Home » ஆசிரியர் குறிப்பு

 
 

ஆசிரியர் குறிப்பு

 
 
ஆசிரியர் குறிப்பு!

ஆசிரியர் குறிப்பு!

        மிகக் குறிப்பிட்ட சிறிது கால எல்லைக்குள் “எதுவரை” இணையத்தளம் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் வாசிப்பாளர்களின் அதிக கவனத்தை பெற்றுள்ளமை குறித்த வெளிப்பாடுகள் எமக்கு மகிழ்ச்சியையும்,  தடைகளை எதிர்கொண்டு தொடர்ந்தும்  இந்த தளத்தில் இயங்குவதற்கான நம்பிக்கையையும் தந்துள்ளன. சார்பு நிலை எடுக்காத, பல்வேறு கருத்துக்கள், போக்குகளுக்கு தளம் அமைத்து திறந்த உரையாடலுக்கும் மீள்மதிப்பீடுகளுக்குமான ஒரு சிறு வாசலைத் திறப்பதுதான் எமது நோக்கமாகும். அதன் அடிப்படையில் […]

 
கொலைகளின் அரசியல்! -ஆசிரியர் குறிப்பு-

கொலைகளின் அரசியல்! -ஆசிரியர் குறிப்பு-

  இலங்கை மண்ணில் யுத்தத்தின் வரமாக விளைந்த கொலைகள்    கொஞ்ச நஞ்சமன்று,     அது பல்கிப்பெருகிறது.அண்மையில் நடந்த “நிமலரூபன், டெல்ருக்ஷன் “ஆகியோரின் சிறைச்சாலைக் கொலைகள் இன்னும் நாடு முன்னோக்கிப் பயணிக்கவில்லை என்பதை நன்றாகவே நிரூபிக்கின்றன. அரசியல் எதிர்ப்புணர்வை எதிர்கொள்வதற்கு கொலைகளைத் தவிர்த்து வேறு மார்க்கமொன்றை  இலங்கை அரசு அறியவேவில்லை. அரச இயந்திரம் பழகிய வழிகளிலேயே தொடர்ந்தும் பயணிக்கிறது. வரலாற்றிற்கு எதிர்நிலைப் பயணம் இது. அனைத்து மக்களுக்கும் பொறுப்பாக இருக்கின்ற, ஜனநாயக விழுமியங்களை […]

 
ஆசிரியர் குறிப்பு!

ஆசிரியர் குறிப்பு!

ஜனநாயக அடிப்படைகளை துஸ்பிரயோகம் செய்வதற்குப் பதில் பேணுவது முக்கியமானது ! ——————————————————————————————————— அன்புள்ள நண்பர்களே, அதிகமதிக அரசியல்,சமூக முரண்பாடுகளும், குழுவாதமும்,விடாப்பிடியான இறுக்கமும் ஒதுக்கமும் நிறைந்த அரசியல் சமூக பண்பாட்டு வெளி நம்மது .இங்கு பொதுத்தளத்திலான உரையாடல் என்பது “கல்லில் நார் உரிப்பதற்கு” சமமானதாக இறுகிக் கிடக்கிறது. இத்தகைய தளத்தில் நடைபெறுகின்ற விவாதங்களும் விமர்சனங்களும் நிதானமானவையாக இருப்பது மிகமிக அவசியம் என நாங்கள் கருதுகிறோம். அதையே நாம் பின்பற்றவும் வலியுறுத்தவும் விரும்புகிறோம். […]

 

தேசிய கீதம்-தமிழ் மொழிக்கான உரிமை!

இலங்கையின் தேசியகீதம் சிங்கள மொழியில் மாத்திரம்தான் பாடப்பட வேண்டுமென கடந்த 2011 டிசம்பர் மாதம் இலங்கை அமைச்சரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டபின்,இலங்கையில் அரச நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் பாடப்படும் நடைமுறை கடுமையான தடைக்குள்ளாகி விட்டுள்ளது. தமிழில் தேசியகீதம் பாடுவது தேசியவிரோதத்துடன் செய்யப்படுகின்ற ஒருவகை ராஜதுரோகம் என்கிற அளவில் நிலைமை மாற்றப்பட்டுள்ளது. இத்தடைவிவகாரம் அமுலுக்கு வந்த காலத்தில் எழுந்த கண்டனக்குரல்களும் அதிர்ச்சியும் காலக்கிரமத்தில் குரல் மங்கியும், இது தொடர்பான பிரக்ஞையை […]

 
அனைத்து சமூக சக்திகளையும் எழுதுமாறும் கருத்துக்களை பதிவிடுமாறும் அழைக்கிறோம்!

அனைத்து சமூக சக்திகளையும் எழுதுமாறும் கருத்துக்களை பதிவிடுமாறும் அழைக்கிறோம்!

தோழமைமிகு நண்பர் நண்பிகளே! எமது இந்த இணைய சஞ்சிகை முயற்சி தொடர்பான நோக்கினை  முதலாவது Editorialஇல் சுருக்கமாக சொல்வது பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறோம். நமது சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்களில் அதிகமதிகம் எழுதப்படும், வாசிக்கப்படும் வெளியாக இணையவெளி  இன்றுள்ளது.தமிழில் ஆயிரக்கணக்கான இணையங்களும் தனிப்பட்டவர்களின் வலைப்பதிவுகளும் உள்ளன, சமூக விளைவுகளின் அடிப்படையில் இணையத்தின் பயன்பெறுமதி சாதக பாதக தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.  சமூக முன்னேற்றத்திற்கு  சாதகமான வளமாக இணையவெளியினை பயன்படுத்தி […]