Home » இதழ் 18

 
 

இதழ் 18

 
 
*தேவ அபிரா கவிதைகள்

*தேவ அபிரா கவிதைகள்

போருக்குத் தூரமான கிராமம் —————————————- கோவிலில் இருந்துவரும் நாதஸ்வர மேளதாள ஒலி திருவிழா நாட்களை நிறைக்கின்றது. இதிகாசங்களை ஆலாபனை செய்யும் பிரசங்கியின் குரல் கோவில் வீதிகளையும், தொன்மங்களைக் கிளறி அணிகலம் தேடும் படைப்பாளிகளின்குரல் பண்பாட்டு வீதிகளையும், போர்முனைகளில் இறந்தவர்களின் பெயர்களை அறிப்பவரின் குரல் செம்பாட்டு வீதிகளையும் நிறைக்கின்றது. காற்று எல்லா ஒலிகளையும் வீதிகள் நடைப்பிணங்களையும் காவிச்செல்லுகின்றன. சமாதானப்படுத்த முடியாத துயரங்களுக்கு ஒலியும் இல்லை அவை வீதிகளில் திரிவதுமில்லை. உணரமுடியாதவற்றாற் பிரஞ்சத்தை […]

 
*இலங்கையின் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளிலிருந்து உயிர் தப்பியவர்கள் 2009 – 2015

*இலங்கையின் சித்திரவதைகள், பாலியல் வன்முறைகளிலிருந்து உயிர் தப்பியவர்கள் 2009 – 2015

“சித்திரவதைக்குள்ளாகி வலியின் அதிஉச்சியிலும் அதன் கொலைக் கரங்களின் பிடியிலும் இருந்து உயிருடன் தப்பிப்பிழைத்தவர்கள், தமக்கு ஏற்பட்ட இக்கதிபோல் இனியும் எவருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கரிசனையில் எங்கள் மீது தாராளமாக நம்பிக்கை வைத்துத் தமக்கு ஏற்பட்ட மிகக்கொடூரமான அனுபவங்களை எம்முடன் பகிந்து கொண்ட மனிதர்களுக்கு சமர்ப்பணம்” என்று மேலே சொல்லப்பட்ட இவ்வாய்வறிக்கை காணிக்கையாக்கப்படிருகின்றது. வெளிநாடுகளில் வாழும் முகமறியாத பலர் பாதிப்புக்களுக்கு உள்ளான இந்த மனிதர்களுக்குப் பல்வேறு வழிகளில் உதவிகளைப் புரிந்துள்ளனர். உணவாதாரம் […]

 
* சந்துஷ்  கவிதைகள்

* சந்துஷ் கவிதைகள்

வழித்துணை உன் வீட்டை நெருங்கும் போதே துமிக்கத் தொடங்கும் மழை… வரும்போதே மழையையும் நான் கூட்டி வருவதாகக் கூறிக் கதவு திறக்கிறாய் … வரும் வழியெலாம் என்னுடன் பயணித்த மேகம் இசைத் துளிகளாகி விழுவதை விழிகள் விரிய ஜன்னல் வழியாகக் கண்டு அந்தக்காலையில் மீண்டும் மலர்கிறாய் … உன்னிடம் விடை பெற்றுத் தனியாகத் திரும்பும் என்னுடன் உன்னுடன் கேட்ட இசையின் நிறத்தை அதன் மீது நான் தீட்ட வழித்துணையாக வருமா […]

 
*மறிக்கிடா (சிறுகதை) தீரன். ஆர்.எம். நௌஸாத்

*மறிக்கிடா (சிறுகதை) தீரன். ஆர்.எம். நௌஸாத்

  X என்கிற அகிலமக்கா பத்து ஆடுகள் வைத்திருந்தாள். எல்லாம் பெட்டைகள்தாம்.. பெட்டைகளுக்கு மறிக்காக என்று வைத்திருந்த பெரிய கிடாவை சென்ற பெருநாளைக்கு முஸ்லிம் சந்தையில் இருபத்தெட்டாயிரம் கொள்ளை விலைக்கு விற்றுவிட்டிருந்தாள். ரொக்கப்பணத்துக்கும் கல்முனை சொர்ணம் நகைமாளிகையில் கைச்செயின் வாங்கி அணிந்திருந்தாள். X அக்காவுக்கு வயது 45தான். இன்னும் நரைக்கவுமில்லை. சதா வேலைவாடை செய்ததில் கட்டுமஸ்தான உடம்பும்..நல்ல முகவெட்டும்… சதா வெற்றிலை போட்டுச் செக்கச்சிவந்திருந்த உதடுகளும்… முந்தானையை மீறத் துடிக்கும் […]

 
*”குடை நிழல் ” ( நூல் விமர்சனம்) -ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

*”குடை நிழல் ” ( நூல் விமர்சனம்) -ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்

    ” நாங்கள் படித்த காலத்தில் ரத்தினசாமியும் , ரத்தின பாலாவும் , சோமதாசாவும், சோமசுந்தரமும் , புகார்தீனும் ஒன்றாகத்தான் உட்கார்ந்து படித்தோம் . அந்த அன்யோன்யம் எங்களிடம் இன்றும் இருக்கவே செய்கிறது. இப்போது அடிதடிகள் ஆரம்பம் ஆவதே மாணவர்கள் மத்தியிலிருந்துதான் ……தேசிய அடையாளத்தை உருவாக்குவதுக்கு பதிலாக தனித்தனி இனத்துவ அடையாளங்களை உருவாக்குவதுக்கான கருவியாக கல்வி பயன்பட்டுள்ளமை எத்தனை துரதிஷ்டமானது …..”. தமிழ் பள்ளி – சிங்கள பள்ளி […]

 
*உங்களுக்குமொரு வீடுண்டா? -(கவிதை)  சமீலா யூசுப் அலி

*உங்களுக்குமொரு வீடுண்டா? -(கவிதை) சமீலா யூசுப் அலி

  வீடுகளுக்கு உயிருண்டா அறியேன் சுவர்களில் காதைப் பொருத்துங்கள் உயிர் ததும்பும் இளஞ்சூட்டினை உணர்கிறேன். நேசம் மிகுந்ததோர் மனிதனைப் பிரியும் போதான வேதனை போன்றோ அல்லது அதை விட கொஞ்சம் குறைவாகவோ வீடுகளை விட்டுச் செல்லும் போதெற்படும் வெறுமை உறுத்துகிறது. பயணங்களில்… அத்துவான வெளிகளில் தனித்திருக்கும் வீடுகளைப் பார்க்கும் போது இலேசான பதட்டம் தொற்றிக் கொள்கிறது. ஒரு காலத்தில் சிண்டும் நண்டுமாய் மிதிபட இண்டு இடுக்கெல்லாம் கலகலப்பு சிந்திக் கிடந்த […]

 
கதிர்.பாலசுந்தரம் –  (நேர்காணல்)_ – கே.எஸ்.சுதாகர்

கதிர்.பாலசுந்தரம் – (நேர்காணல்)_ – கே.எஸ்.சுதாகர்

  யாழ்ப்பாணம் ஆவரங்கால் என்னுமிடத்தில் பிறந்த கதிர்.பாலசுந்தரம், பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பட்டதாரியாவார். இலங்கையின் பல்வேறு பாகங்களில் தொழில் புரிந்த இவர், 1951 முதல் அரசினர் பாடசாலை ஆசிரியராகக் கடமையாற்றினார். தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் 1972 ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியைத் தொடங்கி, 1979 முதல் யூனியன் கல்லூரியில் ஒரு தசாப்தகாலம் கல்வி நிர்வாக சேவை அதிபராகப் பணிபுரிந்தவர் ‘Saturday Review’ என்னும் ஆங்கிலவாரச் சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கத்தினால் யாழ் […]

 
*அண்ணா – (சிறுகதை)- -அனோஜன் பாலகிருஷ்ணன்

*அண்ணா – (சிறுகதை)- -அனோஜன் பாலகிருஷ்ணன்

  வெள்ளிக்கிழமை பின்னேரம். இன்னும் இரண்டுநாள் தொடர்விடுமுறை. வேலைக்கு வரத்தேவையில்லை என்ற சுவாரசியம் கலந்த உற்சாகம் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் இயல்பாக ஜனித்துக்கொண்டிருந்தது. அதைவிட யவனிகா ஒருவித உற்சாகத்தில் இருந்தாள். அவள் இரண்டு வாரம் விடுப்பு எடுத்திருந்தாள். மடிக்கணினியை மடித்து முதுகுப்பையில் நுழைத்துவிட்டு சிவப்பு பட்டியில் கழுத்தில் சுற்றப்பட்டு, லெமனேட் செய்யப்பட்டு மார்பில் தொங்கிய அலுவக அடையாள அட்டையை தனது தலைக்குமேலால் தூக்கி கருமையான நேர்படுத்தப்பட்ட கேசத்தின் ஊடாக பின்னால் […]

 
* வேலி- (சிறுகதை) -கோமகன்

* வேலி- (சிறுகதை) -கோமகன்

    அதிகாலை மூன்று மணிக்கு வேலையால்  வந்து படுத்து, செத்த சவம் போலக் கிடந்த என்னை ஐந்து மணிக்கு அடித்த  தொலைபேசி அழைப்பு,  வெறி கொள்ள வைத்தது. மறுமுனையில் நரேன் என்ன மச்சான் நித்திரையாய் போனியே என்று லூசுத்தனமாக தனது கதையை தொடங்கினான் . “உனக்கு தெரியும் தானே மச்சான் என்னம் ரெண்டு கிழமையிலை எங்கடை சூராவத்தை பிள்ளையார் கோயில் கொடி ஏறுது . நீ நாளையிண்டைக்கு ஊருக்கு […]

 
*எடுத்துச் செல்லட்டும் உனது கவிதைகளை…… சி. மணிவண்ணன்

*எடுத்துச் செல்லட்டும் உனது கவிதைகளை…… சி. மணிவண்ணன்

எடுத்துச் செல்லட்டும் உனது கவிதைகளை ——————————————— பகலவனின் அஸ்தமனமும் உனது மரணமும் இருளாய்ப் படர்கின்றன எமது முகங்களில் எங்கள் நடைபாதையில் நாம் உன்னை இழந்தோம். பூமிக்கும் வைகறைப் பொழுதிற்குமிடையில் நீ மூன்று கவிதைத் தொகுதிகள் படைத்தாய் பயணிப்போர் தனித்துப் போவதிலும் பயணங்களைக் கடந்து செல்ல எடுத்துச் செல்லட்டும் உனது கவிதைகளையும் இச் சுழலும் கோளம் அழித்துவிடப் போவதில்லை. ஓர் படைப்பாளியின் படைப்புகளின் ஆயுட்காலத்தை என் வீட்டிற்கும் நான் எடுத்துச் செல்கின்றேன் […]