Home » சிறுகதை-மொழிபெயர்ப்பு

 
 

சிறுகதை-மொழிபெயர்ப்பு

 
 
* ராஜீவ் காந்தியுடன் ஒரு சந்திப்பு –சார்ல்ஸ் சர்வன்-(தமிழில் —- பத்மஜா நாராயணன்)

* ராஜீவ் காந்தியுடன் ஒரு சந்திப்பு –சார்ல்ஸ் சர்வன்-(தமிழில் —- பத்மஜா நாராயணன்)

மே 1991 இல் நடந்த ராஜீவ் காந்தியின் படுகொலை, ஸ்ரீலங்காவைச் சேர்ந்த ஒரு தமிழ்ப் பெண்மணியால் செய்யப்பட்டது என்றே பொதுவாக நம்பப்படுகிறது. அச்சமயத்தில் “மனித குண்டு” என்பது மிகவும் புதியதொரு நிகழ்வு (அதாவது பொதுமக்களின் மனங்களிலாவது). இறுதி விநாடிகள் இரக்கமில்லாது நெருங்க நெருங்க, அப்பெண்ணின் எண்ணங்களும் உணர்வுகளும் என்னவாக இருந்திருக்கும் என்று நான் யோசித்தேன். என் பால்யகாலத்தைப் பின்புலமாகக் கொண்டு ‘தீவிரவாதி’ என்று முத்திரையிடப்பட்ட அந்தப் பெண்ணின் புறமனதை அடைய […]

 
*வேட்டை (தென்னாபிரிக்க நாட்டுச் சிறுகதை) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

*வேட்டை (தென்னாபிரிக்க நாட்டுச் சிறுகதை) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

  எழுத்தாளர் பற்றி : பெஸீ ஹெட் Bessie Head ————————————- தென்னாபிரிக்க பெண் எழுத்தாளரான பெஸீ ஹெட் 1937 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் ஆறாம் திகதி பிறந்தவர். விருதுகள் பல பெற்ற பல நாவல்களையும், சிறுகதைத் தொகுப்புக்களையும் எழுதியுள்ள இவர் இன்றும் கூட ஆளுமை மிக்க எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.1950 களின் பின்னர் ஆசிரியையாகவும், ‘ட்ரம்’ எனும் சஞ்சிகையில் ஊடகவியலாளராகவும் கடமையாற்றிய இவர், அரசியல் நிலவரங்களின் காரணமாக […]

 
* நடக்க முடியாத நிஜம்- தமிழில் – எஸ். ஷங்கரநாராயணன்  (சிறுகதை)

* நடக்க முடியாத நிஜம்- தமிழில் – எஸ். ஷங்கரநாராயணன் (சிறுகதை)

  புதன்கிழமை ராத்திரி பத்துமணிக்கு நான் ரே பானைப் பட்டணத்துக்கு என் எஃப்-250 வண்டியில் கூட்டிப்போனேன். அவனது விநோத அனுபவத்தை அதற்குமுன்னமே அங்கே சிலர் கேள்விப்பட்டிருந்தார்கள். நாங்கள் ஊர்ப்போய்ச் சேருமுன்னிருந்தே அவர்கள் அதைப்பற்றி வார்த்தையாடிக் கொண்டிருந்தாலும், நடந்தது அவர்களுக்குப் புரிந்திருக்கவில்லை. எனக்கே கதையில் பாதிதான் தெரியும். அவனைக் கண்டுபிடித்தது நான்தான்.   இப்ப மட்டுமல்ல எப்பவுமே அவன் நல்ல நண்பனாக யாருக்குமே அமைந்ததில்லை. நிதானமா இருந்தான்னா எரிச்சலூட்டுவான். குடிபோதையிலோ எதுக்கும் […]

 
*வெள்ளிவீதி (அல்ஜீரியா நாட்டுச் சிறுகதை)-தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

*வெள்ளிவீதி (அல்ஜீரியா நாட்டுச் சிறுகதை)-தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

–    அவள் கட்டிலில் அங்குமிங்கும் புரண்டபடி படுத்துக் கிடந்தாள். வீடு அடர்ந்த இருளில் மூழ்கிப் போயிருந்தது. அவளது கணவன் கடைத் திண்ணையிலிருந்து இன்னும் திரும்பி வரவில்லை. அவன் வரும்வரைக்கும் கதவைத் திறந்து வைக்க மறந்து போனது அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவள் மனதுக்குள் ஒரு முறை திட்டித் தீர்த்தாள். அவளது அன்றாட வேலைகளுக்கு முடிவேதுமற்றதாயிருந்தது. விறகு சேகரித்து வருவது, தண்ணீர் கொண்டு வருவது, மில்லுக்கு தானியங்களைக் கொண்டு சென்று, […]

 
*சேபாலிக்கா- மொழிபெயர்ப்பு சிறுகதை,தமிழில்:தேவா

*சேபாலிக்கா- மொழிபெயர்ப்பு சிறுகதை,தமிழில்:தேவா

  மெதுவான அமைதியில் அப்பகுதியே உறைந்துபோய் கிடந்தது. பறவைகள் தங்கள் பாடலை நிறுத்திவிட்டிருந்தன. காட்டுக்குள் போயிருக்க கூடும். போகாமல் அங்கே இருந்தவைகூட  அமைதியாக இருந்தன. தங்கள் காதுகளை கூர்மையாக்கிக்கொண்டு ஏதோ ஒன்று நடைபெறும்வரை காத்துக்கிடந்தன. யாரோ ஒரு சமிஞ்ஞையை கொடுக்கும்வரை. கிடைத்தவுடன் அவ்விடத்தைவிட்டுப்போய்விடக் கூடும். அப்பா எங்கள் குடில் முன்னால்  பரந்துவிரிந்த வானத்தைக்கண்களால் துலாவியபடி நின்றார். காலைக்குளிர் சூழவிரிந்திருந்தது. கண்களில் மீதமிருந்த தூக்கத்தை கைகளால் தேய்த்துக்கொண்டே, வீட்டின் பின்புறம் காலை […]

 
2012ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற சீனர்-தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

2012ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற சீனர்-தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்

    வெளிப்படையாக நான் சொல்லவில்லையானாலும் அத்தையின் கல்யாண யோசனைகளையிட்டு எனக்கும் உடன்பாடு இல்லை. அப்பா, என் சகோதரர்கள், அவர்களின் மனைவிமார்கள்… அவர்களுக்கும் அப்படித்தான் இருந்தது. எங்கள் பார்வையில், அட அந்தாள் ஒத்து வராது, என்றே நாங்கள் எல்லாருமே அபிப்ராயப்பட்டோம். எங்கள் சிறு பிராயத்தில் இருந்தே, அத்தைக்கான நல்ல மாப்பிள்ளை யார், என்று நாங்கள் யோசித்துக்கொண்டுதான் இருந்திருக்கிறோம். வாங் சியோதியுடன் அவளது திருமணம் குடும்பத்துக்கே நல்ல பேர் தந்துவிட்டு, அதுவே […]

 
*சீனத்துச் சிறுகதை – குழந்தைமை தொலைந்த தருணம் – தமிழில்: ஜெயந்தி சங்கர்

*சீனத்துச் சிறுகதை – குழந்தைமை தொலைந்த தருணம் – தமிழில்: ஜெயந்தி சங்கர்

  ஒரு குழந்தை அறியக் கூடாத எதுவும் அறியாமலிருந்தால் அதன் குழந்தைப் பருவம் மகிழ்ச்சியாகவே இருக்கும். ஆனால், நான் குழந்தையாக இருந்த போது தெரிந்திருக்க வேண்டியதைத் தெரியாமலிருந்தேன். அதே நேரம், அறியக் கூடாததை அறிந்திருந்தேன். ஆகவே, என்னென்னவோ குழப்பங்கள் இன்று வரை தொடர்ந்து என்னைத் தாக்குகின்றன. பத்து வயதாகும் முன்னரே என்னால் எட்டு வகை ஆலயங்களை வேறுபடுத்திச் சொல்ல முடிந்தது. அவ்வாண்டு நான் அம்மாவுடன் மோஆன் மலையிலிருந்த ஆலயத்துக்குப் போனேன். […]

 
உலகின் மிகப்பெரிய ‘சென்சஸ்’ -மொழிபெயர்ப்பு சிறுகதை/சு.மகேந்திரன்(தமிழில்)

உலகின் மிகப்பெரிய ‘சென்சஸ்’ -மொழிபெயர்ப்பு சிறுகதை/சு.மகேந்திரன்(தமிழில்)

  த.இராமநாதன் (1913 – 1985) யாழ்ப்பாணத்தை தனது பிறப்பிடமாகக்கொண்டவர். கொழும்பு வெஸ்லிக் கல்லூரியிலும், இலங்கை பல்கலைக்கழக கல்லூரியிலும் கல்வி கற்றவர். பட்டப்படிப்பை முடிக்காமல் இந்தியாவுக்கு 1943 இல் சென்றார். அங்கே கன்னியாகுமாரியிலிருந்து பம்பாய் வரை நீண்ட ஒரு நடை பயணத்தை மேற் கொண்டார். வழி நெடுகிலுமுள்ள கிராமங்களில் தங்கினார். ஒரு கட்டத்தில் பெங்களுருக்கு அருகாமையில் மரக்கறி செய்கையில் ஈடுபட்டவரது பயிர்களை குரங்குகள் நாசம் செய்தன. சென்னைக்கு 1947 ல் […]

 
காற்றைப் போலே  -மொழிபெயர்ப்பு சிறுகதை

காற்றைப் போலே -மொழிபெயர்ப்பு சிறுகதை

ஒரு நாளின் நற்தருணங்களை நான் காற்றாக மாறிய நிலையில் தான் அனுபவிக்கிறேன். என் முதுகுத்தண்டின் கீழ்ப்பக்கத்தில் வலி. அதை மட்டுப்படுத்தும் நோக்கமும் இதில் உண்டு. ஆனால் அதைவிட முக்கியம், அப்படி காற்றாக மாறிவிடுவதில் என் மனசு இளகிக்கொடுக்கிற அனுபவம். அப்போது புற விஷயங்கள் நம்மை கவலைப்படுத்தாது. நான் அப்போது அறைக்குள்ளே மிதக்கிற நிலையை அடைகிறேன். மகா சுகம் அது. விச்ராந்தி நிலை. அப்படித்தான் எனக்கு அது அமைந்திருந்தது. சூழலின் பல்வேறு […]

 
மொழிபெயர்ப்புச் சிறுகதை

மொழிபெயர்ப்புச் சிறுகதை

சேட்டைக்காரக் கறுப்புப் பெண் ——————————————— மூலம் – அனுஷ்க திலகரத்ன (சிங்களத்தில்) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை அவள் கல்வி கற்பதுவும் நான் கல்வி கற்கும் நிலையத்திலேயேதான். முதலில் அவளை ஒரு கறுப்புப் பெண்ணாக அறிந்து கொண்டேன். பின்பு அவளது நடத்தைகளை ஆராய்ந்து ‘சேட்டை’ப் பகுதியையும் சேர்த்துக் கொண்டேன். ஆகவே அவள் சேட்டைக்காரக் கறுப்புப் பெண்ணாகவேயானாள். எனக்கு அவளைப் பிடிக்கவில்லை. அதற்கு அநேக காரணங்கள் இருந்தன. அவளது கூந்தலுக்குச் […]