Home » இதழ் 01

 
 

இதழ் 01

 
 
பூர்வோத்திரம்

பூர்வோத்திரம்

  – சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி குரலோடஅவள் பின்னால் சேட்டையும் சிங்காரமாயும் இந்த கோயில் வெளி முழுவதும் ஓடித்திரிந்த காலமெல்லாம் ஓடிப்போயித்து. இப்போ கோயில் வெளி மணலின் காலடிப் பாதையின் ரவுண் ஸ்கூலுக்கு  அவன் விசை விசையாய் போவதையும் போய் வருவதையும் கிடுகு இல்லாத கோயில் வீட்டு வேலியில் சார்த்திய அடிமட்டை இடுவல்களுக்கிடையில்அவள் பார்த்தித்து நிற்பதோடு சரி. வேறென்ன வேலை. மிச்சமான நேரமெல்லாம் மூத்தப்பாவோடதான், […]

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில் கற்றறிந்து சொந்த முகத்தின் விம்பம் இழந்தவளின் இசையிது அநேகம் பேரின் கைகளில் நாணயமாய் புழங்கிப் புகழடைந்தவள் அவள் இரகசியக் குகைகளின் திறவுகோலாயும் மந்திரச் சாவியாயும் தன்னை உருமாற்றிக் கொண்டவள் இனிமை முலாம் பூசிய நிலாக்கிண்ணங்களில் அமாவாசைகளை நிரப்பி பருகுபவள் முலைப்பால் போல வெளுத்ததும் தீர்த்தம்போல குளிர்ந்ததுமான மனதையுடையாள் துளசி இலைகளுக்குள் பத்திரப்படுத்தியுள்ள தன் காதலை கிண்ணங்களில் வார்த்து மிகக் […]

 
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம் கடத்தப் போகின்றன நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள் இவற்றின் வருகைக்காகக் காத்திருக்கும் குஞ்சுகளுக்கு என்னவொரு மனமிருக்கப்போகிறது பசுங்குளத்தின் தண்ணீர் காய்ந்த கதை வந்து சொல்லும் கொக்குகளை மீண்டும் மீண்டும் நம்புகின்றன குஞ்சுகள் செத்த மீன்கள் பற்றிய கனவுகளோடு முன்பொரு நாள் குளத்தோடு முரண்பட்டு வெளியேறிய கொக்குகள் மீண்டும் குளத்திடமே வந்தன தம்மை உரு மாற்றிக் கறுப்பு நிறச் சொற்களோடு […]

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள் காரணமாகப் பாதிக்கப்பட்டு தமிழ்ப்பகுதிகளுக்கு வந்த மக்களை அன்றைய தமிழ்ப்பகுதிச் சமூகங்கள் கரிசனையோடு ஆதரித்திருக்கின்றன. அந்த மக்களுக்கு பலரும் உதவியிருக்கிறார்கள். இளைஞர்களும் பொது அமைப்புகளாக அடையாளங்காணப்பட்ட சனசமூக நிலையங்களும் இந்தப் பணியில் முக்கிய பங்காற்றியிருக்கின்றன. அப்போது பொருளாதார நிலையிலோ தொண்டுப்பணிகளுக்கான அமைப்பு நிலையிலோ தமிழ்பேசும் சமூகங்கள் இன்றிருப்பதைப் போல வளரச்சியடைந்த நிலையில் இருக்கவும் இல்லை. குறிப்பாக தொண்டு நிறுவனங்களின் செயற்பாடுகள், அவை பற்றிய […]

 
– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

பாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே நினைந்து உருகிக் கிடந்தேன். அன்பே மஞ்சத்தில் தனித்த என்மீதுன் பஞ்சு விரல்களாய் சன்னல் வேம்பின் பொற் சருகுகள் புரள்கிறது. இனி வசந்தம் உன்போல பூவும் மகரந்தப் பொட்டுமாய் வரும். கண்னே நீ பறை ஒலித்து ஆட்டம் பயிலும் முன்றிலிலும் வேம்பு உதிருதா? உன் மனசிலும் நானா? இதோ காகம் விழிக்க முழங்குமுன் கைப்பறை இனி இளவேனில் முதற் […]

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத் தூண்கள் குகை வடிவில் இருந்த நீள் அறைக்குள் குறைந்த ஒளியில் அமர்ந்திருக்குறோம் ஆழ்ந்த நோவில் சிவக்கும் திராட்சை உன்குரல் மழையில் நடுங்குகின்ற தனிச்சிவப்பான மாதுளம் பூக்களின் துடிதுடிப்பு சிறிது தூரம் நீந்திச்சென்று பின் அமைதியாய் உடைகின்ற நீர்க்குமிழிகள் நீ பாடிக்கொண்டிருந்தாய் காதலின் ரகசியத்தை ஆடை பறந்து குடை விரிய…… வெள்ளைக்காளான்கள் காற்றில் வளையமிட “சூஃபிகள்“ நடனத்தில் சுற்றுகின்றனர் “கஃவ்வா“ கிண்ணங்களில் […]

 
பெருநிலன் கவிதை

பெருநிலன் கவிதை

காலம் கரைத்த சாபமா? சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து கரைந்து ஓழுகிப்போவதை சுயமற்றுப் பார்த்திருந்தோம் பச்சைநிறச் சமிஞ்ஞைகள் அண்மையிலும் சிவப்புநிறச் சமிஞ்ஞைகள் தூரத்திலும்….. மின்னின சாபங்களை வலிமையாக்கத் துணையென அந்தப் பெரிய கவிஞனும் பாடினான் புகழ்பாடினான் சிந்தைனைத் தெளிவின்றி சாபம் ஒவ்வொருவர் மீதும் முக்காடிட்டபடி விரைந்தது சிலர் கழித்தனர் யாதுமறியாது சிலர் முழித்தனர் சாபத்தின் திசைவழியே பயணித்தனர் உண்டவர்கள் அதனால் உறங்கியவர்கள் தாம் சாபங்களுக்கு வசப்பட மாட்டோமென்று… சாபங்களின் தீர்ப்பின் […]

 
சோ. பத்மநாதன் கவிதைகள்!

சோ. பத்மநாதன் கவிதைகள்!

பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி! இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது வருசமிருக்கும் ஆனால் இது அவர்காலத்துக்கும் ஒரு தலைமுறை முந்திய கதை யாழ்ப்பாணத்தை வெள்ளையரான ஏசண்டுத்துரை ஆண்டகாலம் ‘செம்மூக்கன்’ என்பது அவரது பட்டப்பேர் நீதிவான் (அவரும்வெள்ளையர்) தீர்க்கமுடியாத வழக்குகள் செம்மூக்கனெட்டைப் போகும் தையலம்மை கைம்பெண் தனியே வாழ்ந்து வந்தவள் சீவியத்துக்கு ஆடு, கோழி வளர்த்து வந்தாள் பக்கத்துக்காணி சொந்த மச்சானுடையது அவன் ஒரு மிண்டன் இவை இரண்டு பேருக்கையும் […]

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை ஒப்படைத்துக் கடந்து செல்கின்றன கால்கள் ஒவ்வொரு காலடிகளுக்குள்ளும் மரிக்கிறது நிகழ் காலத்தின் ஆயுள் நதியின் பாதையாகிப் பெருக்கெடுத்தோம் பின்னோக்கிப் பாய்கிறது ஒரு நதி அவரவர் பாதையில் அவரவர் பயணங்கள் வெற்றிடங்களின் தொடுகை எமது கரங்களறியும் வெற்றிடங்களின் தொடுகையை செவிமறுத்து நிகழுவன நீண்ட உரையாடல்கள் உள்ளே மெனங்களின் பேரோசை இப்போதெல்லாம் நாட்டப்பட்டுப்போனோம் நாம் உனக்குமெனக்கும் பதிலீடுகள் தரப்பார்க்கிறது காலம் […]

 
தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு ஊதியம் பெறுகின்ற உழைப்பாளிகள் வீதிக்கு வந்தனர் போராடும் பயங்கரவாதிகளாய் அல்ல பட்டினிச்சாவின் அவலத்தை அரசுக்கு உணர்த்திக்காட்ட முன்னிரவே தகவல் அறிந்த அமைச்சர்கள்; தனித்தனியாய் எச்சில் இலைகள் உண்ணும் தங்கள் தடியர்களுடன் மதுவோடும் விறலிக் கூத்தோடும் கூடிப்பேசினர் கொலை, கொள்ளை, ஏமாற்று,பச்சை பொய் என்று ஆயிரத்தியெட்டு பாதகங்களின் சொந்தக்காரர்களுக்கு தொழிலாளர்களின் போராட்டமென்பது வெறும் கால் தூசு ஆயினும் தங்கள் […]