Home » யோ.கர்ணன்

 
 

யோ.கர்ணன்

 
 
*ஜன்னல்களிற்கு வெளியிலிருக்கும் தெருக்களில் நடமாடுபவன்-யோ.கர்ணன்

*ஜன்னல்களிற்கு வெளியிலிருக்கும் தெருக்களில் நடமாடுபவன்-யோ.கர்ணன்

கடந்த சில நாட்களின் முன் அன்பழகனது நினைவுநாள் கடந்து சென்றது. ஓரளவு இணைய பரிச்சயமும், ஈழப்பரிச்சயமும் உள்ளவர்களிற்கு அன்பழகன் யார் என்பது தெரிந்திருக்கும். எல்லோருக்கும் தெரிந்துவிடுமளவிற்கு பிரபலமானவனாக அவன் வாழ்ந்திருக்கவில்லை. யுத்தத்திற்கும் கனவுகளிற்குமிடையில் ஊசலாடியபடி பல்லாயிரம் இளையவர்களில் ஒருவனாக வாழ்ந்தான். அவ்வளவுதான். மரணத்தின் பின்னால்தான் அவன் பெயர் பரவலானது. துயர்மிகு காலமொன்றின் குறியீடாகவே அந்த பெயர் பரவலடைந்திருந்தது.   படைப்பாளியாகவும், இணைய பரிச்சயமிக்கவராகவும் அவனது சகோதரன் த.அகிலன் இருந்ததினால் அன்பழகனின் […]

 
இனி அவன் – நடுநடுவே நிறையக் காட்சிகளைக் காணோம்!- யோ.கர்ணன்

இனி அவன் – நடுநடுவே நிறையக் காட்சிகளைக் காணோம்!- யோ.கர்ணன்

அசோக ஹந்தகமவின் ‘இனி அவன்’ திரைப்படமளவிற்கு ஆரவாரமாக வெளியிடப்பட்ட இலங்கைத் தமிழ் திரைப்படமெதுவும் இருந்திருக்காதென்றுதான் நினைக்கிறேன். இப்படி சொல்வது கூட அவர்களது உழைப்பை குறைத்து கூறுவதாகவே இருக்கும். அண்மைய வருடங்களில் இலங்கையில் திரையிடப்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு திரைப்படங்களெதற்குமே இந்தளவு விளம்பரம் செய்யப்பட்டிருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு கட்டத்தில் எனக்கு பிரமிப்பாகவே போய்விட்டது, இந்தப்படத்திற்கான விளம்பரச் சுவரொட்டிகளை விட வேறொன்றையும் சூழலில் காணவே முடியாமல் போய்விடுமோ என்று. யாழ்ப்பாணத்திலும் அப்படியொரு விளம்பரம். […]

 
திரும்பி வராத குரல் – யோ.கர்ணன்

திரும்பி வராத குரல் – யோ.கர்ணன்

  ஆயிரத்து தொளாயிரத்து தொன்னூறுகளின் மத்திய பகுதியில் அது நடந்தது. யாழ்ப்பாணத்தின் இருபாலையிலுள்ள முகாமொன்றின் சமையல்கூடத்திற்கு பக்கத்தில், ஒரு பின்மதியப் பொழுதில் சத்தியப்பிரமாணத்தை சரியாக நினைவில் கொண்டுவர முடியாமல், நானும் என் வயதையொத்த இன்னும் இரண்டு நண்பர்களுமாக மல்லுக்கட்டிக் கொண்டிருந்தோம். அது நாங்கள் இயக்கத்திற்கு சேர்ந்த புதிது. சத்தியப்பிரமாணத்தை மனனம் செய்ய வேண்டுமென்ற கட்டுப்பாடெல்லாம் அப்பொழுதில்லை. எங்களைத்தான் ஆர்வக் கோளாறு விடவில்லை. முகாமிலிருந்த சீனியர்கள் காலையில் சத்தியப்பிரமாணமெடுப்பதைப் பார்த்ததும் பெரும்பாலானவர்களிற்கு […]

 
கதையல்லாத கதைகள் 02-யோ.கர்ணன்

கதையல்லாத கதைகள் 02-யோ.கர்ணன்

“ரைகர்ஸ்” யாழ்ப்பாணத்திலிருக்கும் நாற்பதினாயிரம் சிங்களப்படைகளையும் உயிருடன் பிடித்து வைத்துக் கொண்டு பேரம் பேசி தமிழீழத்தையடையப் போகிறார்களா அல்லது நாற்பதினாயிரம் சிங்களச் சிப்பாய்களின் சடலங்களை வைத்துக் கொண்டு பேரம் பேசி தமிழீழத்தையடையப் போகிறார்களா என உலகின் திசையனைத்திலுமிருந்த தமிழ் ஆய்வாளர்கள் அனைவரும்  தலையைப்பிய்த்துக் கொண்டிருந்த பொழுதது. உச்சபட்சமாக, வன்னியிலிருந்த ஆய்வாளரொருவர் ஈழநாதம் பத்திரிகையில் பின்வருமாறு எழுதியிருந்தார்- ‘நமது குறைநிர்வாக இராச்சியத்தை சில வல்லரசுகள் பயங்கரவாத இயக்கமாக தடை செய்துள்ளன. நல்ல கூடைப்பந்து […]

 
கதையல்லாத கதைகள்-01, யோ.கர்ணன்

கதையல்லாத கதைகள்-01, யோ.கர்ணன்

    தோழர் சான் சடாட்சரத்தை நான் முதன்முதலாக சந்தித்த பொழுது எனக்குச் சரியாக இருபது வயதும் நாற்பத்தியெட்டு நாட்களும் சில மணித்துளிகளும் ஆகியிருந்தன. அப்பொழுது நான் விடுமுறையில் வந்திருந்தேன். நான் இயக்கத்தில் இருந்த காலத்தில் கிடைத்த ஒரே ஒரு விடுமுறை அதுவாகத்தானிருந்தது. எனக்கு அப்பொழுது வன்னியில் போவதற்கு ஒரு வீடும் இல்லாதிருந்தது. கதிர் தனது வீட்டிற்கு வரச் சொன்னான். அவன் திருகோணமலைப் பொடியன். அவனது வீட்டுக்காரர்கள் கன வருசத்துக்கு […]

 
கொலம்பஸின் வரைபடங்கள்-யோ.கர்ணன்

கொலம்பஸின் வரைபடங்கள்-யோ.கர்ணன்

என் சனங்கள் பாவம் முன்னொரு போது போரினின்று நான் வெளியேறுகையில் ஒன்பதாம் திசையில் வழிகாட்டி ஒளிர்ந்த நட்சத்திரத்தை அவர்களுடைய வானத்திலேயும் ஒளிரச்செய்யும் என் ஆண்டவரே.. – த.அகிலன்- – 01- அவுஸ்திரேலியா நோக்கி சென்ற அகதிகள் படகொன்று கடந்த மாதம் விபத்துக்குள்ளாகியிருந்தது. கிட்டத்தட்ட நூறு பேரளவில் அதில் மரணமாகியிருக்கக்கூடும். இது இந்தப்பகுதியில் நடந்த முதல் விபத்தல்ல. கடைசி விபத்துமல்ல -குறிப்பாக அகதிகளையேற்றிக் கொண்டு சென்ற கப்பல்களிற்கு. உண்மையில் அவற்றை கப்பல்கள் […]

 
குற்றமும் தண்டனையும்

குற்றமும் தண்டனையும்

-யோ.கர்ணன்– இந்து சமுத்திரத்தின் முத்தாம் இலங்கைத்தீவின் தலைநகர் கொழும்பு மாநகரின் மையத்தில் கடந்த எழுபது வருடங்களாக சைவத்தையும் தமிழையும் வளர்த்து வரும் கொழும்பு தமிழ்ச்சங்கமானது ‘உலகத்தமிழ் இலக்கிய மாநாடு’ என்ற தலைப்பில் இலக்கிய மாநாடொன்றையும், பாரதிவிழாவையும் நடாத்தி தமிழையும், இலக்கியத்தையும் தொடர்ந்து வாழ வைப்பதற்கான ஒட்சிசன் ஊட்டும் முயற்சியொன்று செய்திருந்தது. இது நடந்தது இந்த மாதம் 02,03,04ம் திகதிகளில். இதற்கு முதல்நாள் பாரதிவிழா நடந்திருந்தது. உண்மையில் இவை பாராட்டப்பட வேண்டிய […]