Home » இதழ் 02

 
 

இதழ் 02

 
 

தேசிய கீதம்-தமிழ் மொழிக்கான உரிமை!

இலங்கையின் தேசியகீதம் சிங்கள மொழியில் மாத்திரம்தான் பாடப்பட வேண்டுமென கடந்த 2011 டிசம்பர் மாதம் இலங்கை அமைச்சரவையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டபின்,இலங்கையில் அரச நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் பாடப்படும் நடைமுறை கடுமையான தடைக்குள்ளாகி விட்டுள்ளது. தமிழில் தேசியகீதம் பாடுவது தேசியவிரோதத்துடன் செய்யப்படுகின்ற ஒருவகை ராஜதுரோகம் என்கிற அளவில் நிலைமை மாற்றப்பட்டுள்ளது. இத்தடைவிவகாரம் அமுலுக்கு வந்த காலத்தில் எழுந்த கண்டனக்குரல்களும் அதிர்ச்சியும் காலக்கிரமத்தில் குரல் மங்கியும், இது தொடர்பான பிரக்ஞையை […]

 
மூன்று நூல்களின் வெளியீடும் குறிப்புகளும்…….

மூன்று நூல்களின் வெளியீடும் குறிப்புகளும்…….

சி.சிவசேகரத்தின் குழந்தையும் தேசமும் சிறுகதைகள் வெளியீட்டு நிகழ்வு ————————————————————————————————————–   சி.சிவசேகரத்தின் “குழந்தையும் தேசமும்”  சிறுகதை நூலின் அறிமுக நிகழ்வு 21.04.2012 மாலை நான்கு மணிக்கு யாழ்ப்பாணம் ஊடக வளங்கள் கற்கை நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு தாயகம் சஞ்சிகையின் ஆசிரியர் திரு. க.தணிகாசலம் தலைமை தாங்கினார். வெளியீட்டுரையை சோ. தேவராஜா நிகழ்த்தினார். விமர்சன உரைகளை கருணாகரன், ராஜேஸ்கண்ணா ஆகியோர் ஆற்றினர். இந்த நிகழ்வில் எதிர்பார்த்ததையும் விட ஏராளமானவர்கள் […]

 
சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா- விம்பம்,லண்டன்

சர்வதேச தமிழ் குறுந்திரைப்பட விழா- விம்பம்,லண்டன்

 
துருக்கிப் படை வீரர்களுக்கான மயானம்!

துருக்கிப் படை வீரர்களுக்கான மயானம்!

– ஒக்தே ரிஃபாத் (துருக்கிக் கவிதை) தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்   1. நானொரு கப்பற்படை மாலுமி எனது விழிகளைச் சாப்பிட்டன மீன்கள் பார்ப்பதும் அழுவதும் என்னைப் பற்றியதாகவே உள்ளன எனது வாழ்க்கையில் நான் உயர்ந்திருந்தேன் என்னை நீங்கள் நம்பாவிடில் எனது ஆடைகளைப் பாருங்கள்   உயிரற்ற ஏனையவர்களுக்கும் எனக்கும் எந்த வித்தியாசமுமில்லையென்பதால் நான் படைவீரனொருவனும் தானெனச் சிலர் கூறினர். முன்னொரு காலத்தில் நாம் வீடுகளில் வசித்தோம் தற்போது […]

 
ஈழத்துக் கவிஞைகளின் நவீன கவிதைகளில் போரும் போரியல்வாழ்வும்!

ஈழத்துக் கவிஞைகளின் நவீன கவிதைகளில் போரும் போரியல்வாழ்வும்!

    –அந்துவன் கீரன்-  இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீவிரமாகப் பெண்ணியச் சிந்தனை வலுப்பெற்ற நிலையில் பெண்கள் தங்கள் சுய இருப்பை ,உள்மனதை, பெண் நடத்தைவாத முறைகளை, நுண்மை, பருண்மைக் காட்சிகளைப், புற உலகத் தாக்குதல்களைத் தாங்களே விசாரணை  செய்யத்துணிந்தனர். இதனால் கவிதை அரசியல் புதிய பரிமாணத்தைப் பெற்றது. தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் பெண்ணடையாள மையம் சிதைக்கப்படும் போது அவள் எழுத்தை ஊடகமாக்கினாள். அங்கு பெண்ணின் வலியும், மன உளைச்சலும் […]

 
அமைதிக்குத் திரும்புதல் அல்லது அமைதியை உருவாக்குதல்

அமைதிக்குத் திரும்புதல் அல்லது அமைதியை உருவாக்குதல்

–    கருணாகரன்- இன்றைய உலகத்தின் பொது உரையாடல் அல்லது பொது உரையாடலுக்கான அழைப்பு அல்லது பொதுச் சிந்தனையைக் கோருதல் என்பதெல்லாம்  அமைதியைக் குறித்ததாகவே அமைகின்றன. அதாவது அமைதிக்குத் திரும்புதல் அல்லது அமைதியை உருவாக்குதல் என்பதை நோக்கியதே இது. எல்லா வழிகளும் எல்லா வழிமுறைகளும் இறுதி இலக்கில் அமைதிக்கானவையே என்பது இதன் அர்த்தம். அமைதியற்ற நிலையில் உருவாக்கப்படும் எத்தகைய முன்னேற்றங்களும் நிலையற்றவை, பாதுகாப்பற்றவை என தெளிவாக உணரப்பட்டுள்ளதன் விளைவே இதுவாகும். ஆகவே, […]

 
ஐயப்பன் மாதவன்  கவிதைகள்

ஐயப்பன் மாதவன் கவிதைகள்

புல்லாங்குழல் காலம் அவனின் 28வயதில் அவனிடம் ஒரு புல்லாங்குழல் இருந்தது அதை ஏன் அந்த வயதில் ஒரு முறை நகரத்திற்கு போயிருந்தபோது வாங்கினான் என்று இதுவரையிலும் அவனால் தெரிந்துகொள்ளமுடியவில்லை அதைவாங்கிய பின் அவன் ஒரு பெரிய வித்துவானாகவும் மாறவில்லை அதை வைத்துக்கொண்டு எப்போதும் ஸ்வரங்கள் ஒன்றும் தெரியாமல் இஷ்டத்திற்கு வாசித்தான் அந்த ஒழுங்கற்ற ஓசையில் அவன் ஒழுங்கின்மையின் ஓசைகளை உணர்ந்தான் அப்போதுதான் அவனுடைய பெரியவீடு கடன் தொல்லையால் விற்கப்பட்டுவிட்டது அதற்கு […]

 
பெண்ணியா  கவிதைகள்

பெண்ணியா கவிதைகள்

நான், எனது வீட்டு எண் 1 அழுக்கான வெள்ளை  plateகளை                                           ஒவ்வொன்றாய்க் கழுவி Trackகில் அடுக்கி முடித்து திரும்புகையில் ஜன்னல் கம்பிகளை உடைத்து பலமான காற்று முகத்தில் வழிகிறது. யாருமே உணவருந்தாத சாப்பாட்டு மேசை அல்லது நடமாட்டம் இல்லாத ஒரு Hall இதைப்போல மனதின் எல்லாப் பக்கமும் உறைந்து விட்டிருக்கிறது. காரணங்கள் இல்லாமல் எல்லாக் காட்சிகளுமே ஒரு காரணத்துக்கான காரணங்களாகி விடுகின்றன. வெறுமையின் அத்தனை வர்ணங்களும் வெவ்வேறு வடிவங்களில் பரிமாணப்பட்டு […]

 
போரும் பெண்களும் – அபாய சமிக்ஞை

போரும் பெண்களும் – அபாய சமிக்ஞை

——————————————————————————————————————– ஸர்மிளா ஸெய்யித் 10 வருடங்களுக்கும் மேலாக பத்திரிகையாளராக உள்ள இவர், தற்போது International Movement of Against all form of Discrimination and Racism (IMADR) மனித உரிமைகள் நிறுவனத்திலும், Women Political Academy – Intern ஆக பணிபுரிகிறார்.  சமூக அபிவிருத்தி, பெண் விழிப்புணர்வு போன்ற விடயங்களில் செயற்பாட்டாளராக இயங்குகிறார்.சமூக விஞ்ஞானம் மற்றும் ஆங்கில இலக்கியம் என்பவற்றை பிரதான பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பையும், சட்டமும் பயின்று […]

 
வலைஞர்மடம்-செபமாலை தேவாலயம். போரின் இறுதி நாட்களில்……..

வலைஞர்மடம்-செபமாலை தேவாலயம். போரின் இறுதி நாட்களில்……..

பதிவு- அகால மரணம் ———————                                                                                                                                                                                                           -ஆனந்தன்-   மார்ச் 2009. வலைஞர்மடத்தில் உள்ள செபமாலை மாதா தேவாலயத்தைச் சுற்றிவளைத்துத் தங்கள் பிள்ளைகளைப் பொத்திக் காப்பதற்காக ஆயிரத்துக்கும் அதிகமான தாய்மாரும் தகப்பன்மாரும் சூழ்ந்திருக்கிறார்கள். எண்ணூறுக்கும் கூடுதலாக இளைஞர்களும் இளம் பெண்களும் அங்கே, அந்தத் தேவாலயத்தில் அடைக்கலம் தேடிச் சரணடைந்திருந்தனர். குளிப்பு, சாப்பாடு, தூக்கம் என்ற எதுவும் ஒழுங்காக இல்லை. அநேகமாக 13 வயதிற்கும் 25 வயதிற்கும் இடைப்பட்டவர்களே அதிகம். எல்லோரும் […]