Home » கரன்

 
 

கரன்

 
 
பெண்போராளிகள்/பாலியல் தொழில்/ சமுகத்தின் பொறுப்பு

பெண்போராளிகள்/பாலியல் தொழில்/ சமுகத்தின் பொறுப்பு

அண்மையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்தவாறு பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார் என்று தெரிவித்து, சம்மந்தப்பட்ட பெண்ணுடைய நேர்காணல் ஒன்றை -ஆனந்த விகடன் இதழ் -வெளியிட்டிருந்தது. இந்த நேர்காணல் வெளியானதைத் தொடர்ந்து தமிழ்ப் பரப்பெங்கும் சூடு பறக்கும் விவாதங்களும் உணர்ச்சிகரமான விளக்கங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. நடப்பதாகச் சொல்லப்படும் விடயம் உண்மையா அல்லது பொய்யா என்று இன்னும் யாராலும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை. உண்மையாக அப்படியொரு சங்கதி நடந்தாலும் […]

 
உளவியல் பாதிப்புகளை பொருட்படுத்தத் தவறினால் அது சமூகத்திலும் குடும்பங்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்!

உளவியல் பாதிப்புகளை பொருட்படுத்தத் தவறினால் அது சமூகத்திலும் குடும்பங்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்!

நேர்காணல் – ஆன் (உளவியலாளர்) உளவளத்துறையில் கற்றுள்ள ஆன், அதன்மூலம் சேவைகளைச் செய்ய விரும்புகிறார்.  ஒரு பெண் உளவியலாளரான இவர் யுத்தத்தினால்  பாதிப்படைந்த மக்களுக்கும் அந்தப் பிரதேசங்களுக்கும் சேவையாற்றுவதே தன்னுடைய இன்றைய விருப்பம் என்கிறார் . உளவியலார் “ஆனு”டன்உளவளத்துணை, போரின் பின்னரான அதன் தேவைகள், இந்தச் சேவைகளைச் செய்வதில் உள்ள பிரச்சினைகள், உளவளத்தினால் கிடைக்கும் பெறுபேறுகள் போன்றவற்றைப் பற்றிப் பேசினேன்.  இந்த நேர்காணல் கடந்த ஓகஸ்ற் மாதம் கொழும்பு ஜானகி […]

 
தடைசெய்யப்பட்ட பகிரங்கம்-நேர்காணல்

தடைசெய்யப்பட்ட பகிரங்கம்-நேர்காணல்

-சந்திப்பும் தொகுப்பும்- கரன் வெளிப்படையாகச் செயற்படுவது, வெளிப்படையாக இருப்பது, பகிரங்கமாகப் பேசுவது, பகிரங்கமாகத் தொடர்பு கொள்வது போன்ற எல்லாமே இலங்கைச் சூழலுக்கு, தமிழ்ச் சூழலுக்கு ஒவ்வாமையாகி விட்டன. கடந்த முப்பதுக்கும் அதிகமான ஆண்டுகால இனவாத அரசியல் எல்லாவற்றையும் தலைகீழாக்கி விட்டது. வாழ்க்கையின் அடிப்படைகள் தகர்க்கப்பட்டு விட்டன. பாராட்டுகள், புகழாரங்கள் என்பவற்றுக்கு அப்பால் இழிவு கூறல், குற்றம் சாட்டுதல், வசை பாடுதல், அவமதித்தல், குறிசுடுதல், புறக்கணித்தல் போன்ற எதிர்மறை அம்சங்களே வளர்த்தெடுக்கப்பட்டுள்ளன. […]

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டு தமிழ்ப்பகுதிகளுக்கு வந்த மக்களை அன்றைய தமிழ்ப்பகுதிச் சமூகங்கள் கரிசனையோடு ஆதரித்திருக்கின்றன. அந்த மக்களுக்கு பலரும் உதவியிருக்கிறார்கள். இளைஞர்களும் பொது அமைப்புகளாக அடையாளங்காணப்பட்ட சனசமூக நிலையங்களும் இந்தப் பணியில் முக்கிய பங்காற்றியிருக்கின்றன. அப்போது பொருளாதார நிலையிலோ தொண்டுப்பணிகளுக்கான அமைப்பு நிலையிலோ தமிழ்பேசும் சமூகங்கள் இன்றிருப்பதைப் போல வளரச்சியடைந்த நிலையில் இருக்கவும் இல்லை. குறிப்பாக தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள், அவை பற்றிய […]