Home » பௌசர்

 
 

பௌசர்

 
 
*ஆங்கிலக்  கவிதை உலகில் தடம் பதித்த  துரைராஜா தம்பிமுத்து – எம். பௌசர்

*ஆங்கிலக் கவிதை உலகில் தடம் பதித்த துரைராஜா தம்பிமுத்து – எம். பௌசர்

ஒரு நூற்றாண்டின் நினைவு 1915 – 2015       1938இல் இலங்கையிலிருந்து தனது இருபத்திமூன்றாவது வயதில் இங்கிலாந்துக்கு கப்பலில் வந்துசேர்ந்த ஒரு இளம் கவிஞன், ஒரு ஆண்டு காலத்திற்குள் ஆங்கிலக் கவிதை உலகினுள் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்தவல்ல கவிதை இதழொன்றின் ஆசிரியராக பரிணமித்து இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் அறியப்பட்டார் என்பது ஒரு சாதாரணமான நிகழ்வன்று.அதுவொரு வரலாறு, தேடி கண்டடையப்பட்டு துலங்க வைக்கப்பட வேண்டிய பணி […]

 
* தமிழ் முஸ்லிம் மக்களை இனவிரோத அரசியலிலிருந்து வெளியே எடுக்க வேண்டியுள்ளது-எம்.பௌசர்

* தமிழ் முஸ்லிம் மக்களை இனவிரோத அரசியலிலிருந்து வெளியே எடுக்க வேண்டியுள்ளது-எம்.பௌசர்

நூலுக்கான முன் குறிப்பு ——————————————–   ஈழத்து நவீன தமிழ் கவிதையில், வ.ஐ.ச. ஜெயபாலன் முக்கியத்துவம் பெறும் அம்சங்கள் பல வகைகளில் தனித்துவமானது. கவிஞர் என்கிற அடையாளம் அறியப்பட்ட அளவு, அவர் ஒரு சமூக ஆய்வாளரும் என்கிற அறிதல் நமது சூழலில் மிகக் குறைவாகவே உணரப்பட்டுள்ளது. சமூக ஆய்வுத்துறையில் அவர் தொடர்ச்சியாக தேடல்களை மேற்கொண்டு வந்தாலும் அத்துறை சார்ந்து முழுநேரப்பணியாளராக அவர் இல்லாததும், அவரது ஆய்வுகள் தொகுக்கப்பட்டு நூலாக்கம் பெறாததும் […]

 
* ரிஷானா,சஊதி மன்னராட்சி,அமெரிக்கா !எம்-பௌசர்

* ரிஷானா,சஊதி மன்னராட்சி,அமெரிக்கா !எம்-பௌசர்

ரிஷானா, எமது அன்புச் சகோதரியே! உனது சிரசை குருட்டு சஊதி அரசு கொய்த போது உலகின் நாலா திசைகளிலிருந்தும் மனித உயிரை நேசித்து மதிக்கும், அராஜகத்திற்கு எதிரான நெஞ்சங்கள் உனது முடிவையிட்டு கண்ணீர் சிந்தின, கடுங்கோபங்கொண்டன. இனம், மதம், தேசம், மொழி, இன்னொரன்ன வேறுபாடுகளைக் கடந்து உனக்கு விதிக்கப்பட்ட அந்த கொடூரமிகு மகாபாதகத்தினை நினைத்து வருந்தின. ஒருசிலர், ஒரு சில அமைப்புகள் தமது நலன்களுக்காகவும் தாம் புரிந்து வைத்துள்ள தவறான […]

 
ஆசிரியர் குறிப்பு!

ஆசிரியர் குறிப்பு!

ஜனநாயக அடிப்படைகளை துஸ்பிரயோகம் செய்வதற்குப் பதில் பேணுவது முக்கியமானது ! ——————————————————————————————————— அன்புள்ள நண்பர்களே, அதிகமதிக அரசியல்,சமூக முரண்பாடுகளும், குழுவாதமும்,விடாப்பிடியான இறுக்கமும் ஒதுக்கமும் நிறைந்த அரசியல் சமூக பண்பாட்டு வெளி நம்மது .இங்கு பொதுத்தளத்திலான உரையாடல் என்பது “கல்லில் நார் உரிப்பதற்கு” சமமானதாக இறுகிக் கிடக்கிறது. இத்தகைய தளத்தில் நடைபெறுகின்ற விவாதங்களும் விமர்சனங்களும் நிதானமானவையாக இருப்பது மிகமிக அவசியம் என நாங்கள் கருதுகிறோம். அதையே நாம் பின்பற்றவும் வலியுறுத்தவும் விரும்புகிறோம். […]

 

தேசிய கீதம்-தமிழ் மொழிக்கான உரிமை!

இலங்கையின் தேசியகீதம் சிங்கள மொழியில் மாத்திரம்தான் பாடப்பட வேண்டுமென கடந்த 2011 டிசம்பர் மாதம் இலங்கை அமைச்சரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டபின்,இலங்கையில் அரச நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் பாடப்படும் நடைமுறை கடுமையான தடைக்குள்ளாகி விட்டுள்ளது. தமிழில் தேசியகீதம் பாடுவது தேசியவிரோதத்துடன் செய்யப்படுகின்ற ஒருவகை ராஜதுரோகம் என்கிற அளவில் நிலைமை மாற்றப்பட்டுள்ளது. இத்தடைவிவகாரம் அமுலுக்கு வந்த காலத்தில் எழுந்த கண்டனக்குரல்களும் அதிர்ச்சியும் காலக்கிரமத்தில் குரல் மங்கியும், இது தொடர்பான பிரக்ஞையை […]

 
துயரத்தின் கதைகளை, அங்கதத்தால் சொல்ல முடிந்த கதைஞன்!

துயரத்தின் கதைகளை, அங்கதத்தால் சொல்ல முடிந்த கதைஞன்!

சயந்தனின் ‘ஆறாவடு”                                                                                                                                                     – பௌசர்- —————————————————– போர் கொதித்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களின் ஆயிரமாயிரம் கதைகள் எழுதப்படவேண்டி நமக்குள் உள்ளன. அப்படியான எழுத்துக்கள் படிப்படியாக எழுதப்படத் தொடங்கி விட்டன என்பது எனது பார்வை. அத்தகைய எழுத்துப்பிரதிகள் சார்பு, எதிர்ப்பு என்கிற அடையாளப்படுத்தல் வகை மாதிரிக்குள்ளும் தொடக்குக்கும் தழுவலுக்குமான தேர்வுக்குள்ளும் நமது தமிழ் வாசக மனம் அடைந்து கிடப்பது சங்கடம் தருகிறது. என்ன செய்யலாம்? இந்த அரசியல் மனம் நம்மை விட்டு […]

 
அனைத்து சமூக சக்திகளையும் எழுதுமாறும் கருத்துக்களை பதிவிடுமாறும் அழைக்கிறோம்!

அனைத்து சமூக சக்திகளையும் எழுதுமாறும் கருத்துக்களை பதிவிடுமாறும் அழைக்கிறோம்!

தோழமைமிகு நண்பர் நண்பிகளே! எமது இந்த இணைய சஞ்சிகை முயற்சி தொடர்பான நோக்கினை  முதலாவது Editorialஇல் சுருக்கமாக சொல்வது பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறோம். நமது சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்களில் அதிகமதிகம் எழுதப்படும், வாசிக்கப்படும் வெளியாக இணையவெளி  இன்றுள்ளது.தமிழில் ஆயிரக்கணக்கான இணையங்களும் தனிப்பட்டவர்களின் வலைப்பதிவுகளும் உள்ளன, சமூக விளைவுகளின் அடிப்படையில் இணையத்தின் பயன்பெறுமதி சாதக பாதக தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.  சமூக முன்னேற்றத்திற்கு  சாதகமான வளமாக இணையவெளியினை பயன்படுத்தி […]