Home » பதிவு

 
 

பதிவு

 
 
*தமிழக அகதி முகாம்களும் எமது துயரமும் , கேட்போர் யார் ?- பத்தினாதன்

*தமிழக அகதி முகாம்களும் எமது துயரமும் , கேட்போர் யார் ?- பத்தினாதன்

உங்ககிட்ட ரேசன் கார்டு இருக்கா? இல்லை. ஓட்டுநர் உரிமம் இருக்கா? இல்ல. வாக்காளர் அட்டை இல்ல. ஆதர் அட்டை இருக்கா இல்லை.   அப்ப உங்கள் கிட்ட என்னதான் சார் இருக்கு நீங்க கேட்ட எதுவுமில்லை.வேற்றுக்கிரக வாசிபோல் அந்த பெண் என்னைப் பார்த்தாள்.என்னிடமிருந்த எனது பதிவுப் பேப்பரை காண்பித்தேன். அதைப்பார்த்த அந்தப் பெண் ,  உங்க அக்காள் தான் ரேசன் கார்டு, வாக்காளர் அட்டை எல்லாம் வச்சிருக்கிறாங்க. நீங்களும் எடுக்க […]

 
* இப்படிக்கு ஏவாள் , சுகிர்தராணியின் கவித் தொகுதி    -நவஜோதி ஜோதகரட்னம்

* இப்படிக்கு ஏவாள் , சுகிர்தராணியின் கவித் தொகுதி -நவஜோதி ஜோதகரட்னம்

    பெண்களுக்கான பிரத்யேகமான பிரச்சனைகளே இன்றைய பெண் கவிஞர்களின் முக்கிய பாடுபொருட்களாக உள்ளன. நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக்கிடந்த பெண்கள்  விழிப்புணர்வு பெற்றுத் தங்களுக்கான மொழியைக் கட்டமைத்து வருகின்றனர். மொழி வழியே கவிதையினுள் செயல்படுகையில் தங்களின் எல்லை விரிவடைவதாக உணர்கிறார்கள். தங்கள் வலிகளை, வேதனைகளை, அறைகூவல்களை, ஏக்கங்களை பதிவு செய்யும் ஊடகமாகக் கவிதையைக் கையாள்கின்றனர். நவீன தமிழ்க் கவிதை வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு பதிவாகியிருப்பது 60 களுக்குப் பின்னர்தான் என்றாலும் , […]

 
*ஈராக் ஆக்கிரமிப்பும், சில்கொட் அறிக்கையும்- வி.சிவலிங்கம்

*ஈராக் ஆக்கிரமிப்பும், சில்கொட் அறிக்கையும்- வி.சிவலிங்கம்

அமெரிக்கா தலைமையிலான ஈராக் ஆக்கிரமிப்பு 2003ம் ஆண்டு பிரித்தானிய அரசின் ஆதரவுடன் ஆரம்பித்தது. இவ் ஆக்கிரமிப்பிற்கான காரணமாக அன்றைய ஈராக் ஆட்சித் தலைவர் சதாம் ஹுசைன் பல ஆயிரம் மக்களை ஒரே சமயத்தில் கொல்லும் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதன் உள் நோக்கம் காலப் போக்கில் அம்பலமானது. அதாவது இவ் யுத்தம் மத்திய கிழக்குப் பிரச்சனைகளில் ஈராக், ஈரான், இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்சனை என பலவற்றுடன் இணைந்த […]

 
*கமலாதாஸின் “என் கதை ” –  மீனாள்   நித்தியானந்தன்

*கமலாதாஸின் “என் கதை ” – மீனாள் நித்தியானந்தன்

  நான் இங்கு பேசுவதற்கு  எடுத்திருக்கும் நூல் கமலாதாஸ் எழுதியுள்ள அவரது சுயசரிதை நூலான ‘என் கதை’ என்ற நூலாகும்.இது கமலா தாஸ் அவரது தாய்மொழியான மலையாளத்தில் ‘என்டெ கதா ‘ என்ற தலைப்பில் எழுதியுள்ள நூலின் தமிழ் மொழி பெயர்ப்பாகும் . மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்ட நிர்மால்யாவின் தமிழ் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு வெளியீடாக இந்த நூல் இவ்வாண்டு வெளிவந்திருக்கிறது. மலையாளத்தில் 1973 ஆம் ஆண்டு வெளியான இந்நூலின் மொழி […]

 
* என் வாசிப்பும்  எழுத்தும் சார்ந்த அனுபவங்கள்  – சமீலா யூசுப் அலி

* என் வாசிப்பும் எழுத்தும் சார்ந்த அனுபவங்கள் – சமீலா யூசுப் அலி

    “Always remember that when a man goes out of the room, he leaves everything in it behind… When a woman goes out she carries everything that happened in the room along with her.” ― Alice Munro, Too Much Happiness பெண்களின் எழுத்து பற்றி பேசும் இந்த அரங்கில் பெண் என்ற ரீதியில் […]

 
*வளமான விவாகரத்துக்கள் -சஞ்சயன் செல்வமாணிக்கம்

*வளமான விவாகரத்துக்கள் -சஞ்சயன் செல்வமாணிக்கம்

மனிதர்களுக்கு இயங்குவதற்கு ஒரு உந்துசக்தி அவசியம். கேள்விகளும் பதில்களும் அப்படியானவை. கேள்விகள் எழுப்பப்படாவிட்டால் பதில்களும் இல்லை. அப்பதில்களுக்கான செயற்பாடுகளும் இல்லை. என் வாழ்க்கையை மாற்றியமைக்க இரண்டு கேள்விகள் முக்கியமானவையாக இருந்தன. திருமணம் என்னும் முறையினூடாக வாழ்வை உன்னுடன் பகிர முன்வந்த ஒருவருக்கு, உன் குழந்தைகளின் தாய்க்கு நீ பெரும் வலிகளை கொடுப்பது நியாயமா? இந்தக் கேள்வி என்னை சிந்திக்க வைத்தது, ஏறத்தாழ 8 வருடங்களுக்கு முன். அக்கேள்வியை என்னிடம் கேட்டவர் […]

 
*ஆங்கிலக்  கவிதை உலகில் தடம் பதித்த  துரைராஜா தம்பிமுத்து – எம். பௌசர்

*ஆங்கிலக் கவிதை உலகில் தடம் பதித்த துரைராஜா தம்பிமுத்து – எம். பௌசர்

ஒரு நூற்றாண்டின் நினைவு 1915 – 2015       1938இல் இலங்கையிலிருந்து தனது இருபத்திமூன்றாவது வயதில் இங்கிலாந்துக்கு கப்பலில் வந்துசேர்ந்த ஒரு இளம் கவிஞன், ஒரு ஆண்டு காலத்திற்குள் ஆங்கிலக் கவிதை உலகினுள் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்தவல்ல கவிதை இதழொன்றின் ஆசிரியராக பரிணமித்து இங்கிலாந்து, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் அறியப்பட்டார் என்பது ஒரு சாதாரணமான நிகழ்வன்று.அதுவொரு வரலாறு, தேடி கண்டடையப்பட்டு துலங்க வைக்கப்பட வேண்டிய பணி […]

 
*ஆதிரை:  மனிதர்கள் வரலாற்றில் நினைவு கொள்ளப்படுகின்றனர்…… – மீராபாரதி

*ஆதிரை: மனிதர்கள் வரலாற்றில் நினைவு கொள்ளப்படுகின்றனர்…… – மீராபாரதி

  ஈழவிடுதலைப் போராட்டத்தில் இறுதிவரை பெரும் பங்காற்றியவர்களும் அதிகமாக (கட்டாயமாகப்) பலியாக்கப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் வடக்கு கிழக்கில் சாதியாலும் வர்க்க நிலைகளாலும் ஒடுக்கப்பட்டு சுரண்டப்பட்ட மக்களே. இவர்களுடன் மலையகத்திலிருந்து இடம் பெயர்ந்து அகதிகளாக வன்னிப்பிரதேசங்களில் வாழ்ந்த மலையக மக்களும் பாதிப்புக்குள்ளானார்கள். ஒரு புறம் தமிழ் சமூகங்களுக்குள் இருக்கின்ற சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் வர்க்க சுரண்டல்கள். மறுபுறம் தமிழ் சமூகங்கள் மீதான சிறிலங்கா அரசின் இன ஒடுக்குமுறை. இவற்றுக்கெல்லாம் முகங்கொடுத்த இந்த மக்கள் […]

 
*மருதூர்க் கொத்தனின் படைப்பு, எழுத்து உலகம்  -ஏ.எச்.எம். நவாஷ்

*மருதூர்க் கொத்தனின் படைப்பு, எழுத்து உலகம் -ஏ.எச்.எம். நவாஷ்

‘தமிழ் பேசும் மக்கள்’ என்ற கருத்தாக்கத்தினுள் முஸ்லிம் மக்களும் உள்ளடங்கியுள்ளனர். மொழி இவர்களைத் தமிழ்மக்களுடன் பிணைக்கின்றது. அதிலும் வடக்குக், கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம்கள் வாழும் நிலத்தினாலும், பண்பாட்டம்சங்களாலும் மேலும் பிணைப்புற்றிருக்கின்றனர். இந்த அந்நியோன்யம் மிக நீண்ட காலமாகவே நிலவி வருகின்றது. கலை, இலக்கியங்கள் பரஸ்பர புரிந்துணர்வை வளர்க்கக் கூடிய சாதனங்களாகும். இலங்கை முஸ்லிம்கள் நீண்டகாலமாகவே தமிழ்க்கலை, இலக்கிய வளர்ச்சிக்குப் பெருந் தொண்டாற்றியிருக்கின்றனர். சம காலத்திற்கூட முக்கிய இலக்கியப் பங்களிப்பை ஆற்றும் […]

 
*மன, மண முறிவுகள் – சஞ்சயன் செல்வமாணிக்கம்

*மன, மண முறிவுகள் – சஞ்சயன் செல்வமாணிக்கம்

அது மிகவும் ஒரு வலிமிகுந்த காலம். நான் போலியாகவும் என்னை நானே ஏமாற்றிக்கொண்டும்,  வாழ்க்கையை ஏனோ தானோ என்று கடந்துகொண்டிருந்தேன். இற்றைக்கு 8 – 10 ஆண்டுகளுக்கு முன்னான காலவெளி அது.அந் நாட்களுக்கும் எனக்குமான இடைவெளி தினமும் அதிகரித்துப்போவதாலோ என்னவோ இப்போது அக்காலங்களை மெதுவாய் வெளியில் இருந்து உள்நோக்கிப் பார்க்க முடிகிறது அல்லது ஒரு பறவையைப்போல் மேலிருந்து கீழாக பார்க்க முடிகிறது.   எத்தனை போலியாய் வாழ்ந்து தொலைத்திருக்கிறேன், அருமையான […]