Home » இதழ் 19 (Page 2)

 
 

இதழ் 19

 
 
*தூரத்துச் சிநேகிதி –  ஜிரி வோல்கர் , தமிழில் க.கலாமோகன்

*தூரத்துச் சிநேகிதி – ஜிரி வோல்கர் , தமிழில் க.கலாமோகன்

  (பாரிஸ் வீதி ஓரத்தில் சில நாள்களின் முன் பல பெட்டிகள் குப்பைக்காகப் போடப்பட்டிருந்தன. அவைகளுள் நிறையப் புத்தகங்கள். பல புத்தகங்களைத் தெரிவு செய்தேன். அதில் ஒரு புத்தகம் Jiri Wolker ((29 mars 1900 Prostějov மரணம் 3 janvier 1924) இன் கவிதைகளது மொழிபெயர்ப்பு. 1939 ஆம் ஆண்டில் எழுதப்பட்டிருந்தது. கவிதைகள் சிறப்பாக இருந்தன. யார் Jiri Wolker ? இவர் செக்கோஸ்லாவாக்கியாவில் பிறந்த பத்திரிகையாளரும் நாடக […]

 
*பச்சை மிளகாய் – ஸ்ரீரஞ்சனி (சிறுகதை)

*பச்சை மிளகாய் – ஸ்ரீரஞ்சனி (சிறுகதை)

    எவரும் என்னை இலகுவில் கவர்வதில்லை, ஆனால், உங்களுடைய அமைதியான சுபாவமும், அன்பான வார்த்தைகளும் என்னை மிகவும் வசப்படுத்தியிருந்தன. அதனால், எனது எழுத்தைப் பாராட்டி, அதை மெருகுபடுத்துவதற்குச் சில புத்தகங்களைக் கொடுத்து உதவ விரும்புவதாக நீங்கள் சொன்னபோது, நான் மெய்சிலிர்த்துப் போனேன். கோடை காலத்தின் ஒரு மாலை நேரம் அது. அன்றுதான் உங்களுடைய வீட்டுக்கு நான் வருகின்றேன். ரெலிபோனிலும் ஈ-மெயிலிலும், இரண்டு வாரங்கள் மட்டுமே நாங்கள் பேசிப் பழகியிருந்தாலும்கூட, […]

 
* ’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ -நூல்விமர்சனம்

* ’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ -நூல்விமர்சனம்

பல்வேறு காரணங்களால் தமிழர்கள் தமது நாட்டைவிட்டு அன்னிய நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். நாட்டைவிட்டு வாழ்ந்து வந்தபோதிலும் அவர்களில் பலர் தங்களது மொழியை கலாசாரத்தை மறக்காமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம் எனலாம். அவர்களின் வாழ்க்கை என்னவோ அன்னிய நாட்டிலே அமைந்துவிட்டாலும் கூட அவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடத்தையோ, அங்கிருக்கும் உறவுகளையோ மறக்காமலும் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய சுகங்கள் துக்கங்கள் எல்லாம் அன்னிய நாட்டில் வாழ்கின்றவர் மனத்தில் ஏதோ ஒரு […]

 
* கருணாகரனின் ஐந்து கவிதைகள்

* கருணாகரனின் ஐந்து கவிதைகள்

  அவளற்றப்போனாள் ———————————– 000 இது ஒரு விவகாரமாக இருப்பதால் அதிலிருந்து விடுபடுவதற்கான மார்க்கம் அந்த வழியில் இருக்கிறது என்றுதான் அந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய முனைந்தாள். அதிலிருந்த கேள்விகள் காடாகி அவளை உள்ளிழுத்து வழிகளைத் திசைமாற்றின. எந்த வார்த்தைகளையும் அவளால் எழுத முடியவில்லை. காட்டின் இலைகளெல்லாம் உதிராக் கேள்விகளாகியே விரிந்தன. அந்த இலைக்கடலின் அலைகளில் அவள் அடித்துச் செல்லப்பட்டுக்கொண்டிருந்தாள். அதிலிருந்து மீண்டுவிடுவதற்கான பிரயத்தனங்கள் அத்தனையும் வீணாகிக் கொண்டேயிருந்தன. அவள் […]

 
* கடைசி அத்தியாயம் – பிரேம பிரபா

* கடைசி அத்தியாயம் – பிரேம பிரபா

நீண்ட நேரம் பொழிந்த மழை அப்போதுதான் சற்றே ஓய்ந்திருந்தது. ஜன்னல் கம்பிகளில் பளிங்கென உருளும் மழைத் திவலைகள் காற்றிற்குத் தடுமாறி சிதறி கீழே விழுந்தது. மழைக்குப்பின் ஏற்பட்ட திடீர் புழுக்கத்தால் ஜன்னலைத் திறந்த இளங்கோ தன் ஆள் காட்டி விரலால் ஜன்னல் கம்பிகளில் தொங்கிக் கொண்டிருக்கும் மழைத் துளிகளை ஓரத்திற்கு வழித்தான். சாலை வெறிச்சோடிக்கிடந்தது. மாலை அடங்கும் நேரம் என்பதால் பறவைகள் குறுக்கும் நெடுக்குமாக தத்தம் கூடுகளை நோக்கி விரைந்து […]

 
* கொரியா  திரைப்படம் (The Way Home – வீட்டிற்கான வழியில்)- – எம்.ரிஷான் ஷெரீப்

* கொரியா திரைப்படம் (The Way Home – வீட்டிற்கான வழியில்)- – எம்.ரிஷான் ஷெரீப்

    எழுபத்தைந்து வயது மூதாட்டிக்கும் ஏழு வயதுச் சிறுவனுக்குமான பாசப் பிணைப்பின் உள்நோக்கங்கள் எந்தவித போலிப் பூச்சுக்களும் அற்றவை. அவை எந்த எதிர்பார்ப்புக்களையும் கொண்டிருப்பதில்லை. வாழ்க்கையின் அனைத்து அனுபவங்களையும் கண்ட மனிதனொருவனும், காணத் துடிக்கும் மனிதனொருவனும் எக் கட்டத்தில் ஒன்றாக இணைகிறார்கள்? எது அவர்களிடையே ஒரு ஒற்றுமையாகக் காணப்படுகிறது? எது அவர்களை ஒருவரிடமிருந்து ஒருவர் பிரியும்போது வலியை ஏற்படுத்துகிறது? போன்ற கேள்விகளை நம்மிடம் விட்டுவிட்டு முடிகிறது ‘ஜிபோரோ (The […]

 
*காற்றின் பாடல் — எம்.எல்.எம்.அன்ஸார்

*காற்றின் பாடல் — எம்.எல்.எம்.அன்ஸார்

            மாலை நேரம் எழுதி வைத்திருந்த பாடலை காற்று இசைக்கிறது. நானும் பாடலும் நடந்து செல்கிறோம்! காற்றோடு சேர்ந்து தேநீர் பருகுவது மகிழ்ச்சியான அனுபவம். நான் சில சமயம் மாவைப்போல தூளாகின்ற போதெல்லாம் என்னை ஒன்று சேர்த்து இரக்கம் காட்டுவது காற்று! நேற்றைய நாள் இப்படி இருந்தது. எங்கிருந்தோ வந்த அறிமுகமற்ற துயரம் என்னோடு மோதிய போது வாழை மரத்திற்கு தண்ணீர் ஊற்றிக் […]

 
*நேர்காணல் – லெ.முருகபூபதி

*நேர்காணல் – லெ.முருகபூபதி

  ஈழத்து ,புகலிட இலக்கியப்பரப்பில் லெ.முருகபூபதி தனக்கெனப் பல முத்திரைகளைப் பதித்துக்கொண்டவர். தாயகத்தில் உள்ள எக்ஸ்பிறஸ் நியூஸ் பேர்ப்பர்ஸ் சிலோன் பிறைவேற் லிமிட்டெட் (Express News Papers (Cey) (Pvt) Limited) நிறுவனத்தின் தமிழ் பத்திரிகைகளில் ஒன்றான வீரகேசரியில் 1972 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது ஊடகப்பணி மற்றும் இலக்கியப்பணி இன்று வரை தொடர்கின்றது. லெ.முருகபூபதி  சமூக, கலை இலக்கிய செயற்பாட்டாளராக இருந்து வருகின்றார். நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும், […]

 
*அசங்கா (சிறுகதை )  அனோஜன்

*அசங்கா (சிறுகதை ) அனோஜன்

மிக உக்கிரமாக மழை பெய்யத்தொடங்கியிருந்தது. கார் கண்ணாடியூடாக வெளியே பார்த்தேன். மழைத்துளிகள் ஈயக்குமிழ்கள்போல் காரின்மேல் பட்டுச்சிதறின. காருக்குள் ஓரளவு சூட்டுடன் இருந்தாலும், குளிர் உடம்பின் தசைகளுக்குள் முட்டிமோதி நுழைவதினை உணரத்தொடங்கியிருந்தேன். தலைமுடிகளை கோதிக்கொண்டு காரின் வேகத்தினை குறைத்துக்கொண்டு முன்செல்லும் வாகனத்தின் நகர்தலுக்காகக் காத்திருந்தேன். மெல்லமெல்ல முன்னால் இருக்கும் நீண்ட தொடர்வாகனங்கள் புகையிரதப்பெட்டிகள்போல் பிரமாண்டமாக ஒத்திசைவாக இயங்கிக்கொண்டு மெல்ல அசைந்துகொண்டிருந்தன. மெதுவாக நகரும் நீண்ட ராட்சத அட்டையைப்போல் கற்பனைசெய்துபார்த்தேன். கார் இருக்கையில் […]