Home » கட்டுரை (Page 2)

 
 

கட்டுரை

 
 
*பலஸ்தீனியர்கள் அன்றுவிட்ட தவறை தமிழ் மக்கள் இன்று விடக்கூடாது.   –    பி. ஏ. காதர்

*பலஸ்தீனியர்கள் அன்றுவிட்ட தவறை தமிழ் மக்கள் இன்று விடக்கூடாது. – பி. ஏ. காதர்

பலஸ்தீனியர்கள் அன்று  1948 ல்- தாம் விட்ட தவறுக்காக – தமது மண்ணை விட்டு ஓடியதற்காக  65 வருடங்களாக இன்றுவரை போராடுகிறார்கள். இன்னும் அந்த மண்ணுக்கான போராட்டம் முடிவுக்கு வருவதற்கான அறிகுறி தென்படவில்லை. இன்று அவர்களது போராட்டம் சாராம்சத்தில் தாம் வாழ்ந்த 94 சதவீதமான பலஸ்தீன மண்ணை பறிகொடுத்து விட்டு அதில் 22 சத வீதத்தை மீளப் பெற்று நிம்மதியாக வாழ நினைப்பதற்கான போராட்டமாகவும் – அந்த 22 சத […]

 
*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…06

*(ஈழப்போரின் நான்காம் கட்டத்தில்) நடந்த நிகழ்ச்சிகள்-கருணாகரனின் தொடர்…06

 என்னுடைய கட்டுரைத் தொடரை இடையில் சில இதழ்களில் எழுத முடியவில்லை. இதற்காக வாசகர்களிடமும் எதுவரையின் ஆசிரியரிடமும் மன்னிப்பைக் கேட்கிறேன். உரிய முறையில் திட்டமிடப்பட்டிருந்தும் அந்தத் தொடரை எழுதுவதில் நெருக்கடிகள் ஏற்பட்டுவிட்டன. வரலாற்றை திரிவுபடுத்தி எழுதுவது அல்லது சரியான தகவல்கள் இல்லாமல் எழுதுவது போதிய ஆதாரங்கள் இல்லாமல் எழுதுவது போன்றன தவறு. வரலாற்றுச் சம்பவங்களாக நடந்த நிகழ்ச்சிகளை எழுதுவது ஒரு முக்கியமான கடப்பாடுடைய பணி என்பதால்- சரியாக அதை எழுதவேண்டும் என்ற […]

 
*விசாரணையில் தேசியம் : -யதீந்திரா

*விசாரணையில் தேசியம் : -யதீந்திரா

    தமிழ்த் தேசிய அரசியல் போக்கானது இன்று இந்தளவிற்கு வீரியம் கொள்வதற்கான பிரதான காரணம்,இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த வெற்றிகரமான அரசாங்கங்களின் எதேச்சாதிகார போக்குகளும்,அவற்றின் உதாசீனப்போக்குகளுமே ஆகும். இதில் என்னிடம் இரு வேறு கருத்துக்கள் கிடையாது. உதாரணமாக பண்டா-செல்வா ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமானால்,பின்னர் 83இன் துயர் நிகழ்ந்திருக்காது. அது 2009 வரை நீண்டிருக்காது. இத்தனை அழிவுகள் ஏற்பட்டிருக்காது. எனவே இன்றும்,தமிழ் தேசியம்,ஒரு விடயமாக விவாதிக்கப்படுவதற்கான பின்னனியாக,அரசாங்கத்தின் எதேச்சாதகாரப் போக்கே […]

 
*சாதிய சமத்துவம் – ஆதிக்க சாதிகளின் அறியாமையா? தந்திரமா?-மீராபாரதி

*சாதிய சமத்துவம் – ஆதிக்க சாதிகளின் அறியாமையா? தந்திரமா?-மீராபாரதி

சில கேள்விகளும் சந்தேகங்களும்…. எழுநா வெளியீட்டாளர்கள் புதிய பதிப்பக முயற்சி ஒன்றை மிகவும் திட்டமிட்ட முறையில் ஆரம்பித்திருக்கின்றார்கள். இதனுடாக குறிப்பாக இலங்கை தமிழ் பேசும் மனிதர்கள் எதிர்நோக்குகின்ற சமூகப் பிரச்சனைகளையும் அது தொடர்பாக அத் தேசத்தின் சிந்தனையாளர்களினதும் துறைசார் புலமைத்துவ எழுத்தாளர்களினதும் பன்முக சிந்தனைகளைத் தொகுத்து வெளியீடுகின்றார்கள். அந்தவகையில் சாதியம் தொடர்பாக பரம்சோதி தங்கவேல் எழுதிய “யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும் “ நூல் முக்கியமானது. இந்த நூல் […]

 
* கிரிக்கெட் போட்டிகளின் காரணமாக இரகசிய வாசல்களால் வீடுகளுக்குள் நுழையும் மக்கள்

* கிரிக்கெட் போட்டிகளின் காரணமாக இரகசிய வாசல்களால் வீடுகளுக்குள் நுழையும் மக்கள்

    இலங்கைக்கு எத்தகையதொரு சுதந்திரம் வந்துவிட்டதென இறுமாந்திருந்த போதிலும், உண்மையில் இவ்வாறாக சிறைப்பட்டு, பயத்தோடு வாழும் மக்கள் கூட்டமொன்று இப் பூமியின் மீதே வாழ்வதைப் பற்றி அறிந்திருப்பது, அதற்கு முகம் கொடுத்துள்ள மக்கள் மாத்திரமே. இது அவ்வாறாகத் துயருறும் ஒரு தொகுதி மக்களின் கதை. இவர்கள் இலங்கை, ஆர். பிரேமதாஸ விளையாட்டரங்கின் சுற்று வட்டாரத்தில் வசிப்பவர்கள். கிரிக்கெட்டில், உலகக் கிண்ணங்களை வென்றெடுப்பதற்கு இலங்கைக் குழு திட்டமிட்டுக் கொண்டிருக்கையில், அரசாங்கமானது […]

 
* இந்திய விஸ்தரிப்புவாதத்தின் இலங்கைப் பரிமாணம்  –  மன்சூர் ஏ. காதிர்

* இந்திய விஸ்தரிப்புவாதத்தின் இலங்கைப் பரிமாணம் – மன்சூர் ஏ. காதிர்

  கோட்பாட்டு அரசியலில் பரிச்சயம் உள்ளவர்களுக்கு புவிசார் அரசியல் (Geo Politics)என்ற பதப் பிரயோகம் அந்நியமான ஒன்றல்ல. அதிலும் தெற்காசிய விவகாரங்களிலும் இலங்கையில் கால் நூற்றாண்டுகளைக் கடந்துவிட்ட இன ஒடுக்குமுறை அரசியலிலும் அக்கறை உள்ளவர்களுக்கு புவிசார் அரசியலின் பக்க விளைவான இந்திய விஸ்தரிப்பு வாதம் (Indian Expanding Theory) என்ற பதப்பிரயோகமும் மிகவும் பரிச்சயமான ஒன்றேயாகும். காந்தியின் அஹிம்சைப் போராட்டங்களுக்கும் மற்றும் ஏனைய சில தீவிரவாதச் செயற்பாடுகளுக்கும் ஈடுகொடுக்க முடியாத […]

 
* தொ.மு.சி.ரகுநாதன்   சமரசங்களுக்குட்படாத படைப்பாளி – முருகபூபதி

* தொ.மு.சி.ரகுநாதன் சமரசங்களுக்குட்படாத படைப்பாளி – முருகபூபதி

“புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம், உயிருள்ள எழுத்தாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை” – என்று  எழுதிய  தொ.மு.சிதம்பரரகுநாதன்  தமது 79 ஆவது வயதில் திருநெல்வேலியில் மறைந்தார் என்ற அதிர்ச்சியும் துயரமும் கலந்த செய்தியை   தாங்கிய  கடிதம்    2001 ஆம்  ஆண்டு  இறுதியில் இலங்கையிலிருந்து நண்பர்   கே.கணேஷிடமிருந்து   எனக்கு   வந்தது. வாராந்தம்   கொழும்புப்   பத்திரிகைகள்  இங்கு திங்கள் அல்லது செவ்வாய் கிடைத்துவிடும். ஆனால் அவற்றில் இந்த மறைவுச் செய்தியை […]

 
* சீமானும் மாயமானும் -சாத்திரி

* சீமானும் மாயமானும் -சாத்திரி

அண்மைக்காலத்தில் சமூகவலைத்தளங்களிலும் இணையப்பக்கங்கள் என எங்கும் சர்ச்சைக்குரிய விவாதங்களிற்கு சொந்தக் காரராக இருப்பவர் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.இவர் சர்ச்சைக்குள்ளாவதற்கு அதிக காரணங்கள் இவர் கட்சி நடாத்துவதே ஈழத் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மையமாக வைத்து என்பதால்தான்.அதே நேரம் தமிழ்நாட்டு அரசியல் கட்சி ஒன்றிற்கு  புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களால் இணையக் கிளைகள் நடாத்தப் படுவதும் சீமானின் நாம் […]

 
* நெப்போலியன்   சொல்ல  மறைத்த  கதை- என் .நடேசன்

* நெப்போலியன் சொல்ல மறைத்த கதை- என் .நடேசன்

                                                                                                                                                                     -5 –   கெய்ரோவின் மத்திய பகுதியில் இருந்து கீசா (Giza) என்ற இடத்தில் இறங்கியபோது நடுப்பகல் தாண்டி விட்டது. பாலைவன வெய்யில் கண்ணாடித் துகள்களில் பட்டு சிதறுவதுபோல் நிலத்தில் பட்டுத் தெறித்து கண்களை கூசவைத்தது. இந்தக் கடும் வெய்யிலும் பாலைவனத்தின் கொதிப்பும்தான் 5000 வருடங்களாக எகிப்தின் புராதன சின்னங்களைப் பாதுகாத்திருக்கின்றன. மழையற்ற பாலைப் பிரதேசத்தின் ஈரலிப்பற்ற சீதோஷ்ணம் கட்டிடங்களில் விரிவும் சுருக்கமும் மாறி மாறி ஏற்படாது புராதன […]

 
* குரூர மனமுடையோர்- – எம்.ரிஷான் ஷெரீப்,

* குரூர மனமுடையோர்- – எம்.ரிஷான் ஷெரீப்,

                ஒரு மனிதனை எப்படியெல்லாம் நாம் துன்புறுத்தலாம்? சொற்களால், வார்த்தைகளால், செய்கைகளால், எமது நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் எல்லாவற்றாலும் ஒரு மனிதனை இலகுவாகத் துன்புறுத்தி விடலாம். ஆனால் அத் துன்புறுத்தல்களை எல்லோராலும் இலகுவில் தாங்கிக் கொள்ளமுடியாது. துன்புறுத்தலுக்குள்ளாகும் மனிதனின் உணர்வுகளும், உடலும் ஒரே நேரத்தில் சீண்டப்படுகின்றன. அவற்றின் விளைவுகள் பாரதூரமானவை. நீச்சலை அறியாதவன் ஒருவனை நடுக் கடலில் தள்ளிவிடுவதைப் போல குரூரமானவை அவை. ஆனால் அதைச் செய்பவனும் […]