Home » மீராபாரதி

 
 

மீராபாரதி

 
 
*ஆதிரை:  மனிதர்கள் வரலாற்றில் நினைவு கொள்ளப்படுகின்றனர்…… – மீராபாரதி

*ஆதிரை: மனிதர்கள் வரலாற்றில் நினைவு கொள்ளப்படுகின்றனர்…… – மீராபாரதி

  ஈழவிடுதலைப் போராட்டத்தில் இறுதிவரை பெரும் பங்காற்றியவர்களும் அதிகமாக (கட்டாயமாகப்) பலியாக்கப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் வடக்கு கிழக்கில் சாதியாலும் வர்க்க நிலைகளாலும் ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட மக்களே. இவர்களுடன் மலையகத்திலிருந்து இடம் பெயர்ந்து அகதிகளாக வன்னிப்பிரதேசங்களில் வாழ்ந்த மலையக மக்களும் பாதிப்புக்குள்ளானார்கள். ஒரு புறம் தமிழ் சமூகங்களுக்குள் இருக்கின்ற சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் வர்க்க சுரண்டல்கள். மறுபுறம் தமிழ் சமூகங்கள் மீதான சிறிலங்கா அரசின் இன ஒடுக்குமுறை. இவற்றுக்கெல்லாம் முகங்கொடுத்த இந்த மக்கள் […]

 
*நந்தினி சேவியரின் படைப்புகள் , ஒடுக்கப்பட்டவர்களின் குரல்-மீராபாரதி

*நந்தினி சேவியரின் படைப்புகள் , ஒடுக்கப்பட்டவர்களின் குரல்-மீராபாரதி

விடியல் பதிப்பகம் தொகுத்து வெளியிட்ட நந்தினி சேவியரின் படைப்புகள் என்ற நூல் 2015 மே மாதம் ரொரன்டோவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வை தேடகம் ஒழுங்கு செய்ய சிவா அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார். நந்தினி சேவியருடனான சிறுவயது முதலான தனது அறிமுகம் மற்றும் தாம் இலக்கியங்களை வாசிக்க அவர் ஊக்குவித்ததையும் பல நூல்களையும் படைப்பாளர்களையும் தமக்கு அறிமுகம் செய்ததையும் சிவா அவர்கள் குறிப்பிட்டார். மேலும் அவருடனான தனது கடந்த […]

 
*ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தோல்வி !  யார் பொறுப்பு ?- மீராபாரதி

*ஈழத் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் தோல்வி ! யார் பொறுப்பு ?- மீராபாரதி

ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் தோல்வி அடைந்ததற்கு யார் காரணம்? புலி எதிர்ப்பாளர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் காரணம் என்பார்கள். புலி ஆதரவாளர்கள் அரச ஆதரவு முன்னால் இயக்கங்களும் அதன் தலைவர்களும் காரணம் என்பார்கள். சிலர் இந்தியா என்பார்கள். இன்னும் சிலர் உலக நாடுகள் என்பார்கள். வேறு சிலர் சிறிலங்கா அரசும் அதன் தந்திரோபாயமும் என்பார்கள். இவை எல்லாம் ஈழ விடுதலைப் போராட்டம் தோற்பதற்கு ஏதோ ஒரு […]

 
*நான்காவது பெண்ணிய அலையின் தேவை!-மீராபாரதி

*நான்காவது பெண்ணிய அலையின் தேவை!-மீராபாரதி

பெண்ணியம் பெண்ணிலைவாதிகள் என்ற சொல் பலரிடம் எதிர்மறையான தாக்கத்தை அல்லது அடையாளத்தைப் பெற்றுள்ளன. இதற்கு முதலாவது அலை பெண்ணியம் குறிப்பாக தாராளவாத பெண்ணிய கருத்துக்கள் செயற்பாடுகள் ஒரு காரணம் எனலாம். மேலும் இப் பெண்ணிய கருத்து சார்ந்தவர்கள் மேல் மற்றும் மத்திய வர்க்க வெள்ளையினப் பெண்களாக இருந்தது மட்டுமல்ல அரசாங்கத்திற்கு ஆதரவானவர்களாகவும் இருக்கின்றார்கள். இந்த அடையாளமானது பொதுவாக அனைத்துப் பெண்ணியவாதிகள் மீதும் சுமத்தப்படுவதுடன் பெண்ணியம் என்ற கருத்தியல் பற்றிய தவறான […]

 
*  பால், பாலியல் – காமம், காதல் – பெண், பெண்ணியம் – என் அனுபவங்கள் -மீராபாரதி

* பால், பாலியல் – காமம், காதல் – பெண், பெண்ணியம் – என் அனுபவங்கள் -மீராபாரதி

நான் ஏன் இப்படி இருக்கின்றேன்? சில பழக்கவழக்கங்களை ஏன் விடமுடியாமல் இருக்கின்றது? சில செயல்களை அல்லது பழக்கவழங்கங்களை ஏன் முன்னெடுக்க முடியாமல் இருக்கின்றது? சிலவற்றை செய்த பின் ஏன் குற்றவுணர்வில் கஸ்டப்படுகின்றேன்? எனது சிந்தனைகள் ஏன் ஒன்றுக்கு ஒன்று எதிராக மாறி மாறி வருகின்றன? இப்படி பல பழக்கவழக்கங்கள் பிரக்ஞையின்மையாக தொடர்கின்றன…. பல எண்ணங்கள் சிந்தனைகள் அடிக்கடி மனதில் ஒடுகின்றன…… இவை தொடர்பாக சிந்திப்பதும் உண்டு. இதிலிருந்து விடுபட முயற்சிப்பதும் […]

 
*மீண்டும் தவறிழைக்காது செயற்பட வேண்டியதன் பொறுப்பு! -மீராபாரதி

*மீண்டும் தவறிழைக்காது செயற்பட வேண்டியதன் பொறுப்பு! -மீராபாரதி

தேவை – புதிய சிந்தனை! புதிய கட்சி! புதிய செயல்! –   சில குறிப்புகள்!  —————————————————————– தமிழர்கள் இன்று இக்கட்டான ஒரு சூழ்நிலையில் வாழ்கின்றனர் என அனைவரும் கூறுகின்றனர். ஆனால் இதிலிருந்து எவ்வாறு வெளியேருவது என்பது தொடர்பாக வழி காட்டுபவர்கள் ஒருவரும் இல்லை. ஆகவே அவ்வாறான ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறான ஒரு சூழல் உருவாவதற்கான பொறுப்பை ஏற்கவேண்டியது  தமிழர்களை ஒடுக்குகின்ற சிறிலங்கா அரசே. இருந்தபோதும் […]

 
*சாதிய சமத்துவம் – ஆதிக்க சாதிகளின் அறியாமையா? தந்திரமா?-மீராபாரதி

*சாதிய சமத்துவம் – ஆதிக்க சாதிகளின் அறியாமையா? தந்திரமா?-மீராபாரதி

சில கேள்விகளும் சந்தேகங்களும்…. எழுநா வெளியீட்டாளர்கள் புதிய பதிப்பக முயற்சி ஒன்றை மிகவும் திட்டமிட்ட முறையில் ஆரம்பித்திருக்கின்றார்கள். இதனுடாக குறிப்பாக இலங்கை தமிழ் பேசும் மனிதர்கள் எதிர்நோக்குகின்ற சமூகப் பிரச்சனைகளையும் அது தொடர்பாக அத் தேசத்தின் சிந்தனையாளர்களினதும் துறைசார் புலமைத்துவ எழுத்தாளர்களினதும் பன்முக சிந்தனைகளைத் தொகுத்து வெளியீடுகின்றார்கள். அந்தவகையில் சாதியம் தொடர்பாக பரம்சோதி தங்கவேல் எழுதிய “யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும் “ நூல் முக்கியமானது. இந்த நூல் […]

 
* சம உரிமை – சிங்கள தமிழ் முஸ்லிம் மலையக தேசங்களுக்கா….? அல்லது சிறிலங்கர்களுக்கா….?

* சம உரிமை – சிங்கள தமிழ் முஸ்லிம் மலையக தேசங்களுக்கா….? அல்லது சிறிலங்கர்களுக்கா….?

  ( சம உரிமை இயக்கத்தின் கொள்கை நிலைப்பாட்டு  தமிழ் மொழி அறிக்கையை  நாம் பிரசுரித்து இருந்தோம், ச உரிமை இயக்கம் தொடர்பாகவும், இலங்கை  நிலையில் அதன் இன்றைய  அரசியல் முக்கியம் குறித்து வி.சிவலிங்கம் அவர்கள் ஒரு விரிவான கட்டுரையை  /எதுவரை /இணையதளத்தில் எழுதி இருந்தார்.அதன் தொடர்ச்சியாக மீராபாரதியின் இக்கட்டுரை பதிவு பெறுகிறது, அரசியல் கருத்து பகிர்வையும், ஆரோக்கியமான விவாதங்களையும் ,கேள்விகளையும் ,அதற்கான பதிலுரைப்புகளையும் முன்னெடுத்து செல்வதே எமது எதிர்பார்ப்பாகும். […]

 
* ஐக்கிய முன்னணி: தேசங்களின் ஜனநாயக உரிமை! யாருடன்? யாருக்கு எதிராக?…

* ஐக்கிய முன்னணி: தேசங்களின் ஜனநாயக உரிமை! யாருடன்? யாருக்கு எதிராக?…

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மீண்டும் ஐக்கிய முன்னணி ஒன்றின் அவசியம் குறித்து பரவலாக உரையாடப்படுகின்றது. குறிப்பாக இது மூன்று தளங்களில் நடைபெறுகின்றது. முதலாவது தமிழ் தேசத்தில் செயற்படுகின்ற கட்சிகளுக்கு இடையிலான ஐக்கிய முன்னணி குறித்து முன்னெடுக்கப்படுகின்றன. இரண்டாவது முஸ்லிம் தேசத்துடனான முன்னணி குறித்து உரையாடப்படுகின்றன. மூன்றாவது சிங்கள தேசத்துடனனான ஐக்கிய முன்னணி குறித்தது சிந்திக்கப்படுகின்றன. இதைவிட மலையகத்துடனான ஐக்கிய முன்னணி தொடர்பாகவும் அக்கறை செலுத்தப்படுகின்றது. இன்றைய சுழ்நிலையில் மட்டுமல்ல எந்த […]

 
*தமிழக மக்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு கடிதம்!   மீராபாரதி

*தமிழக மக்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் ஒரு கடிதம்! மீராபாரதி

ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களும் அழிப்புகளும் சிறிலங்கா அரசாங்கங்களால் மேற்கொள்ளப்பட்ட நாளிலிருந்தே இன்று நடைபெறுகின்ற தமிழக மாணவர்களின் எழுச்சி  போன்று பல போராட்டங்கள்  தமிழகத்தில் நடைபெற்றிருக்கின்றன. இவ்வாறு ஈழத் தமிழர்களின் விடுதலையிலும் அதன் சோகங்களிலும் தூக்கங்களிலும் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக தமிழக மனிதர்கள் பங்கு கொண்டும் பல்வேறு  தளங்களிலும் வழிகளிலும் பங்களித்தும் வந்திருக்கின்றார்கள். சிலர் ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக தீக்குளித்து தம் உயிர்களையும் நீத்திருக்கின்றார்கள். இது தவறான […]