Home » கைமண்

 
 

கைமண்

 
 

*தமிழர்களின் இன்றைய பொதுவான எதிரி எது? Wheather Ethno-religious Nationalism or Ethno-religious racialism? -கைமண்

-பகுதி 08- தமிழர்களின் இன்றைய பொதுவான எதிரி எது? Wheather Ethno-religious Nationalism or Ethno-religious racialism? ******************************************************************************************************************************************* இதுவரை வந்தவை “தேசியமும் மதமும்” என்ற தலைப்பிலான தொடர்கட்டுரை எதுவரை முதலாவது இதழில் தொடங்கி, தொடர்ச்சியாக ஐந்து இதழ்களில் வெளிவந்தன. 7வது இதழுடன் அத்தொடர்கட்டுரை அதன் ஆசிரியராலேயே நிறுத்தப்பட்டது. தொடர்கட்டுரை விவாதமையக் கட்டுரையாக அமைவது சிரமமானதாக உள்ளது போலும் எனக்கருதியதே அதற்கான காரணமாகும். விவாதமையமாக அமைவதைச் சாத்தியப்படுத்துவதற்காக இதே தலைப்பிலான […]

 
*தேசியமும் பெண்ணியமும்-கைமண்

*தேசியமும் பெண்ணியமும்-கைமண்

சென்ற இதழில், தேசியத்தை உலகளாவிய அருவமாக(abstract) நோக்காமல், நாம் வாழும் பிராந்திய அளவிலான ஸ்தூலமாக(concrete) நோக்கவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது. இலங்கையில் காணப்படும் தேசியங்கள், தெற்காசியத்தேசியம் எனும் பொதுமையின் ஓர் அங்கமாகும். தெற்காசியத்தேசியம் எனும் அப்பொதுமையின் அருவத்தைப் புரிந்துகொள்ளும்போதுதான் இலங்கையின் தேசியங்களையும், அத்தேசியங்களுக்கும் மதத்திற்கும் இடையேயான உறவுகளையும் புரிந்துகொள்ளமுடியும். ஆகவே இக்கட்டுரையில் தெற்காசியத்தேசியத்தின் அருவநிலையை மேலும் புரிந்துகொள்ள முற்படுவோம். இதற்காக, சென்ற கட்டுரையில் ஐரோப்பிய தேசியங்களுக்கும், தெற்காசிய தேசியங்களுக்கும் இடையேயான வேறுபாடுகளைப்பற்றி […]

 

தேசியமும் மதமும் தொடர்-6 – கைமண்

தொடரின் வடிவமைப்பில் சில மாற்றங்கள். ஒரு முன்குறிப்பு எதுவரை 6வது இதழுக்கு கட்டுரை அனுப்பமுடியாமல் போனமைக்கு வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். கட்டுரைக்கு பின்னூட்டல் எதுவும் இல்லாதிருந்தது. என்னுடனோ, பதிப்பாசிரியருடனோ கட்டுரை தொடர்பான நேரடிக் கருத்துப் பரிமாற்றம் எதுவும் இல்லாதிருந்தது. இதனாலும், வேறுசில காரணங்களாலும் ஏற்பட்ட மனச்சோர்வே இதற்கான காரணங்களாகும். கருத்துப் பரிமாற்றம் இன்மைக்கான காரணம் பற்றி எண்ணிப்பார்க்கும் போது, பருவ இதழுக்கும் நூலுக்கும் இடையேயான வேறுபாடுபற்றி ஆராய வேண்டி ஏற்ப்பட்டது. […]

 
தேசிய உருவாக்கத்தில் முதல் வினையும், பதில்வினையும்- கைமண்

தேசிய உருவாக்கத்தில் முதல் வினையும், பதில்வினையும்- கைமண்

பகுதி 2.5) தலைப்பு நீளமானதாக இருக்கக் கூடாதென்பதற்காக வெறுமனே ‘தேசிய உருவாக்கம்’ எனக் கூறப்பட்டுள்ளது. மதத்தை மையப்படுத்திக் கூறுவதானால் உண்மையிலேயே அது ‘சைவ-வேளாளியத் தேசிய உருவாக்கம்’ என்றே வாசிக்கப்படவேண்டும். இலங்கையில் காணப்படும் பிரதான தேசியப் போக்குகளின் அடிப்படை இனம்-சாதியம்-மதம்-மொழி ஆகிய நான்குமேயாகும். இவற்றுள் சாதியமும் மதமும் இத் தேசியப் போக்குகளுடன் ஒன்றைவிட்டு ஒன்று பிரிக்கவொண்ணாத முறையில் பின்னிப் பிணைந்துள்ளன. ஆனால் மொழியும் இனமும் ஒட்டவைக்கப்பட்டுள்ளன. இலங்கை இன-மொழிவழித் தேசியங்களாகப் பிரிந்து […]

 
தேசியமும் – மதமும்-(ஆகஸ்ட் மாத தொடர்….)

தேசியமும் – மதமும்-(ஆகஸ்ட் மாத தொடர்….)

  பகுதி 1 ‘தேசியமும் – சைவமும் சில தகவல்கள்’ எனும் சென்ற மாதத் தொடரின் சுருக்கம்: தமிழ்த் தேசியம் மதச்சார்பின்மைக் குணாம்சங் கொண்டது என்ற கருத்து உண்மையல்ல. தமிழ்த் தேசியம் தனக்கு எதிரான தேசியத்துடனான வினையாற்றலுக்காக (பதில் வினை) கடைப்பிடித்து வரும் ஒரு அரசியல் தந்திரோபாயமே மதச்சார்பின்மையெனும் அரசியல் நிலைப்பாடாகும். மதச்சார்பின்மையா, மதச்சார்புபெற்றதா என்பது ஒரு தேசியத்தின் பிரதான ஜனநாயகக் குணவியல்புகளில் ஒன்றாகும். இக்குணவியல்பைத் தீர்மானிப்பது அத்தேசியத்தின் முதல்வினைச் […]

 
தேசியமும் மதமும்… தொடர் 03

தேசியமும் மதமும்… தொடர் 03

இத்தலைப்பு பலருக்கு விதண்டாவாதமாகத் தென்படலாம். சிலருக்கு கோபத்தையும் ஏற்படுத்தலாம். இலங்கையில் தேசியமும் பௌத்தமும் என்று கூறுவது நியாயமானது. ஏனெனில் அது நீண்ட காலமாக இருந்து வருவது . தேசியமும் இஸ்லாமும், என்று கூறுவதும் நியாயமானது. ஏனெனில் அது சமீபத்தில்தான் பிறப்பெடுத்துள்ளது. இதற்கு இணையாக தேசியமும்-சைவமும் என்று கூறுவதில் என்ன நியாயமுண்டு. தமிழ்த் தேசியத்திற்கும் சைவத்திற்கும் ஏதாவது தொடர்புகள் இருந்ததா? பலர் இல்லையே என்பார்கள், சிலர் இருந்ததுதான் ஆனால் அது தான் […]

 

கருத்துக்கள்- கைமண் ( தேசியமும் மதமும் தொடர் குறித்து…..)

நுழைவாயிலில் சில நிமிடங்கள்……. ஆய்வைத் தொடர்வதில் வாசகர்களின் பங்களிப்பை உயிரோட்டமுள்ள பங்களிப்பாக மாற்றுவது எவ்விதம் என்பது தொடர்பாக என்னிடம் தெளிவான வேலைத்திட்டம் எதுவுமில்லை. தமிழ் இணையத் தளங்களில் தற்போது பின்பற்றப்பட்டுவரும் பின்னூட்டல் முறை வினைத்திறன் மிக்கதென நான் கருதவில்லை. ஆக்கபூர்வமான விளவை ஏற்படுத்துவதில் அது ஒரு நேர்மறை விவாத மேடையாக அமையமாட்டாது என்பதே எனது நம்பிக்கையாகும்.ஆனால் நான் அவ் விவாத மேடையையிட்டு எதிர்மறைக் கருத்துகளுடையவனாகவே உள்ளேன் என்பதை வெளிப்படையாக அறிவித்துக் […]

 
தேசியமும் மதமும் தொடர்-2     பௌத்தமும் தேசியமும்– சில தகவல்கள்

தேசியமும் மதமும் தொடர்-2 பௌத்தமும் தேசியமும்– சில தகவல்கள்

-கைமண் முன்னுரை பாகம் 1   பௌத்தமும் தேசியமும்– சில தகவல்கள்   இத்தலைப்பிலான ஆய்வின் அவசியம் என்னவென்பதை மேலும் வலியுறுத்துவதற்காக, தேசியம், மதம் ஆகிய இரண்டும் கடந்த கால இந்திய உபகண்ட வரலாற்றில் எவ்விதம் இணைந்திருந்தன என்பதைப் பற்றிச் சில வரலாற்றுத் தகவல்களை முதலில் அவதானிப்போம். இப்பகுதியைத் தொடர்கட்டுரைக்கான முன்னுரையாகக் கருதலாம். கட்டுரை எழுதி முடிக்கப்படமுன்னர் முன்னுரை எழுதுவது அவ்வளவு இலகுவானதல்ல. ஆனால், ஆய்வை மேற்கொள்வதில் வாசகர்களின் பங்களிப்பையும் […]

 
தேசியமும் மதமும்—01

தேசியமும் மதமும்—01

தேசியமும் மதமும்—01 -கைமண் மேற்கண்ட தலைப்பிலான ஒர் ஆய்வுக்கட்டுரையை தொடர்கட்டுரையாக இவ்விதழில் எழுத அனுமதி தந்த ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகள்.ஏற்கனவே எழுதிவைத்த கட்டுரையை பகுதி பகுதியாக இங்கு பிரசுரிக்கவில்லை. வாசகர்களின் ஆக்கபூர்வமான பின்னூட்டல்களையும், நேரடியான கருத்துப் பரிமாற்றங்களையும் உள்வாங்கிய வண்ணமே கட்டுரை தொடரும். இவ் ஆய்வை ஒரு புலமைசார் ஆய்வாக முன்னெடுத்துச் செல்லாமல் தன்னுணர்வூட்டல் ஆய்வாக எடுத்துச் செல்ல விரும்புவதே அதற்கான காரணமாகும். தன்னுணர்வூட்டும் ஆய்வென்பது தனியாளாகச் செய்யாமல் […]