August 11, 2012 4:29 am / 92 comments
* தமிழ்நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டு அங்கு பேசுகின்ற அளவிற்கு அங்குள்ள அகதி முகாம்களில் அடைத்து, கொடுமையாக கைதிகளாக நடத்தப்படும் மக்கள் விசயத்தில் ஏன் அக்கறையுடன் நடந்துகொள்ள முடியாது இருக்கிறார்கள்? -ராஜன் – லண்டன் தமிழக அரசியல்வாதிகள்போல வெத்துவெட்டு வீராவேசப் போலிகளை பார்க்கக் கிடைப்பது அரிது. தனி ஈழத்தைப் பெற்றுத் தருவது இவர்கள் சாத்தியப்பாட்டிற்கு உட்பட்டது அல்ல. ஆனால் அகதி முகாம்களின் நிலைமையை மேம்படுத்துவது அம்மக்களின் கல்வி, […]
August 11, 2012 3:55 am / 3 comments
குவிந்த விரல்களுக்குள் படபடக்கும் சிறுவண்ணாத்தி குவிந்த விரல்களூடே குறுக்கும் நெடுக்குமாய் சிவந்த ரேகைகள் வழிகிற உள்ளங்கைச் சிறைக்குள் படபடக்குஞ் சிறுவண்ணாத்தி புலன்களுக்குள் குவியமிலா நெடுங்கனவுச் சிதறுகை கரைந்திடுங் கணங்களில் வர்ணங்களின் பிசுபிசுப்பும் படபடப்பின் அமர்முடுகலும் ஒருசேர உணர்த்திய விபரீதங்களின் நடுக்கங்களோடு சடாரென விரியும் பிஞ்சுவிரல்களே வரைந்திடுமோ விண்ணளவுக்குமான அதன் விடுதலையை. பிழைபிழையான இனங்காணல் பிழையான அவதானங்களும் பிழையான கருதுகோளுமாய் நிகழ்ந்தேறிய சோதனை முடிவது துர்மணமாய் […]
August 11, 2012 3:52 am / 3 comments
– இரண்டாம் பகுதி- இந்த நாவல் தொடர்பாக நான் “எதுவரை” இரண்டாவது இதழில் எழுதிய முதலாவது பதிவு தொடர்பாக ஒரு நண்பர் என்னிடம் கருத்து சொன்ன போது, நாவலில் வருகின்ற பாத்திரங்களின் உரையாடல்களை மேற்கோள் காட்டியிருக்கத் தேவையில்லை என்றார். நான் இந்த நாவலில் வருகின்ற பாத்திரங்களின் சித்தரிப்பை குறித்துக்காட்ட வேண்டுமென எண்ணியது பாத்திரங்களின் பதிவின் ஊடே மேல்வருகின்ற அம்சங்களை, இந் நாவலை இது வரை வாசிக்காதவர்கள் இதன் பேசு பொருளை […]
August 11, 2012 3:18 am / 7 comments
-மீராபாரதி 22 வருடங்களுக்குப் பின் மீண்டும் யாழ் நோக்கி ஒரு பயணம்… வவுனியாவைத் கடந்து செல்கின்ற ஒரு பயணம் … இவ்வாறான ஒரு பயணத்தை மேற்கொள்வேன் என கனவு கண்டிருக்கின்றேன்… ஆனால் நடைமுறையில் இடம்பெறும் என்பதை ஒருபோதும் நம்பவில்லை… அந்த நம்பிக்கையீனம் இன்று பொய்த்துப் போனது….ஆனால் கனவு பலித்தது… அதுவும் பாதிக்கனவுதான்… ஆம் அந்தக் கனவில் இந்த நிலையில்லை… அது ஒரு வேரொரு உலகம்… சூழல்… […]
August 11, 2012 2:10 am / 33 comments
பாற்சிப்பிகள் சேகரிக்க வேண்டாம், கரையில் மின்னும் மென்மையான பாற்சிப்பிகளை உப்புச் சுவை மா கடலுக்கே அவை சொந்தமானவை ஏன் தண்ணீரில் இறங்குவதில்லை அச்சமா??? எண்ணிலடங்கா ரகசியங்கள் இல்லை கடலிடம் இருப்பது ஒற்றைச் சிறு ரகசியமே… எல்லையில் வானும் கடலும் இணையாதென்பது குறித்து நன்கறிந்தும் ஏன் பொய்யான கனவுக் கவிதைகள் கரையிலிருந்து கொண்டு கடல் குறித்து? சேகரிக்க வேண்டாம் இப் பாற்சிப்பிகளை கடலுக்குள் இறங்காமல் கரையில் சுகமாக […]
August 11, 2012 2:09 am / 36 comments
கவிதை என்றால் என்ன ?எனும் கேள்வி கவிஞர்களிடம் முன்வைக்கப்படும் வேளை பதிலொன்றைக் கூறுவதில்அசௌகரியத்தையும் திணறலையும் அவர்கள்எதிர் கொள்கிறார்கள்.சிலர் அண்ணளவான பதிலைத் தருவதுண்டு.சிலரிடம் அதற்குப் பதில் எதுவும் ‘இல்லை’ என்பதேபதிலாகும். ஆயினும் ஒரு கவிதையானது அதற்கான தெளிவான விளக்கத்தை தன்னிடம் நிச்சயமாக வைத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அவரவர் புரிதலுக்கும் அனுபவத்தெளிவிற்கும் ஏற்ற வகையில் இவ்விடயத்தை உணர்ந்து கொள்ள முடியும்.கிழக்கிலங்கையின் கல்முனை பிரதேசத்திலிருந்துகவிதைகள் எழுதிவருகின்ற நபீல், கவிதைக்கான புரிதல்களுடன் கவிதையை எழுதுகின்றவர் உதிரும் பச்சைவண்ணக்கொழுமலர்கள் […]
August 11, 2012 1:41 am / 4 comments
மூதூர் – ஓகஸ்ட் 2006 பின்னும் பின்னும் நினைவுகூர்தல்…. -எம்.கே.எம். ஷகீப் —————— விதைத்தலுக்கான காலம் பிந்திய பொறுக்கு நிலத்தின் புழதிகளிலலைந்த கால்கள் எட்டியுதைத்தன பெண்டிரை.. வரிசைகளிலான மரணத்தின் தருணம் விதிக்கப்பட்ட மலையடி ராஜ்யம் சிறுவர்களானதாயிருந்தது.. விண்ணேகிவரும் சாவினை சூன்யவெளி தாண்டி வெல்லக் கண்ட கனவு மரத்தடித் துப்பாக்கிச் சிறுவனோடு முடிந்திற்று. வெள்ளையாடைதரித்த பாதிரியார்களை நம்பி திசைமா(ற்)றிய சமூகம் புராணப் பிரளயத்தில் போன்று மாட்டிற்று.. இறந்து கிடந்த தெரிந்தவனையும் தாண்டி, […]
August 11, 2012 1:40 am / 40 comments
யோ. கர்ணனின் கதைகள் – சேகுவேரா இருந்த வீடு ———————————————————————— ‘சிதழுறும் காயங்களின் மொழியில் என்னைப் பேசவிடுங்கள்’ என்று அஸ்வகோஸ் தன்னுடைய கவிதைகளில் குமுறுகிறார். அஸ்வகோஸ் மட்டுமல்ல, றஷ்மி, பா.அகிலன், வரதர், மு.தளையசிங்கம், தா.இராமலிங்கம், சு.வி, சிவரமணி, அனார், ஓட்டமாவடி அரபாத், இளைய அப்துல்லா, திருமாவளவன், கி.பி. அரவிந்தன், த.அகிலன், சித்தாந்தன், எஸ்போஸ், தாமரைச்செல்வி, கோவிந்தன், டொமினிக் ஜீவா, நந்தினி சேவியர், டானியல், சக்கரவர்த்தி, ஷோபாசக்தி, சண்முகம் சிவலிங்கம், […]
August 11, 2012 1:13 am / 3 comments
– ஈழக்கவி ஆக்கிரமிப்பு நிலத்தில் தன்கண்முன்னால் வன்புணாச்சிக்கு ஆளான தன்மகளை பெத்தமடியில் வைத்து பித்துபிடித்து பதறியழும் ஒரு காஷ்மீர் தாயின் வயிற்றெரிச்சலை பூனை குட்டியொன்றை எலியாக உள்ளுறை உவமமாக்கி பூனைகள் கடித்துக் குதறி தின்பது போல இந்திய இராணுவ கெட்டதுகள் புசிக்கும் ஒரு நூறு குடும்பங்கள் படுகொலையாக சவக்காடாகி குருதி ஆற்றில் மிகுக்கும் பலஸ்தீனத்தின் வயிற்றெரிச்சலை தெருநாய்கள் நாறிய மாமிசத்தை உண்பது போல இஸ்ரேலிய கெட்டதுகள் தின்னும் […]
August 11, 2012 1:04 am / 46 comments
கடந்த இரண்டு நாளாக மனதைத் தொந்தரவு செய்கிற ஒரு விஷயத்தை என்ன செய்வது எனத் தெரியாமல் இந்தக் கட்டுரை எழுதியாவது தப்பித்துக்கொள்ள நினைத்துதான் எழுதத் தொடங்கியுள்ளேன். ஒரு பிரபலமான எழுத்தாளரை மலைகள் இதழுக்கு ஒரு சிறுகதை அல்லது ஒரு கட்டுரை கேட்டுத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் சொன்னார். தன்னிடம் கவிதைகள்தான் இருக்கிறது உடனே அனுப்பிவைக்கவா என்றார். இல்லை நீங்கள் ஒரு சிறுகதையை அனுப்புங்கள் என்றேன். அதற்கு அவர் […]