Home » இதழ் 03 (Page 2)

 
 

இதழ் 03

 
 
குர்து  தலைவர் அப்துல்லா ஒசலான் ஓர் அறிமுகம்-எச்.பீர்முஹம்மது

குர்து தலைவர் அப்துல்லா ஒசலான் ஓர் அறிமுகம்-எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது, தமிழ் சிந்தனை எழுத்து தளத்தில் நன்கு அறியப்பட்டவர், “கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்” நூலின் ஆசிரியர். ——————————————————————————————— இன்றைய குர்து தேசிய போராட்டத்தை இராணுவ ரீதியாக கொண்டு சென்று அதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தவர்களில் அப்துல்லா ஒசலான் முக்கியமானவர். குர்து தொழிலாளர் கட்சியை ஆரம்பித்து அதன் மூலம் துருக்கிய அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார். உலகின் வழக்கமான அரசியல் தலைவர் போல் அல்லாமல் வித்தியாசமான சிந்தனை, குறிப்பாக […]

 
யாரும் பாடலாம் என்னை…- கவிதை

யாரும் பாடலாம் என்னை…- கவிதை

– இயல்வாணன் பாடுங்கள்! உங்கள் நோக்கிலிருந்து உங்கள் உணர்வேற்றி உங்களுக்கான சொற்களுடன் பாடுங்கள் என்னை. மௌனத்தாலும் கண்ணீராலும் நிறைந்த பாத்திரத்தில் எனது உணர்வுகள் ஒடுங்கியுள்ளன. நம்பிக்கைகளும் கனவுகளும் புதைந்திருக்கும் கல்லறையில் எனது மகோன்னதங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன. முனைப்பின்றித் துயிலும் சிறுபுழு நான்! கனவுகளும் நம்பிக்கைகளும் கண்ணீரும் மௌனமும் கொண்ட எனதுலகம் இருக்கட்டும். நீங்கள் பாடுங்கள் எப்படியேனும் உங்கள் மொழிகளில் உங்கள் கருத்தேற்றி. ௦௦௦௦

 
கொலம்பஸின் வரைபடங்கள்-யோ.கர்ணன்

கொலம்பஸின் வரைபடங்கள்-யோ.கர்ணன்

என் சனங்கள் பாவம் முன்னொரு போது போரினின்று நான் வெளியேறுகையில் ஒன்பதாம் திசையில் வழிகாட்டி ஒளிர்ந்த நட்சத்திரத்தை அவர்களுடைய வானத்திலேயும் ஒளிரச்செய்யும் என் ஆண்டவரே.. – த.அகிலன்- – 01- அவுஸ்திரேலியா நோக்கி சென்ற அகதிகள் படகொன்று கடந்த மாதம் விபத்துக்குள்ளாகியிருந்தது. கிட்டத்தட்ட நூறு பேரளவில் அதில் மரணமாகியிருக்கக்கூடும். இது இந்தப்பகுதியில் நடந்த முதல் விபத்தல்ல. கடைசி விபத்துமல்ல -குறிப்பாக அகதிகளையேற்றிக் கொண்டு சென்ற கப்பல்களிற்கு. உண்மையில் அவற்றை கப்பல்கள் […]

 
கண்ணன் பதில்கள்- பகுதி -02

கண்ணன் பதில்கள்- பகுதி -02

முன் குறிப்பு ———————————————————————————————————– நண்பர் பௌசருடன் உரையாடி ‘எதுவரை’ இணையதளத்தில் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடிவானதும் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டேன். ஒன்று, எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க விரும்புகிறேன். இரண்டு, இப்பணிக்குக் குறிப்பிட்ட அளவு நேரத்தையே என்னால் ஒதுக்க முடியும். சில கேள்விகளுக்கு நினைவுகளிலிருந்து பதில் அளிக்க முடியும். சில நேரங்களில் கேள்விகளே குற்றப்பட்டியலாகவும் முடிந்துவிட்ட விசாரணையாகவும் தண்டனைக்கான பரிந்துரையாகவும் இருக்க முடியும். அப்போது முந்தையச் செயல்பாடுகளை நினைவுபடுத்திக்கொள்வது அதற்கான […]

 
மாயாவின் கேள்விகள்-கவிதை

மாயாவின் கேள்விகள்-கவிதை

-ம.நவீன் மாயா தொலைவில் உள்ள மரத்தைதான் முதலில் தன் இரு விரல்களால் பிடித்தாள்… பின்னர் கட்டடம்… ஓடும் நாய்… இடைவெளிகளை அதிகப்படுத்தி அவளால் அத்தனையையும் பிடித்துப்பார்க்க முடிந்தது நட்சத்திரங்களையும் பிடிக்கலாம் இரவாகட்டும் என்றேன் இரவானால் நட்சத்திரம் சிறிதாகிவிடுமா என்றாள்! 0 0 0 மேல் மாடியில் அமர்ந்தபடி மாயா நகரும் வாகனம் குறித்த ஆய்வில் இருந்தாள் ஒரு முறை வெள்ளை நிற பெட்டி வேன் ஒன்று வலது புறமாக கடந்தது […]

 
பேரினவாதக் காய்ச்சல்

பேரினவாதக் காய்ச்சல்

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரல் ஒரே குறிக்கோளுடன் முழு வீச்சுடன் முன்னகர்த்தப்படுகின்ற காலகட்டம் இது. 1956ஆம் ஆண்டு அடையாளங் காணப்பட்ட பௌத்த பேரினவாதக் காய்ச்சல் முள்ளிவாய்க்காலில் போர் முடிவுற்றதன் பின்னர் முற்றிய உயிர்கொல்லிக் காய்ச்சலாக வீரியத்துடன் மறுபிரவேசித்து நாடு முழுவதும் பரவிக்கொண்டிருக்கின்றது. தம்புள்ளை பள்ளிவாயல் தகர்ப்பு நடவடிக்கையின் பின் மூதூர் மூணாங்கட்டை மலையடிவாரத்தை நோக்கி பேரினவாதக் காய்ச்சல் படையெடுத்துள்ளது. 2012 ஜூன் 08 வெள்ளிக்கிழமையன்று சேருவிலை விகாராதிபதி ஒருவரின் […]

 
துப்பாக்கி விழுங்கிய நரிகள்-கவிதை

துப்பாக்கி விழுங்கிய நரிகள்-கவிதை

– ஈழக்கவி மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் உயிர்களையும் பாராளுமன்றத்தில் குழிதோண்டி புதைத்த பயத்தினால் பாராளுமன்ற உறுப்பினர் இம்முறை ஊருக்கு வரும்போது துப்பாக்கி விழுங்கிய நரிகளை கூட்டி வந்தார் அவரது நரிகள் அமெரிக்க இராணுவம் போல ஊரெல்லாம் ஓடின முதலில் ஒரு எருமைமாடு நரிகளுடன் ஸ்நேகம் கொண்டது நரிகள் தாமரை மலர்களால் தேய்த்து எருமை மாட்டை சேற்றிலே நீராட்டின வாய்பார்த்திருந்த கழுதையையும் நரிகள் வாசசவர்க்காரம் பூசி குளிப்பாட்டின ஊர்நாய்களுக்கு குறிஞ்சியின் உரியை […]

 
யுத்தத்திற்குப் பின்னரான யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சிகள்!

யுத்தத்திற்குப் பின்னரான யாழ்ப்பாணத்துக் கவிதை முயற்சிகள்!

(2009க்குப் பின் தளமாற்றமும் பொருள்புலப்பாட்டு நெறியும்) அறிமுகம் ————————– நவீன இலக்கிய உலகில் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள் கனதியானவை. தொண்ணூறுகளுக்குப் பின் ஈழத்தில் முனைப்புப் பெற்ற ஆயுதப்போராட்டத்தின் எழுச்சி, ஈழத்துக் கவிஞர்களைப் போர்க்கால வாழ்வியலை பிரதிபலிக்கும் வகையில் கவிதைகளை எழுதத் தூண்டின. தமிழ்த் தேசியம் சார்ந்த கருத்துநிலைகளால் ஈழத்துக் கவிதைப்புலம் பல்வேறு தளங்களில் இருந்து சார்ப்புநிலைக் கவிதைகளாகவும், எதிர்நிலைக்கவிதைகளாகவும் போரியல் கவிதைகளாகவும் என பல இயங்குதளங்களில் இயங்கிக் கொண்டன. இத்தளக் […]

 
காதர் பதில்கள்

காதர் பதில்கள்

சிறீஹரன்-பெர்லின் *தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படுவதற்கான வழிமுறை வர்க்க அடிப்படை தழுவியதா ,இன அடிப்படை சார்ந்ததா?நீங்களும் ஒரு சில இடங்களில் இரண்டினையும் சொல்லி வருகிறீர்கள்.இடது நிலைப்பாடு கொண்டவர்கள் வர்க்க அடிப்படையில் பார்க்கப்படல் வேண்டுமென சொல்ல தேசியவாதிகள் இன அடிப்படையிலேயே பிரச்சினை என்கின்றனர். இது பற்றி உங்கள் நிலைப்பாட்டினை சொல்ல முடியுமா? பதில்: தேசியவாதத்திற்கும் வர்க்கபோராட்டத்திற்கும் இடையிலான உறவுபற்றிய சர்ச்சையானது பாட்டாளிவர்க்கத்திற்கும் சிறுமுதலாளித்துவ – கடந்த காலத்திற்குரிய –விவசாயிகளுக்கும் தேசிய பூர்சுவா […]

 
மூன்றாம் காந்தி கலக்கிய நதி-சிபிச்செல்வன்

மூன்றாம் காந்தி கலக்கிய நதி-சிபிச்செல்வன்

சிபிச்செல்வன்- கவிஞர்,விமர்சகர்,இதழாசிரியர் ——————————————————————————————— பி.ஏ.கிருஷ்ணன் எழுதிய இரண்டாவது நாவல் கலங்கிய நதி. இதை எழுதிய நாவல் என்பதா அல்லது மொழிபெயர்த்த நாவல் என்பதா என்ற .குழப்பம் எப்போதும் நிலவுவதுதான் . காரணம் பி..ஏ.கிருஷ்ணன் முதலில் ஆங்கிலத்தில் எழுதி அந்த நாவல் பெங்குயின் போன்ற பதிப்பகங்களில் வெளிவந்த பிறகு அவர் நாவலை அவரே தமிழில் எழுதியதுதான் வெளி வருகிறது. இந்த நாவல் முன்னுரையில் கூட இந்த நாவலை முதலில் ஆங்கிலத்தில் எழுதி […]