Home » கருணாகரன் (Page 2)

 
 

கருணாகரன்

 
 
கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது?- கருணாகரன்

கிளிநொச்சி எப்படியிருக்கு? அங்கே என்ன நடக்கிறது?- கருணாகரன்

                நேரில் காணும்போதும் தொலைபேசியில் உரையாடும் போதும் அநேகமான வெளியூர் நண்பர்கள் முதலில் கேட்பது கிளிநொச்சி எப்படி இருக்கு? அங்கே என்ன நடக்குது? என்ற மாதிரியான கேள்விகளையே. இந்த மாதிரியான கேள்விகளை அவர்கள் இன்று நேற்று மட்டும் கேட்கவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த எழுபதுகளில் கிளிநொச்சி ஒரு நகரமாக வளரத்தொடங்கியபோது இந்தக் கேள்விகளைக் கேட்டார்கள். […]

 
‘சிதழுறும் காயங்களின் மொழியில் என்னைப் பேசவிடுங்கள்’

‘சிதழுறும் காயங்களின் மொழியில் என்னைப் பேசவிடுங்கள்’

  யோ. கர்ணனின் கதைகள் – சேகுவேரா இருந்த வீடு ———————————————————————— ‘சிதழுறும் காயங்களின் மொழியில் என்னைப் பேசவிடுங்கள்’ என்று அஸ்வகோஸ் தன்னுடைய கவிதைகளில் குமுறுகிறார். அஸ்வகோஸ் மட்டுமல்ல, றஷ்மி, பா.அகிலன், வரதர், மு.தளையசிங்கம், தா.இராமலிங்கம், சு.வி, சிவரமணி, அனார், ஓட்டமாவடி அரபாத், இளைய அப்துல்லா, திருமாவளவன், கி.பி. அரவிந்தன், த.அகிலன், சித்தாந்தன், எஸ்போஸ், தாமரைச்செல்வி, கோவிந்தன், டொமினிக் ஜீவா, நந்தினி சேவியர், டானியல், சக்கரவர்த்தி, ஷோபாசக்தி, சண்முகம் சிவலிங்கம், […]

 
இன்றைய இலங்கை!

இன்றைய இலங்கை!

இலங்கையில் அமைதியை அல்லது சமாதானத்தை எட்டுவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றனவா? இன்றைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இதயத்தில் சாமாதானத்தைக்குறித்த எண்ணங்கள் உண்டா? தமிழ் அரசியற் தலைவர்களிடம் அரசியற் தீர்வு குறித்துள்ள எண்ணங்கள் என்ன? அரசாங்கம் சமாதானத்தைக் குறித்துச் சிந்திக்க மறுத்தால் அடுத்த கட்டமாக எத்தகைய அரசியற் செயற்பாடுகளை மேற்கொள்வது என்ற தீர்மானங்கள் யாரிடமாவது உள்ளதா? ஒரு நிலையான சமாதானத்துக்கு எத்தகைய வழிமுறை பொருத்தமானது என யாராவது முறையாக ஆராய்ந்துள்ளனரா? தமிழ் பேசும் […]

 
மூன்று நூல்களின் வெளியீடும் குறிப்புகளும்…….

மூன்று நூல்களின் வெளியீடும் குறிப்புகளும்…….

சி.சிவசேகரத்தின் குழந்தையும் தேசமும் சிறுகதைகள் வெளியீட்டு நிகழ்வு ————————————————————————————————————–   சி.சிவசேகரத்தின் “குழந்தையும் தேசமும்”  சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வு 21.04.2012 மாலை நான்கு மணிக்கு யாழ்ப்பாணம் ஊடக வளங்கள் கற்கை நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் திரு. க.தணிகாசலம் தலைமை தாங்கினார். வெளியீட்டுரையை சோ. தேவராஜா நிகழ்த்தினார். விமர்சன உரைகளை கருணாகரன், ராஜேஸ்கண்ணா ஆகியோர் ஆற்றினர். இந்த நிகழ்வில் எதிர்பார்த்ததையும் விட ஏராளமானவர்கள் […]

 
அமைதிக்குத் திரும்புதல் அல்லது அமைதியை உருவாக்குதல்

அமைதிக்குத் திரும்புதல் அல்லது அமைதியை உருவாக்குதல்

–    கருணாகரன்- இன்றைய உலகத்தின் பொது உரையாடல் அல்லது பொது உரையாடலுக்கான அழைப்பு அல்லது பொதுச் சிந்தனையைக் கோருதல் என்பதெல்லாம்  அமைதியைக் குறித்ததாகவே அமைகின்றன. அதாவது அமைதிக்குத் திரும்புதல் அல்லது அமைதியை உருவாக்குதல் என்பதை நோக்கியதே இது. எல்லா வழிகளும் எல்லா வழிமுறைகளும் இறுதி இலக்கில் அமைதிக்கானவையே என்பது இதன் அர்த்தம். அமைதியற்ற நிலையில் உருவாக்கப்படும் எத்தகைய முன்னேற்றங்களும் நிலையற்றவை, பாதுகாப்பற்றவை என தெளிவாக உணரப்பட்டுள்ளதன் விளைவே இதுவாகும். ஆகவே, […]

 
இலங்கையில் தமிழ் பேசும் சமூகங்களின் எதிர்காலம் எப்படியிருக்கப்போகிறது?

இலங்கையில் தமிழ் பேசும் சமூகங்களின் எதிர்காலம் எப்படியிருக்கப்போகிறது?

-கருணாகரன் மேற்படி தலைப்பை என்னிடம் கேள்வியாக கேட்டார் ஒரு நண்பர். அவருடைய இந்தக் கேள்விக்குள் பெருந்துக்கம் நிறைந்திருக்கிறது,அத்துடன் எதிர்காலத்தைக் குறித்த அச்சமும் கலந்திருக்கிறது. இது தனியே ஒருவருடைய கேள்வியோ கவலையோ அல்ல. தமிழ்பேசும் சமூகத்தைச் சேர்ந்த பலருடைய கேள்வியும் இப்படித்தானிருக்கிறது. அவர்களுடைய கவலைகளும் அச்சங்களும் இந்தக் கேள்வியில் கலந்திருக்கின்றன. அப்படிப் பார்த்தால் இது இன்று தமிழ் பேசும் மக்களின் பொதுக்கேள்வியாகவும் பொதுக் கவலையாகவும் பொதுவான அச்சமாகவும் உள்ளது எனலாம். ஆகவே […]