Home » இதழ் 04

 
 

இதழ் 04

 
 
கொலைகளின் அரசியல்! -ஆசிரியர் குறிப்பு-

கொலைகளின் அரசியல்! -ஆசிரியர் குறிப்பு-

  இலங்கை மண்ணில் யுத்தத்தின் வரமாக விளைந்த கொலைகள்    கொஞ்ச நஞ்சமன்று,     அது பல்கிப்பெருகிறது.அண்மையில் நடந்த “நிமலரூபன், டெல்ருக்ஷன் “ஆகியோரின் சிறைச்சாலைக் கொலைகள் இன்னும் நாடு முன்னோக்கிப் பயணிக்கவில்லை என்பதை நன்றாகவே நிரூபிக்கின்றன. அரசியல் எதிர்ப்புணர்வை எதிர்கொள்வதற்கு கொலைகளைத் தவிர்த்து வேறு மார்க்கமொன்றை  இலங்கை அரசு அறியவேவில்லை. அரச இயந்திரம் பழகிய வழிகளிலேயே தொடர்ந்தும் பயணிக்கிறது. வரலாற்றிற்கு எதிர்நிலைப் பயணம் இது. அனைத்து மக்களுக்கும் பொறுப்பாக இருக்கின்ற, ஜனநாயக விழுமியங்களை […]

 
கதையல்லாத கதைகள்-01, யோ.கர்ணன்

கதையல்லாத கதைகள்-01, யோ.கர்ணன்

    தோழர் சான் சடாட்சரத்தை நான் முதன்முதலாக சந்தித்த பொழுது எனக்குச் சரியாக இருபது வயதும் நாற்பத்தியெட்டு நாட்களும் சில மணித்துளிகளும் ஆகியிருந்தன. அப்பொழுது நான் விடுமுறையில் வந்திருந்தேன். நான் இயக்கத்தில் இருந்த காலத்தில் கிடைத்த ஒரே ஒரு விடுமுறை அதுவாகத்தானிருந்தது. எனக்கு அப்பொழுது வன்னியில் போவதற்கு ஒரு வீடும் இல்லாதிருந்தது. கதிர் தனது வீட்டிற்கு வரச் சொன்னான். அவன் திருகோணமலைப் பொடியன். அவனது வீட்டுக்காரர்கள் கன வருசத்துக்கு […]

 
அன்னிய நிதியின் வேர்கள்! கௌதம சித்தார்த்தன்

அன்னிய நிதியின் வேர்கள்! கௌதம சித்தார்த்தன்

   தமிழ் மொழியின் இன்றைய தேவை அரசியல் மொழி என்று சொல்லும் கௌதம சித்தார்த்தன் கடந்த 20 வருடங்களாக நவீனத்தமிழ் இலக்கிய தளத்தில் கதை,கட்டுரை போன்ற தளங்களில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். 1990 களில் நவீனத்துவம் மறைந்து பின்நவீனத்துவப் படைப்புகள் உலகளவில் பரபரப்பாகச் செயல்பட்ட தருணத்தில்,  தமிழ் மொழியின் ஆன்மாவுக்கேற்ற விதமாக பின்நவீனத்துவ எழுத்தை தமிழின் வேர்களைத் தேடும் விதமாக மாற்றி, தமிழ்ச்சிறுகதை தளத்தில் புதுவகை எழுத்து என்னும் ஒருசிந்தனைப் போக்கை […]

 
பெயரில் என்ன இருக்கிறது?

பெயரில் என்ன இருக்கிறது?

யூன் மாதச் சூரியன் கடுக்கண்ட இளந்தாரி. அடிக்கடி வீறுகொண்டெழுவதும் பிறகு வடிந்து தனிவதுமாக இருந்தான்.  நான் கிழட்டு மரங்களின் கீழே நடந்தேன். கிளைகளினூடே தூறிக்கொண்டிருந்தது வெயில். மார்ச் ஏப்பிரல் மாசங்களில் ‘டுலிப்ஸ்’ செடிகள் முகிழ்த்த மொட்டுக்களினால் நிறைந்திருந்தது நிலம். காலையில்  சின்னக் குழந்தைகள் நினைவிலோடியது.  மே மாசம் முழுவதும் ‘லைலாக்’ பூக்களின் மெல்லிய சுகந்தமும் ஊதாநிறமும் மனதை மயக்கும்.  அவ்வேளை உலகமே ஒருவித காமக்கிறக்கத்தில் இருப்பதாகவே உணர்வு எழும். இப்போ […]

 
நேர்காணல்-உளநல மருத்துவர் எஸ்.சிவதாஸ் -பகுதி இரண்டு

நேர்காணல்-உளநல மருத்துவர் எஸ்.சிவதாஸ் -பகுதி இரண்டு

  எஸ்-சிவதாஸ்-உளநல மருத்துவ நிபுணராகக் கடந்த பத்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் . உளநல மருத்துவ நிபுணர் தயா சோமசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றி, அவரிடம் பயிற்சிகளை பெற்றவர். கடந்த மூன்று ஆண்டுகளாக வவுனியா மாவட்ட பொது மருத்துவ மனையில் பணியாற்றி வருகிறார் . குறிப்பாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியற் பாதிப்புகளைப் போக்குவதற்கான பணியின் முக்கியத்துவம் கருதி, கொழும்பில் பணியாற்றிய இடத்திலிருந்து பணிமாற்றத்தினை எடுத்து வந்து ,அகதி முகாம்களில் உளவியற் […]

 
காலனித்துவத்தின் தொடர்ச்சியும் தேசியவாதத்தின் இன்றைய பாத்திரமும்

காலனித்துவத்தின் தொடர்ச்சியும் தேசியவாதத்தின் இன்றைய பாத்திரமும்

  பகுதி -2 முதலாளித்துவம் பல்வேறு கட்டங்களை கடந்துவந்திருக்கிறது. அதற்கேற்ப பிறநாடுகளை ஆக்கிரமிக்கும் அதன் தன்மையும் தோற்றத்தில் மாற்றமடைந்திருக்கிறது. 16ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டுவரையிலான காலப்பகுதியில்; முதலாளித்துவமானது வர்த்தக முதலாளித்துவமாக இருந்தது அதன் பின்னர் இயந்திரகைத்தொழில் முதலாளித்துவமாக பரினமித்தது 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஏகாதிபத்தியமாக  மாற்றமடைந்தது. அதனையடுத்து இரண்டாம் உலகமாகயுத்தத்தின் பின்னர் அமெரிக்க அறிமுகம் செய்து வைத்த நவஏகாதிபத்தியமாக உருமாறியது. தற்போது ஏகாதிபத்தியம் உலகமயமாக்கல் என்ற பெயரில் புனர்ஜென்மம் […]

 
சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்ஸ் போதலயர்

சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்ஸ் போதலயர்

– க .வாசுதேவன்/ கவிஞர்,பாரிஸில் வாழ்ந்து வருகிறார்.நவீன பிரஞ்சு இலக்கியம் தொடர்பாக பிரான்ஸ் பல்கலைகழகங்களில் கற்றவர்,பிரஞ்சு மொழியில் , அவ்விலக்கியங்களில் ஈடுபாடுமிக்கவர். —————————————————————————————–     ‘புல்லின் இதழ்கள்’ (Leaves of grass) என்ற தலையங்கம் எவ்வாறு வோல்ட் விற்மனை உடனடியாக நினைவுக்குக் கொண்டுவருகிறதோ , அவ்வாறே ‘துன்பத்தின் பூக்கள்’ (Fleurs du mal) என்று கூறியவுடன் ஷார்ல் போதலயர் என்ற நாமம் ஞாபகத்தின் மேற்பரப்பில் மிதக்கவாரம்பிக்கிறது. ஏழு வயதில் […]

 
ஆங்கில மொழி நாவலாசிரியை- சுகி கணேசானந்தன்

ஆங்கில மொழி நாவலாசிரியை- சுகி கணேசானந்தன்

                                                                                                                                                                  தமிழில்- நிர்மலா இராஜசிங்கம் “லவ் மேரேஜ் “என்ற தனது முதலாவது நாவலோடு பிரபலமடைந்த சுகி கணேசானந்தன் அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத்தமிழ் சமூகத்தின் இரண்டாவது தலைமுறையிலிருந்து வந்த அமெரிக்க எழுத்தாளர். ஹாவர்ட், கொலம்பியா ஆகிய முன்னணி பல்கலைக்கழகங்களில் தன் பட்டமேற்படிப்பை முடித்து  தற்பொழுது மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் புனைவிலக்கிய பேராசிரியராக பணியாற்றுகிறார். 2008 ம் ஆண்டு வெளிவந்த இவரது நாவலைப்பற்றி “பொஸ்டன் குளோப்”, “வாசிங்டன் போஸ்ட்”, “சான் பிரான்சிஸ்கோ […]

 
விடியல் சிவா சில குறிப்புகள்

விடியல் சிவா சில குறிப்புகள்

————————————————–சிபிச்செல்வன் —————————————————–                                                       விடியல் சிவா அவர்களோடு மிகநெருக்கமாக நான் பழகாததால் அவரது இழப்பின் முழுவலியையும் உணர்ந்து என்னால் எழுதமுடியவில்லை என்பதனை நான் இங்கு முதலில்  சொல்வது முக்கியமானது .  நண்பர் பௌசர் […]

 
யாரும் பாடலாம் என்னை-கவிதை

யாரும் பாடலாம் என்னை-கவிதை

-இயல்வாணன்     பாடுங்கள்! உங்கள் நோக்கிலிருந்து உங்கள் உணர்வேற்றி உங்களுக்கான சொற்களுடன் பாடுங்கள் என்னை. மௌனத்தாலும் கண்ணீராலும் நிறைந்திருக்கும் பாத்திரத்தில் எனது உணர்வுகள் ஒடுங்கியுள்ளன. நம்பிக்கைகளும் கனவுகளும் புதைந்திருக்கும் கல்லறையில் எனது மகோன்னதங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளன. முனைப்பின்றித் துயிலும் சிறுபுழு நான்! கனவுகளும் நம்பிக்கைகளும் கண்ணீரும் மௌனமும் கொண்ட எனதுலகம் இருக்கட்டும். நீங்கள் பாடுங்கள் எப்படியேனும்! உங்கள் மொழிகளில் உங்கள் கருத்தேற்றி. உங்களுக்கான சொற்களுடன் என்னை.