒருவரின் மனதில் எதை எழுப்புகிறது என்ற கேள்விக்கு, ரவீந்திரநாத் தாகூரைத்தான் என்று தயக்கமில்லாமல் கூறிவிடலாம். ‘கீதாஞ்சலி’ என்ற கவிதைத் தொகுதி இலக்கியத்திற்கான நோபல் பரிசினை 1913இல் பெற்றுக் கொண்டது யாவரும் அறிந்ததே. நவீன இந்தியாவின் இலக்கிய மேன்மையை அது உலக அரங்கிற்கும் எடுத்துச் சென்றது. தாகூர் இந்தியாவின் ஆன்மீகப் புதையல்களில் இருந்து, தனது அகவுணர் எழுச்சிகளைக் கீதங்களாக இறைவனுக்கு அஞ்சலியாக்கினார். இந்தப் பாமாலைகளைத் தாகூரே தனது […]
July 4, 2015 10:18 pm / 245 comments
எனக்குத் தெரியும் தூரத்தில் அவர்கள் அந்த தொடு கடலை அண்டி நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கிடையில் அண்ணளவாக ஒரு இரண்டு மீட்டர் இடைத்தூரம் இருக்கலாம். அவர்கள் எதையோ சம்பாசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் அநாதரவற்றுக் கிடக்கும் கல்லொன்றினையோ அல்லது பனிக் கட்டியொன்றையோ உதைக்கின்றார். இருப்பிலிருந்து பிரிய விரும்பா ரீங்காரத்துடன் அது நகர்ந்து செல்கின்றது. நேற்றிரவு பூத்த பனிகள் இறுகித் திண்மையாகி வெள்ளைச் சல்லிக் கற்களைப்போல் கடற் கரையோடு பரந்து கிடக்கின்றன. வானம் […]