Home » பிரதியின் வாசிப்பு

 
 

பிரதியின் வாசிப்பு

 
 
*ஆதிரை – ஒரு பக்க பெண்களின் கண்ணீர்-அனோஜன் பாலகிருஷ்ணன்

*ஆதிரை – ஒரு பக்க பெண்களின் கண்ணீர்-அனோஜன் பாலகிருஷ்ணன்

  ஈழத்து நாவல்களில் என்ன விசேடமாக இருந்துவிடப்போகின்றது என்ற பிரஞ்சை பெரும்பாலானோர்க்கு இருப்பதுண்டு. ஓலம் ஒப்பாரி கண்ணீர் மீண்டும்மீண்டும் மரணம் என்றே பேசிக்கொண்டிருக்கும். ஈழம் வலிகளினாலும் ஓலத்தினாலும் நிரம்பியது. நாம் சந்தித்த கண்ணீர் முடிவற்றது. கொடுத்த தியாகங்கள் கற்பனைக்கு எட்டமுடியாத பிரமாண்டமானவை. இவற்றின் தரவுகளும் வலிகளும் எம்மிடம் ஏராளம் உண்டு. கடந்து வந்த வாழ்க்கையினை ஏதோவொரு விதத்தில் பதித்து வரலாற்றில் ஒப்பேற்றிவிட மனம் விரும்பிக்கொண்டிருக்கும். இவற்றைக் கட்டுரைகளாக எழுதுவதிலும் பார்க்க […]

 
*சாத்திரியின் ஆயுத எழுத்து / ஒரு பார்வை  – ராகவன்

*சாத்திரியின் ஆயுத எழுத்து / ஒரு பார்வை – ராகவன்

391 பக்கங்களை கொண்ட இந்த நாவல் சாதாரணமான மனிதர்கள் , அழிவையே தரும் ஒரு அமைப்பொன்றின் அதிகாரத்தினுள் வந்தபின் எவ்வாறு கொலைகள் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களில், இயல்பாக எவ்வித குற்ற உணர்வுமின்றி பங்கெடுக்கிறார்கள் என்பதை படம் பிடிக்கிறது. இந்த நாவலானது 83 கலவரத்தின் பின் விடுதலைப் புலிகளில் சேர்ந்த ஒரு இளைஞன் சந்தித்த அனுபவங்கள் மட்டுமல்லை, அவன் தன்னார்வத்துடன் புலிகளின் நடவடிக்கைகளில் பங்கு பற்றிய ஒரு பதிவு. விடுதலை […]

 
காலம்,பிரதிகள் மீதான வாசிப்பு – விமல்குழந்தைவேல்

காலம்,பிரதிகள் மீதான வாசிப்பு – விமல்குழந்தைவேல்

  இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இதுவரைகாலமும் வெளிவந்த சிறுகதைகள் நாவல்கள், வரலாற்றுப் பதிவுகளை முன்வைத்து…. வரலாற்றுப் பதிவுகள் என்ற சொல்லாடலில் சற்று உடன்பாடற்றவனாக நின்றே என் உரையைத்  தொடங்குகின்றேன். இங்கே நித்தியானந்தனோ, மற்றவர்களோ குறிப்பிட்ட பிரதிகளெல்லாம் ஏதோ ஒரு தேவை உள்ளடக்கியதான வரலாற்றுப் பதிவுகளாக இருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் என்னென்னவைகள் வரலாறாக பதியப்பட வேண்டுமோ அவைகள் பதிவில் வராததின் ஆதங்கமாகவே எனது கருத்தை முன்வைக்கின்றேன். இதற்கு நலிந்த மக்கள் […]

 
நூல் அறிமுகம்:     ‘தமிழ்ப் பெண்புலி’ ,Life of Pi- வ.ந.கிரிதரன் –

நூல் அறிமுகம்: ‘தமிழ்ப் பெண்புலி’ ,Life of Pi- வ.ந.கிரிதரன் –

நிரோமி டி சொய்சாவின் (Niromi De Soyza)  ‘தமிழ்ப் பெண்புலி’ (Tamil Tigress) என்னும் ஆங்கில நூலை அண்மையில்,டொராண்டோவிலுள்ள  ‘The World’s Biggest Book Store’ இல் வாங்கினேன்; அங்கிருந்த கடைசிப் பிரதிகளான இரண்டிலொன்று. இந்த நூலினை வாங்கும் எண்ணமோ அல்லது வாசிக்கும் எண்ணமோ ஆரம்பத்திலிருக்கவில்லை. இந்நூல் பற்றிய கருத்தினைக் கூறும்படி முகநூல் நண்பரொருவர் கேட்டுக்கொண்டதன் விளைவாக வாங்கும் எண்ணம் உண்டாயிற்று. ஒரு குழந்தைப் போராளியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் […]

 
சயந்தனின் படைப்பு நமது படைப்பூக்க வெளிக்கு பங்காற்றியுள்ளதுடன்,முன்மாதிரியாகவும் உள்ளது!

சயந்தனின் படைப்பு நமது படைப்பூக்க வெளிக்கு பங்காற்றியுள்ளதுடன்,முன்மாதிரியாகவும் உள்ளது!

– இரண்டாம் பகுதி- இந்த நாவல் தொடர்பாக நான் “எதுவரை” இரண்டாவது இதழில் எழுதிய முதலாவது பதிவு தொடர்பாக ஒரு நண்பர் என்னிடம் கருத்து சொன்ன போது, நாவலில் வருகின்ற பாத்திரங்களின் உரையாடல்களை மேற்கோள் காட்டியிருக்கத் தேவையில்லை என்றார். நான் இந்த நாவலில் வருகின்ற பாத்திரங்களின் சித்தரிப்பை குறித்துக்காட்ட வேண்டுமென எண்ணியது பாத்திரங்களின் பதிவின் ஊடே மேல்வருகின்ற அம்சங்களை, இந் நாவலை இது வரை வாசிக்காதவர்கள் இதன் பேசு பொருளை […]

 
துயரத்தின் கதைகளை, அங்கதத்தால் சொல்ல முடிந்த கதைஞன்!

துயரத்தின் கதைகளை, அங்கதத்தால் சொல்ல முடிந்த கதைஞன்!

சயந்தனின் ‘ஆறாவடு”                                                                                                                                                     – பௌசர்- —————————————————– போர் கொதித்த மண்ணில் வாழ்ந்த மனிதர்களின் ஆயிரமாயிரம் கதைகள் எழுதப்படவேண்டி நமக்குள் உள்ளன. அப்படியான எழுத்துக்கள் படிப்படியாக எழுதப்படத் தொடங்கி விட்டன என்பது எனது பார்வை. அத்தகைய எழுத்துப்பிரதிகள் சார்பு, எதிர்ப்பு என்கிற அடையாளப்படுத்தல் வகை மாதிரிக்குள்ளும் தொடக்குக்கும் தழுவலுக்குமான தேர்வுக்குள்ளும் நமது தமிழ் வாசக மனம் அடைந்து கிடப்பது சங்கடம் தருகிறது. என்ன செய்யலாம்? இந்த அரசியல் மனம் நம்மை விட்டு […]

 
பர்மிய பிக்கு சொன்ன கதைகள்-எம்.ஏ.நுஹ்மான்

பர்மிய பிக்கு சொன்ன கதைகள்-எம்.ஏ.நுஹ்மான்

    பர்மிய பிக்கு சொன்ன கதைகள் -மொழிபெயர்ப்பு சோ. பத்மநாதன் 58 கதைகள். 236 பக்கங்கள். குமரன் புத்தக இல்லம் அட்டைப்படமும் ஓவியர் ஆ.இராசையா அணிந்துரை பிரசாரகர்கள், ஞானிகள் மக்களுக்கு நல்லறிவு ஊட்டுவதற்காகக் கதைகளைப் பயன்படுத்துவது பண்டைக் காலத்திலிருந்து தொடர்ந்துவரும் மரபு. இந்திய, கிரேக்க, அராபிய மரபில் இதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. அறிவூட்டுவதை நோக்கமாகக் கொண்ட இத்தகைய குட்டிக்கதைகளை ஃபேபில் (Fable) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். பைபிள் […]