Home » சித்தாந்தன்

 
 

சித்தாந்தன்

 
 
*மாயத் திரைகளின் வரைபடம் -சித்தாந்தன்

*மாயத் திரைகளின் வரைபடம் -சித்தாந்தன்

இந்த சிதிலமான கனவை நான் மீட்டுக்கொண்டிருக்கும் இக்கணம். வெளியே நாய் குரைத்தபடியிருக்கின்றது. ஏதோவொரு பறவையின் சிறகுகளின் மெல்லசைவினால் காற்றில் சலனம் மீந்தபடியிருக்கின்றது. இரவின் புதிர்கள் நிறைந்த பாதையில் நிசப்தம் மட்டும் தன் விலக்கவியலா இருப்பைத் திரும்பத் திரும்ப உணா்த்தியபடியிருக்கின்றது. 00   காற்றின் திரையில் அசையும் நிழலுருக்கள் இரவு உறைந்து பூச்சியமாக காலடியில் கிடக்கின்றது. ஒரு முதியவன் பாதாளங்களைத் தாண்டும் தன் மந்திரக்கோலால் சாய்த்தபடியிருக்கிறான் நாட்சத்திரங்களை. ………………………………………………………………………………………………………………………………………………………… இது எத்தனையாவது […]

 
வேட்டையன்– சித்தாந்தன்,சிறுகதை

வேட்டையன்– சித்தாந்தன்,சிறுகதை

    ஆத்மார்த்தனுக்கு அன்றைய பொழுது எரிச்சலுடனேயே விடிந்தது. அறையின் மூலைக்குள் இருந்து தவளை ஒன்று கத்துவதைப்போல அவன் மனைவியின் குரல் ஒலித்தது. ‘எழும்புங்கோ உங்களை யாரோ தேடி வந்திருக்கிறார்’ இந்தக் காலை வேளையில் தன்னை யார் தேடி வந்திருப்பார்கள்? அதுவும் இன்று விடுமுறை நாள். மிக்க அலுப்பும் சோர்வும் படர கட்டிலிலிருந்து எழுந்து கொண்டான். நீண்டதோர் பெருமூச்சு. காலை எழுந்தவுடனேயே வாயலம்பாமல் தேநீர் பருகும் பழக்கத்தைக் கொண்டவன் ஆத்மார்த்தன். […]

 
எழிலரசன் என்கிற சகுனி (சிறுகதை)

எழிலரசன் என்கிற சகுனி (சிறுகதை)

  -சித்தாந்தன்-   அந்த நாட்களில் ‘சகுனி’ என்ற அவனின் பெயரே அவன் மீதான நட்புக்கு காரணமானது. அந்தப் பெயரின் இலகுத் தன்மையும் லாவண்யமும் எனக்குப் பிடித்துக் கொண்டதால் நான் அவனை நண்பனாகக் கொண்டேன். . மற்றப்படி அவனிடம் ஈர்ப்பு ஏற்பட எந்தக் காரணமும் இருக்கவில்லை. தினமும் வகுப்பாசிரியர் இடாப்புக் கூப்பிடும் போது சகுனியை அழைக்கும் விதம் எனக்கு வெகுவாகப் பிடித்திருந்தது. வகுப்பிலேயே நான்தான் மிகவும் உயரம் குறைந்தவனாக இருந்தேன். […]