Home » திருமாவளவன்

 
 

திருமாவளவன்

 
 
*நினைவின் சுவை:  ‘பொலின்டன்’-திருமாவளவன்

*நினைவின் சுவை: ‘பொலின்டன்’-திருமாவளவன்

  அன்று வெள்ளிக்கிழமை நான் திருமண மண்டபத்தில் நுழைந்தேன்.  பாதி மண்டபம் கூட நிறைந்திருந்திருக்கவில்லை. ஒரு வேலைநாளில் பகலில் திருமணத்தை வைத்தால் யார் வருவார்கள் ? ஒருவர் அலுத்துக் கொண்டார். எனக்கு மிக நெருங்கிய உறவினரின் திருமணம். நான் வழமையில் மாலை வேலைக்கு புறப்படுபவன்.  இன்று அதனால் காலைத் திருமணத்திற்கு வர வாய்த்திருந்தது.   இப்படியான சடங்குகளில் மட்டுமே உறவினரை ஒருசேர சந்திக்கவும் உரையாடவும் முடிகிறது. திருமணத்தைவிடவும் அந்த வாய்ப்பே முக்கியமானதாகிவிடுகிறது. […]

 
இருள்நதி -திருமாவளவன்

இருள்நதி -திருமாவளவன்

      இன்று முழுநிலா. இல்லை   நல்ல பால்போல் வெள்ளிப்பனி ஒளி   காற்று,கடும் குளிர். பற்றி எரிகிறது நிலம் நிலம்.   இருகையிருந்தும் முடம்போல விழித்திருக்கிறேன் நிலத்துக்கு காவலாய்.   சன்னலினுடே பெரும்கடலென விரிந்து கிடக்கிறது அண்டம்   இப்போ நான் சிறு மீன்குஞ்சு ஆழச்சுழியோடி நீந்திக் கடக்கிறேன் காலத்தை   முடிந்தகாலம் ஈரம்,எதிர்காலம் கனவு நடுவில் கண்ணீர்   கனவுகளில் நீந்தித் திளைக்கிகிறது மீன் குஞ்சு   திடுக்கிட்டு விழித்தபோது   பனித்துகில் போர்வைக் கதகதப்புள் ஆழ்ந்து உறங்கிக் கிடக்கிறது நிலம்   காலடியில் பெருக்கெடுக்கும் சொற்களின் பிரவாகத்தில் துடிக்கிறது மீன்குஞ்சு ௦௦௦௦ ஜனவரி 05. 2013

 
என் படுக்கை அறைக்குள் நுழைந்திருந்தது மரம்- திருமாவளவன்

என் படுக்கை அறைக்குள் நுழைந்திருந்தது மரம்- திருமாவளவன்

—————————————————————————  03   —————————————————————————————- இது நம்பமுடியாததுதான். கவிஞனின் கற்பனை என்று கூட நீங்கள் எண்ணக்கூடும். ஜெயமோகனின் அறம் தொகுப்பின் ஒரு கதையை படித்து முடித்த போது தூக்க விலங்கு தலைமாட்டோரம் இருந்து முகத்தை வாஞ்சையோடு நக்கிக் கொண்டிருந்தது. அது எப்போது என்னை விழுங்கியது.  இப்போ நினைவில் இல்லை. திடிரென ஏதோ ஒருவித அமுக்கம். அந்த சிறிய அறைக்குள் ஒரு பெரிய யானை நுழைந்து விட்டதைப் போல அல்லது நெடுந்தூரம் விமானத்தில் […]

 
திருமாவளவன்,றிம்சா – கவிதைகள்

திருமாவளவன்,றிம்சா – கவிதைகள்

பசி அசேதனங்கள் பொசுங்கி நாறும் காற்று தூர்ந்து சிதைந்த பதுங்குகுழி உடல்சிதறி திரிபுற்ற முண்டம் நாய் உருட்ட இலையான் காகங்களுடன் அலையும் தலை குழிக்குள் இறுகிய விழி குருதி உறைந்து காய்ந்த மதகு ஆயுதக் கரங்கள் பன்னிரண்டும் முறித்து மூளியாய் நிற்கும் கடவுள் சிலை இன்னும் நம்பிக்கையெடுக்கும் முடவன் பரட்டைப் பாலை பட்ட மரத்தின் நிழல் ஓரம் முலை பொச்சடிக்கும் குழந்தை நினைவு நீரில் நெகிழ்ந்து அழுகி நொதித்த பழையசோற்றை […]

 
போகுமிடமெலாம்….! திருமாவளவன்

போகுமிடமெலாம்….! திருமாவளவன்

————————————————————————–02———————————————————————— நெருப்புத்தழல் மழைச் சாரல் போல் தூற்றிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?. அது போலச் சொரிந்தது வெயில். இன்று வெள்ளிக்கிழமை. நான் வேலையில் விடுப்பு கேட்டிருந்தேன். வருடத்தில் ஒருமுறை பெரு நகரிலிருந்து விலகி எங்காவது தூர வாவிக்கரையோரம் போய் நண்பர்களுடன் கூடாரம் போட்டிருந்து வார இறுதியை களி(ழி)த்து வருவது வழக்கம். பயணத்துக்கான ஆயத்தங்ளோடு இருந்தபோது தொலைபேசி ஒலித்தது. “அண்ணை! நீங்க இண்டைக்கு வர மாட்டியள் எண்டு சொன்னனான். எங்கடை(தமிழ்) ஆக்கள் […]

 
பெயரில் என்ன இருக்கிறது?

பெயரில் என்ன இருக்கிறது?

யூன் மாதச் சூரியன் கடுக்கண்ட இளந்தாரி. அடிக்கடி வீறுகொண்டெழுவதும் பிறகு வடிந்து தனிவதுமாக இருந்தான்.  நான் கிழட்டு மரங்களின் கீழே நடந்தேன். கிளைகளினூடே தூறிக்கொண்டிருந்தது வெயில். மார்ச் ஏப்பிரல் மாசங்களில் ‘டுலிப்ஸ்’ செடிகள் முகிழ்த்த மொட்டுக்களினால் நிறைந்திருந்தது நிலம். காலையில்  சின்னக் குழந்தைகள் நினைவிலோடியது.  மே மாசம் முழுவதும் ‘லைலாக்’ பூக்களின் மெல்லிய சுகந்தமும் ஊதாநிறமும் மனதை மயக்கும்.  அவ்வேளை உலகமே ஒருவித காமக்கிறக்கத்தில் இருப்பதாகவே உணர்வு எழும். இப்போ […]