Home » இதழ் 03

 
 

இதழ் 03

 
 
ஆசிரியர் குறிப்பு!

ஆசிரியர் குறிப்பு!

ஜனநாயக அடிப்படைகளை துஸ்பிரயோகம் செய்வதற்குப் பதில் பேணுவது முக்கியமானது ! ——————————————————————————————————— அன்புள்ள நண்பர்களே, அதிகமதிக அரசியல்,சமூக முரண்பாடுகளும், குழுவாதமும்,விடாப்பிடியான இறுக்கமும் ஒதுக்கமும் நிறைந்த அரசியல் சமூக பண்பாட்டு வெளி நம்மது .இங்கு பொதுத்தளத்திலான உரையாடல் என்பது “கல்லில் நார் உரிப்பதற்கு” சமமானதாக இறுகிக் கிடக்கிறது. இத்தகைய தளத்தில் நடைபெறுகின்ற விவாதங்களும் விமர்சனங்களும் நிதானமானவையாக இருப்பது மிகமிக அவசியம் என நாங்கள் கருதுகிறோம். அதையே நாம் பின்பற்றவும் வலியுறுத்தவும் விரும்புகிறோம். […]

 
அனர்த்தத்திற்கு பிற்பட்ட காலப்பகுதி….. நேர்காணல்

அனர்த்தத்திற்கு பிற்பட்ட காலப்பகுதி….. நேர்காணல்

எஸ்-சிவதாஸ்-உளநல மருத்துவ நிபுணராகக் கடந்த பத்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் . உளநல மருத்துவ நிபுணர் தயா சோமசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றி, அவரிடம் பயிற்சிகளை பெற்றவர். கடந்த மூன்று ஆண்டுகளாக வவுனியா மாவட்ட பொது மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார் . குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியற் பாதிப்புகளைப் போக்குவதற்கான பணியின் முக்கியத்துவம் கருதி, கொழும்பில் பணியாற்றிய இடத்திலிருந்து பணிமாற்றத்தினை எடுத்து வந்து ,அகதி முகாம்களில் உளவியற் சிகிச்சை […]

 
துப்பாக்கிகளும் றோஜாப் பூக்களும்  (guns  and roses)

துப்பாக்கிகளும் றோஜாப் பூக்களும் (guns and roses)

– ஈவ்லின் அசாத் (Evelyne Accad) தமிழில் – சோ.பத்மநாதன் இல்லினொய்ஸ் பல்கலைக் கழகத்தில் ஒப்பிலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றும் ஈவ்லின் அசாத் (Evelyne Accad) நாவலாசிரியரும் இசைப் புனைபவராகவும் விளங்குகிறார். ———————————– இந்நகரம்… இதை என்னவென்று சொல்வது? ஒரு வேசி! ஆயிரம் ஆண்களோடு படுத்த பின்பும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வேசியை யாரால் கற்பனை செய்யமுடியும்? இருந்தபோதும் ஆயிரம் குண்டுகளைப் பெற்றுக்கொண்டும் இந்நகரம் தன் இருப்பைத் தொடர்கிறது. இந் நகரத்தை இக் […]

 
எம்.ரிஷான் ஷெரீப் -கவிதைகள்

எம்.ரிஷான் ஷெரீப் -கவிதைகள்

காத்திருப்பு காற்றுக் குதிரைகள் கிளர்ந்து கிளப்பிய தூசுப் படலத்தினுள் சேர்த்து வைத்திருந்த இனிய பாடல்களும் அந்தி விசும்போடு சிதைந்தழிந்தன பகல் முழுதும் தீக் கண்களால் பார்த்திருந்த வெயில் மேகக் கூட்டத்துக்கு மேலும் நீர் கோர்த்தது கதவுகளைத் திறந்தேதான் வைத்திருக்கிறேன் எந்த ஓவியனாவது வந்து வெயிலைப்போல அல்லது சாரலைப்போல ஏதேனும் கிறுக்கிச் செல்லட்டும் ஒரு தபால்காரனாவது வந்து ஏதேனும் தந்துசெல்லட்டும் ஒரு வண்ணத்துப்பூச்சி பூக்களின் வாசனைகளோடு வந்துசெல்லட்டும் அன்றேல் மெதுநடைப் பூனையொன்றேனும் […]

 
கடலுக்கு அழைத்துச் செல்லும் கதைகள்….

கடலுக்கு அழைத்துச் செல்லும் கதைகள்….

”எப்போதும் எனது வார்த்தைகளுக்கான இன்னோர் அர்த்தம் எதிராளியின் மனதில் ஒளிந்திருக்கிறது”

 
பிரக்ஞை – பன்முகத்தளங்களில் மாற்றங்களைக் கோரி….

பிரக்ஞை – பன்முகத்தளங்களில் மாற்றங்களைக் கோரி….

-மீராபாரதி பிரக்ஞை – நூலில் முன்வைக்கபட்ட பல கருத்துக்கள் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கான சில பதில்களாகவே இப்பதிவில் முன்வைக்கும் கருத்துக்கள் இருக்கும். இப் பதில்கள் சரியானவை என நிறுவ முயற்சிக்கவில்லை. ஆனால் இவ்வாறுதான் எனது புரிதல்கள் இருக்கின்றன. தனிமனித மாற்றத்திலிருந்து சமூக மாற்றத்திற்கு என நூலின் முகப்பில் இருக்கின்ற வசனம் ஒரு ஆதிகால மத ரீதியான வசனமாக இருக்கலாம். ஆனால் இந்த நூலில் முன்வைக்கப்படுகின்ற விளக்கம் அதனடிப்படையிலானதல்ல. […]

 
இன்றைய இலங்கை!

இன்றைய இலங்கை!

இலங்கையில் அமைதியை அல்லது சமாதானத்தை எட்டுவதற்கான சாத்தியங்கள் தென்படுகின்றனவா? இன்றைய மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இதயத்தில் சாமாதானத்தைக்குறித்த எண்ணங்கள் உண்டா? தமிழ் அரசியற் தலைவர்களிடம் அரசியற் தீர்வு குறித்துள்ள எண்ணங்கள் என்ன? அரசாங்கம் சமாதானத்தைக் குறித்துச் சிந்திக்க மறுத்தால் அடுத்த கட்டமாக எத்தகைய அரசியற் செயற்பாடுகளை மேற்கொள்வது என்ற தீர்மானங்கள் யாரிடமாவது உள்ளதா? ஒரு நிலையான சமாதானத்துக்கு எத்தகைய வழிமுறை பொருத்தமானது என யாராவது முறையாக ஆராய்ந்துள்ளனரா? தமிழ் பேசும் […]

 
வார இறுதி- சிறுகதை

வார இறுதி- சிறுகதை

அலுப்பு தட்டியது. தலைவலி பாடாய்ப்படுத்தியது. தில்லி போய்ச் சேர நான்கு மணி நேரம் இருக்கிறது என்று நினைக்கும்போதே களைப்பு கூடிய மாதிரி தோன்றியது. உஸ்மான்புராவில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலை காலை ஐந்தரை மணிக்கு செக்-அவுட் செய்து, 150 கி மீ பயணம் செய்து, பாலன்பூர் அருகில் இருக்கும் ஒர் உருளைக்கிழங்கு சிப்ஸ் நிறுவனத்தில் ஒரு முக்கியமான (ஆனால் எதிர்பார்த்த விளைவைத் தராத) மீட்டிங்கை முடித்துவிட்டு ஏமாற்றத்துடன் அகமதாபாத் திரும்பிக்கொண்டிருந்த வேளையில், […]

 
இருப்புப் பற்றிய 2 கவிதைகள்

இருப்புப் பற்றிய 2 கவிதைகள்

-மாலினோஸ்க்னா பகை முடித்த பின்னரும் கையிலிருக்கிறது கத்தி வீசுவதா வெட்டுவதா இரண்டு கேள்விகளிற்குமிடையில் கழிகிறது வாழ்வு வெட்டுவோம் வெட்டுவோம் என அருகிருந்து ஒலிக்கிறதொருகுரல் வீசுவதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை இன்னும் காலத்திடம் மண்ணைப் புணர்ந்தவர்கள் கசிந்துருகிக் கடவுளர்களாயினர் எஞ்சியோர் சாத்தான்களாயினர் இன்னும் சிலர் பாக்கியவான்களாயினர் எனதருமை நிலமே சொல் ஏதிலிகளுக்கு இருப்பு அலைதலிலா முன்னொரு காலம் பாம்பாலும் மலையாலும் கடலைக் கடைந்ததாகச் சொன்னார்கள் நம்பினோம் இராமனும் இராவணனும் இலங்கை வந்து […]

 
விம்பம்- குறுந் திரைப்படங்களை ஊக்கப்படுத்தல் படைப்பாளிகளை கௌரவித்தல்!

விம்பம்- குறுந் திரைப்படங்களை ஊக்கப்படுத்தல் படைப்பாளிகளை கௌரவித்தல்!

ஓன்பது வருடங்களாகத் தொடரும் பணி! ————————————————————– நமது தமிழ்ச் சூழலில் குறுந்திரைப்படங்களில் உருவாக்கமும் அதன் தேடலும் பேசு பொருளும் நமக்கான காத்திரமான சினிமாவை நோக்கிய எதிர்பார்ப்பில் ஓரளவு நம்பிக்கையான மாற்றங்களை, வெளிச்சங்களை கோடிட்டு காட்டி வருகின்றது. ஆளுமைமிகு படைப்பாளிகளாக, சினிமா கலைஞர்களாக வளரவேண்டிய ஒரு புதிய தலைமுறை குறுந் திரைப்பட உருவாக்கத்தின் ஊடாக செழுமைப்படுத்தப்பட்டு, நல்ல சினிமாபற்றிய அறிவுடனும் புரிதலுடனும் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியக் கனவுடனும் களத்திற்கு வருகிறார்கள். […]